திருப்பூரில் புத்தகக் கண்காட்சி ஜனவரி 27 முதல் நடைபெற்று வருகிறது. நியூ சென்சுரி புக் ஹவுஸ், இந்திய அரசின் நேசனல் புக் டிரஸ்ட்  ., காலச்சுவடு, கண்ணதாசன் பதிப்பகம்., நக்கீரன்,  விஜயா பதிப்பகம் உட்பட 25 பதிப்பகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாரம் விற்பனைக்கு  வந்துள்ள  புதிய  நூல் : பால் பேத வன்முறையும்,  பங்களாதேஷ் அனுபவங்களும் . ரூ65   - நியூ சென்சுரி புக் ஹவுஸ்,   ஆசிரியர் : திருப்பூர் சுப்ரபாரதிமணியன்


நூலின் முன்னுரை -  ஆ. அலோசியஸ், ” சேவ் “, திருப்பூர் -

நண்பர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வங்கதேசத்திற்கு 2020 ஜனவரி மாதம் சென்று கலந்துகொண்ட பாலின வேறுபாடு சார்ந்த வன்முறைகள் ( Gender Based violence )பற்றிய கருத்தரங்கு நிகழ்ச்சி அவரை பாதித்ததை ஒட்டி படைப்பிலக்கியத்தில் அவற்றை வெளிக்கொணரும்  முயற்சியில் அவற்றை கவிதைகள், சிறுகதைகள் கட்டுரைகள் என்ற வகையில் வடிவமைத்து இந்த நூலை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் தொடர்ந்து விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகள் சார்ந்து எழுதி வருவது மகிழ்ச்சியளிக்கிறது வேலையிட பாதுகாப்பு என்பது ஒரு பெண்ணினுடைய சட்டப்படியான உரிமை, தற்போது வேலையில் துன்புறுத்தலை பெண்கள் மற்றும் பெண்ணுரிமைக்கு எதிரான வன்முறையாக உலகளவில் உணரப்படுகிறது ,இன்று நம் நாட்டின் எல்லா இடங்களிலும் பெண்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கும் சூழலை கட்டாயமாக உருவாக்கியிருக்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது, ஆகவே முக்கியமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமான சூழ்நிலைகளால் சலுகை மற்றும் தரக்குறைவாக நடத்துவது தற்போதைய வேலை நிலையை அச்சத்திற்கு உள்ளாக்கும் போது பிற பெண்களுக்கு மத்தியில் தாக்கிப் பேசுவது அவமானகரமான நடத்துவது போன்றவை பெண்ணிற்கு பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் பாதிப்பதால் பாலியல் துன்புறுத்தல் ஆக்க் கொள்ளவேண்டும். இந்த வகையில் பாலின வேறுபாடு பெண்களுக்கு நிகழும் வன்முறைகளைப் பற்றி பல்வேறு கோணங்களில் இந்த நூல் ஆராய்ந்து இருக்கிறது .

படைப்பிலக்கியத்தின் மூலம் இலக்கிய உலகுக்கும், கல்வித் துறைக்கும் ,பொது வாசகர்களுக்கும் இந்த விபரங்களை கொண்டு செல்வது என்பது ஒரு முக்கியமான பணி. அதை நண்பர் சுப்ரபாரதிமணியன் இந்நூலில் செய்திருக்கிறார் .

டாக்கா பற்றிய பல்வேறு தகவல்களையும் சுப்ரபாரதிமணியன் இந்த நூலில் தொகுத்திருக்கிறார். அவரின் முந்தைய டாக்கா பயணம் பற்றிய ஒரு விரிவான நூல் “  அண்டை வீடு  “என்ற பயண இலக்கிய நூல் ,அதை சென்னை காவ்யா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது ,வங்கதேசம் பற்றிய மேலும் விரிவான கலாச்சார பண்பாட்டு வியாபார சம்பந்தமான தகவலுக்காக வாசகர்கள் அந்த நூலையும் படித்து அனுபவிக்கலாம்

அன்புடன்.,

ஆ. அலோசியஸ், ” சேவ் “ .,திருப்பூர்

 

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.