நீடித்த இயற்கை சூழல் என்பது பூஜ்ஜியம் கழிவு மேலாண்மையில் மட்டுமே சாத்தியப்படும் .

திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த இரண்டு நிறுவனங்கள் 2020 பிப்ரவரியில் ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். பின்னலாடை துறையில் வெளியேறும் சாயக்கழிவுகள் பற்றிய விமர்சனங்கள் எப்போதும் உண்டு .ஆனால் அவர்கள் அந்த கழிவுகளை சார்ந்து பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.  இப்போது நாம் பயன்படுத்திய பழைய போத்தல்களை பயன்படுத்தி சட்டை தயாரிக்கும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் வீசி எறியும் தண்ணீர் போத்தல்கள் பேருந்து நிலையங்களில் குவிந்து கிடக்கும் அவற்றின் மலைத் தன்மை போன்றவை நம்மை எப்போதும் பயமுறுத்தும். அந்த தண்ணீர் போத்தல்களை எடுத்து அதிலிருந்து பைபர் நூலை பிரித்து பின்னலாடை துறையில் பயன்படுத்த இரண்டு நிறுவனங்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள் .ஒன்று சுலோச்சனா நிட் என்ற ஒரு நிறுவனம். இன்னொன்று சிண்டிகேட் இம்பெக்ஸ். இவர்கள் இருவரும் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை முன்வைத்து குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளில் அடிப்படையில் தண்ணீர் போத்தல்களில் இருந்து பைபர் நூலை பிரித்தெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று பின்னர் ஆடைகளை உற்பத்தி செய்திருக்கிறார்கள் .அது ஆஸ்திரேலியாவின் உலக ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது பயன்படுத்தப்பட உள்ளது .இந்தப் போட்டியின் போது பந்துகளை சேகரிக்கும் தரும் சிறு பையன்கள் பயன்படுத்துகிற பின்னலாடை  ஆகியுள்ளன.  இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக  மாறியுள்ளன .உலகத்தில் முதல் முயற்சி இது .அந்த டீ சர்டுக்களை அடிக்கடி துவைக்க வேண்டியது இல்லை .

திடக் கழிவை பின்னலாடை துறை டீ சர்டுக்களை  மாற்றியிருக்கிறார்கள்.அது ஒரு சாதனை .திருப்பூரில் நிகழ்ந்திருக்கிறது

 திடக்கழிவுகள் என்று வந்துவிட்டாலே அவற்றை மறுப்பது குறைப்பது மறுபயன்பாடு செய்வது மறுசுழற்சி செய்வது என்பவை முக்கியமாக இருக்கின்றன. ஒரு லிட்டர் கொக்ககோலா தயாரிக்க 60 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. இரண்டு டம்ளர் அரிசியை வேக வைக்க வெவ்வேறு முறைகள் என்று வருகிறபோது 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதற்கான தண்ணீர் மறைநீர் தண்ணீர் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய கழிவுகளில் வீட்டுக்கழிவுகள் தொழிற்சாலைக் கழிவுகள்  முக்கியம் ஆகும் .டன் கணக்கில் இவை வெளியேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றை தடுப்பதற்கான முயற்சிகள் குறைவாகவே இருக்கின்றன .நண்பரொருவர் போபால் எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தின் ஒரு காட்சியை குறிப்பிட்டார் .போபால் விஷவாயு சம்பவம் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய நிவாரணங்கள் கிடைக்கவில்லை அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சி. ஒரு தொடர்வண்டி பயணிகளுடன் சென்று கொண்டிருக்கிறது .போபால் பகுதியில் ஒருவர் சிரமப்பட்டு அந்த விஷ வாயுவை சுவாசித்து  உடல் தள்ளாட ஒரு கொடி ஒன்றை காட்டி அந்த வண்டியை நிறுத்துகிறார். அந்த வண்டி விஷவாயு பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்வதை தடுக்கிறார். அவர் விசவாய்வு தன்மையால் மயங்கி விடுகிறார் .பக்கத்திலேயே எந்த அடையாளமும் கிடைக்காத இன்னொரு தொடர்வண்டி போபால் விஷவாயு பகுதிக்குள் போகிறது. ஒரு பக்கம் கழிவு சார்ந்து ஏதாவது நடக்கிறது.  எப்படி முடிகிறது .இப்படித்தான்  அறிவு சார்ந்த விஷயங்களால் ஏதோ ஒரு பகுதியில் எச்சரிக்கையோடு நிறுத்தினால் இன்னும் பல பகுதிகளில் அது திரும்பத் திரும்ப வேறு விதங்களில் வந்து கொண்டிருக்கிறது .சமீபத்தில் மருத்துவ கழிவுகளை வளரும் நாடுகளில் கொண்டு வந்து கொட்டி இன்னும் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள் .

திருப்பூருக்கு அருகில் கடல் ஏதாவது இருந்தால் திருப்பூர் 2020ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நியசெலவாணி இலக்கை அடைந்திருக்கும் என்றார் நண்பர் ஒருவர்,. கடலில் திடசாயக்கழிவுகளை சுலபமாக வெளியேற்றி விடலாம். பல சிரமங்கள் , சுத்திக்கரிப்பு நிலையம் பல கோடி செலவு செய்து ஏற்படுத்துவது போன்றவற்றைத்தவிர்க்கலாமே. 2020 இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல்கலாமின் கனவு போல்  2020 ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்பது திருப்பூர் பின்னலாடைஏற்றுமதியாளர்களின் கனவாக கடந்த 5 ஆண்டுகளில் இருந்தது. கை கூடவில்லை. ஓர் அடி முன்னால் இரு அடி பின்னால் என்கிற மாதிரி ஆகிவிட்டது  தற்போது  என்றார் ஒரு நண்பர்  .

மீத்தேனை விட அபாயகரமானது சமையல் வாயு. அதிக விசத்தன்மை கொண்டது. சகாய விலை , மான்யம் என்பதால் சமையல் வாயுவை யாரும் எச்சரிக்கையாக, அக்கறை எடுப்பதில்லை. இலவசம் என்று வந்து விட்டால் சலுகைதான் மரணத்திற்கும் என்றார் நண்பர்.மீத்தேன் தான் கண்களுக்குத் தெரிகின்றன. மூட்டை மூட்டையாய் கொட்டிக்கிடக்கும் திடக்கழிவுகள் பல சமயங்களில் சோற்றில்  மறைந்த பூசிக்காயாய் இருக்கின்றன.

பல சமயங்களில் நாம் என்சைம் என்பதையும் எச்சில் என்பதையும் பலவாறு போட்டு மனதில் சமைத்து பார்க்கிறோம் .ஒருவகையில் இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தை தான் தருகின்றன .காரணம் அவை இரண்டும் திடகழிவு என்பதில் உடைய வெவ்வேறு ரூபங்களாக இருக்கின்றன. இதிலிருந்து பொருட்களை உற்பத்தி செய்வது அழகுபடுத்துவது ஒரு கலையாக உலகம் முழுக்க இன்று வளர்ந்து வருகிறது அந்தக் கலைக்கு வளம் சேர்க்கும் வகையில் பல கலை பொருட்கள் உலகம் முழுவதும் இன்று வரை கொண்டிருக்கின்றன ஆனால் அவை விஷத்தன்மை நீக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது.

இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக  மாறியுள்ள விசயமும் இப்படித்தான் .

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.