- எழுத்தாளர் ஆதவன் கதிரேசர்பிள்ளை கவிஞர் திருமாவளவனுடன் முகநூல் மெசஞ்சரில் நடத்திய உரையாடல்களின் தொகுப்பொன்றை இமேஜ் வடிவில் அனுப்பியிருந்தார். துண்டு துண்டுகளாக, தாறுமாறாக, குழம்பிக் கிடந்த துண்டுகளிலிருந்து ஓரளவுக்கு விளங்கும் வகையில் பொருத்தியுள்ளேன். பிழை , திருத்தம் எவற்றையும் செய்யவில்லை. அப்படியே வெளியாகின்றது. இதனை வாசித்து , ஒழுங்காக்கும் பொறுப்பு ஆதவனுடையது. எதிர்காலத்தில் இமேஜ் வடிவில் அனுப்பாமல் எழுத்து வடிவில் அனுப்புங்கள். அலைபேசியிலுள்ள மெசஞ்சர் செய்திகளை அப்படியே மின்னஞ்சலுக்கு அனுப்பலாம. அதன் மூலம் தட்டச்சு செய்யும் பணியில் நேரம் மிஞ்சும். கவனத்தில் ஆதவன் எடுப்பாராக. - வ.ந.கி , பதிவுகள்.காம் -


திருமாவளவன் - வணக்கம் ஆதவன்

ஆதவன் - எம் எப்படியுள்ளீர்கள்? கலைச்செல்வன் தான் போய்த் தொலைந்தான். என் அழகிய தோழன்.

திருமாவளவன் - நான் ஒரு தடவை அவனூடாக

ஆதவன் -

லாச்சப்பல் முன்றலில் நினைவிருக்கு

திருமாவளவன் - ஓம்.. எப்படியிருக்கிறீர்கள்?

ஆதவன் -

நிறையப் பயணம்
செய்கிறேன். நிறைய வாசிக்கிறேன்.

திருமாவளவன் -  எனது  தொகுப்புகள் பார்த்திருக்கிறீர்களா?


ஆதவன் -

இங்கே இருக்கிறது பழையவை. புதியவை படித்திலேன். அனுப்புக.

திருமாவளவன்தி - நாலு தொகுப்பு வந்திருக்கு. கடைசியாக முதுவெனில் பதிகம் வந்தது. இப்போ நாலிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுப்பு போடும் முயற்சி உண்டு. யேசுராசா  தெரிவ்ய் செய்கிறார். வரட்டும் அனுப்புகிறேன்.

ஆதவன் -

கட்டாயம் அனுப்புங்கள். நான் இப்போ ஒரு ஜென்ம நிலை. சும்மா பகிடிக்குச் சொன்னேன். சீரியசா எடுக்காதீங்கோ.

திருமாவளவன் - நானும் அப்படித்தான்., இது பகிடி அல்ல. இப்போ வாழ்வது போனஸ் வாழ்வு. எவ்வித ஆசைகளும் இல்லை. எதிர்பார்ப்பும் இல்லை., இருக்கும் காலத்தில் என்னால் முடிந்ததை பதிவு செய்வது மட்டுமே.

ஆதவன் -

வெல்கம் ரூ த கிளப்.. லக்சுமி கண்டு கனகாலம். இப்போ பலரும் துண்டு துண்டுகளாகி எங்கே போயினரோ?

திருமாவளவன் -

நானும் பலகாலம்
காணவில்லை.
ஆனால் அண்மையில்
பாரிஸ் போய் வந்தேன்.
பிரித்துப் போட்ட
கடுதாசிக் கூட்டம்
போல் ஒவ்வொரு
சுற்றிலும் ஒவ்வொரு
இனம்.

திருமாவளவன் -

இனி
வருதலைமுறையில்
ஏதேனும் நறுந்தேன்
நுகர்வதற்காய்
காத்துக்கிடக்குமொரு
தேனி நானென
வைத்துக்
கொள்ளுங்களேன்.

திருமாவளவன் -

இலக்கியக்காரர்
வாழ்வு
அப்படியாயிற்று.


ஆதவன் -

- ஓம் திருமா..1

ஆதவன் -

ஓம் திருமா

திருமாவளவன்  -

முடவன்
கொம்புத்தேனுக்கு
ஆசைப்படக் கூடாது.
இது பட்டறிவு.
சேரனோடு
பேசுவீர்களா?

ஆதவன் -

ம்.. அவ்வப்போது எடுப்பான். என்ன மச்சான் என்பான். ஈற்றில் ஒரு விஸ்கியுடன் முடிந்து போகும்.

உங்கள் நாடக முயற்சிகள் எப்படி இருக்கு?

திருமாவளவன் -

நான் வாழும் காலத்தில் சில வேலைகள் செய்து முடிக்க வேண்டும். வருத்தலைவிளான் ஊர் எனி தோப்பாகும் என்ற நம்பிக்கை போயிற்று. எனவே ஊர் பற்றிய ஒரு நினைவுச் சித்திரம் எழுதி வருகிறேன். இது முதலாவது பணி.

இப்போ வாழ்வது போனஸ் வாழ்வு. எவ்வித ஆசைகளும் இல்லை., எதிர்பார்ப்பும் இல்லை. இருக்கும் காலத்தில் என்னால் முடிந்ததை பதிவு செய்வது மட்டுமே.

ஆதவன் -

சொல்லுங்க அறியேன் ஆவல் உள..

திருமாவளவன் -

நான் எழுதுவதில் உதாரணத்துக்கு ஒன்று..

வருத்தலைவிளான் (சொற்சித்திரம்) 13 புரட்டாதி.

வானில் முழுநிலா
எழுகிறது.
பெருவெளியை
வகிடெடுக்கிறது
தார்வீதி.
வீதியின் தென்புறம்
வருத்தலைச் சந்தியில்
சுப்பையாவின் தேநீர்
கடை.
கடை முகப்பில்


நெடுங்காலம்
'விளாவெளி
ஒழுங்கை' என்றே
சொல்லுவர்
இதனை.
ஊர் பெருக்க
'சட்டம்பியார் வீதி'
எனப் பெயரிட்டார்.
வாரம் ஒன்று கூடத்
தாங்கவில்லை.
'வேதச்சுடலை'யிலே
தொங்கியது.
பெயர்ப்பலகை
அதைத்தாங்கிய
கம்பம் மட்டும்
அந்த
மூலைவளவுக்கு
வேலியாச்சு.
பின்...
'பாடசாலை வீதி' எனப்
பெயரிட
பேச்சுகள் நடந்தது.
அது
வெறும் பேச்சோடு
போனது.
தமிழாராட்சி
மகாநாட்டுக்
கொண்டாட்டம்
பெருத்து
ஊரெல்லாம்
விழாக்கோலம்
கண்டது.
எம் பங்கிற்கு
ஒரு விடலைப் பனையைத் தறித்து
இவ்விடத்தில் நாட்டித்
தோரணமாக்கினோம்.
ஒரு கார்த்திகைத் தீப இரவில்
லாறி டயரைப் போட்டு தீயிட்டோம்.  
அதன் எஞ்சிய கரித்தடம்
மழை கழுவி அழிய
ஆண்டு ஒன்றாச்சு.
கழிந்தது காலம்.
வேலிகள் போட்டு
வெறுங் காணிகள்
எல்லாம்..
வளைவுகளாயின.
வீதியின் தென்புறம்
தம்பிராசர் வளவுக்குள்
நிழல் வாகைக்
கன்றெழுந்து
பின்நாளில் பெரிய
மரமாச்சு.
தெல்லிப்பளை
பெரிய
வைத்தியசாலை
துர்க்கை அம்மனின்
திடீர் எழுச்சி
இரண்டும் சேர
அடிக்கடி 'பஸ்சும்',
'தட்டிவானும்'  
'சைக்கிலும்'
மனிதருமாய்
நிறைந்தது வீதி.
தம்பிராசர்
தன்பெயர்
அழியாதிருக்கும்
கனவில்
அவர் வளவோரம்
'பஸ்தரிப்பு நிழல்'ஐ
உவந்தார்
பின்நாளில்  
அவர் வாழ்வு முழுவதும்
புற்றுநோய்..

இந்த  இடத்தை
மனதிருத்திப்
பாருங்கள்
இப்படித்தான்
இருந்தது
என் காலத்தில்
இந்தச் சந்தியில்
சுப்பையாக் கடை கூடக்
கிடையாது.
நின்று பார்த்தால்
தெற்கே கண்தொடு
தொலைவில்
ஐயனார் கோவில் ஆல்
தெரியும்
கிழக்கில்
ஒழுங்கையில் 'செப
வாத்தியார்' வீடுவரை
பொட்டல் வெளி
காலை சரியாக

கடை முகப்பில்
தொங்கிய
அரிக்கன் விளக்கில்
சுடரை ஏற்றுகிறார்
கடைக்கு முன்
இரட்டைத் திருக்கல்
வண்டிகள்
மாடுகளின்
நெற்றியிலே பட்டு
குஞ்சரம் பளிச்சிட
மூச்செழுந்து
வாயில் நுரை
பொங்குகிறது.
நாணயக் கயிற்றை
சுண்டி இழுத்து
நிறுத்துகிறார்கள்.
வண்டித் .
பரப்பப்பட்ட வரகு....

வருத்தலை விளான்
காளைகளை
சிறிது காலாறவிட்டு
தேநீர் அருந்தி
பின் மீளக்
கிளம்ப வேண்டும்.
மேற்கில்
சுப்பையா
கடை முன்னிருந்து
வடக்கில்
இறங்குகிறது
கல்லொழுங்கை.
கிழக்கில் நிலா எழும்ப
கூப்பிடு தொலைவில்
தெரிகிறது
பொன்னம்பலத்தாரின்
வீடு.
ஒரு நூறு வருடங்கள்
பின் சென்று
இந்த இடத்தை
மனதிருத்திப்
பரப்பபப்ட்ட வரகு
வைக்கோல்
மேல்
வண்ணமிட
பனை ஓலைப் பாய்
சிறுவர்கள் பெண்கள்
பெரியவர்கள் என
இறங்கிகிறார்கள்
எல்லோர்
நொற்றியிலும்
வல்லிபுரக் கோவில்
நாமம்
உடலில்
ஆழ்வாரின் தீர்த்தத்
திருவிழா கண்ட களை.
காளைகளை
காளைகளை
சிறிது காலாற விட்டு
தேநீர் அருந்தி
பின் மீள...

ஒழுங்கையிலே 'செப
வாத்தியார்' வீடுவரை
பொட்டல் வெளி
காலை சரியாக
ஏழேமுக்கால்மணிக்கு
ஏழாலைக் குணசிங்க மாஸ்டரின்
'புலட்'
மோட்டார் சைக்கில்
உயரச்சத்தமெழுப்பிய
படி
இச்சந்தியை தாண்டும்
காலை எட்டு மணி
என்றால்
773 இலக்க மூளாய்
பஸ் மூச்சிழுத்து
நிற்கும்.
பள்ளிப் பிள்ளைகளை
அடைந்த
சரியாக பத்து மணிக்கு
பட்டணத்து கறிக்கடகம்
சுமந்தபடி
பொன்னி வருவாள்.  
இரண்டு ரூபாவுக்கு
'இறாலும்' 'பட்டணத்து
கீழி' பொடிமீனும்
போதும்
ஒடியற் கூழொடு
எங்கள் மதியப்பொழுது
கழியும்.
நீருக்குள் எறிந்த
கல்லென
மனக்குளத்தின்
ஆழத்தில் சிதறிக்கிடக்கிறது நினைவுகள்.....

திருமாவளவன் -

எனது இந்த (செய்யுள்)
நடை எப்படி
இருக்கிறது?

பிற்காலத்தில்
வர்த்தலைவிளானாக
மருவி வருகிறது.
ஆனால்
கணேசையரின்
பாடல்களில்
வருத்தலைவிளான்
என்றே இருக்கிறது.

ஆதவன் -

கணேசையரும்
அப்பாவும் சகபாடிகள்
என்பதுவும்
கண்ணுறுக.

திருமாவளவன் -

கணேசையரோடு
பழகியவர்கள் மற்றும்
அவரிடம்
பாடங் கேட்டவர் பலர்.

நன்றி ஆதவன்.
தற்போது  
விடை பெறுகிறேன்.