கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! - வ.ந.கிரிதரன் -

[ 'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற் முடியாது போயிற்று. அதன் ஓரளவு முழுமையான எழுத்து வடிவம் இது.]
கட்டடக்கலைஞர் மயூரநாதன் அவரது இந்த நூல் மூலம் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவராக முகிழ்த்திருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும்.
வரலாற்று முக்கியத்துவம்
இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முககிய குறைபாடுகளில் ஒன்று வரலாற்றுத் தெளிவின்மை. இலங்கையின் தொன்மக் குடிகளாக இருந்தும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை கோலோச்சிய யாழ்ப்பாண இராச்சியம் பற்றி, அதன் மன்னர்களைப்பற்றி, இருந்த இராஜதானிகள் பற்றி ஆதாரபூர்வமான, வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய வரலாறு இல்லை என்றுதான் கூற வேண்டும். இலங்கைத் தமிழரின் வரலாற்றைப் பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நூல். அது போல் கைலையாமாலை , வையாபாடல் போன்றவையும் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவையெல்லாமே கூறும் வரலாறு இவை எழுதப்பட்ட காலத்திற்கு முற்பட்டவை. எனவே பல கர்ணபரம்பரைக் கதைகள், கேள்வி ஞானத்தகவல்களை உள்ளடக்கியவை. இவற்றை வடி கட்டு , உண்மை பொய் அறிவதற்கு முதலியார் செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோர் முயற்சி செய்திருக்கின்றார்கள். அவற்றின் விளைவுகளே முதலியார் செ.இராசநாயகத்தின் யாழ்ப்பாணச் சரித்திரமும், சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனமும். மேலும் பலர் யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதியிருந்தாலும், இவை முக்கியமானவை.
மேலும் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுவதில் இலங்கைத் தமிழர் காட்டும் அசிரத்தை. இவ்விடயத்தில் எம்மவருக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்று நூலாசிரியர் மயூரநாதன் அண்மைய ஆதித்தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். உதாரணத்துக்கு அவர் கங்கா சத்திரம் இடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். கங்கா சத்திரம் இருந்ததால்தான் அப்பகுதி சத்திரத்துச் சந்தி என்று அழைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இச்சமயத்தில் எனக்கு ஒரு நினைவு தோன்றுகின்றது. எண்பதுகளில் யாழ் ஈழநாடு பத்திரிகையில் யாழ் நகரில் பழமையின் சின்னங்கள் பேணப்படுவதன் அவசியம் என்றொரு கட்டுரை எழுதினேன். எழுதிய பின்னரே யாழ் மாநகரசபை கங்கா சத்திரத்தை இடித்தது. இவ்விதமிருக்கின்றது எம்மவரின் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுதல் பற்றிய புரிதல். இந்நிலை மாற வேண்டும். இதற்கு நிச்சயம் இந்நூல் உதவி புரியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அதே நேரம் சிங்களவர்களைப்பொறுத்தவரையில் தம் வரலாற்றினைக் காலத்துக்குக் காலம் ஒழுங்காகப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். தீபவம்சம், அதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட மகாவம்சம், தொடர்ந்து எழுதப்பட்ட சூளவம்சம் என அவர்கள் தம் வரலாற்றைப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். இவ்விதம் இலங்கைத் தமிழரும் செய்து வந்திருந்தால் இலங்கைத் தமிழரின் வரலாற்றில் தற்போது எதிர்கொள்ளும் குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம்.



இன்னும் கொஞ்ச நேரத்திற்குத் துணையாகவும் ஆறுதலாகவும் இருப்பாள் கணினி கற்பகம் அவனுக்கு.
சிங்களக் கவிஞர் சஞ்சீ குணதிலகவின் May I be allowed என்னும் ஆங்கிலக் கவிதையை அவரே தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை நண்பர் தனபாலசிங்கம் என்னுடன் பகிர்ந்திருந்தார். அதற்காக அவருக்கு நன்றி. மனித நேயம் உள்ள அனைவரையும் உலுக்க வைக்கும் செம்மணிப் புதைகுழி மனித எலும்புக்கூடுகள் இலங்கையின் கறை படிந்த பக்கங்களில் ஒன்று. உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகளுக்குக் கிடைத்தது போன்று இதற்கும் நீதி கிடைக்குமென்று எதிர்ப்பார்ப்போம்.
ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதன் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கு ஒலி குறிப்பின் மூலம் தெரியப்படுத்தினான். காலப்போக்கில் மனித இனம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய பேச ஆரம்பித்தான். அப்பேச்சே மொழியாக உருவெடுத்தது. இத்தகைய மொழி மென்மேலும் வளர்ச்சி பெற்று இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு, வட்டார வழக்கு எனப் பல்வேறு வகைகளைத் தழுவியுள்ளது. இவ்வகையில் படைப்பிலக்கியங்கள் அமைந்துள்ளன. படைப்பிலக்கியங்களைப் படைக்கின்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என ஒரு உத்தியினைக் கையாளுகின்றனர். அவற்றில் பலரும் அவர்களுடைய சொந்த மண்வாசனையைக் கமலச் செய்கின்ற வகையில் படைக்கின்றனர். அவ்விதத்தில் கலைச் செல்வியின் முதல் படைப்பான சக்கை புதினமும் அவருக்கு உரிய மொழி நடை அமைப்பில் அமைந்துள்ளது. இதனைப் பற்றி ஆராய்வதாக அமைகின்றது.
இரவலன் என்ற சொல்லுக்கு ஏற்போர், பரிசிலர் என்று பொருள். புரவலன் என்ற சொல்லுக்குக் காத்துதவுவோன், கொடையாளன் என்று பொருள். தன்னை நாடி வருகிற புலவனை வள்ளலோ அல்லது மன்னனோ அன்புடன் எதிர்கொண்டு அழைத்து அவரது திறனுக்கு ஏற்ப பரிசில்களைக் கொடுப்பது சங்க கால மரபாக இருந்துள்ளது. புலவர்கள் அரசர்களிடம் அல்லது வள்ளல்களிடம் சென்று ஆடிப்பாடித் தங்களுடைய கலைத்திறனை வெளிக்காட்டுவர். அவ்வாறான ஆடல், பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த அரசர்கள் அல்லது வள்ளல்கள் அவர்களுக்குத் தேவையான அளவு செல்வங்களை வாரி வழங்குவர். இவ்வாறான இரவலர் - புரவலர் உறவு என்பது எட்டுத்தொகைப் பாடல்களிலும் பத்துப்பாட்டுப் பாடல்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. அவற்றில் பத்துப்பாட்டில் உள்ள இரவலர் - புரவலர் உறவு எவ்வாறு இருந்துள்ளது என்பது குறித்து மட்டும் ஆராய்கிறது இந்தக் கட்டுரை.
பெண்களை வரையறை செய்வதில்

எழுத்தாளர், கவிஞர் என பன்முகத்திறமைகள் பெற்றவர் கவிஜி அவர்கள். கவிதை, சிறுகதை, கட்டுரை, உலகசினிமா என பன்முகப் பரிமாணங்களில் தனது எழுத்துப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 25 நூல்கள் வெளியிட்டுள்ளார். அவற்றில் இந்நூல் 16ஆவது நூலாக வெளிவந்தது. தனித்துவமான இடத்தைப் பிடிக்கும் படைப்புகள் இவருடையது.
இத்தாலியின் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் முக்கியமானவர்கள் பிறந்த நகரம் ரஸ்கனிலுள்ள ஃபுளோரன்ஸ் நகரம்தான். நவீன அரசியல் ராஜதந்திரி எனப் புகழப்படும் பிரின்ஸ் மக்கியவில்லி, ஓவியம் மற்றும் சிற்பக்கலை எனப் புகழ் பெற்ற மைக்கேலஞ்சலோ, அதேபோல் மேதை இலியனாடோ டாவின்சி மற்றும் கவிஞர் தத்துவமேதை டான்டே ஆகியவர்கள் அவதரித்த நகரமே இது. விஞ்ஞானி கலிலியோ பீசா நகரத்தில் பேராசிரியராக இருந்தார்; ஆனால் கத்தோலிக்க தலைமைப்பீடத்திற்குப் பயந்து வந்த இடம் இதுதான். ஃபுளோரன்ஸ் நகரம் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தோற்றுவாயாக இருந்தது.
மெலிந்த கட்டை உடல்வாகு கொண்டவன் அவன். நான்கடி உயரம். அவன் நடந்து நான் கண்டதில்லை. ஓடி ஓடியே வேலைகள் அனைத்தையும் செய்வான். காலை ஐந்து மணி அளவில் அவனது வேலை ஆரம்பமாகும். விடுதியை சுற்றி கூட்டி, வாசலையும் துப்புரவாக்கி, பின் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி மீண்டும் கூட்டி பெருக்கி - இரவு ஏழு மணிக்குத்தான் இவனது அலுவல்கள் முடியும். இதற்கிடையில் வெவ்வேறு சில்லறை எடுபிடி வேலைகள். கூறினான்: றாகலை தோட்டத்தில் இருந்து வந்தவனாம். பின், இங்கேயே தங்கி திருமணத்தை முடித்து விட்டதாக. இப்போது மொத்தமாய் பதினைந்து வருடங்களாய் ஆகிவிட்டதாம் - இந்த விடுதி எசமானுக்கு ஊழியம் செய்து. நான் சென்றால் இவனுக்கு ஒரு வித சந்தோஷம். துள்ளி குதித்து வருவான். காலையில் காப்பியை தயாரித்து இருவரும் சேர்ந்து குடிப்போம். ஐந்து மணி. தனிமையில், குடில் போன்ற அந்த சமையலறையில் கோப்பியை சுவைத்து பருகியவாறே நாங்கள் அனைத்தையும் அளவளாவிக் கொண்டிருப்போம்.
கி.மு 384ல் கிரேக்க கொலனியான மெசடோனியா ஸ்ட்ரெஜிராவில் பிறந்த அரிஸ்டோட்டில் 17வது வயதில் எதென்ஸில் உள்ள பிளேட்டோவின் அகெடமியில் பிளேட்டோவின் மாணவனாகச் சேர்ந்தார். கி.மு. 368ல் இருந்து 20 வருடங்கள் அங்கு கல்வி கற்றார். பிளேட்டோவின் மரணத்தின் பின்னர் அரிஸ்டோட்டில் “லைசியம்” என்ற தனது கல்விக் கூடத்தை நிறுவினார். அதை ஆரம்பித்த பிறகு அரிஸ்டோட்டிலின் மெய்யியல் மற்றும் விஞ்ஞான ஆய்வுகள் பெரும் முன்னேற்றத்தை அடைந்தன. இவர் தனி ஒரு மனிதனாக வானவியல், உயிரியல், உடலியல் உடற்கூற்றியல், ஒழுக்கவியல், அரசியல் அளவையியல் எனப் பலதுறைகளை போதித்துச் சிறப்புப் பெற்றார்.

அத்தியாயம் 4: நிலத்தின் வரைபடமும் நினைவின் இலக்கணமும் (The Topography of Soil and Grammar of Memory)


ஆண்றொன்று போனால் வயது ஒன்று போகும் எனச்சொல்வார்கள். ஒருவருடைய பிறந்த தினம் வரும்போது, குறிப்பிட்ட நபர் தங்களது வயதில் மூத்தவராயின், வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம் “ எனச்சொல்வார்கள். அல்லது, வாழ்த்து மடல் அனுப்புவார்கள். வேறும் சிலர், தங்கள் முகநூலில் பதிவுசெய்து வாழ்த்துவார்கள். முன்பெல்லாம் பிறந்ததின வாழ்த்து மடலை தபாலில் அனுப்புவார்கள். ஆனால், சமகாலம் புதிய தொழில்நுட்பத்தின் தீவிர முன்னேற்றத்தால், மின்னஞ்சல், வாட்ஸ் அப் மூலம் தங்கள் வாழ்த்துச்செய்தியை பகிர்வார்கள்.



கவிஞர் ஆத்மாஜீவ் அவர்களின் இயற்பெயர் வி.சி. ராஜேந்திரன். 12.11.1966 ல் நெய்வேலியில் பிறந்தவர். 13 வயதில் பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் நாடகம் எழுதி இயக்கி நடிக்கத் துவங்கியதில் ஆரம்பித்த இவரது எழுத்தார்வம், நாடகத்திலிருந்து சிறுகதைக்கும், கவிதைக்குமாக, இடம் பெயர்ந்தது.

நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமெனில் நாமும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். அந்த வகையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை அறிவுறுத்த வேண்டி, ஒரு நல்ல நெறிமுறைக்குட்பட்டு பல நல்ல கருத்துக்களை நல்வாழ்விற்காக கூறும் இலக்கியத்தில் வளையாபதியும் ஒன்று. அவை, ஒரு சமண சமயக் வழிகாட்டுதல்களாக எடுத்துரைக்கின்றது. வளையாபதி என்னும் காப்பியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்நூல் நமக்கு முழுமையாகக் கிடைத்திடவில்லை.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









