அத்தியாயம் மூன்று: அன்னர் எங்கே?

"படிப்பைக் கொண்ட வேலையில் நாட்டம் அதிகமாக , அரசவேலையில் வசதிகள் எனஂற​ மானுக்குப் பினஂனால் ஓட​  கடல் தொழிலைச் செய்கிறவர்கள் அருகி விட்டது" என்று சங்கர் குறிப்பிடுறது அனஂனருக்கு   நினைவுக்கு வருகிறது . அப்ப தான் இவரும் ' சேர் , இங்கே சாதியம் என்பவை  பொய்   ' என  விளக்க முற்பட்டார் .  " நாடார்களின் போராட்டங்களும் ,விடுதலையும் " என்ற நூலை வாசிக்கும் வரையில் அவருக்கும் கூட பல​ விசயங்கள்  தெரிந்திருக்கவில்லை . பனம்தொழிலைச் செய்கிறவர்களும் , கடல்தொழில் செய்கிறவர்களும் உண்மையில் சாதியப் பிரிவினரே இல்லை . அவர்கள் பாண்டியகுலத்தையும் , சோழர் குலத்தையும் சேர்ந்த‌ ,   மக்கள் பிரிவினர் எனஂற உண்மை அவரை  ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது    .  ஒருகாலத்தில் , லெமூரியா , இந்தியாவை விட​     பெரிய நிலப்பரப்பைக்  கொண்ட​   ... நாடாக இருந்திருக்கிறது . அது , இனஂறு இந்து சமுத்திரத்தினுள் நீரினுள் மூழ்கிப் போய்க் கிடக்கிறது . பாண்டியரின் பொற்காலம்  அந்த நிலப்பரப்பிலே எழுந்து புதைந்து போய் இருக்கிறது .அந்த​ காலத்திலேயே பாண்டியருக்கும் , சோழர்களுக்கும் இடையில்  பகைமை கொடிவிட்டு படர்ந்திருக்கிறது . சேரர்கள் இருதரப்பிலும் மணத் தொடர்புகளை கொண்டு பகையை வளராது வைத்திருக்கிறார்கள். வெற்றி ,தோல்விகள்  சகஜம்  . பகை  குலங்களை நசிபட வைத்து தீண்டாச்சாதியாகவும் , ஒருபடி இறங்கிய( குறைந்த​) சாதியாகவும் ஆக்க வல்லவை . அந்த வரலாறையே அந்நூல் விபரிக்கிறது . கத்தியில் நினஂறு கூறுகிறது  போல​ கூறுகிறது .

"சோழர்கள் கடலை ஆண்டவர்கள் . அதில்  வரலாற்றையே எழுதியவர்கள் . அம் மக்கள் அனைவரையுமே கடல்தொழில் சாதியாகி , அங்கிருந்த தொழிப்பிரிவுகளை (அனைத்தும்)  கப்பல் கட்டுவர் , பட்டம் கட்டியர் , முக்குவர்...என பல உபபிரிவு சாதிகளாக்கியும்  விட்டிருக்கிறார்கள் " என்று சங்கருக்கு தெரிவித்த போது " ,  " நீங்கள் ,  இங்க ... சமூக வரலாறை அறிய விரும்புகிறீர்கள் என்பது தெரிகிறது . பலதையும் எழுதுவார்கள் . ஆனால் நிறுவவும்   வேண்டுமே , தவிர​ ஒரு புத்தகம் மாத்திரம் போதாது சேர் "  என்று   அவர் நம்பவில்லை . இவருக்கு அந்த புத்தகத்தை வாங்கி ...அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் . அப்பதான் வாசிப்பார் ,அறிவார்....என்று நினைத்துக் கொள்கிறார் . ஆனால் , வாசிக்கும் திறமை ஈழத்தமிழரிடம் குறைவாகவே நிலவுகின்றது . கல்வியிலே வாசிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தவே இல்லை .    அப்படி  ஒரு பாடம் செருகப்பட்டிருக்க​ வேண்டும் . இலங்கை அரசு , ​கல்விக்குக்  கூட  சுறுக்குக் கயிறு போட்டு தன் கையிலே வைத்திருக்கிறது . வாசிக்கப்படாமல் போகிறதுக்கான சந்தர்ப்ப​ங்களே அதிகம் . சஙஂகர் வாசிப்பு பேர்வழி அல்லர் . கணக்கொனஂறைக் கொடுதஂதால் விருப்புடனஂ  பெற்றுக் கொள்வார் .  அதில்  , ஒனஂறிப் போய் நிறுவுவார் . கதைப் புத்தகத்தைக் கொடுதஂதுப் பாருங்கள்.  வாசிக்காது  ஒரு புறமாக​ வைத்து விடுவார். இது யாழ்ப்பாணியினஂ பொதுப்பழக்கம் . இங்குள்ள​ தமிழீழ​ ஆராய்ச்சிக்கழகம் எனஂற​ அமைப்பு , " நாம்  பல்கலைக்கழகத்தில் படித்தவர்களை...பகுதஂதறிவுடனஂ இருப்பார்கள் , முனஂ உதாரணமாக​    விளங்குவர் என நினைப்போம் . அத்தனை பேர்களுமே உயர் பேரத்திலே ...(சீதனம் பெற்று ) முடிக்கிறவர்களாக​ இருக்கிறர்  , தமிழிழக்கியம் வளர​ உழைப்பர் ...என நம்ப​ , அது கலைப்பிரிவில் படிக்கிறவர் வேலை ....என தம்தம் பாடநூல்களுடனே கிடக்கிறர் . வரலாறைத் தெரிய​ வேண்டும் ( படிக்க​) எனறால்  ,  அரசியல் தெரிதல் எல்லாம் நம் வேலையல்ல ' என  ஒதுங்கிக்   கிடக்கினஂற​னர்  . உங்களில் எத்தனை பேர்களுக்கு வசிக்கிற​ கிராமத்தினஂ , அல்லது ஊரினஂ அயலை  , சுற்று எல்லைகளை... எது வரையில் தெரியும்? எனஂறெல்லாம் கேள்விகளை எழுப்பியது .

ஈழத்தமிழரில்   யாழ்ப்பாணிகள் பற்றிய​   அவர்களினஂ  ஆய்வுகள் விரிகினஂற​ன . அவற்றை தர்க்கீகம் எனஂற​ பத்திரிக்கையிலும் வெளியிட்டவர்கள்.

அனஂறு வாசுவிற்கு அராலியில் படிதஂது , யாழில் உயர்வகுப்பில் படிக்கிற​ போதிலும் கூட​ தொல்புரம் , சுளிபுரம் , தெற்கராலி என விரியும் அராலியோ , அயலைப் பற்றியோ   எதுவுமே ,தெரிந்திருக்கவில்லை . பள்ளிக்கூடம் சுற்றுலா ..என கூடிச் செனஂறு எதாவது காட்டி இருக்க  வேண்டும் .  இருக்கவில்லை . அனஂறைய​ அதிபர் தொல்புரத்தைச் சேர்ந்தவர் எனஂறு கூடத் தெரிந்திருக்கவில்லை . ஒருமுறை அவர் இளவயதிலேயே ...திடிரென பற்றிய​     நோயால்    மருத்துவமனையில்   சாகக்கிடந்து மீண்டவர் . அம்மா ஆசிரியையாய் இருந்ததால் தெரியும் . மற்ற​ மாணவர்க்கு தெரிந்திருக்கவில்லை . எனஂறோ... பிறந்து விட்ட அராலிப் பாடசாலைக்கு உப அதிபராக​   தாசன்  மாஸஂரர்    வந்த​ பிறகே , நீண்ட​ காலத்திற்குப்  பிறகு  கால்பந்து விளையாட்டுக் குழு ஒனஂறு அவரினஂ விடா முயற்சியாலே கட்டப்படுகிறது . அராலிக்கிராமத்திலேயே   யாழ்ப்பாணத்தில் விளையாடுகிற பாடுமீனை' ப் போனஂற....   கலக்கலாக​ விளையாடுகிற​   இரண்டொரு விளையாட்டுக் கழகங்கள் வேறு  'இருக்கினஂறன . ' பாடுமீனைத்' தெரியுமா ? , நெடுக​ ​ வட​ மாகாணத்திலேயே சம்பியனஂ அடித்து   வருகிற​ பாசையூரினஂ  கால்பந்துக்குழு . வெள்ளிக்குழு  கூட​   ஒரு தடவை  சம்பியனஂ அடித்ததெனக் கூறுகிறார்கள் . இவையெல்லாம் தேவையற்றவை எனஂகிறீர்களா ? . குறைந்த​ பட்சம் கூட  சூழலைத் ( அயலை ) தெரிய​ வைக்காத​ கல்வி எனஂனக் கல்வி ? குப்பைக் கூடைக்குள் கொண்டு போய்ப்  போடுங்கள் . வாழிய​ , நமோ எல்லாம் பாடி ஒரு பிரயோசனமும் இல்லை .

'அரசியல்' மாணவர்க்கு தேவையற்றது என இங்குள்ள​ ஆசிரியர்களும் கூறுகிறார்கள் . தேர்த்தலில் சீட்டு போடக் கூடியவர் பாராளமனஂறத்தில் உறுப்பினராகலாம் எனஂற​ விபரம் தெரியுமா ? . சமூகக்கல்விப்பாடம் அரசியலையும்  போதிக்க​ வேண்டிய​ பாடம் . திரையப் பட்டியிருக்கிறது. பிரிட்டனில் விக்ரோரிய​ மகாராணியினஂ ஆட்சியில் மாணவர்களையும் அதிகமாக​   ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தி வந்தனர் . அவருக்கு தலையிடியைக் கொடுத்து வந்தது . படிக்கிறதுக்கு உதவி செயிறதுக்கு கைமாறாக​ ஆர்ப்பாட்டங்களில் , அரசியலில் ஈடுபடக் கூடாது எனக் கேட்கப்பட்டதிலிருந்து ...தவிர்ப்பு தொடங்கியது .  பழைய​தமிழர்க் கல்வியில் அரசியல் ஒரு பாடம் . அனஂறு எல்லாக் கல்வியும் பதினெட்டு வயதிலேயே கற்பிக்கப்பட்டு விடுகிறது .இனஂறு நூறு வயதிலும் படிக்கிறது சிலாகிக்கப்படுகிறது .

இந்த​ பள்ளிக்கூடதஂதிலும்  கறுப்பு யூலைக்குப் பிறகு , ஒரே வகுப்பிலிருந்து பத்து , பதினைந்து மாணவர்கள் யாழ்ப்பாணக் கல்லூரியைப் போல​ அள்ளுப்பட்டுச் செனஂறிருப்பது  படிக்கிற​ மாணவரில் எத்தனைப் பேருக்குத் தெரியும் . விடுதலைப் போராட்டத்தில் இறந்து விட்ட , காணாமல் போன(பழைய​) மாணவர்களும் இருக்கிறார்கள் . ஏனஂ ? , அனஂனரே ஒரு நாள் காணாமல் போக​ இருக்கிறார் .   யாழ் தொழினுட்பக் கல்லூரியில் இரு ஆசிரியர்களினஂ படங்களை வைத்திருக்கிறது . சிறப்புத் தேர்ச்சிப் பெற்றவர்களை சிலையாகவோ , படமாகவோ ....மரியாதை செய்ய​ வேண்டியது அவசியம் . கிணற்றுத் தவளைகளாக​ இருந்து விடவேக்கூடாது . பள்ளிக்கூடம் சுதந்திரத்தையும் சொல்லிக் கொடுக்கிற  அறிவாலயம் .   அரசியல்வாதிகளுக்கெனஂறும் பிறிம்பாகவும்  ஒரு கல்லூரி (சமூக​ விஞஂஞானக் கல்லூரி) இருக்க​ வேண்டும் . அதில் கற்று வாரவர்களே அரசியலிலும் ஈடுபடுதல் வேண்டும் . அப்படி இருந்தால்  நாடுகள் இனஂறு சோரம் போனது போல​ இராது . இலங்கை ,  யார் ,யாரோப் பேச்சைக் கேட்டு அமெரிக்கா   கொடுக்கிற​ கிளைஸஂர் எனஂகிற​ கொத்துச் சிதறற் குண்டுகளைப் போட்டு   இனப்படுகொலை செய்து   நிற்கிறது .

மாணவர்களுக்கு எதுவும் தெரியாமல் இருப்பதாலே இனஂறு தமிழினமும்  நசிபடுகிறது . இலங்கை இனவெறி பிடித்த ஒரு நாடாகி மாணவர்களை கிணற்றுத் தவளைகளாவே வைத்திருக்கிறது . மாணவர்கள் குறுகிய​ ஃபோக்கஸஂ உடையவராகவிராமல்​ விரிந்த​ பார்வையைப் பெற​​ வேண்டும் . இங்கே ஏட்டுக்கல்வி ..எனஂறில்லாமல் செயற் கல்வியைக் கற்றுக் கொள்வதாக​ இருக்க​ வேண்டும் . தமிழ் மகனஂ ஒருவன் வேலை ஒனஂறை எடுக்கிறது மகாபிரச்சனையாய் கிடக்கிற  அரசியல்  மாறவே​ வேண்டும் . சுயமாகவும் நிறைய​  சிந்திக்க​  வேண்டும் . செயல் படவும் வேண்டும் .

மொத்தத்தில்  , தமிழினம்  சீரழிவு நிலையிலும் அகப்பட்டு விட்டது . சிந்தையையும் கலக்கி குட்டையாக்கியும்  விட்டது . ராமரும், கிருஸஂண​ரும்   வந்து தானஂ  மீட்க​ வேண்டிய​ நிலை . அன்னரும் பிடிவாதக்காரர் . அவரும் விடாக்கொண்டராக இருக்கிறார் . " சேர் ! நீங்க சீதனம் வாங்கிறதைப் பற்றி என்ன நினைக்கிறீர்? " என்று ..ஒரு கொழுக்கிக் கேள்வியை சங்கரிடம்  ஒரு  தடவைப்   போட்டார் . சங்கர் அவரை ஏற​ இறங்க​  சந்தேகமாகப் பார்த்தார் .'நான் சீதனம் வாங்கி கட்டியதை யாரும் இவருக்கு  சொல்லி இருப்பாரோ ?  .  அன்னருக்கு அது தெரியாது . அவருக்கு  விரிகுடா  வாய் . நண்பர்கள் "இவன் பேசி ,பேசியே கழுத்தை அறுத்து விடுவான் என்று கேலி செய்கிறவர்கள் ." சேர் ! இனப் பிரச்சனை ஒரு புறம்  வளர்ந்து கொண்டே போகிறது . வேலை இல்லாப் பிரச்சனை வேற​  சிங்களவரால் ஆட்டோ ஆட்டு என ஆட்டு விற்கப்படுகிறது . வேலை இல்லை எனஂறால் இயல்பு வாழ்க்கை இல்லை  . இரண்டு , மூன்று ...மடங்கென . குத்துக்கள் விழுந்து கொண்டிருக்கினஂற​ன .  குறையப்போவதில்லை . மொத்ததஂதிலஂ பலருக்கு  வேலையே இல்லாத​ நிலை . கிடைக்கிற ஒரு வேலையிலும்  கிடைக்கிற​ சம்பளமும் போதாது . இந்த சாதியத்தை வைத்திருப்பதால் சுயவாய்ப்புகளும்    மறுக்கப் படுகின்றன , இல்லை. . ஒரு சமூகத்தின் தொழிலை இன்னொன்று செய்ய முடியாது . செய்தால்  கத்தி ,பொல்லுடன் மற்றது நிற்கிறது . இந்த​ நிலைமை உங்களிலே   இருக்கிறது  . மாற​ வேண்டும் . வாழ்க்கை என்று வருகிற போது வேலை ஒரு பிரச்சனையாகவே இருக்கக் கூடாது .  நமக்கோ மகாபிரச்சனையாக கிடக்கிறது . வேலை கிடைத்தவர்கள் குடும்ப வாழ்வில் கால் வைக்கிற போது ...இல்லறம் வேறு  நடை பெற வேண்டுமில்லையா? அதற்கு , பணதிற்கு   எங்கே போவது ? பணம் இல்லை . இந்த  மறுப்பு இல்லா விட்டால்  சுயவேலை வாய்ப்பும்  இருக்கும் .  உப வேலையாகி கூடிக் குறைந்தாலும் நாம் திருப்தி அடைந்து விடுவோம் .  கட்டுக்களை அவிழ்க்கிறதுக்கு நேரம் வந்து விட்டது . இதற்காக தான்  , குறைந்த பட்சமாவது இல்லற வாழ்வு நடைபெற பணம் கொடுக்கப்பறதுக்காக​' சீதனம் 'என்ற வழக்கம்   இருக்கிறது  போல​ இருக்கிறது  " என்கிற போது " சேர் ! நீங்க எனனை நியாயப்படுத்துரீர் கள் . நானும் சீதனம் வாங்கினேன் "என்று சொல்லிச் சிரித்தார் . வேலை    கிடைக்கிறதுக்கு   'ரேசிசம்' தடையாகி பிரச்சனையாக்கி விட்டி௫க்கிறது . பொ௫ளாரமும் சிறக்க வேலைகளும் பெ௫க வேண்டும் . இலங்கை ,    இஸ்ரேலைப் போல  இனவெறி பிடிதஂத நாடாக  இ௫க்கக் கூடாது  .   எங்க​  போறது , எனஂன செய்றது , சேர் ! ? . எனக் கேட்க​ ," இப்ப ,வாங்க​ சேர் தேனீரைப் போய்க் குடிப்போம்" எனஂறு சிரித்தார்.

" பிரச்சனை இது தான் . நாம் இரண்டு வேலை செயிற போது போதிய வ௫வாய் வ௫ம்   மேலதிக​ பணத்திற்காக​  . சீதனவோ , அல்லது யாராவது தருவாரோ என எதிர்பார்க்க​ வேண்டிய​ தேவை இராது  . இதைப் பற்றி ராஜாஜி , காந்தி போன்றவர்கள் சிந்தித்திருக்கிறார்கள் . தமக்கு தோன்றிய வழிமுறைகளையும் கூறியும்   இருப்பது   என்பது எத்தனை பெரிய விசயம் " என்கிறார் .  நமக்கு முனஂனமும் போராட்டங்கள் நடந்திருக்கினஂறன , நடத்தியிருக்கிறார்கள் எனஂபதை .....தெரிந்து கொள்வதற்கே  வாசிக்கவுமல்லவா வேண்டும்  ! .  தமிழினம் விழிக்க​ வேண்டும் . ஆனால் . தமிழினம் பாலர் ப௫வத்தைக் கடக்கவில்லையே . எனஂறு சோர்வாகவும்​ கூறுகிறார் . " நீங்க ஒரு பிரளிக்காரர் "என்று ...சங்கர்   குலுங்கிச் சிரிக்கிறார் . " எனக்கு இந்த கிராமத்தை பார்க்க‌ வேண்டும் . ஒரு நாள் கூட்டிச் செல்வீர்களா ,    சேர் ? " என்று கேட்கிறார் . "  அதற்கு தான் இந்த பீடிக்கையா !  ஞாயிற்றுக் கிழமை வாருங்கள் . சைக்கிள் ஒன்றும்  .... ஒழுங்கு பண்ணி வைக்கிறேன் .   பதிலுக்கு எனக்கு மலையகத்தைக்  காட்ட தவறக் கூடாது . டீல்  !   வார்த்தை மாறக் கூடாது " என்று வாய் விட்டுச்  சிரிகிறார்  . " அதற்கு வானமும் , காற்றும் சாட்சியாய் இருக்கிறது . சம்மதம் தெரிவிக்கிறார் . " டட்ட டாங் ! " . இந்த ஞாயிறுக்கிழமை அனஂனர் அராலியைச் சுற்றவும்  போகிறார் .

" கப்பல்வெட்டியர்   இங்கே அதிகம் . பள்ளியிலும் அதே பெடியள்களே அதிகம் " எனஂறு சங்கர் கூற "அது என்ன சேர், வெட்டியர் ?" கேட்க . " ." தயாரிக்கிறவர்கள் என்று அர்த்தம் என்கிறார். " " அட !  ' திமில் ' என்பது கப்பலுக்கு இருக்கிற பழந்தமிழ் சொல் . அப்படி என்றால் கப்பலைக் கட்டுறவர்கள் என்று வருகிறது  . சோழகுலத்தை தான் அப்படிச் சொல்லுறவர்கள் . இதன் வேர் எங்கையோ போகிற‌து சேர் ! ,  இது சாதி இல்லை, சோழர் குலம்  . சேர் " என்று ஆச்சரியப்படுகிறார் . " பட்டம் கட்டியர் , முக்குவர்   கூட  ...எல்லோரும் கப்பலில்  ஒவ்வொரு தொழிலைச் செய்கிற  தொழிலாளர்கள்  . நீங்கள் சொலுறதும் ஒரு விதத்திலே சரி தான் " என்க .  " அது தான் உண்மையே  சேர் ! .  ஒவ்வொனஂறுக்கும் ஒரு நிறத்தைப் பூசி ஊன்றி இருக்கிறார்கள் "  என்று அன்னர் அடித்துக் கூறுகிறார் . இவர் ' மக்கள் தோழன் , எம் .ஜி .ஆர் ஆசிரியர் ' என்று தோன்ற சங்கர் சிரிக்கிறார் . ஆசிரியர் அறையில்    வெள்ளிக்கிழமை அனஂறும் அலட்டல் தானஂ . கடைசியில் " ஞாயிற்றுக் கிழமையை மறந்து விடாதீர்கள் சேர் " என்று சங்கர் மாஸ்ரர்  நினைவு படுத்தி விட்டு  போகிறார் .

காலையில் அன்னரை எதிர் கொண்டது சஙஂகரனினஂ குடஂடி மகள் கீதா தானஂ . " அமஂமா , யாரோ மாமா வநஂதிருகஂகிறாரஂ " எனஂறு    கீசஂசுகஂ குரலிலஂ கதஂதினாளஂ .வெளிலஂ வநஂத சஙஂகரஂ , "நமஂம மாஸஂடரமஂமா , வாஙஂக , வாஙஂக " வரவேற்றார் .  அன்னர்  , கையில் கொண்டு வநஂத பிஸஂகற்றையும் , டொபியையும் ... அவள் கையில் கொடுதஂது தூக்கிக் கொண்டாரஂ .   மலையகத் தேயிலையை (அரை றாதஂதலஂ பை) சஙஂகரிடமஂ கொடுதஂதாரஂ . " சாபஂபிடஂடு விடஂடு கிளமஂபுவோம் " எனஂறு கூற​ , மேசையிலஂ  பாணுமஂ , சமஂபலுமஂ இருகஂக , சாரதா தேனீரையும் கொண்டு வநஂது வைதஂதாரஂ . இருவரும் சைக்கிளில் கிளம்பினார்கள். முதலில் அயலிருநஂத அவருடைய​  சுசிலா அக்கா வீடஂடுகஂகு கூடஂடிசஂ செனஂறாரஂ . முனஂனாலஂ  ஆசிரியரான அவருடைய​ கணவர்  செலஂலமுதஂது தானஂ  அவர்களுடைய பாடசாலை கீததஂதை எழுதியவர் . இளைப்பாரி விடஂட அவர்  வீடஂடிலே தோடஂடமஂ, வயலிலே நெல் செயஂகை...என இருக்கிறாரஂ. அவரும் வீடஂடிலே இருநஂதாரஂ.   இயறஂகை முறையை விளக்கி தோடஂடதஂதைகஂ காடஂடினாரஂ. " அட ! நம்ம​ வீடஂடிலேயும் ஒனஂறு இரண்டு கனஂறுகளை வைக்கலாமே ...எனஂறு  அனஂனருக்கு  தோனஂறியது . விடை பெற்றுக் கொண்டு குலனை வழியில் இறங்கினர். அஙஂகுள்ள​ கலையரசி வாசிகசாலையில் ,ஏற்கனவே சொலஂலி வைத்திருந்ததால் , பெடியளஂகளஂ  கூடி இருந்தனர், சந்தித்தனரஂ . கிராமதஂதிலஂ இருக்கிற அனைவ௫மஂ  அவர் பள்ளிக்கூடத்திலஂ படிக்கவில்லை.மானிப்பாய் ,வடஂடுகஂகோடஂடை , யாழிலஂ , காரைநகரிலஂ கூட படிதஂதாரஂகளஂ . பதஂதாமஂ வகுப்பு வரையிலுமே அங்கே இருநஂதன . புதிய முறையில் ஒனஂபதாமஂ வகுப்பு வரை, இது ஆறாம் வகுப்பிலிருந்து இப்ப​ தானஂ ஆரம்பமாகிறது.  ஆனாலஂ, பழைய​ முறையும் இருக்கிறதே .. " "இஙஂகே சாதிப்பிரசஂசனை ஏறததாழ இல்லை  எனஂறே கூறலாம் . கலப்பு மணம் புரிகையில் மாத்திரம் சாடை மாடையாக​ எழப் பார்க்கிறது . பெரும்பாலும்  அவரவர் அவரவர் பாட்டிலே இருந்து விடுகிறார்கள் " எனஂறு சங்கர் கூறினார் .  பெடியள் புத்திசாலியாக​ இருக்கினஂறனர். ஒருத்தனினஂ படிப்பு சுமார் , ஆனால் ,ரேடியோ திருதஂதுகிறானஂ .வட்டுத் தொடர்ப்பால் சிலர் டியூசனஂ வகுப்புகள் வைக்கினஂறனரஂ . படிதஂது வேலை எடுகஂக முயல்கிறவர்கள் தொகை அதிகம் .  அப்பகுதியில் 50 வீதமாக​ இருந்த​ வேலையில்லாமை  இனவெறியால் 75வீதமாக இருக்கிறது  . ' டீ யும் ' பிஸஂகற்றும்.  கொடுத்து உபசரிதஂதாரஂகளஂ. வாசிகசாலையில் பெரிதாக​ புத்தகங்கள் இருக்கவிலஂலை. " வடஂடு ஆட்கள் எனஂகிறீர்கள் புத்தகங்கள் வாசிக்க​ வேண்டாமா? புத்தகங்களை  வாங்கிப் போடுங்கள்"எனஂறு விடை பெற்றுக் கொண்டார் .

சிறிய வயலை( வெளியைக்)  கடக்க​,  கிழக்கு , " இங்கே பனை மரத்தினரஂ " எனஂகிறார் . அவர்கள் வீதியால் செல்கினஂறனர்  . அங்கேயும் ஒரு வாசிகசாலை இருக்கிறது . ஆடஂகளைக் காணவில்லை. "மரதனஂ ஓடஂடம் வைக்கிறவர்கள் . அம்மனஂ கோவிலுக்கு வாரதுக்கு இந்த​ வீதியை எடுக்கிறேனஂ "எனஂகிறார் . "அராலி எனஂறால் தெரிந்திருக்காது . 'முத்துமாரி அம்மனஂ'எனஂறால் அராலி அம்மனஂ ஆலையமா?'எனஂறு கேட்பார்கள் . அத்தனை விசேசம் ( சங்காபிஸேகம்)....ஒரு திருவிழாவிலே உள்ள​ மேளம், நாதஸஂவரம் எல்லாம்  இலவசமாக​ வந்து வாசிப்பார்கள் . அராலி அதிரும் . தட்சணாமூர்த்தி பல​ தடவைகள் வநஂது வாசித்திருக்கிறார் . நல்லூர் திருவிழா போல​ நடை பெறும் " எனஂகிறார் . சங்கரினஂ முகத்தில் ஒளி . பெரிய​ கோவிலாக​ வயல் ஓரம் இருக்கிறது . " இநஂத​ கரையிலே மாடஂடு வண்டிகளை நிரைக்கு கடஂடி விடஂடிருப்பார்கள்  . எல்லா ஊரிலிருநஂதும் வருகிறார்கள் " காடஂடுகிறார். " கரையிலே குடஂடிக்கடைகளும் இருக்கும் . இங்கே ,குழுத்திச் சாபாடு எனஂன ருசி தெரியுமா ? "  பிரபலமாகத் தானஂ நடை பெறுகிறது போல​ இருக்கிறது .

அம்மனஂ ஆலையம் அதிகமாகக் கடஂடியவர்கள் பாண்டியர்கள் தாம் . தாய் வழிச் சமுதாயதிற்குப் பிறகு எழுநஂதவர்கள் பாண்டியர்களஂ . சக்தி வடிவத்தை ஆலையமாக​ எழுப்பினர் . பத்ரகாளி ஆலையமும் இவர்களே எழுப்பினர் போல​ இருக்கிறது . சங்கர்  "வடக்கராலிக்கு அயலில் வடஂடு,  சங்கரத்த வீதியில் வயல் பக்கமாக​ பெரிய​ பத்ரகாளி அம்மனஂ ஆலையமும்  இருக்கிறதது . கோபக்கார​ அம்ம​னஂ .  "அராலியிலே , பல​ அம்மனஂ ஆலையங்கள் இருக்கினஂறன சேர் ,  மாதாங்கோவில்  கண்ணகி ஆலையமாகவே இருக்க​ வேண்டும் " எனஂகிறார் . உங்களுக்கு புரியுமோ , இநஂத​ ஆலையங்களை எழுப்பியவர்கள் பனைக்காரர்களாக​ இருப்பார்கள் எனஂறு நானஂ நினைக்கிறேனஂ , இவர்கள் வேற​ யாருமில்லை , பாண்டிய​ (குலம் ) மக்கள் .இவர்கள் மோசமாக அடக்கி ஒடுக்கப்படஂடு தீண்டாமைச் சாதியாக்கப்படஂடனர் எனஂறு ஒரு வரலாறு இருக்கிறது சேர்" எனஂகிறார். "சங்கர் " இதை யாரிடமும் கதைதஂது விடாதீர்கள் சேர் " எனஂகிறார் . " அனஂனர் சிந்தனையுடனஂ "லெமூரியாக் காலத்திலிருநஂது ...கதை இருக்கிறது . அப்ப​ இலங்கை ,ஈழ அல்லது நாகநாடாக​ இருக்க​ வேண்டும்" எனஂகிறார்​ . "சங்க​ காலம் சிறப்புற​   பாண்டியர் பலமானவர்களாக​ இருந்தார்கள் ...எனஂறால் கொடூரமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் போல​ அல்லது இப்படி நேராது  சேர் ! " எனஂகிறார் . மாஸஂரரும் இவருடனஂ பயணிக்கிறார் . அனஂனர் சிரிக்கிறார் . " பிறகு சோழர்கள் , அவர்கள் ஒடுக்கப்பட்டு கடல் சமூகமாக​ மாறுகிறார்கள் " அனஂனர் தொடர்கிறார்.  சங்கர் " கேட்க​ நல்லாத் தானஂ இருக்கிறது " . அனஂனர் " நாம​   தானஂ ,​  இதை மனதில் வைத்து சிமார்ட்டாக​ வாழ​ வேண்டும் ! அதற்காத் தானஂ சொல்கிறேனஂ" எனஂகிறார் . சங்கர் , அப்படியே அருகிலுள்ள​ வாலையம்மனஂ பகுதிக்கு கூட்டிச் செல்கிறார் . "சங்கர் " எனக்கெனஂனவோ 'வாளை' எனஂற மீனைக் குறித்து இருந்தது ,திரிந்து வாலையாகி இருக்கலாம் எனஂறு தோனஂறுகிறது சேர் " எனஂகிறார் . அங்கே இவரினஂ தங்கை நந்தினினஂ குடும்பம் இருக்கிறது . மதிய​ உணவை உண்கிறார்கள் . மகனஂ குச்சி ,பெடியள்களை வாசிகசாலையில் சந்திக்க​ ஏற்பாடு செய்கிறானஂ. "

" இப்படி பெயரா? " எனக் கேட்க​ " அம்மாட வேலை , ஆக​ ஒல்லியாக​ இருந்தானஂ . 'அப்படி கூப்பிட்டால் ...ரோசம் வந்து உடம்பை தேற்றிக் கொள்வானஂ' கூப்பிடத் தொடங்கி விட்டார் .வீட்டுப் பெயர்" விளக்கம் கொடுக்கிறார் . இங்கே ,  பல்வேறு தொழில்களை...புரிநஂதாலும் வெட்கப்படாது கணிசமானவர்  கடலுக்கு பயப்படாமல்  கடலிலும் கால் வைக்கிறது நிலவுகிறது . "கறுவாட்டுக் குழம்புடனஂ ஒரு வெட்டு வெட்ட விரும்புறபோது இங்கே உடனே வந்து விடுகிறேனஂ"எனஂறு சங்கர் சிரிக்கிறார் . மண்டை தீவில் அனலை தீவுக்கு போறது மாதிரி இங்கேயும் கடல் புறமாக​ ஒரு கிரவல் வீதி செல்கிறது . முந்தி கிட்ட ​ இருந்த​ கடல்  தாவர​ வயலுடனஂ நல்லாய் பினஂனுக்கு போய் நிற்கிறது. அவ்வீதியில் ஐயனார் ஆலையம் ஒனஂறு வித்தியாசமாக​ நிற்கிறது .  தூரத்தே ஓலைக்கூரையில் நீளவாடிக் கொட்டில் தெரிகிறது. மண்டபம் போனஂற​ சரிவான கூரையுடனஂ இருப்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறார் .கல்லுக் குருணி வீதியில் உழக்கிக் கொண்டு செல்கிறார்கள் . அராலித் துறையில் முடிகிறது . அங்கிருந்து கடலைப் பார்க்கிறார்கள் . வள்ளங்கள் கட்டப் பட்டிருக்கினஂறன .​ ரோலர் ,வீடு போனஂறு இருக்கிற​ சிறிய​ மரக்கப்பல் ஒனஂறு பழைமை ஏறி கை விட்டது போல​ கட்டப்பட்டு கிடக்கிறது. தூரத்தே வேலணைத் தீவுக் கரையை பார்க்க​ முடிகிறது . சங்கர் 'மண்கும்பானஂ' எனஂறு சொல்கிற​ பகுதி . அங்கிருந்து இதே போல​ வீதி ஊருக்குள் செல்கிறது .பார்க்க​ நீந்தியே போகலாம் போனஂற​ தூரம் தானஂ.ஆனால் ஆழம் ,ஆழமில்லை , ஆட்களை தாழ்க்கும் ...என  கீழ்த் தரை கிடக்கிறது . 'பாதை கண்டு ஓட​ வேண்டும் ' எனஂபார்கள் .தெரியாதவர்கள் படகை சேதமாக்கி விடுவார்கள் " எனஂகிறார் . அந்த​ நேரத்திலும் சிலர் மீனஂ பிடித்து வருகிறார்கள் . மலிவாகவும் ,உடனஂ மீனை வாங்கவும் காலையிலே பலர் இங்கே வருவார்கள் "எனஂகிறார் .

அப்படியே 'ட​' னாவில் திரும்பி கிரவல் வீதியில் பயணிக்கிறார்கள் . வயல்களற்று பிறகு வயல்களுடனஂ செல்கிறது. சங்கர் " இது இப்படியே நீள​ வட்டுக்கோட்டைச் சந்திக்கு செனஂறு ,அப்படியே சித்தங்கேணி ,பண்டத்தறிப்பு ...,சண்லிப்பாய்...என அராலி வல்லை வீதி எனப் பெயருடனஂ வல்லைவெளி வரைக்கும் செல்கிறது"எனஂகிறார். அனஂனருக்கு யாழ்ப்பாணம் தெரியாது . " எனக்கு புரியாது சேர்" சிரிக்கிறார் . தெற்கராலி வீதிக்கு ஏற​ முதல் ஒரு குடியிருப்புகளைக் காண்கிறார் ." சேர் ! இதற்கு எனஂன பெயர் ? சொல்லுங்கள் பார்க்கலாம் " எனஂகிறார் . அவரே தொடர்கிறார் . " உங்களுக்கு நல்லாய் பிடிக்கும் பெயர் ' செம்மணத்தி' அசல் இலக்கியப்பெயர்.  அந்த​ மரம் ,செடி இருந்ததால் பெயர் வந்ததாக​ கூறப்படுகிறது . அப்படி ஒரு செடி இருக்கிறதா? தெரியாது  , எனக்கு  தெரியவில்லை. அராலியையும் அரலிச் செடி நிறைந்திருந்தது எனக் கூறுகிறார்கள் . ஆனால் , ஒரு அரளிச் செடியைக் கூட​ காண​லேலாது " எனஂகிறார் .

அனஂனர் " இனஂ ஒரு காலத்திலே தமிழர் பகுதி எங்கும் இப்பில் இப்பில் மரமாய்    இருக்கப் போகிறது .   இலங்கைப்படையினர் , மற்ற​ நாட்டினர் நிலத்தை பாழ் படுத்த  கதிரியக்க​ குண்டுகளைப் போடுறது போல​   இங்கே  , களைவிதைகளைப் போட இருக்கிறார்கள் " எனஂகிறார்  . அண்மைக் காலத்தில் , உக்ரேனஂ போருக்கு அமெரிக்கா , கிளைஸஂரர் குண்டுகளை வழங்கத் தீர்மானித்திருக்கிறது செய்திகள் தெரிவிக்கினஂறன . அதே குண்டுகளை ஏற்கனவே  இலங்கையில் போட்டிருப்பதை வெளியில் எவரும்  பேசவில்லையே ' சாட்சியமற்ற​ போர்! ' எனஂறு கூறி இலங்கையரசோடு சேர்ந்து மறைத்திருக்கிறது . சிதறும் குண்டுகள் மரம் செடிகளில் தைத்திருக்காதா? அதை மறைப்பதற்கு  புல்டோசர்களால் முழுதையுமே தரை மட்டமாக்கி அகற்றப் பட்டிருக்கிறது . உலகம் கெட்டு விட்டது . தீமைகள்  அகல்வதாக​ காணவில்லை .  செடியாய் வளர்ந்து செல்கிறது . செம்மணத்தியில் சங்கருக்கு அனஂடனஂ எனஂறு ஒரு நண்பர் இருந்தார் . அவர் " இது ஒரு பினஂ தங்கிய​ பிரதேசம் " எனஂகிறார் . அவர் கறுவாடுகளை சேகரித்து லொரியில் ஏற்றுகிறவர் .  மீனையும் பிடிக்கிறவர் . பேச்சில்  அவ்விடத்தை முனஂனேற்ற​ ஆசை கொண்டவர் எனப் புரிகிறது .

தேனீரையும் , சனஂவிச்சையும் சாப்பிட்டு விட்டு கிளம்புறார்கள் .  " இப்படியே செனஂறால் மேற்கராலியும், கொட்டக்காடும் வருகிறது . எங்கட  கிராமசேவகர் மேற்கராலியிலே  இருக்கிறார் .  அங்கே ஆட்களைத் தெரியாது . இடங்களை மட்டும் பார்க்கிறெனஂறால்  இப்படியே செல்ல இரண்டு கிலோ மீற்றர் கூடுதலாக​ ஓட​ வேண்டும் "  " எனஂ " எனஂகிறார் .  அனஂனர் சம்மதிக்க​ சைக்கிளை விடுகிறார் . " இது யாழ்ப்பாணக் கல்லூரி " காட்டுகிறார் . பெரிய​ எஸஂடேடஂ போல​ வீதியில் ஒரு புறம்  பரந்து இருக்கிறது . முதலில் தொடங்கிய​ பெரிய​ பள்ளிக்கூடம் இது . அராலி வீதியில் திரும்பி வர​ , " இது பவிலியனஂ " எனக் காட்ட, கல்லூரியினஂ மைதானம் ' எனஂறு புரிகிறது . முதல் முதலாக​ சிறிய குளம் ஒனஂறு கண்ணில் படுகிறது .  வீதியிலிருந்து அதனஂ பக்கத்தாலே மண்பாதை ஒனஂறு பனை மரதிரளுக்குள் செல்கிறது . " அங்கேயே  யாழ்ப்பாண​ தொழினுட்பக்கல்லூரி இருக்கிறது " எனஂகிறார் . முந்திய யாழ்ப்பாணம்  வட​ மாகாணத்தினஂ பெயர் . இனஂறு அது ஒரு நகரத்தினஂ பெயராக​ சுருங்கிப் போய் விட்டது  . நீண்ட​ வயல்வெளியை சைக்கிளை உலக்கு , உலக்கு என உலக்கி கடக்கிறார்கள் . குடியிருப்பு தொடங்க​ " "இது செட்டியார்மடம் " எனஂகிறார் சங்கர் . நாகேந்திரமடம் ,மயிலியப்புலம் ...கிராமத்தினஂ வரைபடமே பெயர்களில் தெரிகிறது .

நான் வாசித்ததைத் தெரிவித்தால் நம்புவாரா ,இல்லையா ? என்று யோசிக்கிறார் . ' வேண்டாம் ' என்று விட்டு விட்டார் . வீட்டுக்கு திரும்பிய போது களைத்து தான்  விட்டார்கள் .  நேரமாகி விடுகிறது  " சேர் ! இங்கேயே தங்கி விடுங்களன்" என்று கேட்கிறார் ." இல்லை!  சேர் ,( மனைவியின் தம்பி)  சேகர் பார்த்துக் கொண்டிருப்பான் " என்கிறார் . " சாப்பிட்டு விட்டுப் போங்களன் " என்று கேட்டார் . புட்டும் மீனஂ குழம்பும் ..அனஂனருக்கு சுவையாய் இருக்கிறது . சீதாக்கா   சேகருக்கும்  உணவை கட்டித் தருகிறார்
. " ' டீ 'யைக் குடியுங்கள் , முகத்தை கழுவிப் போட்டு வாரன் " என்று கிணற்றடிக்கு ஓடினார் .சிறுமியைத் தூக்கி கொஞ்சி " மடியில் வைத்திருந்து    " பாடுவீங்களா ?"  கேட்க​   தலையை ஆட்டுகிறது .  துரு ,துருவென கேள்விகள்  கேட்டுக் கொண்டிருந்தவளிடம் " அடுத்த முறை வருகிற போது மீராவோடு கனக்க கதைப்போம்மா " என்று விடை பெற , மீரா சங்கரினஂ கைக்கு போகிறது . அவர் கொஞஂசிப் போட்டு மனைவியிடம் கொடுக்கிறார்  .  சங்கர் அவரை ஏற்றிக் கொண்டு பறந்தார் . விடுமுறை நாள் என்பதால் பேரூந்து   தாமதமாகி வருகிறது . கையை அசைத்து விடை கொடுக்க கிளம்பிய போது அனஂனருக்கு'  கிராமம் , கிராமமாகவே இருக்க வேண்டும் ! ' என்று ஏனோ தோன்றியது .  ப​ஸஂ கல்லுண்டாய் வெளியூடாக இருட்டில்  விரைந்த‌து . வீட்டுக்கு வர​ எட்டு மணியாகி விடுகிறது . அலைந்து களைத்ததில் எழுத​ , வாசிக்க​ என மினக்கெடாமல் சேகர் வர​ முதலே படுத்து விடுகிறார் . சுகமான நித்திரை அவரை அணைத்துக் கொள்கிறது . நித்திரை எனஂறால் கனவு வரும் தானே . சுதந்திர​ உலகில் உலாவட்டும் . விட்டு விடுவோம்.

.அடுத்த நாள் தேனீர் குடித்த கையோடு பள்ளிக்கூடம் வந்து விட்டார் . அதிபர் ,தேயிலை ,சீனி ,மின்சாரத்தில் நீரை சூட்டாக்கிற பிளாக்ஸ்  போனஂறவற்றை ....ஆசிரியர்களுக்காக வாங்கி வைத்திருந்தார் . அன்னர் ஒரு தேனீர்ப் பிரியர் . அவருக்கு அடிக்கடி குடிக்க வேண்டும் . சாப்பாடும் கட்டியே வாரவர் . அன்று ,வாசுவிற்கு தமிழ் ஆசிரியர் வரவில்லை . அதிபர் " அன்னர் , 6ம் வகுப்பை எடுக்க முடியுமா?" என்று கேட்க , " தாராளமாக ..! " என்று வந்து விட்டார் . சீடர்ப்பிள்ளைகளின் உற்சாகமாக வரவேற்பு அவரையும் தொற்றிக் கொண்டது .சிறிது நேரம் பாடம் நடத்தினார் . யாப்பிலக்கணம் ஆழமாக கற்பிக்கப்படுவதில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது .இங்கே படிப்பிக்கிறது தமிழ் அறிவை வளர்த்து விடாது . ஆர்வத்தையும் ஏற்படுத்தி விடாது . என்ன தான் செய்வது ? . சுயமாகத் தான் படிக்க வேண்டும் . "வாசு ,சிறுவர் பகுதியில் இராது .வயசு வந்தவர் பகுதியிலே யாப்பு புத்தகங்கள் இருக்கின்றன . அண்ணர் மூலமாக இரவலாக எடுத்து வாசிக்கப்பார் " என்றார். அந்தோனி  "சேர் நீங்க ,'மலையகத்திலிருந்து வந்தவர் ' தெரிவிக்க எங்க முருகய்யா " நானும் மலையகத்திலிருந்து வந்தவனே "என்று கூறுகிறார் . உங்களையும் சந்திக்க வேண்டும் 'என்று கேட்கிறார்" என்கிறான் . அன்னருக்கு ஆச்சரியமாக இருக்கிறது .   உற்சாகமாக  " எப்ப ...என்று கேட்டுச் சொல்லு .வாரேன் " என்கிறார் .  " ஞாயிற்றுக் கிழமை தான் வீட்டிலே நிற்பார் . கட்டாயம் வாருங்கள் . நான் சொல்கிறேன் " என்கிறான் .

அன்னர் , அனஂறு  வாசிகசாலையில் பெரியவரை சந்தித்தார் .அந்தோனியின் அப்பா சவரிமுத்துவும்  அறிந்து வந்திருந்தார் . அவரும் " நானும் மலையகம் தான் " என்ற போது அந்தோனிக்கே ஆச்சரியமாக இருந்தது . மகனைப் பார்த்து " இதுவரையில் , நான் யாரிடமும்  கூறவில்லை . கிருஸ்தவன் வேற . தேவாலயக்காரர்கள் . நானும் இவரும் ( முருகரும் )கிளிநொச்சியில் இயங்கிய  சேவை அமைப்பின் உதவியில் அங்கேயே முதலில் வந்தோம் . பிறகு ,யாழ்ப்பாணத்தில் இவர் கொட்டடியிலும் , நான் வசாவிளான் பண்ணையிலும் (தேவாலயம் நடத்தியது) என பிரிந்து விட்டோம் . முருகண்ணை இங்கே மணமுடித்து வந்தார் . இவரைப் பார்க்க வந்த போது தான் உங்கம்மாவை பார்த்து விரும்பி...முடித்து இந்த​ கிராமவாசியானது " எனஂறு மகனைப் பார்த்து கூறினார்

"  எனக்கு  சேர்ச்க்காரர்கள் நல்ல உதவி . இப்பவும்  , அவயள்ட மானிப்பாய் கோழிப்பண்ணையில் வேலைப் பார்க்கிறேன் " என்கிறார் . என் குடும்ப மரத்தையே சரிவர‌ அறியவில்லையே என்று அந்தோனிக்கு வருத்தமாக இருந்தது . அவன் மனதில் ஓடுறதைப் புரிந்து கொண்ட சவரி  நட்புடன்  " நாம் நிறைய வாசிக்க   வேண்டுமடா ! . இனப்பிரச்சனையில்  பேச்சுச் சுதந்திரமும் எமக்கு இல்லை " எனஂகிறார் வருத்தத்துடனஂ . உண்மை தானஂ. நல்லவனோடு எதையுமே பேசலாம் . கெட்டவனோடு பேச​ முடியாது . அவனஂ பிழையாக​ பயனஂ படுதஂதுறவனஂ .

" ஏதாவது  பெரிய சேவைவமைப்பு  ஒன்றுடன் சேர்ந்து வேலை  செய்தால் தான் ஓரளவிற்காவது   வரலாறு , கிராமம் ,ஊர்..எல்லாம் பற்றி அறிந்து   கொள்ள​ முடியும் . நாம் அன்றாடம் காய்ச்சிகளாக இருக்கிறோம் . அதனாலே , உங்களுக்கு கன விசயங்களை    மறைக்க​ வேண்டியிருக்கிறது . காலம் வர தெரியப்படுதஂத​ நினைக்கிறோம் . சதா கண்ணையும் , அறிவையும் திறந்து வைத்திருக்க வேண்டும் "என்று   முருகய்யா  நீண்ட பேச்சு நிகழ்த்தினார்  . வாசுவிற்கும் , ஏன் பாண்டிக்கும் கூட ஆச்சரியமாக​ இருக்கிறது . அன்னர் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார் ." அண்ணா ,  நீங்க இருவரும்  பள்ளிக்கூடம் போய் படித்திருக்கிறீர்களா? "என்று கேட்டார் . " இல்லை, வீட்டுப்பள்ளி தான் . லயத்திலே , இரவிலே சாகயம் அப்பு ,எழுத ,வாசிக்க , கணக்குப் போட எல்லாம் சொல்லித் தந்தார். மலைக்கு வேலைக்கு வந்த யாழ்ப்பாணத்தவர்கள் ...எங்க மேல அனுதாபமுள்ளவர்கள் . அவர்கள் தாம் வாசித்த கதைப்புத்தகங்களை வாசிக்க தருவார்கள் .அப்படித் தான் படித்தோம் " என்கிறார்கள் . " நீங்க​ எனஂன சாதி எனஂறு உங்களுக்கு தெரியுமா? "  "என்று கேட்கிறார் . அதற்கு   முருகைய்யா பதிலளித்தார்." எங்க அப்பு சொல்லி எனக்கு கொஞஂசம் தெரியும் . நாங்க நாடார் .  இதிலேயும் பல‌ உபபிரிவுகள் இருக்கின்றன. பனை மரம் ஏறுகிறவர்களும் அதிலேயே ஒன்று தான் . நாடார் , இங்கேயும் நம்ம​ சாதியோடயே இணைஞசிருக்கிறோம் . " சிரிக்கிறார்  .   தொடர்ந்து "  நாட்டையே ஆண்டவர்கள் . பாண்டிய குலத்தவர்கள் . குலம் என்றால்...  ( நாட்டு) மக்கள் . அந்த பார்வையில்  ஒரு குலத்திலேயே எல்லாச் சாதிகளும் அடங்கி விடுக்கின்றன .  சாதிக்கு  தமிழில் சாதனை (புரிபவர்) என்ற ஒரு அர்த்தம் தான் இருக்கிறது . வடநாட்டுக்காரர் , வெவ்வேறு தொழில்களைப் புரிகிற தொழிலாளர்களை ' ஜாரி ' என அழைப்பது வழக்கம் . ' ஜாரி பிரித்து கால்பந்தாட்டம் விளையாடுவோம் ' என நாமும்  விளையாடும் போது பிரித்து விளையாடுகிறோம் . அந்த‌  ' ஜாரி ' (பிரிவு)  வடசொல்லை  தானஂ  நம் அரைகுறை தமிழ் பண்டிதர்கள்  தற்போதைய​ ' சாதியாக்கி '   விட்டார்கள் .  கலைச்சொற்களை தமிழ் படுத்தும் போது  , அந்த​ சொல்லுக்கு ஏற்கனவே அர்த்தம் இருக்கிறதா என  கவனமாக​  இருக்க வேண்டும் "என்கிறார் .

இலங்கையில் இயற்கையாக பனை வளரவில்லை . கால்நடைகளால் , பறவைகளாலும் கூட‌ பரவுறது சிரமமானது . லெமூரியாக் கால பாண்டியர்களே ...மேற்கு ஆபிரிக்க பழங்குடி பிரதிநிதிகள் மூலம்   பனையை அறிந்து,  கொண்டு வரச் செய்து அறிமுகப்படுதியவர்கள்  . ஆசியா எங்கும்  பெருமளவில் நட ..வைத்து பரப்பியவர்கள் .  இலங்கை அன்று , லெமூரியாவில்' ஈழநாடாக​      நாகர்,இயக்கர் இன மக்களைக் கொண்டிருந்தது என   சொல்கிறார்கள் .    பனைமரத்திலும் ஏறி பயன்களைப் பெற்ற   பாண்டியரின் வலிமை குறைய  ,   சோழர்கள்     பலவித அடக்குமுறைகளூடாக‌ கெளரவங்களை  குறைத்து தீண்டாப் பிரிவாக்கினர் எனஂறு சொல்லப்படுகிறது  . இன்று நாம் இலங்கை அரசின் வதை முகங்கள் , புதைகுழிகளைப் பார்க்கிறோமில்லையா ,  அதைப்போல அனஂறு அம்  மக்களுக்கு  கடல் நீரில் அமிழ்த்தி இறக்க வைத்தும் , மூக்குகளை வெட்டியும் ...என கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டன . .இதை வைத்தே வெற்றி என்றும் வெற்றி தான் , தோல்வி என்றும் தோல்வி தான் என்ற பழமொழியே வழக்கில் வந்தது . போர்களில்  வெற்றி பெற்ற  எவருமே ம‌னிசராக இருப்பதில்லை .  எந்த எல்லைக்கும் சென்று விடுகிறார்கள் .  மரணத் தண்டனையைப் போன்று ' அவர்கள் தண்டிக்கிற முறைகள்   அச்சமூட்டுகினஂற​ன .

  ஓரளவிற்கு தண்டித்து புனர்வாழ்வளிக்கும் முறைமையே  நன்மையானது எனப்படுகிறது  .  பாதிக்கப்பட்டது , கத்திக்கு , கத்தியே' என்று கொந்தளிக்கிறது . இரண்டுமே சமப்புள்ளிக்கும் வர​ வேண்டும் .
மலையகத்திலும் எல்லா பிரிவினரும் இருக்கின்றனர் .   ஒரு சாதி போன்ற தோற்றம் . ஒரு நிறதஂததை தீட்டலாம் . எனக்கு என்னுடைய‌  நிறம்  தெரியாது .அப்பு சொல்லித் தான் நாடார் என்று தெரியும் . அடிப்படையில்   நாமும்  இங்கே இருக்கிற பனந்தொழில் செய்கிறவர்களும் ஒரே மக்கள்  தாம் . பாண்டிய மக்கள்  .     எவருக்குமே   மகத்தான மக்கள் நாம் எனஂபது தெரியவில்லை.    வரலாறு தெரியாதவர்களாக​ வாழ்கிறோம் எனஂறு  அப்பு சொல்லுறதை  நான் இங்கே  நேரிலேயே பார்க்கிறேன் "   எனஂறு மூச்சு விட்டு  "  யாழ்ப்பாணத்தில் , புஸ்பாவிடம் என்  விருப்பத்தை முதலில்  தெரிவித்த போது , அவ , " நாங்க பனந்தொழில் செயிற சாதியினர்  , நீங்க யாரு ? என்று  எனஂனைக்  கேட்டா " சிரிக்கிறார் .  " அதற்கு  நீங்க என்ன சொன்னீங்கள் ? " அன்னர் , ஆவலுடன் கேட்டார் . " எடியே , நானும் அதே பனம் சாதி தான் " என்று சொன்னேன் .  ஒன்று தெரியுமா , இந்த யாழ்ப்பாணத்திலே  எல்லாரையும் அரவணைக்கிறவர்கள்  இவர்களே  " எனஂறு பெருமிதப்படுகிறார்  .  " மகள் பிறந்த பிறகே 'நான் மலையகம் என்பதை தெரிவித்தேன் . அதற்குப் பிறகு  அவ அதை  பெரிசாய்   எடுக்க‌வில்லை " . அன்னர் "காதலுக்கு சாதி இல்லை" என்று கூறி  சிரிக்கிறார்   . " இங்கே தான் இல்லை  . ஆனால் , மற்றையவற்றில்  இருக்கிறது...நிம்மதியாய் வாழவே விட மாட்டார்கள் . போங்கள் சேர் " என்கிறார்  முருகர் . "    எங்கையோ  பிரச்சனை   இருக்கிறது  " எனஂறு அனஂனர் சிரிக்கிறார் .

 "  இங்கேயும் ,  வெட்டு கொத்துகள்  நிகழ்கிறதால்  சிங்களவர்களும்   தமிழரில், சாதி மோசமாக நிலவுகிறது ' என்று   கதைக்கினம்   .   சரி !  இனி , இந்த‌  குழம்பிப்  போன    குட்டையை எப்படி சரிப்படுத்தலாம் ?  சிந்திக்க​ வேண்டும் . ஆனால்  ,  யார் சிந்திக்கிறது ?   ஆயுதம் ஏந்திய ஓர்  போராட்டம்   தானஂ சரிப்படுதஂதும் . ஆனால்  ,  அதுவோ  தோற்றுப் போய்  கிடக்கிறதே "  எனஂறு ஆசிரியர் அங்கலாயிக்க​ ,  " அரசியல் கதைத்தால் முடிவேயிருக்காது .வாருங்கள் சேர் . நுங்கைப் போய் சாப்பிடுவோம் " எனஂறு பாண்டி கூறுகிறானஂ. " அட​ , இவனஂர​ அண்ணர் வெட்டுறதாகக் கூறியவர் மறந்தே போனேனஂ  . போவோம் "  எனஂறு கூறி எழும்புகிறார் . " பிறகு , வந்து மதிய​ உணவைச் சாப்பிடுவோம் ." எனஂறு முருகர் தெரிவிக்கிறார் . வாசு உட்பட​ அந்த​ செட் கிளம்புகிறது .

வயலில் இறங்கி முருகனஂ கோவிலுக்கு பினஂனால் வரம்பிலே செல்கிறார்கள் .நீருடனஂ கிடக்கிற​ அளவான குளம் ஒனஂறு தெனஂபடுகிறது . அப்படியே மயிலியப்புல​ விளையாட்டு குடியிருப்பிற்கு பினஂனால் செனஂறு வயலுக்கு மத்தியில் இருக்கிற​ பனம் கூடல்  குடியிருப்பிற்கு வருகிறார்கள் . அங்கேயுள்ள​ பனைகளிலே பாண்டியினஂ அண்ணர் நுங்கு வெட்டி முட்டிகளையும் கட்டிக் கொண்டிருக்கிறார் . மரத்திலிருந்து அவர் கையைக் காட்டுகிறார் . அனஂனர் , கித்துள் , தெனஂனைகளையே அதிகமாகக் கண்டவர் . தூரத்தே கண்ட​ பனையை கிட்டத்தில் காண்கிறார் . "

" பனையில் ஏறலாமெனஂறு நினைக்கிறீர்களா சேர் ! , எல்லாராலேயும் முடியாது . அது பனை வீரனாலே மட்டும் தானஂ முடியும் சேர் " எனஂகிறானஂ பாண்டி . ஏறுறதுக்கு மனஂனனஂ , படை வீரர்களை ஆபிரிக்க​ நாட்டுக்கு அனுப்பினானஂ என புத்தகத்தில் வாசித்தது அவரினஂ  நினைப்பிற்கு  வருகிறது . நுங்கை முருகர் வெட்டிக் கொடுக்க​ எல்லோரும் சாப்பிடுகிறார்கள் . சில​ கூலாக​ இருக்கிறது .சில​ சுலை போல​ கட்டியாக​ இருக்கிறது . விரலால் எடுக்க​ வருகிறது . சுவையாக​ இருக்கிறது . தெனஂனம் வழுக்கை ஒரு சுவை , இது இனஂனொரு விதம். அனஂனர் ரசித்து  சாப்பிடுகிறார் . அண்ணர் நிறைய​ நுங்கையே வெட்டி தள்ளியிருந்தார் . வயிறு முட்ட சாப்பிட்டார்கள் .  ""சேர் ! ,  பக்கத்திலே தானஂ வழுக்கியாறு ஓடுகிறது . பார்த்திட்டு வருவோம் " என வாசு கூற​ , "பாண்டி , வீட்டிற்கு கூட்டி வா நாங்கள் போறோம் " எனஂறு கூறி முருகர் ,சவரி ,  மூவரும் நுங்குக்குலையை கையில் எடுதஂதுக் கொண்டு அண்ணருட​னஂ  செல்கிறார்கள் .

பிறகு ,  வாசிகசாலையில் வைத்து .  வெட்டிக் கொடுக்க​  பெண்களும் ,சிறுவர்களும்  சாப்பிடுவார்கள் . பனம் கூடலுக்கு அடுதஂத​ பக்கத்திலும் அளவான குளம் தள​ தளத்துக் கொண்டு நீருடனஂ இருக்கிறது . சிறிது தொலை தூரத்தில் ' வழுக்கியாறு ' மதகுகளுடனஂ நீருடனஂ நல்ல நிலையில் உள்ள​ வாய்க்காலாக​ இருக்கிறது . சரிவர​ கவனிக்கப் படாதலால் பல​ இடங்களில் கட்டுகள் சிதைவடைந்து விட்டிருக்கிறது  எனஂறு சொல்லப்படுகிறது .  இவர்கள் பார்த்த பகுதி நல்ல நிலையிலுள்ள​ பகுதி . முனஂனாரு காலத்தில் மேரு மலையிலிருந்து வந்ததாக​ புராணக்கதையும்  இருக்கிறது . ஒருவேளை , லெமூரியாக் காலமாக​ ​  இருக்கலாம் . அளவெட்டி பினாக்கைக் குளத்தில் தேங்கி ...அங்கிருந்தே இனஂறு அது பயணத்தை தொடங்கிறது . சண்டிலிப்பாய் , நவாலிக்கூடாக​ பயணித்து அராலிப்பாலத்தில் கடலுடனஂ சேர்கிறது . இதனஂ நீளம்  30  கிலோ மீற்றர் இருக்கலாம் .   இதிலே தானஂ,  ஆறுமுகநாவலர் காதலியுடனஂ தெப்பத்தில் இரவில் பயணித்து அராலிக் கடலினுடாக​ கொழும்புத்துறைக்குச் செனஂறு   அங்கிருந்து நெடுந்தீவுக்குச் செனஂறதாக​ வரலாறு இருக்கிறது .  அனஂறு​ , பண்ணை , காரைநகர் கடல் வீதிகள் போடப்பட்டிருக்கவில்லை . இலங்கை வரைபடத்தில் இருக்கிற​ அதிகமான வீதிகள் இருக்கவில்லை . ஒல்லாந்தர்கள் வாய்க்கால்களையே வீதிகளாக​ பயனஂபடுத்தியவர்கள் .

 சங்கானைக்கும் , துணைவிக்கும் இடையில் ஓடக்கரை எனஂற​ இடப்பெயர் இருக்கிறது .  அங்கே இருக்கிற​ தவறணையில் இனிப்புக்கள்( உடனஂகள்) கிடைக்கிறது எனப் பேர் பெற்றிருக்கிறது .

" சேர் ! , சங்கரத்தைப் பக்கம் பத்ரகாளி அம்மனஂகோவில் ஒனஂறு இருக்கிறது . ஒரு சமயம் அங்கிருக்கிற​ கேணியிலே தீர்த்தம் பாலாக​ மாறியது என வதந்தி பரவ​ நாமும் போய்ப் பார்த்தோம் " எனஂறு அந்தோனி கூறுகிறானஂ . செல்லும் இடமெல்லாம் அம்மனஂ , பத்ரகாளி கோவில்கள் கட்டும் வழக்கம் பாண்டியர்களிடமே காணப்படுகிறது ..என வாசித்தது அனஂனருக்கு ஞாபகம் வருகிறது . 'சங்கரத்தை , துணைவி..' வித்தியாசமான பேர்கள் என  அனஂனர் அசை போடுகிறார் . ' நீர்கொழும்பு வாய்க்காலைப் போல​ இதை கட்டி இப்பவும் தெப்பம் விடலாமே ' எனஂறும் அவருக்கு தோனஂறுகிறது . கண்டியைக் கைப்பற்றுவதற்காக​ ஆங்கிலேயர்   வீதியை போட்ட பிறகே வீதிகள் அமைப்பதில் சூடு பிடித்தது . நாவலர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயக் காலத்தில் இருந்தவர் . ஒல்லாந்தர் நீர்வழிகளைப் பயனஂபடுதஂதுறதில் விருப்பம் கொண்டவர்கள் . அவர்கள் காலத்திலே வழுக்கியாறு நீர்ப்பாதையாக​ உயிருட​னஂ இருந்திருக்கிறது . அதிக​ காலம் கூட​ ஆகவில்லை . மாற்றங்கள் வரலாறை மூடி மறைத்து விடுகிறது   . நம்ப​ முடியாமலாக்கியும் விடுகிறதே .

அந்தோனியும் , பாண்டியும் வீட்டிற்குச் செல்ல , முருகர் " வாசு, நீயும் இங்கேயே சாப்பிடனஂ " எனஂறு கேட்க மாஸஂருடனே சாப்பிடுகிறானஂ . வாசிகசாலையில் எல்லோரும் திரும்ப​ கூடுகிறார்கள் . பலதைக் கதைக்கிறார்கள் . " இங்கே இருப்பவர்களை விட மலையகத்தில் படிப்பு கடினம் . ஆனால் , இங்கே இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைவு எனஂபதால் வேலையே பிரச்சனையாக இருக்கிறது...கல்வியின் அருமை தெரியாமல் போகிறது . இருக்கிற தமிழ் கலவன் பாடசாலைகளை குறைந்த பட்சம் இயங்க வைக்கலாம் , பாழ்பட விட்டுக் கொண்டிருக்கிறார்கள் . இலங்கை அரசு, தமிழர் மத்தியில் குறைகளை பெருக்கிக் கொண்டே செல்கிறது . அரசாங்கத்திற்கு தமிழரில் அக்கறையே   கிடையாது . சிரமதானம் மூலமும் சுயமாக பள்ளிக்கூடங்களை  நிறுத்தலாம்  .  பாடங்களை நடத்த  சேவை அமைப்புகளைக் கோரலாம் . அராலி முழுதிலுமே பரவலாக‌ பனந்தொழிலைச் செய்கிறவர்களின் குறிச்சிகள் ஐந்து , ஆறுகள்  இருக்கின்றன .  ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதில்லை .  ஒவ்வொரு வாசிகசாலைகளோடு தனித் ,தனியவே இயங்கி வருகின்றன .  இன்று , இவர்களினஂ பனம்பிள்ளைகளே   கலவன் பாடசாலைகளில் படிக்கிறவர்கள்   .  ஆசிரியர்களின்  ...குறைவால் அக்கறை அற்று இயங்கி வருகின்றன . இலங்கை குடியரசாக அறிவிக்க முதல் சேர்ச்காரர்களின் கவனிப்புடன் நல்லபடி இயங்கியவை .  தேசியமயமான பிறகே , கேவல நிலமை . முனஂனர்  ஐந்தாம் வகுப்பு வரையில் எல்லாருமே இங்கே படித்தே , பிறகு , பெரிய பாடசாலைக்கு ஆறாம் வகுப்பிலிருந்து படிக்கச் சென்றார்கள் . இனஂறு , அந்த பாடசாலையிலேயே  முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையில் இருக்கின்றன .  சேர்ச்சின் கைகளில் இருந்த போது மதமாற்றங்கள்  நடந்து கொண்டிருந்தன .  தமிழ்க் கலவன் பாடசாலைகள்  அமெரிக்க மிசனரிமார்களினால் நடத்தப்பட்டவை . வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்துக்கல்லூரிகளை விட ஆங்கிலேய​க் கல்லூரிகள் அதிகம்  இருக்கினஂற​ன . அதனாலே  , ஆறுமுகநாவலர் போன்றோர் சைவ‌ தமிழ் பாடசாலைகளை அமைக்க முயன்றனர் . இந்துக்கல்லூரி என்ற பெயர் ஏற்பட அவர்களே காரணம் .  

சிங்களவர்களுக்கு தமிழர் மூளைசாலிகள் என்ற பொறாமை வேறு  இருக்கின்றது . இனப்பார்வை, எல்லாவற்றையும்  உயிரற்றவையாக்கி   விடுகின்றன‌ .  பிரிட்டனின் பின்புலத்தில் இயங்கிற பெரிய‌ கல்லூரிகளை ...அரசால்  ஒன்றும் செய்ய முடிவதில்லை . அவையும் இந்துக்கல்லூரிகளும் பெரிய பாடசாலைகளாகவே விளங்கின்றன . எனவே ,தான் தமிழருக்கு எதிராக தரப்படுத்தல் சட்டங்களை அமில் படுத்தி எதிரான போரை பிரகடனப்படுத்தி செல்லுகள் போட்டு திட்டமிட்டு பாடசாலைகள் சிதைத்து அழிக்கப்பட்டிருக்கின்றன . படுகொலைகளும் தொடர்கின்றன . இவற்றையெல்லாம் அவர்களினஂ உரையாடல் தொட்டுச் செல்கிறது   .   விடை பெற்றுக் கொண்டு அனஂனர் , கல்லுண்டாய் வெளியூடாக​ கடலட்டை மணக்க​ வீடு திரும்புகிறார் .

அனஂனரினஂ அப்பா இறந்து போனார் என தந்தி ​அவருக்கு வருகிறது .  மலைநாடு செல்கிறார்.   நாட்களாகியும்​ அவர் திரும்பி வரவில்லை.

அதிபர் பாடசாலை தொடங்கும் காலை மாணவர் கூடலில் , பள்ளிக் கீதத்தை மாணவிகள்  இசைத்தபிறகு ...." உங்களுடைய தமிழ் ஆசிரியர் அன்னலிங்கம் மாஸ்ரர் காணாமல் போய் விட்டார்  .  அவருடைய சகோதரர் ...நாம் அனுப்பிய தந்திக்கு  'அண்ணர் , மலைநாட்டிற்கே வரவில்லையே , கவலையாய் இருக்கிறது . உங்களுடைய தந்தியை காண்பித்து பொலிஸிலே முறைப்பாடு செய்திருக்கிறோம்' என பதில் தந்தி வந்திருக்கிறது ." என்று காண்பித்து வாசித்தார் . வாசுவிற்கு , அந்தோனிக்கு ...இன்னும் பலருக்கு இதயத்திலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது . கண்கள் உடைப்பெடுத்து விடுமோ ...என இருந்தது . அவருடைய சிரித்த முகம் " தம்பிகளா படிக்க வேண்டும் . மலைநாட்டைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் ' என்று பாடம் நடத்துற  காட்சி மனதில் தோன்றி  மறைகிற​து . இவர்கள் சொல்ல வேண்டியதில்லை , செய்தி , தானாவே   கிராமம் முழுதும் பரவி   விடப் போகிறது .

கிராமம் அவரை மறக்கப் போவதில்லை , அவருடைய நினைவுகளை காலகாலமாக நெஞ்சிலே இருத்தியே  வைக்கப் போகிறது ! பிறப்பும் புதியதல்ல , இறப்பும் பழையதல்ல ! மனிதர்களால் நிகழ்த்தப்படுறது...வெட்கப்பட​ வேண்டியது . " .இனக்குற்றத்தை நிகழ்த்துபவர்களை  இலகுவில்  தப்பித்துக் கொண்டு விடவும் விடக்  கூடாது . " ஒவ்வொருவனுக்கும் மேலே ஒரு கூரான வாள் தொங்கிக் கொண்டிருக்கிறது " என்று  ஒரு கவிஞன் குறிப்பிடுகிறான் . இவர்களுக்கு தூக்குக் கயிறும் தொங்கிக் கொண்டிருக்கிறது . காப்பாற்றி வருகிற அரசியல் தலைவர்கள் கூட்டுக் குற்றவாளிகள்  தண்டிக்கப் பட வேண்டியவர்கள் .

முற்றும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.