ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


முன்னுரை
சங்ககாலத்தில் நெருப்பு சக்கரம் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு மனிதகுலத்தைப் புரட்சிகரமாக மாற்றிய கண்டுபிடிப்பு இரும்பின் கண்டுபிடிப்பு எனலாம். மனித வளர்ச்சியில் உலோகங்களின் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்க மாறுதலுக்கு அடிப்படையாக அமைந்தது எனலாம். உலோகக் கண்டுபிடிப்புகளில் இரும்பின் கண்டுபிடிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், இரும்பு மிக உறுதியானது. எளிதில் அழியாதது. இதனால் இரும்பு என்றும் பயன்படும் உலோகமாக இருந்து வருகிறது. இரும்பைக் கரும்பொன் என்றும் இராஜ உலோகம் என்றும் கூறுவர். பண்டைக் காலந்தொட்டே இரும்பு, கருவிகள் செய்யப் பயன்பட்டு வந்துள்ளது. பொருள்களின் விலையை அறுதியிட்டு மதிப்பு அளவிடும் கருவியாக எடைக் கற்களாக இரும்பு பயன்பட்டு வந்துள்ளது. பொன்னைவிட இரும்பு ஒரு காலத்தில் மிகுந்த விலை மதிப்புள்ள பொருளாக இருந்துள்ளது.

இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட காலம்
உலக வரலாற்றில் இரும்பின் காலம் கி.மு. 1600 – கி.மு. 1000 வரை எனக் கூறப்படுகிறது. மனிதன் முதன்முதலில் இரும்பைக் கண்டறிந்த காலம் கி.மு. 3000-இல்ளூ ஆனால் பயன்படுத்தியதோ கி.மு.1500-இல்தான்.

1.    கி.மு. 290    தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொகராப் பள்ளியில் கிடைத்த சின்னங்கள்
2.    கி.மு. 640    வட ஆர்க்காடு பையம்பள்ளி அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்கள்
3.    கி.மு. 800 – 700    திருநெல்வேலி மாவட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வு
4.    கி.மு. 300-க்கு முன்பு தஞ்சாவூர், வல்லம் அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்கள்
5.    கி.மு. 200கி.பி. 200    ஈரோடு மாவட்ட கொடுமணல் அகழாய்வுப் பொருட்கள்

கொல்லர்கள் பயன்படுத்திய கருவிகள்
1.    துருத்தி    நெருப்பிற்குக் காற்றைச் செலுத்தி அதன் வெப்பநிலையை அதிகரிக்க
2.    குறடு, கிடுக்கி, பற்றி    கரிய உலையினுள் இட, உலையிலிருந்து இரும்பை வெளியே எடுக்க
3.    உலைக்கல்    காய்ச்சிய இரும்பை அடிக்க ஏதுவாக வைக்கப் பயன்பட்ட கருவி
4.    சம்மட்டி    காய்ச்சிய இரும்பை அடித்தலுக்கு
5.    அரம்    உராவுதலுக்கு

'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் - இரும்பு தயாரித்தல் அன்றும் இன்றும்
பண்டைக் காலத்தில் இரும்பைக் காய்ச்சியப் பணியாளர்கள் கொல்லர்கள் எனப்பட்டனர். கொல்லர்கள் பணி செய்த இடம் கொல்லுப் பட்டறை, கொற்றறை என வழங்கப்பட்டது. இவர்கள் இரும்பைத் தயாரித்ததோடு, அதை வடித்தல், வார்த்தல், சாணை பிடித்தல், கூர்மையாக்குதல், போர்க் கருவிகள் செய்தல் போன்ற பணிகளையும் செய்து வந்தனர். குறுந்தொகைப் பாடல் ஒன்றில் ஏழு ஊர்களில் உள்ள மக்கட்குச் செய்ய வேண்டிய கொல்லுத் தொழிலுக்குப் பொதுவான ஒரு கொல்லுலையே காணப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. இவர்களைக் கருங்கைக் கொல்லர் என்றும் கருங்கை வினைஞர் எனவும் வழங்கி வந்தனர். இங்கு கருங்கை (கருமை 10 கை) கரிய நிறமுடைய கை என்றும் வலிமை பொருந்திய கை என்றும் இரண்டு வௌ;வேறு பொருள்களில் நோக்க வேண்டும். இரும்பு தயாரிக்கும் போது அதற்குத் தேவையான கரியை உலையினுள் செலுத்தி வந்ததால் கை கரிய நிறம் பெற்றிருக்கும். இரும்பைச் சம்மட்டியால் தொடர்ந்து அடிப்பதால் கொல்லர்கள் கைகள் காய்ந்து உரமேறியதாக இருந்தமையாலும் கருங்கைக் கொல்லர் எனப்பட்டனர். தமிழில் கம்மியர், புலவர் என மொத்தம் 17 பெயர்களால் கொல்லர்கள் வழங்கப்பட்டனர். இன்று கருமார் என்ற பெயர் வழங்குகிறது.

இரும்பு வடித்தல்
வடித்தல் என்றால் வடிவமைத்தல் என்பது பொருள். பழங்காலத்தில் போருக்குத் தேவையான படைக்கலங்களைக் கொல்லர்களே வடித்துக் கொடுத்து வந்த செய்தி சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.

'வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே' (புறம். 12, 3)

அகநானூற்றுப் பாடலொன்றில் மின்மினிப் பூச்சிகள் மொய்த்துள்ள சிதைந்த வாயையுடைய புற்றினைப் பெரிய கையை உடைய கரடி. தனது கையால் அகழ்ந்து மண்ணைப் பறித்துப் பின்னர் அதன் உள்ளே இருக்கும் குரும்பியைத் தோண்டித் தின்னும் பொழுது, அப்புற்றின் மீது மொய்த்துள்ள மின்மினிப் பூச்சிகள் கொல்லன் உலையில் காய்ச்சப்பட்ட இரும்பினைப் பட்டைக் கல்லில் வைத்துச் சம்மட்டியால் அடிக்கும் பொழுது, அதிலிருந்து சிதறும் தீப்பொறிகள் போல் நான்கு திசைகளிலும் சிதறி ஓடியதாகக் கூறப்பட்டுள்ளது. பட்டைக்கல் புறநானூற்றில் உலைக்கல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரும்பு வார்த்தல்
வார்த்தல் என்பது தேவையான உருவத்தில் வார்ப்பச்சுகள் அமைத்து அதில் இரும்பினைக் காய்ச்சி உருக்கி ஊற்றி ஆற வைத்து எடுப்பதேயாகும். இத்தொழில் சங்க காலந்தொட்டே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. தொடக்கத்தில் மெழுகு அச்சு அமைக்கும் பொருளாகப் பயன்பட்டது. பின்னர் அரக்கு அச்சு அமைக்கும் பொருளாகப் பயன்பட்டு வருகிறது. தற்காலத்தில் கோவை மாவட்டத்தில் வார்த்தல் தொழில் நடைபெறுகிறது. இங்கு ஒரு வகைக் கருமணல் அச்சு அமைக்கும் பொருளாகப் பயன்படுகிறது. பழங்காலத்தில் வார்த்தல் முறைகள் மூலம் தேரில் கட்டும் மணிகள் செய்யப்பட்டன.

'மெழுகான்றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி' (குறுந். 155:3-4)

இரும்பை உருக்கி வார்த்தெடுத்தால் அது எவ்வளவு உறுதியுடன் காணப்படுமோ அது போன்று கரடியின் கை காணப்பட்டதாக அகநானூறு கூறுகின்றது.

இரும்பைத் துருபிடிக்காமல் பாதுகாத்தல்
இரும்பைக் காற்றுக்கு உட்படுத்துதலால் உண்டாகும் வேதிவினை துருபிடித்தல் எனப்படுகிறது. அப்போது இரும்பில் ஃபெர்ரஸ் ஆக்சைடு உண்டாகும். இதுவே துரு எனப்படுகிறது. பொருள்கள் துருப்பிடிக்காமல் இருக்கப் பழங்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் உத்தியை,

'இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்டிர ணோன் காழ்திருத்திநெய் யணிந்து' (புறம். 95, 15)


எனத் தொடங்கும் பாடல் மூலம் அறியலாம். தொண்டைமானின் படைக்கலக் கொட்டிலின் தன்மையை ஒளவையார் பீலி அணியப்பட்டு, மாலை சூட்டப்பட்டு (துருப்பிடித்தலைத் தவிர்க்க) நெய் இடப்பட்டுக் காவலுடைய இடத்தில் பாதுகாக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.

முடிவுரை
பழந்தமிழர்கள் வாழ்வதற்கு அன்றைய காலக்கட்டத்தில் இரும்பு முக்கியப் பங்கு வகுத்தது. இரும்பின் பயன் கண்டறியப்பட்டதும், மனித நாகரிகம் வளரத் தொடங்கியது. அன்றைய காலத்தில் சமையல் செய்வதற்கு இரும்பு முக்கியப் பங்கு வகித்தது. போருக்கும், உழவுத் தொழிலுக்கும் இரும்பு முக்கியப் பங்கு வகுக்கிறது.

பார்வை நூல்கள்
1. சங்க காலம், தொல்பொருள் ஆய்வுகள் தொகுப்பாளர், மு.காமாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2011
2. புறநானூறு :  மூலமும் எளிய உரையும் /  முனைவர் இர. பிரபாகரன் , காவ்யா பதிப்பகம், சென்னை (2011)

கட்டுரையாளர்: - வீ.ரமேஷ், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி), பாளையங்கோட்டை-627 002. -

அனுப்பியவர்: முனைவர் வே.மணிகண்டன் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R