முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்த சமயத்தில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள், காணாமால் ஆக்கப்பட்டார்கள் மற்றும் அங்களை இழந்தார்கள். இன்று வரை பாதிக்கப்பட்ட அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. இலங்கைப் படையினரால் புரியப்பட்ட யுத்தக்காணொளிகள் பற்றி ஆதாரங்களுடன் கூடிய காணொளிகளை 'சானல் 4' என்னும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது. ஆனால் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. இலங்கையில் சகல இன மக்களும் இணைந்து சமாதானமாக வாழ்வதற்கு நடந்த அநீதிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டியது அவசியம். அதற்குப் பெரும்பான்மையின மக்களும் தமிழ் மக்களுடன் இணைந்து குரல் கொடுப்பது அவசியம்.அதற்கான சூழல் நெருங்கி வருவதுபோல் தெரிகின்றது.
 ஆம்! இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களில் பெரும்பான்மையினச் சிங்கள மக்களும் இணைந்து நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் சகல இன மாணவர்களும் இணைந்து நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். முள்ளிவாய்க்காலில் எவ்விதத் தடைகளுமற்ற நிலையில் , இராணுவத்தலையீடுகளற்ற நிலையில் மக்கள் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். இது முக்கியமான வரவேற்கத்தக்க, ஆரோக்கியமான விடயம்.
 
நல்லதோர் எதிர்காலத்துக்கு இவ்விதமான புரிதலும் , ஆதரவும் அவசியம். புரியப்பட்ட அநீதிகளுக்கு உரிய நீதி விரைவில் கிடைக்க இது நிச்சயம் வழி வகுக்கும்.
 
'ஈழநாடு' பத்திரிகைச் செய்தி