கோகிலம் சுப்பையாவை எழுத்தாளர் நந்தினி சேவியர் முகநூலில் நினைவுபடுத்தியிருந்தார். வீரகேசரி பிரசுரமாக வெளியான இவரது 'தூரத்துப்பச்சை' மலையக இலக்கியத்துக்கு, தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த, சேர்க்கும் முக்கியமானதொரு படைப்பு. நாவலில் வரும் வள்ளி என்னும் பாத்திரம் மறக்க முடியாத பாத்திரம். தகழியின் தோட்டியின் மகனை வாசித்தபொழுது ஏற்பட்ட உணர்வு எனக்கு இந்நாவலை வாசிக்கையிலும் ஏற்பட்டது. இரு நாவல்களுமே மானுட வாழ்வின் குழந்தையிலிருந்து முதுமை வரையிலான போராட்டத்தை, சமூக, அரசியற் சூழல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவுகளை வெளிப்படுத்துவதாக அமைந்த நாவல்கள். மீண்டும் அவரது 'தூரத்துப் பச்சை' நாவலினைப் வாசிக்க வேண்டுமென்ற உணர்வினை நந்தினி சேவியரின் நினைவூட்டல் ஏற்படுத்திவிட்டது.

நந்தினி சேவியரின் பதிவில் எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் 'தூரத்துப்பச்சை' (வீரகேசரி பிரசுரம்) அட்டையினைப் பகிர்ந்திருந்தார்.அதனை நன்றியுடன் இங்கு பகிர்கின்றேன்.
கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப் பச்சை'

முகநூல் எதிர்வினைகள் சில:

Iravi Arunasalam : ஈழத்துத் தமிழிலக்கியத்தில் கோகிலம் சுப்பையா எழுத்திய 'தூரத்துப்பச்சை' நாவலுக்கு முக்கிய இடம் உண்டு. நான் இப்போதைய எழுத்தாளர் பலருக்கு அதைக் குறிப்பிட்டிருக்கிறேன். எல்லோரும் 'அது எங்கு கிடைக்கும்?' என்று கேட்கிறார்கள். யாராயினும் அந்நூலை மறுபிரசுரம் செய்யமாட்டார்களா?
Yamuna Nithiananthan:  அருமையான நாவல்....!!!
S Suresh Surendran: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தே... நண்பர்களே... நண்பர்களே...

Nadarajah Selvarajah தூரத்துப் பச்சை. கோகிலம் சுப்பையா. சென்னை 5: தமிழ்ப் புத்தகாலயம்;, 576 பைகிராப்ட்ஸ் ரோடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1964. (மதறாஸ் 3: ஜெனரல் பிரின்டர்ஸ்). 328 பக்கம், விலை: இந்திய ரூபா 5., அளவு: 18x12 சமீ.

தூரத்துப் பச்சை. கோகிலம் சுப்பையா. சென்னை 600 017: தமிழ்ப் புத்தகாலயம்;, இல.பு 3ஃ8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், 2வது பதிப்பு, நவம்பர் 2002, 1வது வீரகேசரி பதிப்பு, செப்டெம்பர் 1964, (சென்னை 600006: சென்னை ஆர்ட் பிரின்டர்ஸ்)336 பக்கம், விலை: இந்திய ரூபா 95., அளவு: 18x12 சமீ.

தமிழ்நாட்டிலுள்ள சேத்தூர் கிராமத்திலிருந்து பஞ்சம், பட்டினி, வரட்சி என்பவற்றின் பாதிப்புக்களிலிருந்து தப்புவதற்காக கப்பலேறிய வேலனுடன் அவன் மகள் வள்ளி என்ற சிறுமியும் இலங்கைக்கு வருகிறாள். வரும்போது வள்ளி பட்ட துன்பத்தையும், அவர்கள் இலங்கையில் ஹமில்டன் தோட்டத்தை அடைவதையும் விபரிக்கும் இந்நாவல், வள்ளி வளர்ந்து பெரியவளாகி செங்கமலை என்பவனைத் திருமணம் செய்து ராசீக் கொள்ளைராசாத் தோட்டத்துக்கு குடியிருக்க வருவதைப் பற்றியும் விபரிக்கிறது. வள்ளிக்குப் பிள்ளைகள் பிறந்து அப்பிள்ளைகளுக்குப் பிள்ளைகள் பிறக்கும் வரையிலான 4 தலைமுறைகள் பற்றி எழுதப்பட்ட இந்நாவல் ஒரு தோட்டத்துப் பெண் தன் வாழ்நாளில்படும் துன்பங்கள் அத்தனையையும் விபரிக்கின்றது. அரசியல்ரீதியில் தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட ஒரு காலகட்டத்தை இந்நாவலின் பிற்பகுதி பின்னணியாகக் கொண்டிருக்கின்றது. இந்நூலுக்கான முன்னுரையை செயின்ட் ஜோர்ஜ் கோட்டையிலிருந்து தமிழ்நாடு அரசின் பிரதம காரியதரிசி எஸ்.கே.செட்டூர் அவர்கள் வழங்கியிருக்கிறார்.


காலத்தால் அழியாத கானங்கள்: 'எங்கிருந்தாலும் வாழ்க'

காலத்தால் அழியாத கானங்கள்: 'எங்கிருந்தாலும் வாழ்க'

பாடகர் ஏ.எல்.ராகவனின் குரல் ஜெமினி கணேசனுக்கும் பொருந்தும்; நடிகர் கல்யாண்குமாருக்கும் பொருந்தும். நடிகர் நாகேசுக்கும் பொருந்தும். அவ்வகையில் குரல் மாற்றிப் பாடுவதில் அவரும் வல்லவர்.

ராகவன் பாடகர் மட்டுமல்லர். நடிகரும் கூட. குழந்தை நட்சத்திரமாக நடித்துப் பாடகராகக் கொடிகட்டிப்பறந்தவர். திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இவரும் , டி.எம்.எஸ்ஸும் இணைந்து தயாரித்த திரைப்படமே 'கல்லும் கனியாகும்'.

இவரது திரைப்படப்பாடல்களில் (தமிழில்) நினவுக்கு வரும் முதலிரண்டு பாடல்கள் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்படப்பாடலான 'எங்கிருந்தாலும் வாழ்க' அடுத்தது 'பார்த்தால் பசி தீரும்' திரைப்படப்பாடலான 'அன்று ஊமைப்பெண்ணல்லோ'.

இப்பாடல் உருவானது பற்றிச் சுவையான தகவலொன்றுமுண்டு. கவிஞர் கண்ணதாசன் தமிழக அர்சியல் நிகழ்வுகளை இலாகவமாகக் கையாண்டு திரைப்படப்பாடல்களாக்குவதில் வல்லவர். அந்த வகையில் அவரது 'நலந்தானா' மற்றும் 'அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி' பாடல்கள் பிரபல்யமானவை. ஒரு முறை நடிகர் திலகம் திமுக கூடாரத்திலிருந்து காங்கிரசுக்கு மாறியபோது அறிஞர் அண்ணா அவர்கள் சிவாஜியை 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்தினார்.அதுவே கவிஞருக்கு இப்பாடல் உருவாகத் தூண்டுதலாக இருந்ததாக விக்கிபீடியா கூறுகின்றது. முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சா என்று ஆச்சரியப்படுகின்றீர்களா? அவ்விதம் போடலாம் என்பதைப்பாடல் உருவான விதம் வெளிப்படுத்துகின்றதல்லவா! :-) அரசியல் நிகழ்வொன்று காதற் பிரிவு தரும் துன்பத்தை, தீர்வை வெளீப்படுத்துவதற்கு எவ்விதம் பொருத்தமாக அமைந்துள்ளது!.

இசை: எம்.எஸ்.வி - ராமமூர்த்தி
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
குரல்: ஏ.எல்.ராகவன்

https://www.youtube.com/watch?v=p01Y80d8AP8


முகநூல் எதிர்வினைகள் சில:

குணத்தீ திருஞானசம்பந்தர்: அழகான பாடல்
Jawad Maraikar:  இன்றுவரை தன் குரலில் மாற்றமின்றிப் பாடிக்கொண்டிருக்கும் ஏ.எல். ராகவனை வாழ்த்துகின்றேன்.
Sugumar Cumarasamy Sridar: இற்கு அங்கீகாரம் கொடுத்த படம். MSV + கவிஞர் +ALR= Treat


அண்மையில் பழைய புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தபோது எஸ்.பொ தனது கனடா வருகையின்போது எனக்கு அன்பளிப்பாகத் தந்திருந்த அவரது 'இனி' புத்தகம் அகப்பட்டது. அதன் உள்ளே முதற் பக்கத்தில் 'இளம் நண்பன் கிரிதரனுக்கு ஆக்கியோன்' என்றெழுதி தன் கையெழுத்தினை இட்டிருந்தார். 27.08.2000 என்று மறக்காமல் திகதி, மாதம் & ஆண்டினையும் குறிப்பிட்டிருந்தார். அப்பக்கத்தையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள்.

எஸ்.பொ அன்பளிப்பு


முகநூல் எதிர்வினைகள் சில:

Sivanesaselvan Arumugam Very good to preserve
Tharuman Tharmakulasingam பொக்கிஷம்
Manoharan Periyasamy Manoharan Periyasamy சிறப்பு.நான் சென்னை மித்ரவில் பெற்றதும் இதே காலமாக இருக்கலாம்.தேடணும்.


எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த முகநூல் எனக்கு அறிமுகப்படுத்திய நல்ல நண்பர்களிலொருவர்.

இவர் என் சிறுகதைகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்துள்ளார். என் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலையும் மொழிபெயர்த்துள்ளார். அது 'ஆகச மீடியா வேர்க்ஸ்' பதிப்பகம் மூலம் வெளியானது.

இவர் எனது நாவல்களான 'அமெரிக்கா' மற்றும் 'குடிவரவாளன்' ஆகியவற்றையும் மொழிபெயர்க்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.

நண்பரே! உங்கள் பணி மகத்தானது. இக்காலகட்டத்தில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு முக்கிய பங்காற்றும் சேவையது. இத்தருணத்தில் நன்றியுடன் அவற்றை நினைவு கூர்வதுடன் , உங்களுடனான நட்பினையும் மதிக்கின்றேன்.


முகநூல் எதிர்வினைகள் சில:

Nadigamvila Ggs Ananda நன்றி நண்பரே.. உங்கள் அமெரிக்கா நாவலை வரும் ஆண்டில் சிங்களத்தில் வெளியிடுவது என் ஒரு கனவு..
Sugan Paris பெரும் மனதும் பெரிய வேலையும்
Alex Paranthaman அருமையான மனிதர். இலக்கிய உலகில் பெரும்பாலும் சகபடைப்பாளியின் வளர்ச்சியை விரும்பாதவர்களைச் சந்தித்த எனக்கு, திரு. ஜி.ஜி. சரத் ஆனந்த அவர்கள் ஒரு வித்தியாசமான மனிதராக தெரிகிறார் ; வாழ்கிறார்.
Nadigamvila Ggs Ananda Alex Paranthaman நன்றி ஐயா.
Jeyan Deva சமூகங்களின் உறவுக்கு ஆர்ப்பாட்டமில்லாமல் பங்காற்றும் பண்பாளர். தனது பணிக்காக எந்த வெகுமதியையும் அவர் எதிர்பார்ப்பதில்லை.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R