(ஒரு  தாயின் நிகழ்காலத் துடிப்பும்,வருங்கால எதிர்பார்ப்பும்)


ஶ்ரீராம் விக்னேஷ்

1.
கட்டிய  கணவர்தம்,  
மட்டிலா  அன்பினால்,
கட்டிப் பொன் :  கனியைப்பெற்  றேன்! – வாரிக்
கட்டியே  முத்தம்இட்  டேன்! – சிறு
தொட்டிலில்  போட்டவன்,
தூங்கிடும்  போதிலே,
தூய்மையாம்  தெய்வம்கண்  டேன்! – ஒரு
தாய்மையின்  உய்வில்நின்   றேன்!

2.

எட்டியே  பிடித்துமார்,
பற்றியே  முகத்தினால்,
முட்டியே  பருகக்கண்   டேன்! – முகம்
மோதியே  மகிழக்கண்   டேன்! -  தேன்
சொட்டென   வாயினால்,
விட்டிடும்   வீணிரால்,
சட்டையும்   நனையக்கண்   டேன்! – மனம்
சாலவே   குளிரக்கண்   டேன்!

 

3.
தத்தியே   தவழ்ந்து    பின்,
தளர்நடை   போட்டு    என்,
தாழ்தனைச்   சுற்றிவந்    தான் -  தன்
தாயெனும்   உரிமைகண்   டான்! – நான்
சுத்திய  சேலையில்,
தொத்தியே  பாய்ந்தவன்,
முத்தென  வாய்திறந்    தான்!- தன்
சொத்தெனத்   தமிழ் உதிர்ந்   தான்!      

4.
பள்ளியில்   கற்றிடப்,
பத்திரம்   பண்ணிநான்,
பாசமாய்   அனுப்பிவைத்   தேன்! – அவன்
படிப்பிலே   உயிரைவைத்   தேன்! – எந்தக்
கள்ளியின்   நெஞ்சிலும்,
பள்ளிகொள்ளா   தவன்,
கல்வியில்   கவனம்வைத்   தான்- கலையில்
கவுரவப்   பட்டம்பெற்   றான்!

5.
ஒருமகள்   இல்லையே,
எனும்குறை   தீர்த்திட,
மருமகள்   வரவும்வேண்   டும்! – மகன்
மாலையை   இடவும்வேண்   டும்! – நான்
அருமையாய்   கொஞ்சிட,
அன்பான   பேரனை,
உரிமையாய்   தரவும்வேண்   டும்! – மனம்
பெருமையில்  நிலவவேண்   டும்!

6.

வெள்ளிகள்   நடுவிலோர்,
வெண்மதி   போலவன்,
வெற்றிகள்   காணவேண்   டும்! – கண்டு
பெற்றநான்   மகிழவேண்   டும்! – உயிர்
கொள்ளிடக்   கூற்றுவன்,
துள்ளியே   வந்தபின்,
கொள்ளியை   வைத்தால்போ   தும்! – நெஞ்சில்
கோவிலாய்க்   கொண்டால்போ   தும்!

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R