முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்குத் தகரம் எடுப்பதற்காக அழைக்கப்பட்ட ஐந்து தமிழர்களில் ஒருவர், குடும்பஸ்தர், மர்மமான முறையில் காணாமல் போய், சடலமாக அருகிலிருந்து குளமொன்றில் மீட்கப்பட்ட சம்பவமானது தற்போதுள்ள அரசியற் சூழலில் அதிர்ச்சி தருவது. இச்செய்தி எனக்கு எம் தலைமுறையினரின் இளம் பருவக் காலகட்டத்தை நினைவு படுத்தியது. அன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்கு முக்கிய காரணங்களில் பிரதானமானது தமிழ்ப் பகுதிகளில் படையினரின் மனித உரிமை மீறல்களும், அவர்கள் விடயத்தில் இலங்கையின் சட்டம் தன் கடமையினைச் செய்யாமலிருந்ததும்தான். இவ்விதமான தமிழ்ப்பகுதிகளில் புரியப்பட்ட மனித உரிமை மீறல்களினால் தமிழ் மக்கள் தம் சொந்த மண்ணிலேயே அந்நியப்பட்ட மனநிலையை அடைந்தார்கள். இலங்கை அரசின் சட்டம் தம்மைப் பாதுகாக்கவில்லையே என்பதால் எழுந்த மனக்குமுறலே இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது.
 
யுத்தம் முடிந்து பதினாறு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் , இன்றுள்ள இளந்தலைமுறையினரும்அன்று தமிழ் இளைஞர்கள் அடைந்த மனநிலையை அடையும் சாத்தியமுண்டு. இன்றுள்ள இலங்கையின் பல்லின மக்களுக்கிடையில் எம் காலத்திலிருந்ததை விடக் கூடுதலான புரிந்துணர்வு உள்ளது. அதற்கு முடிவுக்கு வந்த யுத்தமும், சமூக ஊடகங்களின் பங்களிப்பும் முக்கிய காரணம். இன்று தமிழ் இளைஞர்கள் எவ்வித அச்சமுமற்றுத் தென்னிலங்கைப் பிரதேசங்களுக்குச் செல்ல முடிகின்றது. அதுபோல் தென்னிலங்கை இளைஞர்களும் வடகிழக்குப் பகுதிகளுக்குச் சுற்றுலா செல்ல முடிகின்றது. இந்நிலை தொடர்வது இலங்கையின் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியம். ஆனால் இந்நிலையை மிகவும் இலகுவாகக் குலைந்து விடும் சாத்தியமும் உண்டு என்பதையும் தவிர்க்க முடியாது. இது போன்ற படையினர் புரிந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் இலங்கையின் சட்டம் தன் கடமையினை உடனடியாக, பாரபட்சமின்றிச் செய்யத் தவறும் பட்சத்தில் , உணர்ச்சி வசப்பட்ட இளைஞர்களில் சிலரின் ஆயுதரீதியிலான எதிர்வினைகள், அவற்றின் அடிப்படையில் தென்னிலங்கையில் இனவாதச் சக்திகளின் செயற்பாடுகள் மீண்டும் நாட்டை யுத்தச் சூழலுக்குள் தள்ளிவிடும் அபாயமுண்டு.
இந்நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை அநுரா குமார திசாநாயக்க தலைமையிலான இலங்கை அரசு நிச்சயம் உணர்ந்திருக்கும். அவர்கள் தம் சொந்தப் போராட்ட அனுபவங்கள் வாயிலாக நிச்சயம் உணர்ந்திருப்ப்பார்கள். ஆனால் தென்னிலங்கையில் பதவியிலிருந்து துரத்தி விரட்டப்பட்ட , புரிந்த ஊழல்களுக்காகத் தப்பியோடிக் கொண்டிருக்கும் இனவாத அரசியல்வாதிகள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றச் சமயம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இவ்விதமான படையினரின் மனித உரிமை மீறல்கள் கூட ஒரு வேளை அச்சகதிகளின் மறைமுகத்தூண்டுதல்கள் காரணமாக நிகழ்ந்திருக்கக் கூடும். இவ்விதமான நடவடிக்கைகள் மூலம் , வடகிழக்கில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் தென்னிலங்கை அரசியலில் மீண்டும் இனவாதத்தைக் கக்கிப் பதவிக்கு வருவதைச் சாத்தியமாக்குவதற்காகவும் மேற்படி இனவாதச் சக்திகள் சார்பான படையினர் இவ்விதமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இக்கோணத்திலும் சிந்திக்க வேண்டிய தேவையுண்டு. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மூலம் மீண்டும் பதவிக்கு வந்தார் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்ச என்பதை அவ்வளவு இலகுவாக மறந்து விட முடியாது.
 
அதே சமயம், தற்போது நல்ல , நம்பிக்கையூட்டும் விடயமொன்றும் நடந்திருக்கின்றது. உடனடியாகவே இலங்கைப் பொலிசார் மூன்று இராணுவத்தினரைச் சந்தேகத்தின்பேரில் கைது செய்திருக்கின்றார்கள். இது வரவேற்கத்தக்கது. முழுமையான விசாரணை, பாரபட்சமற்ற முறையில் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். மரணமடைந்து இளங்குடும்பஸ்தரின் குடும்பத்துக்கு உடனடியாக இலங்கை அரசு நட்ட ஈடு வழங்க வேண்டும். செல்வத்தில் கொழிக்கும் நம் தமிழ் அரசியல்வாதிகளும் இவ்விடயத்தில் உதவ முடியும். செய்வார்களென்று எதிர்பார்ப்போம்.
 
இவ்விடயத்தில் நீதியான விசாரணை நடத்தப்படுவதும், சட்டம் பாரபட்சமற்றுச செயற்படுகின்றது என்னும் நம்பிக்கை சிறுபான்மையினர் மத்தியில் ஏற்படுவதும் அவசியம். அதற்கு இவ்விதமான படையினரின் மனித உரிமை மீறல்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்படுவது மிகவும் அவசியம். நாட்டின் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்துடன் கூடிய எதிர்காலம் உருவாவதற்கு, இவ்விதமான சம்பவங்கள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். நாட்டின் சட்டம் அனைவரும் நீதியாக, பாரபட்சமற்றுச் செயற்படுகின்றது என அனைத்தின மக்களும் உணரும் சூழல் உருவாக வேண்டும்.
 
chatGPT's Sinhala translation:

සෙබළුන්ගේ මිනිස් අවධිකාරී උල්ලංඝන – මුලදීම මකිය යුතුය! (චිත්‍රය – AI)

 
මුත්තයන් කට්ටු හමුදා කඳවුරට ගල් ගන්න යැවූ දෙමළ පස් දෙනාගෙන් එක් අය, පවුලේ පුරුෂයෙක්, අප්‍රකාශිත ආකාරයෙන් අතුරුදහන් වී, මියගොස් ආසන්නයේ ඇති කුඹුරකින් සොයාගත් සිද්ධිය, දැනට පවතින දේශපාලන පරිසරය තුළ දැඩි ආශ්චර්යයක් මල් කරයි. මේ පුවත මට අපේ පරපුරේ තරුණ කාලය මතක් කළා. එදා දෙමළ තරුණයින් ආයුධ ගත්තාට ප්‍රධාන හේතු අතරින් එක්කොට වන්නේ දෙමළ ප්‍රදේශවල හමුදාව මිනිස් හිමිකම් උල්ලංඝනය කරමින් සිටීමත්, ඒ පිළිබඳ ලංකාවේ නීතිය තම වගකීම ඉටු නොකිරීමත්ය.

මේ වැනි දෙමළ ප්‍රදේශවල සිදු වූ මිනිස් හිමිකම් උල්ලංඝන හේතුවෙන් දෙමළ ජනතාව තමන්ගේම භූමියේ අந்நියත්වයට පත් වුණා. ලංකාවේ නීතිය තමන්ව ආරක්ෂා නොකරන බවට ඇතිවූ අසතුට තමන්ව ආයුධ ගන්න ප්‍රേരිත කළා.

යුද්ධය අවසන්ව අවුරුදු 16කට පසු, අද කාලයේ තරුණ පරපුරද එදා දෙමළ තරුණයින්ට තිබූ මනෝභාවයට ලඟා විය හැකි හැකියාවක් පවතිනවා. අද ලංකාවේ බහුජාතික ජනතාව අතර එදාට වඩා වැඩි අවබෝධයක් තියෙනවා. ඒ සඳහා අවසන් වූ යුද්ධය සහ සමාජ මාධ්‍යයේ සම්බන්ධතාව ප්‍රධාන හේතු. අද දෙමළ තරුණයින්ට කිසිදු භීතියක් නැතුව දකුණු ලංකාවේ ප්‍රදේශවලට ගොස් සිටිය හැකියි. එසේම දකුණු තරුණයින්ට උතුරු–නැගෙනහිර ප්‍රදේශවලට සංචාරය කළ හැකියි. මේ තත්ත්වය දිගටම පවත්වාගෙන යාම ලංකාවේ අනාගතයට ඉතාමත් වැදගත්.

නමුත්, මේ තත්ත්වය ඉතා පහසුවෙන් විනාශ විය හැකි බවද අමතක කළ නොහැක. මෙවැනි හමුදා මිනිස් හිමිකම් උල්ලංඝන පිළිබඳව ලංකාවේ නීතිය වහාම, පක්ෂපාත රහිතව ක්‍රියා කිරීමට අසමත් වූ විට, ආවේගශීලී තරුණයින්ගෙන් සමහරක් ආයුධ ප්‍රතිචාර දැක්විය හැකි අතර, ඒ අනුව දකුණු ලංකාවේ ජාතිවාදී බලවේග නැවත ක්‍රියාත්මක වී රට යුද්ධ තත්ත්වයට ඇද දැමිය හැකියි.

මේ තත්ත්වය මතුවීම වැළැක්විය යුතු වැදගත්කම අනුරා කුමාර් දිසානායකගේ නායකත්වයේ යටතේ පවතින ලංකා ආණ්ඩුව සම්බන්ධයෙන් නිසැකවම තේරුම් ගන්නා බව විශ්වාස කළ හැක. ඔවුන්ගේම පසුගිය සටන් අත්දැකීම් ඔවුන්ට එය පැහැදිලි කර ඇති. නමුත් දකුණු ලංකාවේ බලයෙන් බැහැරවූ, දූෂණවලට අත්පත් වූ ජාතිවාදී දේශපාලනඥයින් නැවත ආණ්ඩුව අත්පත් කර ගැනීමට අවස්ථාව සොයමින් සිටිය හැක. මෙවැනි හමුදා මිනිස් හිමිකම් උල්ලංඝන සමහරවිට ඒ ජාතිවාදී පක්ෂවල අඛණ්ඩ උත්තේජනයෙන් සිදු වී ඇති විය හැක. මෙවැනි ක්‍රියා මඟින් උතුරු–නැගෙනහිරේ නැවත ආතතිය ඇති කර, ඒ මගින් දකුණු ලංකාවේ දේශපාලනයේ නැවත ජාතිවාදය උග්ර කර බලයට පැමිණීමේ උපායයක් විය හැක. මේ කෝණයෙන්ද සිතිය යුතුය.

ඉස්ටර් බෝම්බ ප්‍රහාරය මගින් පසුගිය කාලයේදී ගෝඨාභය රාජපක්ෂ මහතා නැවත බලයට පැමිණියේය යන්න පහසුවෙන් අමතක කළ නොහැක.

එකම විට, මේ මොහොතේ හොඳ සහ විශ්වාසදායක සිද්ධියක් සිදුවී ඇත — ලංකා පොලීසිය වහාම හමුදා සෙබළු තුනෙකු සැකයෙන් අත්අඩංගුවට ගෙන ඇත. මෙය පිළිගත යුතුය. සම්පූර්ණ පරීක්ෂණයක් පක්ෂපාත රහිතව සිදු කර, වැරදිකාරයන් හඳුනා දඩුවම් කල යුතුය. මියගිය තරුණ පවුල්පතාගේ පවුලට ලංකා රජය වහාම ආපසු ගෙවීම් ලබා දිය යුතුය. ධනවත් දෙමළ දේශපාලනඥයින්ටත් මේ සඳහා සහය විය හැක. එය සිදු කරනු ඇතැයි අපි බලාපොරොත්තු වෙමු.

මේ සම්බන්ධයෙන් සාධාරණ පරීක්ෂණයක් සිදු කර, නීතිය පක්ෂපාත රහිතව ක්‍රියා කරන බවට විශ්වාසය සුළු ජනතාව අතර ඇතිවීම අත්‍යවශ්‍යය. ඒ සඳහා මෙවැනි හමුදා මිනිස් හිමිකම් උල්ලංඝන වහාම පරීක්ෂා කර, වැරදිකාරයන් හඳුනා දඩුවම් කිරීම ඉතා වැදගත්ය. රටේ ජන වර්ග අතර ගුණාත්මක සමගියක් සහිත අනාගතයක් නිර්මාණය වීමට මෙවැනි සිද්ධීන් මුලදීම මකිය යුතුය. රටේ නීතිය සැමට සමානව, පක්ෂපාත රහිතව ක්‍රියා කරන බව සියලු ජනතාව දැනෙන පරිසරයක් මතුවිය යුතුය.