மீள்பிரசுரம்: கௌதம புத்தரின் பூமிக்கு இங்கு என்ன தவறு நடந்துள்ளதுகுசல் பெரேரா இரண்டு மாதங்களுக்கு மேலாக நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது வசைமாரி பொழிந்து வரும் விவகாரம், பிரதம நீதியரசராக இருக்கும் ஷிராணி பண்டாரநாயக்காவின் வெளியேற்றத்தோடு ஒரு முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு, எண்ணிக் கொள்ளுங்கள் இன்னும் ஏழு நாட்கள்தான் பாக்கியிருக்கின்றன, ஏனெனில் அவர் தவறு இழைத்துள்ளார் என்று நிரூபிக்கப்பட்டதாலோ, அல்லது குற்றம் புரிந்துள்ளார் என்பதாலோ இது நடக்கவில்லை ஆனால் ராஜபக்ஸவின் ஆட்சி அவர் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. அந்த ஆசனத்தில் அமரப்போகும் அடுத்த அரசாங்க வேலைக்காரர் யாராகவிருந்தாலும், அவர் நிச்சயமாக ராஜபக்ஸவின் கற்பனைக்கு ஏற்ற ஒருவராக இருப்பாரே தவிர, தகுதிப்படி நியமனம் பெற்றவராக இருக்கமாட்டார். சுயாதீனமான நீதித்துறை பற்றி உருவாகிவரும் இந்த குழப்பங்கள் யாவற்றுக்கும் அப்பால், இந்த விடயம் பற்றி மிகவும் குறைவாகப் பேசப்பட்டது மாத்திரமன்றி இதை ஒரு பிரச்சினையாக ஒருபோதும் யாருமே எடுத்துக் கொள்ளாததுதான், இதிலுள்ள மனிதாபிமானமான துயரம்.

(06 ஜனவரி,2013) சண்டே டைம்ஸ் பத்திரிகையில் முதல் பக்க தலைப்புச் செய்தியாக புகைப்படத்துடன் வெளியாகியிருப்பது, போர்: பாலியல் வல்லுறவுக்கு எதிராக பெண்கள் என்கிற செய்தி.

அந்த புகைப்படம் டெல்லியில் எடுக்கப்பட்டதல்ல என்றாலும,; லக் வனிதா என்கிற ஐதேக பெண்கள் அமைப்பால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஆர்ப்பாட்ட நிகழ்வு சம்பந்தமானது. அவர்கள் சமீபத்தில் புது தில்லியில் நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி  இந்தியப் பெண்களுக்கு தங்கள் ஆதரவை பதிவு செய்ய விரும்பியிருந்தார்கள்.

மனிதசக்தியினால் கற்பனை செய்யக்கூட முடியாத இத்தகைய கொடூரமான வன்செயல்கள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் போன்றவை தங்களின் சொந்தப் பெண்களுக்கு எதிராகவே ஏன் நடத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் இந்தியா இன்னமும் இருட்டில் தடுமாறுகிறது. 2012,டிசம்பர் 16ல் புது தில்லியில், 23 வயதான ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு,சக்கையாக அடித்து நொருக்கப்பட்டு, ஒரு தனியார் பேரூந்து ஒன்றிலிருந்து தூக்கி வீசப்;பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக 12 நாள் கழித்து சிங்கப்பூரிலுள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் உயிர்நீத்துள்ளார். இதற்கான சகல செலவுகளையும் இந்திய அரசாங்கமே எற்றுக் கொண்டிருந்தது. விசாரணைகளைக் கையாள்வதில் காவல்துறையினர் மிகவும் மோசமாக வேண்டாவெறுப்புடன் செயல்படுவதாக குற்றம் சாட்டி இந்தியா முழுவதும் எதிர்ப்பு அலை  விரைந்து பரவியதையடுத்து அரசாங்கம் இதில் தீவிர கவனம் செலுத்தவேண்டியதாகிவிட்டது.

தில்லி கூட்டுப் பாலியல் வல்லுறவு பாரிய எதிர்ப்புகளை திரட்டியிருந்த அதேவேளை, மற்றொரு பதின்ம வயதுப் பெண் பஞ்சாப்பிலுள்ள பாட்டியாலா நகரில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி டிசம்பர் 26ல் தற்கொலை செய்து கொண்டாள். ஊடகங்களில் வெளியான இந்தச் செய்தி, இந்தியா முழுவதும் மேலும் கோபத்தை கிளறிவிட்டது. ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர், மற்றும் சந்தேக நபர்கள், ஆகியோர், ஒன்றில் அவளது புகாரை விலக்கி கொள்ளவேண்டும் அல்லது சந்தேக நபர்களில் ஒருவரை திருமணம் செய்யவேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளார்கள், அந்த பதின்ம வயதுப் பெண் நஞ்சு உட்கொள்வதற்கு முன்னர் ஒரு விரக்தியான குறிப்பை எழுதி வைத்திருந்தார். இந்திய நடுத்தர வர்க்கத்தினர், இத்தகைய மோசமான அவமானத்தை கரியமானதாகவும்,பொழுதுபோக்காகவும் எண்ணி சகித்துக் கொண்டிருப்பதில்லை. அவர்களின் பொங்கியெழுந்த கோபம் வீதிகளில் எதிரொலித்தது.

அவர்கள் இப்போது கடுமையான சட்டங்களையும், மற்றும் திறமையானதும் நன்றானதுமான காவல்துறை கண்காணிப்பையும் கோருகிறார்கள். அத்துடன் இத்தகைய குற்றங்களுக்கு மரண தண்டனைதான் சரியான தண்டனை என்று விவாதித்து வருகிறார்கள். டெல்லி கேட் அருகே நின்றிருந்த ஒரு மாணவ ஆர்ப்பாட்டக்காரர், கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருப்பது,  இந்தக் கொலைகாரர்களை வெறுமே தூக்குமேடைகளுக்கு  அனுப்பக்கூடாது, அவர்கள் மரணமடையும் வரை சித்திரவதை செய்யவேண்டும். அவர்கள் சாவதற்கு முன்னர் அந்தப்பெண் அனுபவித்த வேதனை என்னவென்று உணரவேண்டும் என்று.

மேலும் குற்றவாளிகளை பகிரங்கமாக அவமானப்படுத்தி, சிலமாதங்களுக்கு பாலியல் வல்லுறவு புரிந்தவர்கள் என முத்திரை குத்தி பகிரங்கமாக அவமதிப்பு செய்ய வேண்டும், என்றும் சிலர் விரும்புகிறார்கள். இந்த தசாப்தங்களில் இத்தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை மாத்திரம் ஒரு பரிகாரமல்ல என்று அவர்கள் சொல்கிறார்கள்.

மூன்று வாரங்களாக நடந்த ஆர்ப்பாட்டங்கள் இன்னும் தொடருகின்ற வேளையில் காட்மாண்டுவும் கூட ஆவேசம் கொண்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் ஜனவரி 1ல் பிரதம மந்திரி பாபுராம் பட்டாரையாவின் வாசஸ்தலத்துக்கு முன்னால் திரண்டு பொங்கி எழுந்துள்ளார்கள், அந்த சம்பவம் பற்றி டுவிட்டரில் தெரிவித்திருப்பது காட்மாண்டுவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பாலு வாட்டர் எனும் உயர் குடியிருப்பு பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப் பட்டதாக. சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய 21 வயதான நேபாளப் பெண்ணை திருபுவன் விமான நிலையத்திலிருநத சில குடிவரவுத்துறை அதிகாரிகள்,  கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன்  அவளது பொருட்களை கொள்ளையடித்ததுடன், ஒரு காவல்துறை அதிகாரி அவளுக்கு கொலை அச்சுறுத்தலும் விடுத்திருப்பதை கண்டித்து அதற்கு நீதி கோரி பெண்கள் ஆhப்பாட்டம் நடத்தினார்கள்.

அதே போலத்தான் பங்களாதேஷின் தலைநகர் டாக்காவிலும் நடைபெற்றது, கூட்டு பாலியல் வல்லுறவுக்கும் மற்றும் பாலியல் கொடுமைகளுக்கும் எதிராக பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, ஏயின் ஓ சாலிஸ் கேந்திரா (ஏ.எஸ்.கே) எனும,; இலவச சட்ட உதவி மற்றும் மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்த செயற்பாட்டாளர் சுல்தானா காமல் தெரிவித்ததாக ஐக்கிய இராச்சியத்தின் “த கார்டியன்” பத்திரிகை தெரிவித்துள்ளது. டெல்லியில் நிகழ்ந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தெற்காசிய துணைக்கண்டம் முழுவதிலுமுள்ள பெண்களுக்கு ஒரு உந்துசக்தியாக இருந்தது,என்று 04, ஜனவரி, 2013 திகதிய ஐக்கிய இராச்சியத்தின் த கார்டியன்  பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதன் ஆரம்பத்தை அது பின்வருமாறு தொடங்கியிருந்தது,  நேபாளம், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்களும் பாலியல் வன்முறைக்கு எதிரான இயக்கங்களில் இணைந்து கொண்டுள்ளார்கள் என்று. இருந்தபோதிலும் அந்த செய்தியில் பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா பற்றி எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

அப்படியானால் கார்டியன் கட்டுரையில், லக் வனிதாவை சேர்ந்த பெண்கள் கொழும்பில் தங்கள் ஆர்ப்பாட்டத்துக்காக ஒன்றுகூடியதை பற்றி செய்திகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்களுடைய கொழும்பு நிகழ்ச்சி ,நேபாளம், இந்தியா, மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் என்பனவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருந்தது. அவர்களுடைய கொழும்பு நிகழ்ச்சி, புது தில்லியை விட வெகு அருகிலிருந்தும்,அவர்களுடைய வரைபடத்துக்குள் அகப்படாமல் போன, கிராமப்புற தேர்தல் தொகுதிகளான ககவத்த, மற்றும் பெல்மதுள்ள போன்றவற்றில் உள்ள அவர்களுடைய சொந்த, தாய்மார், சகோதரிகள், மற்றும் மகள்களுடைய துயரங்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கவில்லை.

ககவத்த பிரதேசத்தை அடுத்துள்ள 5 கிராமங்களில், 2011 பெப்ரவரி முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள், இளையோர்;, மற்றும் முதியோரான பதினைந்து பெண்கள், துடிக்கத் துடிக்க கொலை செய்யப்பட்டுள்ளார்கள், அவற்றில் சிலவற்றில் பாலியல் வல்லுறவு முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இந்த விடயம் அவர்களின் மனச்சாட்சியை உறுத்துவதற்கு போதுமானதாக இருக்கவில்லையா. அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர், ஒரு 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு இப்போது பிணையில் வெளிவந்திருப்பதாக, வெளியான பரபரப்பான செய்திகள் எதுவும் அவர்களை எழுச்சி பெறச் செய்யவில்லையா. அல்லது அதன் பிறகு அச் சபையின் உதவித் தலைவர் ,ஒரு இளம் பெண்ணை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததும், மற்றும் அவரும் இப்போது பிணையில் விடுதலையாகி வெளியே இருப்பதையும் அவர்கள் அறியவில்லையா.

2012 ஜூன் மாதம் தங்கல்லயில் இருந்து வெளியான செய்தியொன்றும் அவர்களின் கவனத்தை எட்டாமல் போய்விட்டது, அந்தச் செய்தி தெரிவிப்பது, செல்வாக்குள்ள 19 வர்த்தகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர்களால்,10 நாட்களுக்கு மேலாக, 13 வயதேயான இளம் சிறுமி, இடத்துக்கு இடம் கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும்  இறுதியாக அவளை மற்றொருவர் காவல்துறையினரிடம் கையளிப்பதற்கு முன்னர், அவரும் அவளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று. தெற்கிலிருந்து கடைசியாக வெளிவந்திருக்கும் செய்தியும் ககவத்தவுக்கு அருகிலிருந்தே, அங்கு பலாங்கொட பகுதியை சேர்ந்த வயது குறைந்த சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவையாவும் சிங்களவர்கள் வாழும் தென் பகுதியிலிருந்து வெளியான செய்திகள் அவற்றை செய்திருக்கும் அனைவரும் பௌத்தர்கள் என்பதும்கூட. ஒரு உண்மையை சொல்வதானால் இந்த சிங்கள சமூகம் இதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்வதை பெரும்பாலும் விரும்புவதில்லை. அதனால்தான் இந்த சமூகம் வடக்கு மற்றும் கிழக்கில் எத்தனை தமிழ் சிறுமிகளும் மற்றும் பெண்களும் பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்கள் என்கிற கணக்கை தெரிந்து கொள்வதற்கு விரும்புவதில்லை, அதிலும், விசேடமாக யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பிரதேசங்களில் திட்டமிட்ட கூட்டு பாலியல் வல்லுறவு கொடுமைகள் இடம்பெறுகின்றன என்கிற பகிரங்க குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள போதிலும் அவர்கள் அதில் ஆர்வம் காட்டுவதில்லை.

மண்டைதீவு பகுதியில், ஒரு 4 வயது நிரம்பிய சிறுமி கடந்த டிசம்பர் 26 ந்திகதி முதல் காணாமற் போயிருந்தார், இறுதியாக ஜனவரி மூன்றாம் திகதி அந்தச் சிறுமி கண்டுபிடிக்கப் பட்டபோது அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்தது, இதை எதிர்த்து அந்தக் கிராமவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். யாழ்ப்பாண டி.ஐ.ஜி எரிக் பெரேரா கடந்த வாரம் ஊடகங்களுக்கு தெரிவித்தது, கடந்த வாரத்தில் மட்டும் இளம் பெண்களுக்கு எதிராக பாலியல் வல்லுறவுகள் நடத்தப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் 6 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக.

பாலியல் வல்லுறவுகள்,பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் தொந்தரவுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் மிகவும் உயர்வாக ஒழுங்காகவும் மற்றும் தொடர்ச்சியாகவும் கிடைத்து வருகின்றன, இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ளும்படி தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த வருடம் ஜூலை 5ல் காவல்துறையின் ஊடக பேச்சாளரான, காவல்துறை கண்காணிப்பாளர் அஜித் ரோகண, ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் 2012ம் வருடத்தின் முதல் 6 மாதங்களில்,பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது நடத்தப்பட்டதாக சுமார் 900 க்கும் மேற்பட்ட பாலியல் வல்லுறவுகள், மற்றும் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான புகார்கள் காவல்துறையினருக்கு கிடைத்திருந்தது என்று கூறினார். சிறுவர்களுக்கு எதிரான  பாலியல் வல்லுறவுகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் எண்ணிக்கையில் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று அஜித் ரோகண, தெரிவித்தார், 2011ம் ஆண்டு பாலியல் வல்லுறவுகள், மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி கிடைக்கப்பெற்ற 1,700புகார்களில் 1,160 புகார்கள் சிறுவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அது ஏன் அப்படி, சிங்கள சமூகம் பாக்கு நீரிணையை சுற்றியோ மற்றும் அதற்கு அப்பாலோ,என் அப்படியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதில்லை? ஒருவேளை நமது அயல் நாடுகளைப்போல நம்மிடையே சமூக ஆர்வலர்கள் மற்றும் கருத்து வெளியிடுபவர்கள் இல்லாததுதான் அதற்கான காரணமா? அதற்கு பதிலாக பெருநிறுவனத் துறைகளிலுள்ள வர்த்தக மேலாளர்களைக் காட்டிலும் அதிக வித்தியாசமில்லாத துன்பியல் விற்பனையாளர்களை நாம் கொண்டிருக்கிறோம். அவர்கள் துன்பங்களில் இருந்து ஏற்படும் சோக நிகழ்வுகளைத்தான் ஒலிப்பதிவாகவும்; புகைப்படமாகவும் கருவிகள் மூலம் பதிவு செய்து வருகிறார்கள். இடைக்கிடையே நடுத்தர வர்க்கத்தினரை எழுச்சி பெறச் செய்வதற்காக உண்மையான அறிக்கைகளும்கூட வெளிவருவதுண்டு. அதற்காக நாங்கள் தசாப்தங்களாக நடைபெற்ற வன்செயல்கள் மற்றும் கொடிய யுத்தம் காரணமாக மரத்துப்போய் எதிர்க்கும் திறனற்றவர்கள் ஆகிவிட்டோம் என்று சாக்கு போக்குகளையும் எடுத்து வீசுவதுண்டு. காரணங்களை ஏற்றுக் கொண்டாலும்சரி இல்லாவிட்டாலும் சரி, நிச்சயமாக நாங்கள் எந்த விடயத்தையும் அதை எடுத்துக்கொள்ள வேண்டியபடி தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. மிகப் பெரிய ஊழல்கள், அதை சரியான பாஷையில் சொல்வதானால்  கொள்ளை மற்றும் சூறையாடல்கள் நடந்தால்கூட அதைப்பற்றி நாம் கவலைப்படுவதில்லை, இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்ப்பு இயக்கம், அரசாங்கத்துக்கும்  ஊழல் ஏற்படக்கூடிய வகையில் லோக்பால் மசோதாவில் கொண்டு வரப்படவிருந்த உத்தேச திருத்தங்களையும், எதிர்த்தும், சவால்விடுத்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இங்கு என்ன நடந்துள்ளது?  சில தசாப்தங்களாக நடைபெற்ற வன்செயல்கள் மற்றும் கொடிய யுத்தம் காரணமாக மரத்துப்போய் எதிர்க்கும் திறனற்றவர்கள் ஆகிவிட்டோம் என்பதல்ல காரணம். நல்லதொரு காரணமில்லாமல் எதையும் மறுத்துரைக்கும் முறையில் செல்லும் பழக்கமில்லாமல் நாம் வாழ்ந்து வருகிறோம், அப்படி மறுத்துரைக்கும் பழக்கமில்லாத வழியில் நம்மால் நீண்டகாலத்துக்கு பயணம் செய்ய முடியாது. சிறுவர்கள் மீது நடைபெற்ற பாலியல் வல்லுறவுகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் போன்ற 1,160 சம்பவங்களை எதிர்த்து குரல்கொடுக்க முடியாதபடி நாங்கள் மரத்துப்போய் எதிர்க்கும் திறனற்றவர்கள் ஆகிவிட்டோமானால், பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக நடைபெறும் கொடூரங்கள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக பிரதிபலிக்க விரும்பாத  ஒரு மறுத்துரைக்கும் முறைக்கு நாம் பழக்கப் பட்டிருப்போமானால், பின் எப்படி லக் வனிதாமார்களால,; எவ்வளவோ தூரத்துக்கு அப்பால் இந்தியாவில் நடைபெற்ற ஒரு ஒற்றை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு எதிராக 24 மணி நேரத்துக்கிடையில் செயல்பட முடிந்தது? பாலியல் வல்லுறவுகள் மற்றும் கொலை என்பனவற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நமது சொந்தங்களுக்காக அவர்கள் குரல் கொடுப்பதை தடுப்பது எது? வெறுமே ஓரிடத்தில் அல்ல, எல்லா இடங்களிலும் மற்றும் எல்லாச் சம்பவங்களிலும்?

2,500 வருடங்களாக, பௌத்த ஆதிக்கத்தின் கீழிருந்து, அதன்காரணமாக சகிப்புத்தன்மை, சமாதானம் எனும் கலாச்சாரத்தினை அடிப்படையாக கொண்ட கருணை, உலகளாவிய இரக்கம் மற்றும் தன்னலமற்ற மகிழ்ச்சி, என்பனவற்றை பெற்றுக் கொண்டவர்கள், பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக பாலியல் வல்லுறவுகள் மிருகத்தனமாக தொடர்ந்து நடைபெறுவதை பார்த்துக்கொண்டு, முதலில் எதிர்க்கும் சக்தியற்றவர்களாக மரத்துப்போய் நிச்சயம் இருக்கமாட்டார்கள். பௌத்த கலாச்சாரம் வேரூன்றி உள்ள ஒரு சமூகம், தாய்மார்களும், சகோதரிகளும், மற்றும் மகள்மாரும் எதிர்ப்பார் எவருமின்றி குற்றவாளிகளுக்கும் காமக் கொடூரன்களுக்கும் இரையாகும்போது அதை பார்த்துக்கொண்டு, மறுத்துரைக்க முடியாத நிலையில் நிச்சயம் இருக்காது. சமாதானம், சகிப்புத்தன்மை, கருணை மற்றும் பௌத்த கலாச்சாரத்தில் சொல்லப்பட்ட எல்லா நல்லவைகளும், நமது சமூகத்தில் வேரூன்றி உள்ளபோது, கருணை,உலகளாவிய இரக்கம், மற்றும் சுயநலமற்ற கருணை என்பனவற்றின் பிறப்பிடமான அதன் சொந்த உதரத்திலிருந்து கொலையாளிகளும் காமக் கொடூரன்களும் நிச்சயமாக உருவாக முடியாது. அப்படியானால் எங்களை சுற்றியுள்ள இத்தகைய அவமதிக்கத்த மூர்க்கத்தனமான இரக்கமற்ற குற்றங்கள் எல்லாம் என்ன? வயதான பெண்கள் ,யுவதிகள், சிறுவர், சிறுமிகள், ஏன் பச்சைக் குழந்தைகள் என்றுகூடப் பேதம் பாராமல், இந்த பாலியல் வல்லுறவுகளும் மற்றும் கொலைகளும் ஏன் நடைபெறுகின்றன?

அநேகமானவர்கள் சொல்வது, 30 வருடங்களாகப் பின்பற்றப்பட்டு வந்த நவ தாராண்மைவாத பொருளாதாரம், மற்றும் அதனை சுயநலப் போட்டிக்கு வேகமான பாதையில் வழிநடத்திச் சென்ற நுகர்வோர் தன்மை என்பன  நீண்டகாலமாக  நாம் பின்பற்றி வந்த நமது சமூக கலாச்சாரத்தின் மதிப்புகளை சீரழித்து விட்டன என்று. ஆனால் அது நகர்புறங்களைக் காட்டிலும் கிராமங்களில் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. போட்டிமிக்க, களைப்பற்ற நாட்களின் அழுத்தம் காரணமாக விரக்தியடைந்து தனிமைப் பட்டுள்ள மனிதர்களை, இந்த தாராண்மைவாத பொருளாதாரம், அமைதியான கிராம வாழ்க்கையை அனுபவிப்பவர்களைக் காட்டிலும் நகர்ப்புற மத்தியதர சமூகத்தை பெரிதும் மாற்றியுள்ளது. சிரேட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் மற்றும் காவல்துறை பேச்சாளருமான அஜித் றோகண,சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவுகள் சம்பந்தமான வழக்குகள் அதிகரித்துச் செல்வதற்கு, இலகுவாக பெறக்கூடியதாகவுள்ள இணையத் தளங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் என்பனவே முக்கிய காரணம் என்றார், இரண்டிலும் இந்த நவ தாராண்மைவாத பொருளாதாரத்தின் தாக்கங்கள் உள்ளது ஒரு பிரதான காரணம்.

இணையத்தளம் அநேகமாக குற்றச்செயல்களை துரிதப்படுத்தும் ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால் ககவத்தவில் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்ததும்,அதேபோல தங்கல்ல, அக்குரஸ்ஸ, மண்டைதீவில் நடந்தவைகளும்,மற்றும் அஜித் றோகண குறிப்பிட்ட பாதிப்புக்கு உள்ளான அந்த 1,160 சிறுவர்களும், இணைய உலகில் ஜாம்பவன்களாகிய இளைஞர்கள் தாங்கள் தொழில் நுட்ப விளையாட்டிற்காக மேற்கொண்ட பயிற்சி செய்முறைகளாக  இருக்க முடியாது. மற்றும் அவை பெரும்பான்மையானவைகளாக இல்லை, நகர சமூகத்திலிருந்தும் அது இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகின்றன.

இந்தியாவை பொறுத்தமட்டில் கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையில் சட்ட விதிகளை வலுவாகவும் கடுமையாகவும் மாற்றும்படி கோரிக்கைகள் எழுந்துள்ளன. அவர்களுடைய பிரச்சினைகள், அவர்களது தீவிர பிரபுத்துவ மற்றும் பழமைக் கலாச்சாரத்துக்குள் ஆழமாக உள்நுழைந்துள்ளதால், சட்டத்தால் மட்டும் அதை தடுத்து நிறுத்திவிட முடியாது. பல நூற்றாண்டுகளாக ஆண்கள் பெண்களை விட உயர்வானவர்கள் என்றவகையில் கடைந்தெடுக்கப்பட்டது அந்தக் கலாச்சாரம். விதவையானவள், மரணமடைந்த கணவனின் சிதையில் பாய்ந்து தன்னுயிரை மாய்த்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடும் கலாச்சாரம் அது. சீதனக் கொடுமை காரணமாக பெண்களின் திருமண வாழ்க்கை  உரிமை மறுக்கப்படும் கலாச்சாரம் அவர்களுடையது. அப்படியான கலாச்சாரப் பின்னணியில், இந்தியக் குடும்பங்களில் ஆணாதிக்க மனப்போக்கு பேணி வளர்க்கப்பட்டுள்ளது. எனவே அங்கு சாதாரணமாக பெண்களை உபசரிக்கும் போக்கு இயற்கையானது, நீரா சோப்ரா தனது இரண்டாவது மகள் பூஜா  2009ம் ஆண்டின் இந்திய அழகுராணியாக முடிசூட்டியதன் பின்னர் தான் எவ்வாறு நடத்தப்பட்டார் என்று சொன்னதைப் போன்றது. அதனால் இந்திய காவல்துறையினருக்கும், மற்ற எந்த இந்திய ஆண்மகனைப்போலவே,பெண்களை சரிநிகர் சமமாக நடத்த விரும்பாத குணத்தை தவிர  பெண்களைப் பற்றிய வித்தியாசமான வேறு கருத்து இருந்திருக்க முடியாது.

ஆனால் இங்கு ஸ்ரீலங்காவில் அப்படியல்ல. எங்கள் கலாச்சாரத்தில், இந்திய வாழ்க்கை முறையில் ஆழமாக ஊடுருவி உள்ளதை போன்ற குறிப்பிட்ட ஆணாதிக்க கலாச்சார பிரதிபலிப்புகள் கிடையாது. ஆனால் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும் எங்கள் கலாச்சாரத்திலும் அடிப்படையான ஒரு தவறு உள்ளது என்பதை எதிர்மறையானதும் முனைப்பற்றதுமான வகையில் ஒப்புக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான வாழ்வுக்கான ஒவ்வொருவரின் உரிமையை ஏற்றுக் கொள்வதற்கான சமூகப் பொறுப்பு மற்றம்  நவீன உலகம் கோரிக்கை விடுக்கும் ஒழுக்கம் மற்றும் நாகரீகம் என்பனவற்றை பின்பற்றுவது போன்றவற்றில், நிச்சயமாக ஒரு மோசமான முரண்பாடு உள்ளது. அதனால் இங்கு ஸ்ரீலங்காவிலும் தீவிரமான திறந்த பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டியது அவசியம். அமைச்சர் திஸ்ஸ கரலியகொட மற்றும் பலர் பிரேரிக்க விரும்பும் மரண தண்டனைக்கு திரும்பவும் செல்வது என்கிற பதில் சொல்வதைப்போல அத்தனை சுலபமான ஒன்றல்ல.

நன்றி: http://www.thenee.com/html/110113-1.html


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R