அதிகார அரசியலும் நெறிசார் மெளனமும் - ‘நசா’ (NAZA) ஆவணப்படத்தின் ஊடகவியல், நுட்பவியல் மற்றும் அரசியல்! - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
1. முன்னுரை: புலனாய்வுச் சினிமாவும் அதிகார வர்க்கத்தின் மறைக்கப்பட்ட ஆவணங்களும்
நவீன ஆவணப் படங்கள் வெறும் கள யதார்த்தத்தைப் பதிவு செய்யும் வழக்கமான எல்லையைத் தாண்டி, உளவுத்துறை மற்றும் இராணுவ அதிகாரத்தின் உள்கட்டமைப்பை உடைத்துப் பார்க்கும் புலனாய்வுக் கருவியாக உருவெடுத்துள்ளன. பில் நிக்கோல்ஸ் (Bill Nichols, 1991) தனது ஆவணப்படக் கோட்பாட்டில் குறிப்பிட்டது போல, "ஆவணப் பதிவின் வெளிப்பாடு என்பது வரலாற்று உலகோடு நேரடியாக உரையாடும் பிரதிநிதித்துவ தர்க்கத்தைச் சார்ந்தது; அது அரசின் அதிகாரப்பூர்வக் கதையாடல்களைத் தகர்க்கும் சாட்சியங்களுக்குக் குரல் கொடுக்கிறது" (Nichols, 1991).
அந்த வகையில், 2026-ஆம் ஆண்டு வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நடுவர் மன்றத்தின் சிறப்பு விருதைப் (Special Jury Prize) பெற்ற ‘நசா’ (NAZA) திரைப்படம், சாட்சிய சினிமாவிற்கு (Cinema of Testimony) ஒரு புதிய சர்வதேச இலக்கணத்தை எழுதியுள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற ‘நோ அதர் லேண்ட்’ (No Other Land) திரைப்படத்தை உருவாக்கிய இஸ்ரேலிய புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் ரேச்சல் ஸோர் (Rachel Szor) மற்றும் யுவால் ஆபிரஹாம் (Yuval Abraham) ஆகியோரின் இயக்கத்தில், 'தி கார்டியன்' (The Guardian) தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், கசா மீதான தாக்குதலின் பின்னணியில் உள்ள இராணுவ அமைப்பின் டிஜிட்டல் படுகொலை இயந்திரத்தை (Digital Killing Machine) உலகிற்குத் தோலுரித்துக் காட்டுகிறது.





“எனது தந்தையிடம் ஒரு துப்பாக்கி இருந்தது… அக்கம் பக்கம் ஏழெட்டு ஊர்களிலும், ஒவ்வொரு துப்பாக்கி. ஒரு நாற்பது பேராய், ஒன்று கூடி, கிளம்பி விடுவோம்… மான் வேட்டைக்கு… காலையில் புறப்பட்டால், மாலையாகி விடும்… காடுகளில் கடும் தாகத்துடன் அலைந்து திரிவோம்… ஒவ்வொருவர் முதுகுகளிலும், ஒரு சிறு மூட்டை, களி தொங்கும்… தண்ணீர் கிடைக்காது… பகல் உணவுக்கு தண்ணீரை தேடி அலைவோம்… ஒரு முறை ஒரு மானை வேட்டையாடியாகி விட்டது. கூறு போட்டுக் கொண்டிருந்தோம். எனது நண்பன் கண்ணைக் காட்டினான்…. ஈரலை மெதுவாக கடத்தி விட்டேன்… பின் நன்கு சுட்டு திண்றோம்… நன்றாய் இருந்தது… விசாரித்தார்கள், ஈரலை காணோமே என்று. அடியான அடி –அப்பாத்தான்…”.


எங்கள் பயணத்தில், சேற்றுக் குழிகளிலிருந்து மீத்தேன் எரிவாயு வெளியேறும் இடத்தைப் பார்ப்பதற்காக, பாகுவிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோபுஸ்தானுக்கு (Gobustan) சென்றோம். இப்படியான சேற்று எரிமலைகள் உலகில் அரிதானவை. உலகிலுள்ள சேற்று எரிமலைகளில் பெரும் பகுதி அஜர்பைஜானில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எங்கள் பயண அட்டவணையில் இப்படியொரு இடத்தைத் தவறவிட முடியுமா?

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக வேந்தராக பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் நியமனமாகியிருக்கும் செய்தி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியுடன் இந்த பதிவை எழுதுகின்றேன். பேராசிரியர் சி.மௌனகுரு, கல்வி, கலை,இலக்கிய ஊடகத்துறையிலும் பங்காற்றி, பேராதனை, யாழ்ப்பாணம், கிழக்குப்பல்கலைக்கழகம் முதலானவற்றில் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வந்திருப்பவர். கடந்த காலங்களில் ஓய்வுநிலைப் பேராசிரியராக பணியாற்றி வந்திருக்கும் சி. மௌனகுரு அவர்கள் தான்சார்ந்த கலைத்துறையில் குறிப்பாக கூத்து, நாடகம் முதலானவற்றில் சாதனைகள் புரிந்தவர்.



எதிர்வரும் 04.10.2026 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு, லெ.முருகபூபதியின் "ஒரு பத்திரிகையாளனின் இலக்கியப் பயணம்" என்னும், பவளவிழா மலரும், நோயல் நடேசனின், "சாந்தா குரூஸ் தேவதை", "நாலுகால் சுவடுகள்", தாத்தாவின் வீடு" ஆகிய மூன்று நூல்களும், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தினால் வெளியிடப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.



ஆ. மாதவன் அவர்களுக்கு நான் வாசகராகத்தான் ஆரம்பத்தில் அறிமுகமானேன். அவரின் கதைகளின் எதார்த்தப் போக்கில் திருவனந்தபுரம் மக்களின் அனுபவங்களும் பிரத்தியேகமாக இருந்தன .ஆனால் அவர் முன்னர் திராவிட இயக்கப் பத்திரிகைகளில் அதிகம் எழுதியவர் என்பதால் ஒரு வகை ஒவ்வாமை இருந்தது. ஆனால் பின்னால் அவருடைய படைப்புகளில் இருந்த்த் தீவிரம் அந்த பாதகமான அம்சங்களை விலக்கி விட்டது
கனடா பிரதமரின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு: பலதரப்புவாதம், சர்வதேச சட்டம், அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்பு! - தமிழில் - கூகுள் நனோ பனான செயற்கை நுண்ணறிவு - [ செப்டம்பர் 21, 2026 நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடுகள்]




கட்டுரையாளர்: முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம்.









