ஈழத்து சிறுகதை பகுப்பாய்வு ( 05) : வ.ந.கிரிதரனின் ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு!’ - காலப் பேரழிவு, இருத்தலியல் மீறல் மற்றும் பின்நவீனத்துவ அறிவியல் புனைகதை! - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

“எவ்வளவு மாசுபடுத்த முடியுமோ அவ்வளவுக்கு மாசுபடுத்தப்பட்டு விட்டது இந்த அழகிய நீல வண்ணக் கோள்... மானுட வரலாற்றில் மிகப்பெரியதொரு பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டவுள்ளார் ஆத்மாநாம்.”
— வ.ந.கிரிதரன், ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு!’ (2005)
1. அறிமுகம்:
எதிர்காலத்தின் நிழலும் அறிவியலின் அகந்தையும்
வ.ந.கிரிதரனின் ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு!’ உரைபடைப்பு, தமிழ் அறிவியல் புனைகதை (Tamil Science Fiction) தளத்தில் வெறும் தொழில்நுட்ப நுட்பங்களை விவரிக்கும் கதையாக அமையாமல், ஆழமான தத்துவார்த்தக் கேள்விகளையும் சூழலியல் அறவியலையும் எழுப்பும் ஒரு முன்னோடிப் படைப்பாகத் திகழ்கிறது. கி.பி. 3025 ஆம் ஆண்டினைப் பின்னணியாகக் கொண்ட பிரதியை, ஒப்பீட்டு இலக்கியம் மற்றும் பண்பாட்டு விமர்சனப் பாணியில் (Ecocriticism, Existentialism, and Science & Technology Studies) பகுப்பாய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது இக்கட்டுரை.
இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து உலக இலக்கிய வெளியில் அறிவியல் புனைகதைகள் (Science Fiction) வெறும் தொழில்நுட்பச் சாதனைகளின் கற்பனைப் பெட்டகங்களாக மட்டும் இயங்கவில்லை; மாறாக, அவை மனிதகுலத்தின் தார்மீக வீழ்ச்சியையும் எதிர்காலச் சூழலியல் பேரழிவுகளையும் முன்னறிவிக்கும் தத்துவார்த்த எச்சரிக்கைக் குரல்களாக உருமாறியுள்ளன. தமிழ் இலக்கியச் சூழலில், வ.ந.கிரிதரனின் ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு!’ சிறுகதை இந்த உலகளாவிய மாற்றுப் பார்வையின் மிக முக்கியமான மைல்கல்லாகத் திகழ்கிறது. கி.பி. 3025 ஆம் ஆண்டின் வறண்ட நிலப்பரப்பை களமாகக் கொண்ட இப்படைப்பு, தொழில்நுட்பத்தின் உச்சக்கட்ட வளர்ச்சி மனிதனை விடுவிக்கிறதா அல்லது அவனது ஆன்மீக மற்றும் உயிரியல் இருப்பை முற்றிலுமாகத் துடைத்தெறிகிறதா என்ற ஆழமான வினாவை எழுப்புகிறது.





“வலி” என்ற சொல் மிகவும் எளிமையானதாகத் தோன்றினாலும், அதன் பின்னால் மனித உடலையும் மூளையையும் உள்ளடக்கிய மிகச் சிக்கலான உயிரியல் செயல்முறை இருக்கிறது. காயம் ஏற்பட்டால் வலி வருகிறது; நோய் ஏற்பட்டால் வலி வருகிறது; அழற்சி ஏற்பட்டாலும் வலி ஏற்படுகிறது. ஆனால் சில நேரங்களில் காயம் குணமாகிவிட்ட பின்னரும் வலி தொடர்ந்து கொண்டிருக்கிறது. மருத்துவப் பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க உட
உள்ளங்கள் திருந்திட உள்ளங்கள் உயர்ந்திட
எழுத்தாளரும், கலை, இலக்கியத்திறனாய்வாளருமான வெங்கட் சாமிநாதன் அவர்களுடனான தொடர்பினை எனக்கு ஏற்படுத்தித் தந்தது பதிவுகள் இணைய இதழ்தான். பத்து வருடங்களுக்கும் அதிகமாக ம், அவர் மறையும் வரை அவர் பதிவுகள் இணைய இதழுக்கு எழுதிக்கொண்டிருந்தார். அவரது நினைவு அவ்வப்போது தோன்றி மறைவதுண்டு. இன்றும் அவ்விதமே தோன்றியது. அப்போது என் மின்னஞ்சல்களில் அவர் எழுதியவற்றை மீண்டும் பார்த்தேன்.
எழுத்தாளர்கள் கூடுகை / விருது வழங்கும் விழா 20/10/26 மாலை நடைபெற்றது. சேவ் அலுவலகம், 5 ஐஸ்வர்யா நகர், கேஎன்பி காலனி, திருப்பூர் ( தாராபுரம் சாலை, கலைஞர் அறிவாலயம் அருகில்). தலைமை: வியாகுலமேரி ( இயக்குனர் சேவ் ).






கிராமச் சூழலில் வாழ்ந்தவர்களுக்கு, பள்ளிக்கூட வசதிகள் ஏற்பட்டு அவர்களது குழந்தைகள் படிக்க நேரிட்ட காலத்திலும், அவர்கள் டொக்டராகவோ என்ஜினியராகவோ எக்கவுண்டனாகவோ வரவேண்டுமென்ற ஆசைகள் பெற்றோரிடம் பிறப்பதில்லை. குறைந்தபட்சம் கச்சேரியில் ஒரு எழுதுவினைஞர் வேலையோ, பக்கத்துப் பள்ளிக்கூடத்தில் ஒரு உபாத்தியார் வேலையோதான் கனவாக வரும். பெண்கள் மேலாக அதுகூட ஏற்படுவதில்லையென்றுதான் நினைக்கிறேன். எழுதவும், கூட்டிக் கழித்துப் பார்க்க ஏதோ கொஞ்சம் கணக்கும் படித்திருந்தால் போதுமென்பதுதான் கிராமத்தில் கல்வியால் எதிர்பார்க்கப்பட்டதின் உச்சபட்ச எல்லை.
ஒரு இலக்கியப் படைப்பின் ஜீவன் என்பது காலத்தால் தன் வர்ணங்களையும் வாசனைகளையும் இழக்காது இருப்பதற்கு , அதே காலத்திற்குரிய மானுட வாழ்வியல் முறைகளும் , அவர்களின் உணர்வுகளும் எவ்வாறு இன்றைய வாசகருக்குள் கடத்தப்பட்டு உயிர்பெறுகின்றன என்பது முக்கியமானது. அவ்வாறான இயல்பான படைப்புகளில் அன்றும் இன்றுமான ஒப்பீடு மிகவும் சுவாரசியமாக அமைகின்றது.
அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் பாட்டி சொன்ன புராண, இதிகாசக் கதைகள்” என்ற நூலும், அண்மையில் நிகழ்ந்திருந்த ரொறன்ரோ தமிழ்ப் புத்தக அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. கே. ஏ. எஸ். சத்தியமனை நூலகத்தின் பெயரில், பண்டத்தரிப்பிலுள்ள ஜே. எஸ். அச்சகத்தினூடாக, கண்கவர் படங்களுடன் இதனை அவருடைய மகள் பபி இரவி அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.

தேவதேவனின் சொல்லாளுகைத் திறனை அறிவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை பயணிக்கிறது. இதற்குத் தரவாக தேவதேவனின் ‘நல்லதோர் வீணை’ கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் சில கவிதைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சொல்லாளுகைக் குறித்தும் சொல்லாளுகைத் திறனாய்வு குறித்தும் கட்டுரையின் தொடக்கத்தில் தெளிகிறோம். பின்னர், சொல்லாளுகைக் கருவிகள் குறித்த தெளிவோடு, பரவலாக தேவதேவனின் கவிதைகளில் பயின்று வந்த சொல்லாளுகைக் கருவிகளை அடையாளம் காண்கிறோம். கையோடு, அவை வாசகரிடத்தில் ஏற்படுத்தும் விளைவு குறித்தும் ஆராய்கிறோம். முடிவாக, தேவதேவன் தன் கவிதைகளில் எத்தகைய சொல்லாளுகைக் கருவிகளின் வழி, வாசக எதிர்வினையைக் கட்டமைக்கிறார் என்று தொகுத்து காண்கிறோம். இவ்வாய்வுக் கட்டுரையில் சொல்லாளுகை அனுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.



டொரோண்டோ நூலகத்தின் சேகரிப்புப் பிரிவுக்கு எழுத்தாளர்கள் நேரடியாக நூல்களை விற்பது பற்றி எழுதியிருந்தேன். உடனடியாக மூத்த சேகரிப்பு நிபுணர் (Senior Collections Specialist) நிக்கோல் கோக்கர் (Nicole Coker) பதில் அனுப்பியிருந்தார். மிகவும் பயனுள்ள பதில், உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.










