தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் இடம்பெறும் குரு அரவிந்தன் எழுதிய நாவல், சிறுகதை தொடர்பான திறனாய்வுப் போட்டி.

15 பரிசுகள், மொத்தம் 150,000 ரூபாய்கள், இலங்கை ரூபாயில் வழங்கப்படும்.

முதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள்   –  30,000.
இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் –  25,000.
மூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள்  -  20,000.
நாலாவது பரிசு இலங்கை ரூபாய்கள்   -  15,000.
ஐந்தாவது பரிசு இலங்கை ரூபாய்கள்   -  10,000.
10 பாராட்டுப் பரிசுகள் இலங்கை ரூபாய்கள் தலா – 5000.

குரு அரவிந்தன் அவர்களின் படைப்புக்களுக்கான திறனாய்வுப் போட்டி. குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 5 பக்கங்களுக்குள் அல்லது 1500 சொற்களுக்கு மேற்படாமல் யூனிக்கோட் மற்றும் வேர்ட் (Unicode and Word) அச்சுப்பிரதியாக அனுப்பவும். மாணவ, மாணவிகளாயின் தனியாகக் குறிப்பிடவும். வயது வரம்பு இல்லை. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம். பரிசுபெற்ற கட்டுரைகளைத் திருத்தி நூலாக வெளியிடும் உரிமை வாசகர் வட்டத்திற்கு உரியது.

மின்னஞ்சல் வழியாக ஆங்கிலத்தில் உங்களின் முழுப்பெயர், தெளிவான அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் விவரங்களோடு அனுப்பவேண்டும். உங்கள் திறனாய்வு எமக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 31. 03. 2023 .   போட்டி முடிவுகள் 2023 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இணையத்தில் வெளியிடப்படும்.  மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  , இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இணையம்: 

https://kurunovelstory.blogspot.com/
https://canadiantamilsliterature.blogspot.com/
http://tamilaram.blogspot.com/

சுலோச்சனா அருண்,
செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.


'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் / அறிவித்தல்கள்.

'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட)  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம்.  அல்லது e-transfer இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.  கட்டணம் செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.