வாசகர் கடிதங்கள்

Kuru Aravinthan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
May 14 at 9:01 p.m.
அன்பின் கிரிதரன்,
வணக்கம்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைப் போட்டி முடிவுகளைத் தங்கள் இணையத்தளத்தில் சிறப்பாக வெளியிட்டமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்
குரு அரவிந்தன்


Letchumanan Murugapoopathy <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Jan. 28 at 12:25 a.m.
அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். நேற்று பாரிஸில் பண்டிதர் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக நடந்தது. இலங்கையிலிருந்து தகைமைசார் பேராசிரியர் சிவலிங்கராஜாவும் லண்டனிலிருந்து பேராசிரியர் பாலசுகுமாரும் வந்திருந்தார்கள். நீங்கள் உங்கள்  "பதிவுகளில் " நூற்றாண்டு பற்றிய எனது கட்டுரையும் செய்தியும் வெளியிட்டமை குறித்து தங்கள் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். இங்கு சில இலக்கியவாதிகளையும் மற்றும் சமூகப்பணியாளர்களையும் சந்தித்தேன். எனது புதிய நூல் வெளியீடு எதிர்வரும் 3 ஆம் திகதி நடு இணைய இதழின் ஏற்பாட்டில் நடக்கிறது. அச்செய்தியை நீங்களும் பதிவேற்றியமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்
முருகபூபதி


Ganesh Jambunathan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Jan. 28 at 12:51 p.m.
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்! என் பெயர் கணேஷ், சென்னைவாசி, தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறேன். என்னுடைய நண்பர் வாயிலாக pathivugal.com இணைய இதழ் குறித்து அறிய வந்தேன். பலரின் எண்ணங்களும், கருத்துக்களும் ஒருங்கிணைந்த ஒரு அரிய தளமாக இயங்கி வருவதைக் கண்டு வியந்தேன், வாசகனானேன்.


s. navaneetha rama krishnan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Jan. 23 at 12:00 p.m.
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். என் பெயர் நவநீத ராம கிருஷ்ணன். தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் பிறந்து, தென்பாண்டிச் சீமை திருநெல்வேலியில் பிறந்தவன்(அரிகேசவநல்லூர்). தற்போது சென்னையின் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். மேலும் குடும்பத்துடன் சென்னை மைலாப்பூரில் வசிக்கிறேன். பள்ளிப்பருவம் முதலே கவிதைகளும் சிறுகதைகளும் எழுதத் தொடங்கிவிட்டேன். எனக்கு தங்களுடைய அறிமுகம் திரு.ஸ்ரீராம் விக்னேஷ் (வீரவநல்லூர் - திருநெல்வேலி மாவட்டம்) மூலமாகக் கிடைத்தது. நானும் ஸ்ரீராம் அண்ணாவும் கிட்டத்தட்ட 1999 முதல் பல்வேறு தமிழ்க் கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறோம் (வாசகர் வட்டம் மற்றும் பாரதியார் கவி முற்றக் கூட்டங்கள், கவியரங்கங்கள்) தமிழ் ஆர்வலர்களின் தகுந்த படைப்புகளை தாங்கள் ஆய்வு செய்து தங்களுடைய இணைய இதழில் தொடர்ந்து வெளியிடுவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தங்களுடைய முயற்சி தொடர்ந்து வெற்றிபெற என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்!