மாலு : புலம்பெயர்தல் எனினும் துவக்கத்திலேயே தீர்ந்துவிடும் லட்சியம்! - பேராசிரியர் .பாலகிருஷ்ணன் -
- "மாலு மற்றும் 1098 (Notch, 1098 ) சுப்ரபாரதிமணீயனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு கோவையில் அன்று கோவை பீளமேடு கிளஸ்டர் மீடியா கல்லூரியில் நடைபெற்றது. மாலு மற்றும் 1098 என்ற திருப்பூர் வாழ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் Notch, 1098 என்ற பெயர்களில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன Notch நாவலை கோவையைச் சார்ந்த பேரா .பாலகிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ளார் 1098 நாவலை மதுரையைச் சார்ந்த பேராசிரியர் வின்செண்ட் மொழிபெயர்த்துள்ளார் இவற்றை டெல்லியைச் சார்ந்த Authours press பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விசாரணை திரைப்படத்தின் மூல கதையாசிரியர் சந்திரகுமார் , பாரதியார் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் செல்வராஜ்,, ஆவணப்பட இயக்குனர் மயன், மொழிபெயர்ப்பாளர் கோவிந்த சாமி உட்பட பலர் நூல்களின் வெளியீட்டில் கலந்து கொண்டார்கள் . பேரா பாலகிருஷ்ணன் மறைந்த கவிஞர் வேனில் கிருஷ்ணமூர்த்தி மறைவை ஒட்டி அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாலு - Notch நாவல் மொழிபெயர்ப்பு அனுபவத்தை விவரித்தார் . 1098 நாவலின் மையமான பெண்மைய சிந்தனை மையம் பற்றியும் மொழிபெயர்ப்பு சிறப்பு பற்றியும் விவரித்தார் . சுப்ரபாரதிமணியன் இந்த இரு நாவல்களின் படைப்பு அனுபவங்களை விவரித்தார். பீளமேடு கிளஸ்டர் மீடியா கல்லூரி நிர்வாகிகள் அரவிந்தன் , திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர் . ஜாப்பர் நன்றியுரை வழங்கினார். மேற்படி நிகழ்வில் மாலு நாவலை Notch என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவமிது." - சுப்ரபாரதிமணியன் - ]
குற்றங்கள் அனைத்தும் தண்டனைக்குரியன என அனைத்து நாடுகளிலும் சட்டம் உள்ளபோதும் அதிகபட்ச தண்டனையான தூக்கு அல்லது மரணம் விளைவிக்கும் தண்டனை எல்லா நாடுகளிலும் கிடையாது .அது அழிக்கப்பட்டு விட்டது .ஆனாலும் சில நாடுகள் சிங்கப்பூர் மலேசியா போன்றவை அதனை இன்னும் நடைமுறைப் படுத்துகின்றன. ஐநா மனித உரிமை ஆணையம் பலமுறை அவற்றை கண்டுபிடித்து கண்டித்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு சிங்கப்பூர் அரசு 29 வயது இளைஞர் ஒருவரை ,தமிழர் இலங்கையைச் சேர்ந்தவர் குறிப்பிட்ட அளவைவிட மிகவும் குறைந்த அளவு சற்று கூடுதலான போதைப் பொருள் வைத்திருந்தார் என்று தூக்கிலிட்டு விட்டது வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் நடந்தது அப்பீல் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. இந்நாடுகளில் தூக்கிலிடப்படும் குற்றவாளிகளில் கணிசமானோர் போதைப்பொருள் குற்றத்திற்காக தண்டிக்கப்படுவார்கள் .போதைப் பொருளைப் பயன்படுத்துதல், விற்பனை செய்தல், மேலும் கடத்துதல் என்பன மிகுந்த குற்றச் செயல்களாக இங்கே பாவிக்கப்படுகின்றன .மற்ற நாடுகளில் இதற்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடையாது. பிரிட்டிஷ் வணிகர்கள் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் அடிமை வணிகத்தை நிறுத்தி விட்டபின் போதைப்பொருள் விற்பனையை பரவலாக மேற்கொண்டிருந்தனர் என்பது எட்வர்டு கலியாணோ என்பவர் கூறுகிறார் .இந்தியாவை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆண்டபோது அதனை இன்னும் தனது ஆளுமையை பரப்பும் இலக்குகளை ஒட்டி ஒரு ராணுவத் தளமாக -ஒரு நிர்வாக முறைமைத் தளமாகவே கையாண்டனர் என்று அமிதாவ் கோஷிம் குறிப்பிடுகிறார். இந்தியாவில் இருந்து ஹாங்காங் -சீனா போன்ற நாடுகளுக்கு கடந்து செல்வதற்காக அவர்கள் உருவாக்கிய போதை இலக்குதான் ‘சில்க் ரூட்’ எனப்படும் பட்டுப்பாதை .இந்தியாவின் உயர் கிழக்கில் அமைந்த பர்மா போன்ற நாடுகளையும் வெட்டி செல்லும் பாதை -என்றும் எட்வர்டு கலியாணோ என்பவர் கூறுகிறார். தமிழர்கள் கூலித் தொழிலாளர்களாக எடுத்துச்செல்லப்பட்டு இரண்டாம் உலகப் போரில் லட்சக்கணக்கில் ஜப்பானிய வீரர்கள் மேலேறிச் செல்வதற்கான ‘குவாய்’ நதியின் மீது கட்டப்பட்ட மிக நீண்ட பாலத்தை உருவாக்குவதற்கான கடினமான ஈவு இரக்கமற்ற பணியிலும் அமர்த்தப்பட்டனர் என்பது வரலாறு .மாலு நாவலின் களம் இவை அல்ல .எனினும் காலம் கடந்த -மேலான நூற்றாண்டிலிருந்து இன்றுவரை இப்பகுதிகளில் விரியும் துயர் நிறைந்த காட்சியில் தனது பெருமூச்சு கலந்து நிறைகிறது. தமிழர்கள் அடிமைகளாக. உடலுழைப்பை கொடுத்தவர்கள் மற்றும் பொய்யான போதைப்பொருள் கடத்தல் உள்ளதாக தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டவர்களும் கூட.