தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) ஊடக அறிக்கை!ஒக்தோபர் 08,2013
மாண்புமிகு  சி.வி விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வட மாகாண சபை.

மதிப்புக்குரிய முதலமைச்சருக்கு எழுதிக் கொள்வது. முதலில் நீங்கள் வட மாகாண சபையின் முதலமைச்சராககப் பொறுப்பு ஏற்றுக் கொண்டதற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுக்குக் கிடைத்திருப்பது பதவி அல்ல, மக்களால்  பாரிய பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்களது அறிக்கையில் குறிப்பிட்டது போல  தூரநோக்கின் அடிப்படையிலும் கிட்டியநோக்கின் அடிப்படையிலும் கடமையாற்றும்படி மக்கள் உங்களுக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.

1) இடம்பெயர்ந்த மக்களில் எஞ்சியுள்ள 93,000 பேரை அவர்களது சொந்த வீடுவாசல்களில் குடியிருத்த வேண்டும். அவர்கள் இப்போது தறப்பாள் அல்லது தகரக் கொட்டில்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

2) வட கிழக்கில் உள்ள 89,000 கைம்பெண்களுக்கு வாழ்வாதாரம் சமைத்துக் கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களது காலில் நிற்குமாறு தொழில் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

3) வலிகாமம் வடக்கிலும் கிழக்கிலும்  மட்டும்  தமிழ் மக்களுக்குச் சொந்தமான 6,382 ஏக்கர் (102,112 பரப்பு)  உறுதிக் காணிகளை  இராணுவம் அபகரித்துள்ளது.  இது  25.8 சதுர கி.மீ நிலப்பரப்புக்கு  அல்லது  கொழும்பு நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதிக்கு ஒப்பானது.   மீள் குடியேறலாம் என 23 ஆண்டு காலம்  காத்திருந்த  வலிகாமம் வடக்கை சேர்ந்த 7,060 குடும்பங்களை சேர்ந்த 25,328 பேர்களது (27) கிராம சேவைப் பிரிவுகள்) நம்பிக்கை நொருக்கப்பட்டுள்ளது. இராணுவம் பறித்த காணிகள் இந்த  மக்களுக்கு மீளக் கையளிக்கப் படவேண்டும்.

தமிழ்மக்கள் ஒத்துரிமையோடு வாழ வேண்டும். நீங்கள் குறிப்பிட்டது போல்  சிங்களமொழியும் பாரம்பரியங்களும் சிங்களமக்களுக்கு எந்த அளவு முக்கியமோ அதே அளவு எமது மொழியும் எமது பாரம்பரியங்களும் தமிழ் மக்ககளுக்கு  முக்கியம் ஆகும். மீண்டும் எமது வாழ்த்துக்கள்.  எங்கள் ஆதரவும் அன்பும் உங்களுக்கும் தமிழ்மக்களுக்கும்  என்றும் இருக்கும்.
 
மிக்க அன்புடன்
வே. தங்கவேலு
தலைவர்
ததேகூ (கனடா) 


தொலைபேசி : 416-877-8409     Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R