ஓராயம் அமைப்பு இலங்கையின் வடகிழக்கில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அவற்றிலொன்று விவசாயம் மற்றும் சூழல் சார்ந்த திட்டம். இத்திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் மரங்களை நட்டு வருகின்றார்கள். அவை பற்றிய விபரங்களைச் சுருக்கமாக இங்கு பார்ப்போம்.  1971-1977 காலப்பகுதியில் யாழ் இந்துக்கல்லூரியில், சமகால வகுப்புகளில் கல்வி கற்று வெளியேறி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசித்துவரும் மாணவர்களில் சிலர் இணைந்து உருவாக்கிய, சமூக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும், பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கற்று இயங்கும் அமைப்பே ஓராயம் அமைப்பு. இவ்வமைப்பு புலத்து மக்களோடு இணைந்து செயற்படும் வகையில் கல்வி, விவசாயம், நீர்வளப்பாதுகாப்பு, சுகவாழ்வு, சூழற்பாதுகாப்பு, இளையோர் தொழிற்கல்வி ஆகிய துறைகளில் ஆறு உபகுழுக்களை அமைத்து இயங்கத்தொடங்கியுள்ளது. இதற்காக இவர்கள் இணையத்தளமொன்றினையும் உருவாக்கியுள்ளார்கள்.

ஒராயம் அமைப்பு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள  info@oraayam.org என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். இணையத்தளத்துக்கும் சென்று பாருங்கள். ஒராயம் அமைப்பின் இணையத்தளம்: https://www.oraayam.org நிதிப் பங்களிக்க விரும்பினால் PayPal மூலமும் நீங்கள் பங்களிக்க முடியும். அவ்விதம் பங்களிக்க விரும்பினால் treasurer@oraayam.com என்னும் முகவரியைப் பாவியுங்கள். மேலுள்ள மின்னஞ்சலுக்கு e-transfer மூலமும் நீங்கள் நிதியளிக்க முடியும், மேலும் எவ்வெவ்வகைகளில் பங்களிக்க முடியும் என்பதை அறிய விரும்பும் எவரும் info@oraayam.org என்னும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.
 
மரம் நடுகைத் திட்டம் பின்வரும் இடங்களில் செயற்படுத்தபப்பட்டு வருகின்றது. இவற்றில் சில இன்னும் ஆரம்ப நிலையிலுள்ளன.

1. சந்தைச் சிற்றம்பலம் வித்தியாசாலை, பண்டத்தெரிப்பு
இதுவரை இங்கு நாட்டப்பட்ட மரங்கள்: நிழல் மரங்கள் 25; மூலிகை மரங்கள்: 25.



2. ரோசறியன் சிஸ்டர்ஸ் - புனித ஜோசப் 'கொன்வென்ட்' , வசாவிளான்
நிழல் மரங்கள்: 20; பயிர்ச்செய்கை மரங்கள் : 185; மூலிகை மரங்கள்: 50



3. கைதடி சமூக நிலையம்
நிழல் மரங்கள்: 35;  பயிர்ச்செய்கை மரங்கள்: 108

4. கொக்குவில் வளர்மதி சமூக நிலையம்
நிழல் மரங்கள்: 27



5. அருணோதயா கல்லூரி, அளவெட்டி
நிழல் மரங்கள்: 30

6. சண்டிலிப்பாய் ஆரம்பப் பாடசாலை
நிழல் மரங்கள்: 5

7. மர நடுகைத் திட்டம், வெருகல்
வெருகல் மாவட்டச் செயலாளரின் தூண்டுதலில், ஓராயம் அமைப்பின் நிதியுதவியுடன் நீர்வழங்கும் திட்டம்.
கூடிய நீர்ப்பாசனத்திட்டம். இதன்படி சாலையின் ஓரமாகவுள்ள இலுப்பை  மரங்களுக்கு நீர்வார்க்கும் திட்டத்துக்கான எரிபொருட் செலவு,  கடற்கரையோரமுள்ள சவுக்கு மரங்களுக்கு நீர்வார்ப்பதற்குரிய கூலிச் செலவு ஆகியவற்றை ஓராயம் பொறுப்பேற்கும்.


8. ஊரேழு பண்ணைத்திட்டம். தற்போது இத்திட்டத்தினை  நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வுகள் நடைபெறுகின்றன.

9. காயன்கேணி சரஸ்வதி வித்தியாலயம், காயன்கேணி, மட்டக்களப்பு

10. மரநடுகைத்திட்டம், பல்கலைக்கழகத்திட்டப் பகுதி, மட்டக்களப்பு
இத்திட்டமும் இதன் ஆரம்பநிலையிலுள்ளது. மட்டக்களப்பு மருத்துவ பீட விரிவுரையாளர் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்ட திட்டம். திட்டம் செயற்படுகையில் அதனை நடைமுறைப்படுத்துகையில் மருத்துவபீட மாணவர்கள் ஈடுபடுவர்.

இத்திட்டங்களில் நிதியுதவிப்பங்களிப்பை வழங்க விரும்பினால் ஓராயம் அமைப்புடன் தொடர்புகொள்ளுங்கள்.

இவ்வகையான திட்டங்கள் முறையாகச் செயற்படுத்தப்பட்டால் நீண்ட காலப்பயனை விளைவிப்பவை.

* இங்குள்ள விபரங்கள் ஓராயம் அமைப்பின் தலைவர் செ.தனபாலசிங்கம் அண்மையில் வெளியிட்ட ஓராயம் அமைப்பின் திட்டங்கள் பற்றிய அறிக்கையிலிருந்து பெறப்பட்டவை.

ngiri2704@rogers.com