வேளாங்கண்ணி கடலுக்குத் தவழ்ந்து
மணலை அரித்துக் கொண்டு  ஓடும்
அரிச்சந்திரா நதி,

ஐப்பசி மாதத்தில் ஆற்றில் தண்ணீர்
காணாமல் வறண்டு கிடப்பது
ஆற்றின் விதியா?
ஆற்று நீரை நம்பி வாழும்
விவசாயி,
விளைச்சல் நிலம் வறண்டால்
விவசாயி வயிறும்
வறண்டு விடும் என்று தெரியாத
படுபாவி!

நிலமே! தமிழக விவசாய
நிலமே!
இன்று உனக்கு உயிர் கொடுப்பது
இயற்கை மழையும்
இயங்கும் பம்புசெட் மோட்டார்கள் தவிர
ஆற்று நீர் அல்ல,

பசுமையான தமிழ் நாடு என்று  
பீற்றிக் கொள்ளும்  அரசியல்வாதிகள்!
பசுமையின்  எடுத்துக் காட்டாம் எம்
டெல்டா மாவட்ட
ஆறுகளில்
எங்கு தண்ணீர்?

பயிருக்குத் தேவை
தண்ணீர்!
ஏழை விவசாயி விடுகிறான்
கண்ணீர்!

தண்ணீரில் எதற்கு அரசியல்?
கர்நாடகாவே!
நீரைத் துறந்து விடவில்லை என்றால்
நீர் நாடி வெடிக்கும் ஒரு 
புரட்சி!
உழவர்தம் எழுச்சி!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.