(11)

ரஷ்யா-உக்ரைன் போரை ஒரு சமாதான நிலைக்கு கொண்டு வருவதில் பிரான்சின் மெக்ரோன் முதல் அமெரிக்க பைடன் வரை முயற்சி எடுத்ததாய் கூறப்பட்டாலும் அம்முயற்சிகளின் மொத்த பெறுபேறு அல்லது மொத்த உள்நோக்கம் எவ்வகைப்பட்டது - இது போரை மேலும் தூண்டிவிட திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளா அல்லது உண்மை சமாதான விருப்பம் கொண்ட பேச்சு வார்த்தைகளா என்பதெல்லாம் கேள்வி குறிகளாகின்றன. இருந்தும் இப்பின்னணியில் துருக்கியும் இஸ்ரேலும் மேற்கொண்ட முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனலாம். காரணம், மேற்படி இரு நாடுகளின் நிலைமைகளும், இப்போரால் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைக்கு தள்ளப்பட்டு, சற்றே சங்கடத்துக்குள் அமிழ்த்தப்பட்டவைதான் என்பதில் சந்தேகமில்லை.

உக்ரைன் - ரஷ்ய போர், இஸ்ரேலின் இருப்பையும் அதே போல் துருக்கியின் இருப்பையும், ரஷ்ய மூர்க்கத்தனத்திற்கூடு அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கும் அதேவேளை, மறுபுறத்தே, ரஷ்யாவுக்கு எதிராக செயல்படுமாறு மேற்கு அவற்றிற்கு தரும் அழுத்தங்களையும் அவை எதிர்கொள்ள நேர்கின்றது. அதாவது துருக்கி எவ்வாறு தனது போர்போஸ் கால்வாயை ரஷ்ய கப்பல்களின் உள்நுழைகைக்கு தடை விதிக்கும்படியான பல்வேறு கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுகின்றதோ, அதே போன்று இஸ்ரேலின் நிலைமையும் தர்மசங்கடத்துக்குள்ளாகின்றது எனலாம்.

Montrex ஒப்பந்தத்தின் கீழ் துருக்கி பல்வேறு விதமான சலுகைகளை பெறும் அதே நேரம் அது அநேக கடப்பாடுகளையும் சுமக்க நேரிடுகிறது – (இது தனியாக வாதிக்கத்தக்க ஒன்று). போர்போஸ் கடல்வழியை (கால்வாயை) துருக்கி அடைத்து விட்டால் அது சர்வதேச சட்டத்தை மீறிய செயலாக கருதப்பட்டு, ரஷ்யாவின் தாக்குதலுக்கு உட்படுவது நிச்சயம் என்ற நிலைமையில், தன் பாதுகாப்பை மையப்படுத்திக் கொண்டு துருக்கி, சுவர் மேல் பூனையாக நின்று ஆடும் நடனம் உலக அரங்கில் வினோதமானது.

ஒருபுறம் போர்போஸ் கால்வாயை ரஷ்ய போர் கப்பல்களுக்காக திறந்துவிடும் அதே சமயம் துருக்கி டொன்ஸ்க் மக்களை அழித்தொழிக்கவும் ரஷ்ய படைகளை தாக்கவும் தனது Bayraktar ட்ரோன்களை தந்துதவி, அமெரிக்காவுக்கு நல்ல பிள்ளையாக நடந்துக் கொள்ள முயற்சிப்பதும் குறிக்கத்தக்கது. ஆனால் இதனை விட வினோதமானது, எங்கோ இருக்கும் இஸ்ரேல்;, ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர படாத பாடுபடும் நிகழ்வாகும். இஸ்ரேல் பிரதமரின் அண்மித்த ரஷ்ய விஜயமும் அவரது புட்டினுடனான மூன்று மணி நேரத்திற்கு மேலான சந்திப்பும் முக்கியத்துவமுடையது. அதற்கு பல்வேறு வகைப்பட்ட சிறப்பு காரணங்கள் உண்டெனலாம்.

(12)

ஸெலன்ஸ்கி ஓர் ய10தர் என்பதும், அவரை ஒரு ஹாஸ்ய நடிகராக அறிமுகப்படுத்திய பெருமை கொண்ட தொலைக்காட்சி அலைவரிசையின் சொந்தக்;காரர், கொலோமொய்ஸ்க்கி என்பதும,; அவர் ஒரு கோடீஸ்வர உக்ரைன் அரசியல்வாதி என்பதும், அவர் கோடிக்கணக்கான டாலர்களை உக்ரைனில் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பின் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து அங்கேயே வாசம் செய்துவரும் இன்னுமொரு ய10தர் என்பதும் குறிக்கத்தக்கது.

மேற்படி பின்னணி ஸெலன்ஸ்கி என்ற ய10தருக்கும் கொலோமொய்ஸ்க்கி என்ற ய10தருக்கும் இடையில் இருக்க கூடிய பிணைப்பை வெளிக்கொணர்வதாகவும், இத்தகைய ஓர்; பின்னணியானது இஸ்ரேலின், உக்ரைன் தொடர்பிலான விதி விலக்கான பாத்திரத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் உள்ளது. இதனுடன் ஸெலன்ஸ்கி இஸ்ரேலுக்கு பலமுறை விஜயம் செய்துள்ளார் என்பதும் அவரது குடும்பம் இஸ்ரேலில் உள்ளது என்ற தகவல்களும், அனைத்து இணையத் தளங்களிலும், காணக்கிட்டுகின்றன. (இவ் இணைய தளங்களின் ‘தகவல்கள்’ படி அவரது ‘குடும்பம்’ என்பதற்கூடு அவர்கள் அவரது எக்குடும்பத்தை குறிக்கின்றார்கள் என்பதும் கேள்விக்குறியே) இருந்தும், வெறும் சிரிப்பு நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட ஸெலன்ஸ்கி, நாளடைவில் உக்ரைனின் வலதுசாரி அரசியல் முகத்தை தீவிரமாக பிரதிபலிப்பதில் வெற்றி பெற்றார் என்றே கூற வேண்டும்.
உக்ரைனில், வலதுசாரி அரசியலின் கட்டுவிப்பு, அதில் ஸெலன்ஸ்கியின் திட்டமிட்ட பங்கேற்;ற வைப்பு என்பவை, பல வருடங்களாய், திட்டமிட்ட ரீதியில், அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே, என உலக ஆய்வாளர்கள் இன்று கருத்து தெரிவித்துள்ளனர்.

போதாதற்கு, அண்மைக் காலங்களில் ஸெலன்ஸ்கி வெளிப்படையாகவே தன்னை ஜுடாஸ் மதம் சார்பானவராக வெளிக்காட்ட முனைந்திருப்பது அவதானத்துக்குரிய ஒன்றே என்று அதே ஆய்வாளர்கள் கருதுவதாய் தெரிகின்றது. இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம், யூதர்களை ரஷ்யர்களுக்கு எதிராக, இப்போரில், ஒன்றுதிரட்ட ஸெலன்ஸ்கி முற்படுகின்றார் என்பதே.

இருந்தும், இத்தகைய ஒரு அரசியல் கட்டுவிப்பும், கூடவே, வருடக்கணக்கில் வழங்கப்பட்டதாய் கூறப்படும் ஆயுத உதவிகளையும் (2014 தொட்டு 2.7 பில்லியன் டொலர்கள்) அணுவாயுத உற்பத்தியை நோக்கி தீவிரமாக அவரைத் தூண்டுவிக்கும் திட்டங்களும், மேலும் 30க்கும் மேற்பட்ட நச்சு உயிரியல் ஆய்வு கூடங்களின்; இருப்பிடமாக உக்ரைனை அவர்கள் வடிவமைத்த நேர்த்தியும், கூடவே நேட்டோ அமைப்பின் உறுப்புரிமை வழங்கவேபடும் என்று மேற்கால் ஸெலன்ஸ்;கிகு வழங்கப்பட்ட வாக்குறுதிகளையும், ஒட்டு மொத்தமாக கவனத்துள் எடுத்தால், இவ் ஆய்வாளர்களின் கருத்துப்படி, ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனின் கட்டமைப்பு அல்லது தூண்டுவிப்பு, என்பது, இன்று நேற்று முளைத்த புது முளையாக அன்றி, வருட கணக்கில் அந்தரங்கமாக இயங்கி வந்த செயற்பாடுகளின் மொத்த விளைபயன் இதுவாகவே ஆகின்றது என்பதேயாகும்.

இப்பின்னணியில் இருந்து பார்க்கும் போதே ரஷ்யா -சீனா என்ற இரு பெரும் பொருளாதாரங்களை, பொருளியல் தடைகள் (ளுயnஉவழைளெ) என்பவற்றை மாத்திரம் கொண்டு கட்டுப்படுத்திவிட முடியாது என்பதும், இதனை விட ரஷ்யாவை உலக சந்தை வலையமைப்பிலிருந்தே நிரந்தரமாய் கத்தரித்து விடுவதும், பொருளியல் தடைகளுடன் சேர்த்து எடுக்க வேண்டிய நடைமுறையாகும்; என மேற்கு கருதுவதாய் இதே ஆய்வாளர்கள் இன்று கோடிட்டு காட்ட முன்வந்துள்ளனர். அதாவது, பொருளாதார தடை என்பது முதலாவது. ஆனால், அதனைவிட முக்கியமானது, மொத்த வர்த்தக வலையமைப்பிலிருந்து ரஷ்யாவை கத்தரித்து விடுவது. இதனை இவர்கள் மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் முகமாக, புதிய பேர்லின் சுவரின் கட்டுமானம் என்ற கருத்தாக்கத்தின் ஊடாக விளக்க முற்பட்டுள்ளனர்.

உதாரணமாக, பிரான்சின் ஜனாதிபதி மெக்ரோன்-புட்டின் சந்திப்புக்கு பின்னதாக, மெக்ரோன் தன் நாட்டிற்கு திரும்பி, அங்கு ஆற்றிய உரையில்;, இப்புதிய ‘பெர்லின் சுவரை’ கட்டுவிக்கும் நோக்கமே வெளிப்படுகின்றது என்பது இவர்களது வாதமாகின்றது.

(13)

சுருக்கமாக கூறினால் ஸெலன்ஸ்கியை கட்டுவித்தும் அவருக்கான வலதுசாரி அரசியலை வடிவமைத்தும், அவருக்கான ஆயுதங்களை வழங்கி உக்ரைனை ‘பலப்படுத்தி’ அணுகுண்டுகளை தயாரிக்கும் அணு ஆலை திட்டங்களை ஊக்குவித்தும், நச்சு ஆய்வு கூடங்களை நிர்மாணிக்க உதவியதும் திட்டத்தின் ஓர் பகுதி என்றால், ரஷ்யாவை உலக சந்தை வலயத்திலிருந்து அப்புறப்படுத்துவது மறுபாதி என்றாகின்றது. இனி பெர்லின் சுவரையும் எழுப்பி விட்டால் கதை, முடிந்த கதையாகி விடும் என்பது தெளிவு.

எனவே, மொத்தமாய் கூட்டி பார்க்குமிடத்து, மேற்கு தனக்கு தேவையான அனைத்;தையுமே இவ் உக்ரைன்- ரஷ்ய போருக்கூடாக, ஏற்கனவே, அடைந்து விட்டதாக மேற்படி ஆய்வாளர்கள் கருத்து கூற முற்பட்டுள்ளனர். இத்தகைய ஒரு பின்னணியிலேயே, உக்ரைனில் தான் என்றுமே நேரடியாக போராட போவதில்லை என்ற அமெரிக்க அறிவிப்பும், உக்ரைன் என்றுமே நேட்டோ அல்லது ஐரோப்பிய ய10னியனில் அங்கத்துவத்தை பெறமாட்டாது என்பது போன்ற செயற்பாடுகளும் காணக்கிட்டுவதாய் உள்ளன.

இவை அனைத்தும் இனி உக்ரைனை மொத்தமாய் கைக்கழுவி விடும் நேரம் கணிந்து விட்டதா அல்லது உக்ரைனை ரஷ்யாவின் சதுப்பு நிலமாக மாற்றுவதா என்ற கேள்வி இன்று மேலெழுவதாக இருக்கின்றது. இப்பின்னணியிலேயே உலகெங்கும் இருந்து 40,000 தீவிரவாதிகள் உக்ரைனுக்கு, ரஷ்யாவுக்கு எதிராக போராட இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. பதிலுக்கு, ரஷ்யா 17,000 தீவிரவாதிகளை சிரியாவில் இருந்து உக்ரைனுக்கு எதிராக போராட இறக்குமதி செய்ய முற்படுவதாயும் செய்தி குறிப்புகள் கூறுவதாய் உள்ளன.

இதனுடன் கூடவே, அண்மையில் பெலாருஸின் ஜனாதிபதி, உக்ரைனை, நான்கு பிரிந்த தனித்தனியான பிரிவுகளாக காட்டும் ஒரு வரைபடத்தை காட்சிப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் மேலெழுவதாய் உள்ளது. இவை அனைத்தையும் ஒன்றுகூட்டி பார்க்குமிடத்து, மேற்கின் நோக்கங்கள் உக்ரைனை ரஷ்யாவுக்கு எதிரான சதுப்பு நிலமாக மாற்றுவது அல்லது உலக பொருளாதார சந்தை பொருளாதாரத்தை வலையமைப்பிலிருந்து ரஷ்யாவை கத்தரித்து விடுவது, கூடவே பெர்லின் சுவரை மேலெழுப்புவது என்பன மேற்கின் எதிர்பார்ப்புகளாக இருந்தாலும் நாளைய உக்ரைன்- ரஷ்ய நகர்வுகள் எதனை நோக்கி செல்லக் கூடும் என்பது கேள்விக்குறியானதே. ஏனெனில் மேற்படி போரும் அதன் நகர்வுகளும் அமெரிக்காவின் எண்ணை விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தியும் அதே சமயம் ஐரோப்பாவின் எரிவாயு விலையை பன்மடங்கு அதிகரித்ததாய் காட்டுவதாயும், இங்கிலாந்தின் வாழ்க்கைச் செலவை 2500 பவுண்டுகளால் அதிகரித்து விட்டதாயும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அமெரிக்காவின் எண்ணெய் கிட்டத்தட்ட கலன் ஒன்று ஐந்து டொலர் ஆகும் போது ஜெர்மனியில் இதே கலன் கிட்டத்தட்ட ஒன்பது டொலராக மாறியுள்ளது. அங்கே எரிவாயுவின் விலை 62 சத வீதத்தால் அதிகரித்துள்ளது. இதே வேளை மத்திய கிழக்கு நாடுகளில் உணவு பொருட்களிதும் எண்ணெய்களினதும் விலை 2011 அளவிற்கு உயர்ந்துள்ளது.

(14)

ஆனால் இவை அனைத்தும் ஆதிக்க சக்திகளின் கயிற்றிழுப்புகளால் வந்து சேரும் சதிராட்டமே அன்றி வேறில்லை எனலாம். தமது பெரு வெற்றிக்காக சாதாரண மக்களை பலியிடுவது இக்கயிற்றிழுப்பின் மொத்த பெறுமானமாகின்றது. ரஷ்யாஇனியும் விண்வெளிக்கான ரொக்கட் என்ஜீன்களை அமெரிக்காவுக்கு வழங்க போவதில்லை என்றும், சர்வதேச விண்வெளி ஆய்வு கூடம் மேலும் ரஷ்யா ஒத்துழைப்புடன் தொடர்வதற்கில்லை என்பதும்; வேகம் கொள்கையில், உலகில் சராசரி சாதாரண, ஏழ்மைப்பட்ட மனிதனின் வாழ்வு தொடர்பிலான கேள்வி புதிய பரிமாணத்தை அடைகின்றது. இதனை, சரியான முறையில் கையேந்தக் கூடிய வலு கொண்ட இளைய தலைமுறையினரின் வருகையை உலகம் எதிர் நோக்கவும் கூடும்.

இதேவேளை, போரின் உக்கிரம், பூரண பிரஞ்ஞையற்ற விதத்தில், மேலும் உக்கிரமடைந்த கட்டங்களை நோக்கி நகரவும் கூடும். ஆயுதங்களை நேட்டோவானது, உக்ரைனுக்கு கடத்தும் என்றால், நேட்டோவின் அத்தகைய அணியினரை தாக்க தாங்கள் பின்நிற்கப் போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. இது வெறும் அறிவிப்புத்தானோ என்று உலகம் கருதியிருக்கையில் 13.3.2022 அன்று, போலந்தின் எல்லை ஓரமாக இருந்த நேட்டோ பயிற்சி முகாமை ரஷ்யா, ஏவுகணைகள் கொண்டு தாக்கி 180 பேரை கொன்றிருந்தது. இதில் நேட்டோ படையினர் உட்பட, பிற நாட்டு இறக்குமதி செய்யப்பட்ட தீவிரவாதிகளும் அடக்கம் என்றும் கூறப்படுகின்றது. உக்ரைனின் அறிக்கையின் பிரகாரம் இறந்தோரின் எண்ணிக்கை 35 அளவிலேயே ஆகும் என்றும் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரஷ்ய எல்லை அருகே, நேட்டோ, 50க்கும் மேற்பட்ட போர் கப்பல்களுடனும், 220 போர் விமானங்களுடனும் Cold Response – 2022 என்ற பிரமாண்டமான போர் பயிற்சியைத் துவக்கியுள்ளதாக செய்திகள் எட்டுகின்றன. (இது முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்று கூறிக்கொண்டாலும்). இதேவேளை, இப்பயிற்சி பிரதேசத்தை நோக்கி ரஷ்ய யுத்த கப்பல்கள் செல்வதாகவும் ரஷ்ய செய்திகள் தெரிவிக்கின்றன. இது, போரின் ஆறாவது சுற்றை காட்டி நிற்கும் நிகழ்வுகளாகும்.

இவை, மூன்றாம் உலக போரை நோக்கிய பிரஞ்ஞையற்ற அசைவுகளா என்ற கேள்வியை, சர்வதேச ஆய்வாளர்கள், இன்று எழுப்ப நிர்பந்திக்கப்பட்டு போயுள்ளார்கள். ஏனெனில், ரஷ்யாவுக்கும்-உக்ரைனுக்கும் இதையே இரண்டொரு சுற்று பேச்சு வார்த்தை நடந்தாலும், சமாதானத்திற்கான நம்பிக்கைகள் தெரிவிக்கப்பட்டாலும், சமாதானம் முளைத்து விடாமல் பார்த்துக் கொள்;ள அநேக நகர்வுகளும் மேற்கொள்ளப்படாமல் இல்லை. ஸெலன்ஸ்கியின், அமெரிக்க காங்கிரஸ்கான உரையும், பின் அமெரிக்காவின் புதிய, நவீன ஆயுதங்கள் வழங்கப்போகும் தீர்மானமும், புட்டினை ‘போர் குற்றவாளி என வரையறுப்பதும், சமாதானத்தை நோக்கிய ஆக்கப்பூர்வ நகர்வுகளாக கொள்வதற்கில்லை.

இச்சூழலில், மறுபுறத்தே, சர்வதேச ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார தடைகள் ஆட்டம் காண முனைந்துள்ளன. உதாரணமாய் சவூதி அரேபியா, சீனாவுக்காக எண்ணெய் சுத்திகரிக்கும் பிரமாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை, 210,000 மசகு எண்ணெய் பீப்பாய்களை நாளொன்றுக்கு வழங்க கட்டத் தொடங்கியிருப்பதும் (10.3.2022) இந்தியா ரஷ்ய எண்ணெயை, சீனத்து பணத்தில் (யுவானில்) வாங்க உத்தேசித்திருப்பதும், சீன வெளிநாட்டமைச்சர் இந்தியாவுக்கு, (வருடங்களின் பின்), விஜயம் செய்ய உத்தேசித்திருப்பதும் புதிய நடைமுறைகளாகின்றன. இவை, போர் கொண்டுவந்து சேர்த்திருக்கும் புதிய வரவுகளாகின்றன.

போரானது ரஷ்யாவை உடைத்து சின்னாபின்னாமாக்கி விடும் என்பது பொதுவில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஆனால், உடையப்போவது யார், எவை என்பது பொறுத்து தீர்க்கமாக கூறமுடியாத நிலைமை இன்று உருவாகி உள்ளது. சுpறிய நாடுகளின் தந்ரோபாயங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பெரிய நாடுகளுக்கிடையே ஏற்படக்கூடிய புதிய சிந்தனைகள், புதிய அணுகுமுறைகள், புதிய கூட்டுகள், பொருளாதார தடைகளின் வலுவற்ற தன்மைகள், இது ஏற்படுத்தக்கூடிய டாலரை புறந்தள்ளல், அதனுடன் யூவானை ஏற்கத்துணிதல், பர்லின் சுவரை கட்டமுனைதல், பின் இது உருவாக்கக்கூடிய பற்றாக்குறைகளால் மாய்ந்து போதல், சதுப்பு நிலங்களை உருவாக்குதல் பின் அதே சதுப்பு நிலங்களில் தாமும் அகப்பட்டு சீரழிந்து போதல், இவையும்-இவை போன்றவையும், இனி வரவிருக்கும் புதிய உலகின் முகங்களாயிருக்கலாம். ஆனால், இவற்றின் வரவு நிச்சயம் என்றால், உலகின் ஓர் புதிய ஒழுங்கு முறையும் நிச்சயமாகிவிடும் என்பதிலேயே இப்போரின் முக்கியத்துவம் தங்கி நிற்கின்றது. எனலாம்.

முற்றும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.