- இங்கு எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், ரிஷி, அநாமிகா என்னும் புனைபெயர்களில் எழுதி வருபவருமான , லதா ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு  மொழிபெயர்த்த கவிதைகள் பிரசுரமாகின்றன. -

- லதா ராமகிருஷ்ணன் -

1. அய்யனாரின் புரவிகள்!  - ஆசு சுப்பிரமணியன் -

மனிதர் அற்ற
ஊரின் ஆற்றின் கரையில்
அய்யனார் புரவி மீது அமர்ந்து
காவலிருக்கிறார்
களவுப்போகும் புரவிகளுக்காய்
ஆற்றின் கரையில்
புரவி மீது அமர்ந்தவர்
ஒரு நாள் அடைமழையில்
அவர் அமர்ந்த புரவியை
மழையே களவாடியது
மீண்டும் அவர் எதிரேயிருந்த
ஏழெட்டுப் புரவிகளில்
ஒரு புரவி மீதமர்ந்த
அய்யனார் புரவியும்
வெயில் உரித்து
வெய்யிலே களவாடியது
மீந்த ஒன்றிரண்டுப் புரவிகளையும்
புயல் வெறித்து களவாடின
திகைத்த அய்யனார்
அச்சத்தின் பீதியில்
தானே ஒரு புரவியாகியப் பொழுதில்
தானும் அதுவுமாக காவலிருந்தார்

மனிதர் அற்ற ஊரின் ஆற்றின் கரையில்
அய்யயனார் ஏன்? புரவி மீது
அமர்ந்து காவலிருக்கிறார்
கள்வர்கள் இல்லாத ஊரில்
களவுப்போகும் புரவிகளுக்காய்...
மழை வெய்யில் புயல்
ஏன்? கள்வர்களாயின
களவாடப்படும் சீற்றங்கள்
நெறித்தலில்
திமிறும் காலத்தின் எச்சம்
அய்யனாரின் வீச்சரிவாளில்
உறைந்த ஒரு சொட்டு குருதியில்
சமன்படுத்தி நீளும் அறத்தில்
கணைத்து எழுகின்றன
களவாடப்பட்ட புரவிகள்

AASU SUBRAMANIAN’S POEM: AYYANAAR’S HORSES

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

On the banks of the river
of the uninhabited village
Ayyanaar is sitting on the horse
keeping vigil
to safeguard the horses
being stolen.

He sitting upon the stallion
on the river bank
One day in the torrential downpour
the very rain
stole the horse upon which
he was seated

Again the one
among the six or seven stallions
in front of him
upon which he sat
the hot sun peeled
and plundered

The remaining few horses
the storm stole away

Shocked to the core Ayyanaar
gripped by fear
when himself became a horse
kept vigil
being both, himself and horse.

In the deserted village on the river bank
Why Ayyanar keeps vigil seated on the horse
in a place where there are no robbers…..
for safeguarding the horses……
Rain Sun Storm
Oh why thieves they’ve become?

The furies would be taken away
Strangulated
the left over Time would
struggle to get unleashed.

In the lone blood drop frozen upon the tip of
Lord Ayyanar’s long sword
with venom and vengeance perishing
and justice prevailing
the stolen horses
bray and leap alive.

- Aasu Subramanian -


2. ஜோன்மேரி ரோஸ் கவிதைகள்!

இம்மழையின் ஒலியானவன்
இம்மழையின் மணமானவன்
இம்மழையின் நிறமானவன்
மழை வேண்டும் என்றவளுக்கு
மழையாய் வந்தான்!
கண்ணாடி குடுவையில் பத்திரபடுத்தி வைக்கிறேன்
இம்மழையின் நேசத்தை
நான் முழுவதும் நனையும்
வேளையில் அவனுடன் கதைப்பதற்கு!

நீல நிற மழையில்
என் பாதங்களை
நீந்த விடுகிறேன்
இறகு முளைத்த மீனாய்
நீந்தி அவன் மார்பின்
கதகதப்பில் தன்னை புதைத்து கொள்கிறது!
மழையானவனும் மீனும்
பின் இந்த இரவும்
வேறென்ன?!

ஜன்னலின் கம்பிகளில்
வழிந்து
என் அறை முழுவதும்
நிறைந்து விட்டான் அவன்!
இரு கருவிழிகள் என்னை முழுவதும் நனைத்து விட
நேரம் பார்கிறது
நானோ!
அம்மழையில் நனைந்துவிட துடிக்கின்றேன்
இவ்விரவில்
அவனும் நானும்
மழையும் !

Poem by Johnmary Rose
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


He, the resonance of this shower
He the fragrance of this rain
He the hue and shade of this downpour
Came as the very Rain
For she who solicited rain.

I have safeguarded this Rain’s affection
in a glass jar
to chitchat with him
when I get drenched so thoroughly•

In this bluish rain
I let my feet float
As winged fish
floating they bury themselves
in the warmth of his chest!
He the Rain and the fish
and this Night plus
What else?

Streaming down the winidow bars
He has filled my entire cabin!
Two velvety black eyeballs wait
for the opportune time
to soak me so wholly!
And I!
Am aching for getting thoroughly drenched
In this night
He, Me
and the Rain!


3. லக்சுமி மணிவண்ணன் கவிதை!

நீ கேப்டனாக இல்லாதவிடத்தே
கேப்டன் போலும் பாவனை செய்தால்
போலிச் சிப்பாய்களிடம்
மாட்டிச் சரிவாய்
சிப்பாய்களுக்கெல்லாம் தீனி நீ
அவை உனக்கு கொள்ளி வைத்து மீளும்
நீ தளபதியாயிருக்குமிடத்தே
தீனி போட மறுத்தால்
அரண்மனை உன்னை வெளியேறச் சொல்லும்
சிப்பாய்கள் உன்னைச் சீயென ...
நகைக்கும்
நீ சில இடங்களில் கேப்டன்
சில இடங்களில் சிப்பாய்

முந்தாதே
முந்தினால் நீ தளபதியாயிருந்தாலும்
சிப்பாய்கள் கூட்டத்தில்
சேர்த்துவிடுவார்கள்
நீ அனைத்து சிப்பாய்களுக்கும்
குண்டி கழுவ
நேர்ந்து விடும்
சிப்பாயா
தளபதியா
கண்டுபிடி
சிப்பாயினிடத்தே சிப்பாயாக
தளபதியினிடத்தே தளபதியாக

Lakshmi Manivannan’s Poem
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


Where you are not the commander
if you feign to be one
you would be caught by pseudo soldiers
and
You become the prey for all those soldiers
They would cremate you and get back.

Where you are the commander
If you refuse to feed them
the royal palace would ask you to leave at once
The soldiers would look at you contemptuously and
laugh to their hearts’ content.

You are Commander in some places
Soldier in some other

Don’t overtake

If you do
despite being the commander
they would include you in the crowd of soldiers.
You would have to wash the bums of all those troopers.

Soldier
or Commander
Find out
being
soldier to soldier
commander to commander


4.  நேசமித்ரன் கவிதை!

அப்படியொன்றும் இரக்கம் நிரம்பியவர்களை
சந்தித்ததாய் இல்லை நம் நாட்குறிப்புகள்
அவ்வளவு எளிதாய் இன்னுமொரு காதலுள்
நுழைய நம்பிக்கை ஈவதில்லை
துரோகங்கள் ஈவாய் இருக்கும்
அன்பின் சூத்திரங்கள்..
யாருமற்ற வீட்டில் தொடர்ந்து ஒலிக்கும்
அழைப்புமணி கலவரப்படுத்தியபடி இருக்கிறது
அடைகாக்கும் வர்ணக் குருவிகளை
ஆம் ! நாம் ஒரு தலைக்கோதலை ஒத்த
அரவத்திற்கு காத்திருந்தோம்
ஒரு நீண்ட வரிசையின் பின்னுள்ளவர்களுக்கான
வாசனையை விட்டுச் செல்கிறவர்களாகவே
அவர்கள் இருந்திருக்கிறார்கள்
ஒரு தகனம் முடிந்து வெளியேறும் கூட்டத்தில்
திரும்பித் திரும்பி பார்த்தபடி வெளியேறும் கண்களை
வலிந்து நேசிக்கும் வலியுண்ணிகளாய்
இருக்கிறோம் நாம்
கைவிடப்பட்ட ஒரு தீவின் கால்நடைகள்
கடற்கரையில் ஒன்று சேர்வதை புகைப்படம்
எடுக்கும் கரங்கள் ஏன் நடுங்குகின்றன
இல்லை, உறக்க மாத்திரைகள் நமக்கு
பழக்கமானவை இல்லை .அதை நாம் அறிந்திருந்தோம்
காட்சிப் பொருள் மரிப்பதை எவரும்
விரும்புவதுமில்லை
அவ்வளவு பெருமிதத்துடன்
சிகிச்சைக்குத் திறக்கப்படும் கூண்டுகள்
உனக்கு விடுதலையல்ல
ஆனாலும் ரோமம் மூடியவுன் நகங்கள் வளரட்டும்

NESAMITHRAN’S POEM
Rendered inEnglish by Latha Ramakrishnan(*First Draft)


Our diaries do not seem to have come across merciful souls
They don’t give us any hope to enter into a new love that easily.
Love’s formulae having
betrayals as quotient
The calling bell that keeps on ringing
in a house having none
causes terrible apprehension
in the hatching song sparrows
Ah yes we were waiting for a sound
as a soft caress of the hair

They had been those
leaving behind the fragrance of those
at the fag end of a long queue
we remain as the ticks of pain
forcefully loving the eyes that go away
Looking back every now and then
in the crowd leaving after a cremation
why do the hands that take the photo of
the cattle of an abandoned island
coming together on the seashore
tremble
no, we are not used to sleeping tablets we knew that
none likes the death of exhibit piece
The cages that open for medical treatment so proudly
cannot be your freedom
Yet let your nails covered with soft hairs grow


5. சிவகுமார் TD கவிதை!

தந்திர காட்சியில்
மாயாவி
ஒவ்வொரு முறையும்
ஏதேனும் ஒன்றை உருவாக்கி
தொலைத்து
பார்வையாளர்கள் மத்தியிலிருந்து
வரவழைத்தான்.
இறுதியாக நாய் ஒன்றை உருவாக்கி
தொலைத்தான்.
மந்திர பெட்டியை எவ்வளவு முறை
அடித்தும் நாய் வரவில்லை,
மந்திர சாவியை கவ்வியபடி நாய்
அரங்கிற்கு வெளியே ஓடிகொண்டிருந்தது.

SHIVAKKUMAR TD’s poem!  Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

In the magic show
Every time
the magician made something go missing
and brought it from the midst of audience.
Finally he created a dog and lost it.
Despite beating the magic box
umpteen number of times
The dog didn’t return.
Grabbing the magic key in its mouth
the dog was running outside the auditorium


6.இளங்கோ கிருஷ்ணன் கவிதை!

மகிழ்ச்சியிலிருந்து மகிழ்ச்சிக்குச் செல்லும் வழியில்
ஒரு குட்டி மகிழ்ச்சியில் இளைப்பாறிக்கொள்ளும் சிறுமி ஒருத்தியை சந்தித்தேன்
தான் கொடுத்த ஆரஞ்சு சுளைகளை
உண்ணாத நாய்க்குட்டியை மிரட்டிக்கொண்டிருந்தாள்
வாசலின் சரக்கொன்றை
ஒவ்வொரு பூவாய் உதிர்த்துக்கொண்டிருக்க
ஏய்! இங்க வா என்று
அதிர்ந்து வீட்டிலிருந்து குரல் வருகிறது
சடசடவென தன் பால்யத்தைவிட்டு ஓடுகிறாள் சிறுமி
சரக்கொன்றைகள் மீண்டும் துளிர்க்க மீண்டும் உதிர

ILANGO KRISHNAN’S POEM
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

En route from joy to joy
I met a little girl reposing in a small joy
She was coercing a puppy that didn’t eat the orange pulps
Offered by her.
‘Sarakondrai’, the Golden Rain Tree at the entrance
was shedding flowers one by one
“Hei, come here I say”
thunders the voice thundering from inside the house
casting off her childhood all at once
the little girl runs at great haste
The Raintree flowers blooming and falling
ever again


7. சூர்யா VN கவிதை!

அவ்வப்போது அப்பா
அட்டைப்பூச்சியாக உருமாறுவார்
அன்றைய தினங்களில் கண்ணில்படும்
யாவற்றிலும் ஒட்டிக்கொள்வது அவர் வழக்கம்
அப்பொழுதெலாம் வழமைக்கு திரும்புங்களென்று
அம்மா திரும்பத்திரும்ப சொல்லிப்பார்ப்பாள்
தகவலறிந்து என் சகோதரன் அட்டைப்பூச்சிக்கான
தலையணையையும் போர்வையும் துரித அஞ்சலில் அனுப்பிவைப்பான்
இதுவரை சந்தோஷம் சஞ்சலம் என
எதன்யெதன் மீதெல்லாமோ ஒட்டிக்கொண்டிருந்தார்
பொறுமையில்லாத நான் பொறுத்துக் கொண்டேன்
சகித்துக் கொண்டேன்
ஆனால் இன்று இந்நாளின் மீது
ஒட்டிக்கொண்டிருப்பதை சகித்துக்கொள்ள முடியவில்லை
உயர்ந்த குரலில்,
சற்று நகருங்கள்
நான் மறுநாளுக்கு செல்லவேண்டாமா
எனக்கேட்டேன்
பதிலுக்கு உன் இதயத்தில் ஒட்டிக்கொள்ளவாயென கேட்கிறார் அவர்.

SURYA VN’S POEM
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

Now and then
Father would metamorphose into leech
In those days whatever comes into view
He would stay glued to them
‘Return to normalcy’
Mother would say repeatedly
Learning it my brother would send
the exclusive pillow and blanket for leech
by speed post.
So far he had been staying glued
to all kind of things like
joy , worry, this and that
Edgy, yet I remained patient
tolerated them all
But now, the way he stays glued on Today,
I just can’t take it
Raising my voice
‘Move a little, won’t you
Am I not to move into tomorrow?’, said I.
In response he asks:
‘May I stay glued to your heart.’

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

 
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

குரு அரவிந்தன் திறனாய்வுப் போட்டி முடிவுகள்!

வாசிக்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்' - ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ