பயித்தியமாகவும் கேடுகெட்டும் போன அரசு (Government Gone Mad And Bad)  என்ற தலைப்பு எஸ்.எல். குணசேகரா சிறீலங்கா சட்டத்தரணிகள் சங்கத்துக்கு (BASL)  28 - 11 - 2012 அன்று அனுப்பிய கடிதத்தின் ஊக்குவிப்பாகும்.  குணசேகரா பசில் க்கு அனுப்பிய கடிதத்தில் "இப்போது பதவியிலுள்ள பயித்தியக்கார அரசு உச்ச நீதிமன்ற நீதியரசருக்கு எதிராக முன்னெடுத்துள்ள அரசியல் குற்றச்சாட்டை" எதிர்க்குமாறு கேட்டிருந்தார். அண்மையில் வெளிவந்த பெட்றீ (Petrie) அறிக்கை 70,000 தமிழர்கள் அரசினால் கொல்லப்பட்டதாகக் கூறியது. ஆனால் அதையிட்டு ஒட்டுமொத்தச் சிங்களவர்களும் பாராமுகமாக இருந்துவிட்டார்கள்.  கடந்த வாரம் பசில் அமைப்பு புதிய தலைமை நீதியரசரை ஆதரிப்பதில்லை என எடுத்த முடிவு பாராட்டத்தக்கது.  ஆனால்  நாட்டிலும் பசில் அமைப்பிலும் அதிகளவு  பிழைகள் இருக்கின்றன.  தலைமை நீதியரசர் விவகாரம் வெறுமனே நோயின் அறிகுறிதான்.  எடுத்துக்காட்டாக டொலர் 100 மில்லியன்  பெறுமதியான ஓட்டப்பந்தயக் கார்களை அரசு எந்த வரியும் கட்டாமல் இறக்குமதி செய்தது என செய்திகள் தெரிவிக்கின்றன.  அதைவிட  மற்றவர்கள் கூற்றுப்படி எப்படி அரச சம்பளத்தில் வாழ்க்கையை நடத்துபவர் (அவரது தந்தையாரும் அரச சம்பளத்தில் இருப்பவர்தான்)  டொலர் 100 மில்லியனை  கட்ட முடியும்?  சண்டே லீடர் என்ற செய்தியேடு (06-03-2011)  பிரபா கணேசன் சொன்னதாக ஒரு செய்தி வெளியிட்டது. பசில் இராசபக்சே கட்சி மாறினால் உருபா 20 மில்லியன் தனக்கும் இன்னொரு அய்க்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பி.ஏகாம்பரம் அவர்களுக்கும் தருவதாக வாக்களித்தார். அது அபிவிருத்திக்கு என்று சொல்லப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி. 

அலரிமாளிகையில் முதல்தரமான சாப்பாடுகள், 5 நட்சத்திர ஹோட்டல்களில் நயநாகரிகமற்ற வாழ்க்கை முறை,  வீணான மனிதர்களுக்குச் செலவு,  பொதுப்பணத்தில் மது தண்ணீராக ஓடுவது - இவையெல்லம் நாடாளுமன்றம் விருந்தோம்பல் வரவு - செலவுத்திட்டத்தில் ஒதுக்கும் பணத்தில் இருந்து செலவழிக்கப்படுகிறது. ஆனால் உரூபா டொலர் 100 மில்லியன் என்பது வில்லங்கமானது.   சிந்திக்கும் திறன் படைத்த குணசேகரா போன்றோர் அரசுக்குக் கொடுக்கும் தங்கள் ஆதரவை மறுமதிப்பீடு செய்ய வேண்டும். எனினும், பொதுமக்கள் அபிப்பிராயம் இந்தப் பயித்தியக்காரத்தனமான அரசுக்கு எதிராக வலுக்கும் போது, மர்வான் மாக்கன் - மார்க்கர் ஒரு கருத்துச் சொன்னார்.  தலைமை நீதியரசரது ஆதரவாளர்கள் " மிசக் சிலரே....... அது மாற்றத்துக்கு வேண்டிய திணிவை அடையவில்லை...... (தெருவில் காணப்படும் எண்ணிக்கை வலிமை மற்றும் அதிகாரம் இரண்டையும் நன்றாகத் தயார் நிலையில்  வைத்திருக்கும் இராசபக்சேயின் அரசியல் இயந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது".

தமிழர்களது ஆற்றாமை

சிங்கள அறிவுப் பிழைப்பாளர்களே  ஆற்றாமை உணர்வோடு இருக்கும் போது தமிழர்களது ஆற்றாமை பற்றிக் கற்பனை பண்ணிப் பார்க்கலாம். 1970 ஓகஸ்ட் மாதத்தைத் திரும்பிப் பார்க்கிறேன்.  வன்முறையில் நாட்டம் உள்ள  காவல்துறையினர் யாழ்ப்பாணத்துக்குத் தண்டனை இடமாற்றம் பெற்றுச் சென்றார்கள். அதன் பொருள் என்னவென்றால் "நீங்கள் மக்களை அடிக்க ஆசைப்படுகிறீர்கள் அப்படியென்றால் யாழ்ப்பாணம் சென்று தமிழர்களை அடியுங்கள்" என்பதாகும்.  பல்கலைக் கழக நுழைவிற்கு யார் தகுதி எனத் தீர்மானிக்கு முன்னர் ஒவ்வொரு சிங்கள மாணவனுக்கும் தரப்படுத்தல் முறையில் 28  மேலதிக புள்ளிகள் கொடுக்கப்பட்டன. அந்தக் காலத்தில்தான்  விரக்தி அடைந்த இளைஞர்கள் காவல்துறையினருக்குக் கல் எறியத் தொடங்கினார்கள். அது விரைவாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தை  உடைக்கவும் அல்பிரட் துரையப்பாவின் காருக்குக் குண்டு வைக்கவும் நிலைமை சென்றது.  அண்மையில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகத்தில் நடந்தேறிய சம்பவங்கள் - மாணவர்களை இராணுவம் தாக்கியதை அடுத்து மறு நாள் அவர்கள் இராணுவத்தின் மீது கல்லெறிந்தார்கள். இது முன்னைய காலத்தை மீள நினைவுக்குக் கொண்டுவந்தது. முற்றிலும் எதிர்பார்த்த அதே சமயம் கிலி நிறைந்த  அண்மைய சம்பவங்கள் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றன.  ஒரு தமிழ் மனிதன் போருக்குப் பிறகு காணப்பட்ட  சமன்பாடற்ற பாலியல் காரணமாக   நான்கு பெண்களை வைத்திருந்தார்.  அந்த நால்வரும் தமிழ் ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்தப் புறப்பட்ட குழுவினால் கண்டதுண்டமாக வெட்டிப் போடப்பட்டார்கள்.  அதே இடத்தில் ஒரு வயோதிபர் சிங்களவர்களுக்குத் தமிழ்ப் பெண்களை வழங்கிக் கொண்டிருந்தார்.  அவரும் இன்னொரு சிப்பாயும்  துண்டு துண்டாக வெட்டப்பட்டனர்.  அய்லந்து  (Island) நாளேட்டின் படி பெண்களோடு சேட்டை விட்ட ஒரு சிங்களத் தொழிலாளி முன்கூட்டி ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு இடத்திற்கு வந்த போது கொலை செய்யப்பட்டார்.

இதேபோல்  யாழ்ப்பாணத்தில் ஒரு கள்ளர் கும்பல் ஆட்களை கொலை செய்வதற்கு வாடகைக்கு அமர்தப்படுவதாகச்  செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை வெடிவைத்துக்  கொல்லுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற ஒரு காவல்துறை அதிகாரி உடனே இடமாற்றம் செய்யப்பட்டார்.  இப்போது சிலர் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டதால் அந்தக் கும்பலின் ஒரு பகுதி காணாமல் போய்விட்டது.

தமிழ்வின் இணையதளம் இப்படிச் சட்டத்தைக் கையில் எடுப்போருக்கு யாழ்ப்பாண மக்களின் ஆதரவு இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.  ஆனால் முல்லைத்தீவில் வாழும் தமிழர்களுக்காக  இராணுவம் செய்யும் கொடுமைக்கு எதிராக யாரும் சட்டத்தை கையில் எடுப்பதில்லை.  பசில், பான் கி மூன் நியமித்த வல்லுநர் குழு அறிக்கைக்கையைப் பலமாகக் கண்டித்தது. அய்.நா. வல்லுநர் குழு அறிக்கை பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் வி.புலித்தலைமையைக் கேட்டுக் கேள்வியின்றிக் கொலை செய்யப்பட்டதையும் பதிவு செய்திருந்தது. 

தென்பகுதியில் இருக்கும் நல்ல பல்கலைக் கழகங்களில் இருந்து தமிழ்மொழி வழிக் கல்வி  நீக்கப்பட்டுவிட்டது. அதனை நாம் தடுக்க முடியவில்லை. வெறுமனே பார்க்கத்தான் முடிந்தது.  ஆங்கில வழி மூலம் கல்வி கற்பிக்கும் தொழில்சார் பள்ளிக்கூடங்களில் இருந்து தமிழர்களை நீக்குவதற்கு மாற்று உபாயங்கள் தேவைப்படும்.  அதனால் யாழ்ப்பாணம் கலகலத்துப் போன ஒரு பொறியியல் பீடத்தை மட்டும் கொண்டுள்ளது. அதே சமயம் சிறீலங்கா முழுதும் முனைவர் பட்டம் பெற்ற மூன்று நடுத்தர அகவைத் தமிழர்கள் மட்டும் இருக்கிறார்கள். உருகுண பொறியியல் பீடம் கட்டப்பட்ட போது கட்டிடத்துக்கு மட்டும் உரூபா 900 மில்லியன் (1998)  இல் டொலரின் மதிப்பு உரூபா 68 ஆக இருந்தது. அதன் இன்றைய மதிப்பு உரூபா 128) செலவில் கட்டப்பட்டது. ஆனால் யாழ்ப்பாண பொறியியல் பீடம் கட்டுவதற்கு இன்றைய உரூபாயின் மதிப்பில் வெறுமனே உரூபா 250 மில்லியன் மட்டுமே. பொறியியல் பீடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடம் கிளிநொச்சியில் இருந்து வெகுதூரத்துக்கு அப்பாலுள்ள காடுகளாகும். இந்த முடிவை அரசும் இராணுவமும் எடுத்தது.  அதற்கு ஆதரவாக இபிடிபி உப வேந்தரும் அவையும் இருந்தது. இது நான் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளாராக இருந்தபோது கொடுத்த எனது யோசனைக்கு முரணானது. எனது யோசனை என்னவென்றால் பொறியியல் பீடம் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்றால் அது யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட வேண்டும். அப்படி யாழ்ப்பாணத்தில் கட்டினால் மட்டுமே அங்குள்ள வணிக சூழ்நிலை, தனியார் வீடுகள் போன்ற வளங்களைப் பயன்படுத்த முடியும்.  எனது யோசனைக்கு பேராசிரியர்கள் கே.கே.வை.டபுள்யூ பெரேரா மற்றும் இலட்சுமன் இரத்நாயக்கா போன்றவர்கள் எழுத்து மூலம் ஆதரவு தெரிவித்தார்கள். இதன் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட நிதியை பொறியியல் பீடம் கட்டுவதற்குப் பயன்படுத்தலாம். (நான் கட்டிடம் மற்றும் தளபாடங்களுக்குக்  கேட்ட நிதி இந்தக் கார்கள் இறக்குமதி செய்வதற்குச் செலவழித்த பணத்தை விட கால்வாசியாகும். இருந்தும் நிதி இல்லை எனச் சொல்லப்பட்டது.)  இது எதில் போய் முடியுமென்றால் வடக்கில் இருந்து பேரதேனியாவுக்குப் படிக்கப் போகும் மாணவர்கள் கிளிநொச்சிக்கு வெகு தூரத்தில் இருக்கும் மாட்டுக் கொட்டிலுக்குள்  தள்ளப்படுவார்கள்.  அங்கு படிப்பதற்கு முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஒரு சிலர் மட்டுமே இருப்பார்கள். அல்லது முற்றாக இருக்க மாட்டார்கள்.

கிளிநொச்சியில் (சிங்கள) குடியேற்றம்:  எதிர் வன்முறை

நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா சமூகத்தவைரையும் குடியமர்த்துவதே அரசில் இருக்கும் கட்சிகளது வெளிப்படையான திட்டமாகும். இது ஒன்றும் இரகசியமானது அல்ல.  யாழ்ப்பாணத்தை அப்படி இலகுவில் மாற்ற முடியாது.  ஆனால் வவுனியா அப்படி மாற்றப்பட்டு விட்டது. அடுத்து கிளிநொச்சி  இலகுவாக  மாற்றப்படலாம்.  இதனால் கிளிநொச்சியில் பொறியியல் பீடத்தை அமைப்பது தமிழ் மாணவர்கள் பேரதேனியாவுக்குச் சென்று படிக்கும் வாய்ப்பை இல்லாமல் செய்கிறது. அது மட்டுமல்லாமல் கிளிநொச்சியை (சிங்கள) குடியேற்றத்துக்குத் தயார் செய்யவும் உதவும்.  நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வவுனியா வளாகம் முழுதும் தமிழர்களுக்கு சொந்தமாக இருந்தது. ஆனால் இன்று பயனுறு அறிவியலில் சிங்கள மாணவர்களது விழுக்காடு 48 ஆகவும் முகாமைத்துவத்தில் 70 விழுக்காடாகவும் எஞ்சிய விழுக்காட்டை தமிழர்,  முஸ்லிம் பங்குபோட்டுள்ளார்கள்.   கிளிநொச்சியும் இப்படித்தான்  இருக்கப் போகிறது என்பது தெளிவானது.

முல்லைத்தீவில் நடந்த போரின் இறுதி மாதங்களில் 101,748 தமிழர்கள் என்ன ஆனார்கள்  என்பது தெரியவில்லை என பிரான்சிஸ் ஹரிசன் உலக வங்கியின்  தரவுகளை மேற்கோள் காட்டி அறிவித்திருக்கிறார். பல ஆண்கள் தப்பி ஓடிவிட்டார்கள் அல்லது இறந்து போனார்கள். இதனால் பெண்கள் மற்றவர்களது (பாலியல்) தேவைக்கு மிக இலகுவாக இரையாகுகிறார்கள். விசுவமடு, பிரமந்தனாறு மற்றும் குமாரசாமிபுரம் போன்ற ஊர்களைச் சார்ந்த 100 பெண்கள் கட்டாயப்படுத்தி சிங்களவர்களுக்கு மணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பெண்களுக்குப் பின்னர்  பங்கீட்டு அட்டை உட்பட விரிவான வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.  கிளிநொச்சியில் சிங்கள இராணுவத்தினர் மற்றும் சிங்கள வேலை ஆட்கள் ஆகியோரால் தமிழ்ப் பெண்கள் கர்ப்பிணியாக்கப்பட்டதை வைத்துப் பார்க்கும்  நான் இதை உண்மையென்று கொள்ள வேண்டியுள்ளது.  ஒரு உள்ளுர் பெண் வைத்தியர் வெட்கத்தோடு இதனைச் சொல்கிறார். தன்னிடம் பல பெண்கள் கள்ளக் கலவிக்குப் பின்னர் கருக்கலைப்புக்கு அல்லது கருத்தடைசெய்வதற்கு வருகிறார்களாம்.

தமிழரின் அடிமைத்தனம்

1970 இல் எங்களில் நால்வர் ஒரு காவலாளியால் எந்தக் காரணமும் இன்றிக் கன்னத்தில் அறையப்பட்டோம். அப்படி அறைந்தவுடன் எங்களில் ஒருவன் "அய்யா" "அய்யா" என்று கெஞ்சினான். அவனை விட்டுவிட்டான்.   தலை வணங்க மறுத்த எங்களில் இருவர் இரக்கமற்ற முறையில் தாக்கப்பட்டோம். காவலாளி பூட்ஸ் காலால் உதைத்துபோது தொடையெல்லாம் வீக்கம் ஏற்பட்டது.

நாங்கள் நீதிக்காக கிளர்ந்தெழுந்த போது எமது உரிமைபற்றிய புரிதல் சிறிய அளவுதான் இருந்தது.   எமது கிளர்ச்சி - ஒரே நேரத்தில் மேன்மை பொருந்தியதாகவும் மேன்மை அற்றதாகவும் காணப்பட்டது. அதன் விளைவு 2009 இல் அரங்கேறிய படுகொலைகள். இப்போது நாங்கள் அடக்கவொடுக்கமான வேலைக்காரர்களாக மாறிவிட்டோம்.  யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பொதுமக்கள் படிப்பறிவில்லாத சிப்பாய்களைப் பார்த்து "அய்யா" போடுகிறார்கள்.  நாங்கள் கொழும்பில் இருந்து எட்டப்பர்கள் மூலமும் படிப்பறிவில்லாத இராணுவத்தினராலும் ஆளப்படுகிறோம்.

கோத்தபாய யாழ்ப்பாண பல்கலைக் கழக துணைவேந்தரையும் பேராசிரியர்களையும் கொழும்புக்கு அழைத்தது பற்றிப் புலம்புகிறோம்.  எந்த வரைவுடன்பாட்டின் கீழ் சனாதிபதியால் நியமிக்கப்பட்ட துணைவேந்தருக்கும் மற்றும் பேராசிரியர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அழைப்பாணை விடுத்தார்?  அந்த ஆணைக்கு அவர்கள் கீழ்ப்பணிவாக நடந்து கொண்டார்கள்.  அவர்கள் மட்டும் பாதுகாப்பு அமைச்சின்  செயலாளரை  பல்கலைக் கழகத்துக்கு வாருங்கள் என்று கேட்டிருந்தால் "அய்யா, அய்யா" என்று கும்பிடுபோடும் பொதுமக்களுக்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக இருந்திருப்பார்கள்.

இந்தப் பயித்தியக்காரத்தனம் நிறுத்தப்பட வேண்டும் என்றால்  அரசின் பயித்தியமானதும்  கேடுகெட்டும் போன செயல்கள் நிறுத்தப்பட வேண்டும்.  குணசேகரா போன்றவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மனித உரிமை மீறல்கள் மற்றும் அச்சத்தோடு கூடிய அடிமைத்தனம்  இனம் சார்ந்தது அல்ல.  அது சகல குடிமக்களது உரிமைகள் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலாகும். 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R