- லண்டன் வொல்த்தம்ஸ்ரோவ் தமிழ்பபாடசாலைப் பெற்றோருக்கு,13.3.21ல் கொடுத்த சொற்பொழிவின் விளக்கவுரை -


எங்கள் தெய்வத் தமிழ் மொழிக்; கல்வியை லண்டன் மாநகரில்,எங்கள் இளம்தமிழ்ச் சிறார்களுக்கு முன்னெடுக்கும் உங்களுக்கு எனது அன்பான வணக்கம். எங்கள் தமிழ் மொழி மிகவும் நீண்டகால வரலாற்றைக் கொண்ட முதுமொழி.இன்று உலகில் பேசப்படும் கிட்டத்தட்ட 7000 மொழிகளில் முதல் வழிவந்த மூத்த மொழி.மனித இனத்தின் மேன்மைக்குப் பற்பல நூல்களை உலகுக்குத் தந்த மொழி.'எம்மதமுமு; சம்மதமே' என்ற உயரிய தத்துவத்தைக் கொண்டது'.'யாதும் உரோ யாரும் கேளீர்' என்ற அற்புதமான நான்கு வரிகளில் உலகில் நான்கு திசைகளிலுமுள்ளவர்களையும் ஒன்றாய் அணைக்கும் மொழி எங்கள் மொழி.

'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்'; என்றுரைத்து ஒரு குழந்தைக்குத் தன் தாய் தந்தையரின் சொற்களை மனதில் உறுத்தி எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டுவது எங்கள் தமிழ். 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று இறையுணர்வை மனதில் பதிப்பது எங்கள் பக்தித் தமிழ். 'தாயைச் சிறந்த ஒரு கோயிலுமில்லை,தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்று தாரக மந்திரத்தைக் குழந்தையின் மனதில் பதிக்கும் தெய்வீக் மொழி; எங்கள் அருமைத் தாய்மொழயான தமிழ் மொழி. ஓரு மனிதனின் வாழக்கையில் 'எண்ணும் எழுத்தும் இரு கண்ணாகும்'; என்றும்இளமையிற் கல்வி சிலையில் எழுத்து' என்றுரைத்துக் கல்வியின் மகத்துவத்தை இளம்மனதில் வித்திட்டவர்கள் எங்கள் தமிழ்; மூதாதையர்கள். 'பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே' என்றுரைத்து ஒரு குழந்தையின்,தன்னைப் பெற்ற தாயையும் தன்னைத் தாங்கிய பிறந்த நாட்டைப் போற்றவும் மனதில் கடமையுணர்சி;சியைப் பதிப்பது எங்கள் தனித்தமிழ். 'அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்கேயுலகு' என்று எங்கள் வாழ்க்கையை எங்கள் மொழியுடன் இணைக்கும் மனத்திடத்தைத் தந்தது எங்கள் தெய்வத் தமிழ்.

ஒரு மனிதனின் வாழ்க்கை வளத்திற்கு,அவனின்,உடல்,மன,உணர்வு,சமூக,ஆத்மீக வளர்ச்சிகள் என்பவை அத்திவாரமிடுகின்றன.மேற்குறிப்பட்ட அத்தனையைiயும் பிரமாண்டமான சக்தியாக இணைப்பது அவன் வாழும் ஆரம்ப சூழ்நிலையே.அந்த சூழ்நிலை,அவன் பிறந்த குடும்பத்தினரின் அன்பில்,ஆதரவில்,வளரும்போது தொடரும்; குடும்ப உறவுகளின் நெருக்கத்தில்,அதைத் தொடர்ந்து,தனது தனித்துவ அடையாளத்தையும் சுயமையையும் உணர்கிறான். அவனுக்குக் கிடைக்கும் கல்வியின் மேம்பாட்டில்,இளைய வயதில் அவனுடன் இணையும் பன்முகத்தன்மையான சினேகிதங்களால், உலகின் விவரிக்கமுடியாத பல தன்மையான கருத்துகள்,விளக்கங்கள் அவனின் எதிர்காலத்தில் தன்னம்பிக்கையுடன் நடைபோட உதவுகிறது. பிறந்த நாளிலிருந்து இறக்கும்வரை அவனையறியாமலே, பற்பல காரணிகளால்,பன்முக அனுபவங்களால்,அவனின் உள்ளுணர்வு கொண்ட அறம் சார்ந்த, சத்தியம் தோய்ந்த. அன்பும் பன்பும் நிறைந்த உலகம் அத்தனை மக்களையும் இணைக்கும் என்ற உண்மையை ஏதோ ஒரு விதத்தில் உணர்த்துவதால் வரும் ஆன்மீகத் தெளிவு பெறுகிறான். இவை அத்தனையும் உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரேமாதிரிக் கிடைப்பதில்லை;.அவனின் சிந்தனா வளர்ச்சிதான் உலகை எடைபோட உதவுகிறது.அந்த சிந்தனைக்கு தெளிவான மனவளர்ச்சி இன்றியமையாதது.

மனவளர்ச்சிக்கு மொழி மிகவும் முக்கியமானது.பன்முகத் தளங்களில் விரிவு கண்ட,ஆரோக்கியமான மன வளர்ச்சி ஒரு மனிதனை மேம்படச் செய்கிறது. மொழி என்பது,தனது தேவைகளைப் பெற்றுக் கொள்ள, மற்றவர்களு;ன் உறவாட,அறிவை வளர்க்க, கலையைப் பயில,வாழ்க்கையை உணர்ந்து கொள்ள மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஓரு மேதையின் கண்டு பிடிப்பு அவர் அதை மற்றவர்களுக்கு விளக்கமாகச் சொலலும் மொழியைப் பாவித்துச் செயற்படாவிட்டால்,அவரின் பாரிய ஆய்வு பிரயோசனமற்றதாகும். மனித உணர்வை வெளிப் படுத்த மொழியால் மட்டுமல்லாமல், கண்களால் முகபாவனையால் உடலசைவுகளாலும் வெளிப்படுத்தலாம் என்றுத் தெரியும்.அனால் அவை தற்காலிகத் தேவையுடனானது. ஒரு குழந்தை பிறந்த கிட்டத் தட்ட ஆறு அல்லது எட்டு மாதம் வரைக்கும் தனது தேவைகளைத் தனது அழுகைமூலம் தன்னைக் கவனிப்பவர்களக்கு வெளிப்படுத்தும். தனது குழந்தை,பசியால் அழுகிறதா, அல்லது வேறு ஏதோ பிரச்சினையால் அழுகிறதா என்பது, தனது குழந்தை அழும் விதத்தில், குரலின் தொனியில், தாய்க்குத் தெரியும். குழந்தை பிறந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை,தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மொழியின் கருத்து குழந்தைக்குப் புரியாது. எட்டு அல்லது பத்து மாத கால கட்டத்தில் குழந்தையைக் கவனித்துக் கொள்பவாகள்;, அடிக்கடி பேசும் சொற்கள் ஒன்றிரண்டைப் புரிந்து கொள்ளும். பத்திலிரந்து பதின்மூன்று மாத கால கட்டத்தில்,தனக்குத் தேவையானத்தைச் சுட்டிக்காட்டும் வளர்ச்சியை குழந்தையடையும். இக்கால கட்டத்திலிருந்து, அம்மா, அப்பா, போன்ற 'ஒரு சொல்'; தொடர்பை மற்றவர்களுடன் ஏற்படுத்தும், பதின்மூன்று-பதினேழுமாதகால கட்டத்தில் சைககள் மூலம் எதையும் காட்டாமல், தனது மழலை மொழியால் தொடர்பு கொள்ளும். பதினெட்டுக்கும் இரண்டு வயதிற்குமிடையில் மிகவும் திடமாக 50 சொற்களைப் பாவிக்கும். அதன் தொடர்ச்சியாகச் சரியாக வசனங்களை இணைத்துப் பேசப் பழகும். ஐந்து வயது வரும்போது தெளிவான மொழிவளமிருக்கும். பாடசாலை வயது வந்ததும்,விடயங்களைத் தெளிவாக விளங்கப்படுத்தும் மொழிவளர்ச்சயைக் குழந்தையிடம்காணலாம். இந்த வளர்ச்சியின் மேம்பாடு அந்தக் குழந்தை வளரும் சூழ்நிலையைப் பொறுத்து வித்தியாசப்படும்.

ஓரு குழந்தையின் மொழிவளர்ச்சி,அந்தக் குழந்தை வாழும், பழகும், படிக்கும் சூழ்நிலையில் மிகவும் முக்கியமான அத்திவாரமாகிறது. குழந்தையின் தாய் தகப்பனின் கல்வி,பொருளாதார நிலை,கலாச்சாரப் பின்னணி, குழந்தையுடன் அவர்கள் செலவிடும் நேரம் போன்ற பன்முக காரணிகள் மொழிவளர்ச்சிக்கும் அதுசார்ந்த மனவளர்ச்சிக்கும் இன்றியமையாததான விடயங்களாகும். குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு சத்தான உணவு முக்கியம.; உள வளர்ச்சிக்கு தன்னம்பிக்கை,தெளிவான சிந்தனை, சந்தோசமான வாழ்க்கையமைப்பு,என்பன முக்கியம். உணர்வு அதாவது இமோஸனல் வளர்ச்சிக்கு,வெளிப்படையாக உறவாடுவது,தன்னை மற்றவர்கள் மதித்து,விரும்பும் முறையில் வாழ்க்கையை அமைத்தல் மிக முக்கியம்.; சமுதாய வளர்ச்சிக்குபெற்றோர்,உறவினர்.நல்ல சினேகிதர்கள் இன்றியமையாத விடயங்களாகும். ஆத்மீக வளர்ச்சிக்கு.ஒரு மனிதனின் சமயநெறிகள்,அறம்சார்ந்த அறிவு,என்பன சீரான வாழ்க்கையை நிலை நிறுத்த உதவுகிறது. பாலியல் வளர்ச்சி என்பது, தனது அந்தரங்க உள்ளுணர்வைத் தெளிவாகப் புரிந்து அதன் நீட்சியில் வாழ்க்கையைத் தொடர்வதாகும். மேற்குறிப்பட்ட அத்தனையையும் வெளிப்படுத்த, அவன் பேசும்; மொழி கட்டாயமாகும்.

இந்தப் பிரமாண்டான பிரபஞ்சத்தில்,இறைவனால் படைக்கப்பட்டுள்ள பல்லாயிரம் உயிர் இனங்களிலிலும் மனிதன் உயர்நிலையிலிருப்பதற்குக் காரணம் அவனுக்கு ஒரு பேசு மொழி உள்ளது என்பதாகும். அந்த மொழியின் வலிமைதான் அவனை ஒரு உயர் நிலைக்குப் பல் விதத்திலும் நகர்த்துகிறது. ஒரு மனிதனின் அறிவுநிலை, மனவலிமை,சமுதாயத்திலுள்ள அவனுடைய அடையாளம்,அவனின் சமயம் சார்ந்த தெளிவு நிலைப் பரிமாணம் என்பன அவனின் மொழி வளர்ச்சியின் அடித்தளத்தில் அமைந்தவையாகும். உலக மொழிகளில் மூத்ததொரு மொழியாகவிருக்கும் தமிழ் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே மனித வளர்ச்சியின் முக்கிய அம்சங்களுடன் தொடர்பைக் கொடுத்தது.

நோஅம் ஷொம்ஸ்கி அவர்களின் கூற்றுப்படி, 90.000 வருடங்களுக்கு முன் மனித இனம் மொழியைப் பேச முனையத் தொடங்கியது என்கிறார். 60.000 தலைமுறைகளாக மொழியின் பாவிப்பு பல வித முறைகளில் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. மனித குலம் நாடோடிகளாக வாழ்ந்த காலத்தில் மிருகங்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்,ஒன்றாய் சேர்ந்து உணவைத் தேடுவதற்கும்,கூட்டுக் குடும்பமாகவிருந்தார்கள். அப்போதெல்லாம் மொழி வளர்ச்சி கிடையாது. குகையில் வாழ்ந்த மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள், என்ன விடயங்கள், உருவங்கள், மிருகங்கள், பறவைகள் அவர்கள் வாழ்க்கையுடன் இணைந்திருந்திருந்தன என்பதை அக்காலத்துக் குகைச் சித்திரங்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம். கால கட்டத்தில், படிப்படியாக மனித குல நாகரிகம் வளர்ந்தபோது, மனித வளர்ச்சியில் மொழி சைகையுடன் ஆரம்பித்தது.குகைகளில் வரைபடங்களாகப் பிரதிபலித்தது. அதன் பின் வௌ;வேறு பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் மக்களுக்கு உரித்தான மொழிகளை உருவாக்கிக் கொண்டார்கள்.
காலக்கிரமத்தில் மனிதன் விவசாயத்தைக் கண்டு பிடித்தபின். கொடுக்கல வாங்கல்களைப் பதிவு செய்யவேண்டி இருந்தது. எழுத்து வடிவம் ஆரம்பித்தது. வாழ்க்கைக்குத் தேவையாக தொழில் விருத்தியும் நுட்பங்களும் பல வித அறிவுப் பரிமாணங்களைத் தோற்றிவித்தன.பல விதமான ,பல்விதக் கல்வி முறைகள் அறிமுகப் படுத்தப் பட்டன. அவை மனித வாழ்வில் இன்றியமையாத விடயங்களாக இடம் பெறத் தொடங்கின.

மனிதனின் அறிவு வளர்ச்சி மேம்பட்ட காலத்தில் மொழி வளர்ச்சியும் புதிய பரிமாணத்தை எடுத்தது.ஒரு மொழி மிகவும் காத்திரமான முறையில் வளர, மொழி வளர்ச்சிக்கு (சிம்பொல்}ஸ்சும்) குறியீடுகளும, இலக்கணமும் தேவையாயிருந்தது.. (இன்டெக்ஸ்,ஐகோன்(இமேஜ்);, சிம்பொல்ஸ்). மொழி என்பது விஞ்ஞானத்தை விடச் சிக்கலானது என்கிறார் மைக்கல் கோர்பாலிஸ் என்பவர்.6.000-8.000 மொழிகள் இன்று இந்த உலகத்தில் பேசப்படுகின்றன. பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்து வரலாறு கிடையாது. ஒவ்வொன்றும் ஒரு குழு பேசும் மொழியாகத்தானிருக்கிறது.

பெரும்பாலான மொழிகள் ஓன்றுடன் ஒன்று சம்பந்தப்படாத தனித்தவமானவை.மொழியை எங்களுக்குத் தேவையானமாதிரி பாவித்துக் கொள்ளலாம். குழந்தைகள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழியை இலகுவாகப் படித்துக் கொள்வார்கள.; இன்று மனிதன் தனது கைகளால் எழுதாமல் வாயால் ஆணையிட்டால் அதை இயந்திரம் எழுதிக்கொடுக்கிறது. எழுத்தையும் குறியீடுகளையும் இயந்திரமே முடிவுகட்டுகிறது.இதனால் இன்றிருக்கும் மொழியின் பாவிப்புத் தன்மை எதிர்காலத்தில் வேறுபடலாம். குழந்தைகள் மொழியைக் கற்றுக் கொள்வதிலும் மாற்றங்கள் வரலாம். தாய் தகப்புடனான மொழித் தொடர்பிலும் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

மொழிவளர்ச்சியின் ஆரம்பம். ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசமாகவிருக்கும்.ஆரம்பத்தில் தங்களின் தேவைகளை வெளிப் படுத்த குழந்தைகள் அழுவார்கள். அதன்பின். குழந்தைகளின் வளர்ச்சிநிலை பற்றி பற்பல ஆய்வாளர்கள் பன்முகக் கருத்;துக்களை முன்வைத்திருக்கிறார்கள். குழந்தைப் பருவம்- பாடசாலை செல்ல முதலுள்ள மூளை வளர்ச்சி. ஆண்களை விடப் பெண்குழந்தைகளின் வளர்ச்சி துரிதமாக ஆரம்பித்தாலும் எட்டாவது வயதில் ஒரேயளவில் இருப்பதாகச் சில ஆய்வுகள் சொல்வதாகவும் ஆனல்,'தான்' அந்தக் கருத்தைக் கேள்வி கேட்பதாகவும் டாக்டர் லிலியன் கற்ஸ் என்பவர் தனது உரையில் 2016ம் ஆண்டு கூறியிருந்தார்.

மொழி-ஒரு மனிதன் மற்றவர்களுடனான தொடர்புக்கு இன்றியமையாதது.அந்த மொழியை எங்கு எப்படிப் பாவிப்பதது, ஏன் பாவிப்பது. நெருக்கமான உறவும் மொழி வளர்ச்சியும்.( கதை சொல்லல், குழந்தையுடன் உறவாடல்,மனம் விட்டப் பழகுதல், அதிகார தோரணை தவிர்த்தல்.) வாசிப்பும் எழுத்தும், ஒழுங்கான இலக்கண வரைமுறை தெரிந்திருக்கவேண்டும். குடும்ப அமைப்பு- கூட்டுக் குடும்பம்.மொழி.கலாச்சாரம்.பண்பாடு,பொருளாதாரம். பெற்றோரின் ஈடுபாடு என்பன குழந்தைகளின் மொழி வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. இன்று இவ்வுலகம், மிகவும் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஒன்றுக்கு மேலான மொழிகளுடன் பழகவும்,படிக்கவும் வேலை செய்யவும் எதிர்பார்க்கப் படுகிறார்கள். கனடிய டோராண்டோ நகர்,அமெரிக்க கலிபோர்னிய நகர் போன்ற இடங்களில் நேர்சரிகளில் படிக்கும் 50 விகிதமான குழந்தைகளின் தாய்மொழி,ஆங்கிலமாக இருக்காது என்ற சொல்லப் படுகிறது. இங்கிலாந்தில் லண்டன் மாநகரத்தில்,300க்கும் மேலான மொழிகள் பேசப் படுகின்றன. உலகம் பரந்த வித்தில்,பெரும்பாலான சிறுபான்மை மக்கள் தங்கள் தாய் மொழியைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கப் பாடசாலைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான கல்விமுறையால, ஒரு குழந்தையின் வளர்ச்சியின்; நன்மை தீமை பற்றிப் பல ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஒரு குழந்தையின் வளர்ச்சி என்று பார்க்கும்போது, அறிவு வளர்ச்சி,உடல், உள,மொழி வளர்ச்சி,சமுதாய வளர்ச்சி,ஆன்மீக வளர்ச்சி என்று பல பரிமாணங்கள் உள்ளன.அவற்றில் முக்கியமாக, மொழியின் இணைவுடனான அறிவு,உள, சமுதாய, வளர்ச்சிகளின் பரிமாணங்கள்தான முக்கியமாகக் கவனிக்கப் படுகின்றது.அந்த வளர்ச்சிகளை ஒரு குடும்ப அமைப்புடன் சேர்த்து ஆய்வு செய்தல நல்லது. உதாரணமாகச் சில குழந்தைகள், அவர்களின் குழந்தைப் பருவத்தில் தாய் தகப்பன், தாத்தா பாட்டி, மாமா, மாமியுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்ததாலும், ஒரு 'நியுகிளிய பமிலி' அதாவது தாய் தகப்பன் இரண்டு. மூன்று குழந்தைகள் மட்டும் என்று வாழ்ந்தாலும், அந்த வீட்டில் எந்த மொழி முக்கியமகப் பேசப் படுகிறதோ அந்த மொழிதான் அக்குழந்தையின் மொழி வளர்ச்சிக்கு அத்திவாரமிடுகிறது. அதனால் குழந்தைகள் அவர்களின் ஆரம்ப கல்வியை ஆரம்பிக்கும்போது, ஆங்கிலக் கல்வியை முற்று முழுதாகக் கிரகித்துக் கொள்ளவும்,அதன் அடிப்படையில கல்வியை முன்னெடுக்கவும் முடிகிறதா என்ற ஆய்வுகளும் நடக்கின்றன். ,

குழந்தைகளின் மூளைக் கலங்கள்,முதல் ஐந்து வருடங்களும் அதி தீவிரமாக வளர்வதால் அவர்கள் எந்த மொழியையும் இலகுவாக உள்வாங்கிக் கொள்வார்கள் என்பது உண்மை. எனவே, இங்கு நாங்கள் பேசப் போவது. தமிழ் மொழிக் கல்வியை மிகவும் நேசமாக முன்னெடுக்கும் எங்கள்,தமிழ் சமுகத்தில் வளரும் குழந்தைகள், தாங்கள் படித்த தமிழ்க் கல்வி மூலம் தங்களின் உள,மொழி,சமுக,ஆன்மீக வளர்ச்சிகளில் எப்படி அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த சமுதாயத்திற்கும் ஆக்க பூhவமான செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என்பதைக் கலந்துரையாடல்கள் செய்வது மிகவும் இன்றியமையாத விடயமாகும். ஏனென்றால், முன் குறிப்பிட்டதுபோல் பல சமூகங்கள் பல காரணங்களால் வௌ;வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தாலம், அவர்களின் தாய் தகப்பனின் பின்னணி; ஒரு சாதாரணமான, அமைதியான, நிறைவான, பல பிரச்சினைகளற்றவையாகவிருக்கலாம். அவர்களின் பெற்றோர்கள் அடிக்கடி இடம்பெயராமல், கல்வி குழம்பாத தொடர் வளர்சியுடன் வளர்ந்திருக்கலாம்.

எங்கள் மாணவர்கள், உதாரணமாக, தற்போது, இரண்டாம்தரக் கல்வியில் காலடி எடுத்துவைக்கும் இளம் தமிழ் மாணவர்களை எடுத்துக்கொண்டால் அவர்களின் பெற்றோர் பலர் 1983ம் ஆண்டுக்குப்பின் வந்த தாய்தகப்பனின் குழந்தைகளாகவிருக்கலாம்.அந்தப் பெற்றோர் பலர் தங்கள் படிப்பை முற்று முழுதாக முடிக்காத துயருடன் வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கலாம்.2004ம் ஆண்டு சுனாமிக்குப் பின் வந்தவர்களாகவிருக்கலாம். மிகவும் இளவயதில் அவர்களின்,தொடர் கல்வியில் மாறுதல்கள் வந்திருக்கலாம்.ஆனாலும் புலம் பெயர்ந்ததும் ஒரு சீரான வாழ்க்கை முறையில்,அவர்கள் குடும்ப தமிழ் மொழிக்கு ஒரு திடமான அத்திவாரம் உண்டாக்கியிருக்கிறார்கள். எனவே, போரின் பின்னணியில் வளர்ந்த குழந்தைக்கும், அப்படியில்லாத சாதாரண குடும்ப அமைப்பில் வந்த ஆங்கிலேயக் குழந்தைக்கும், கல்வி வளர்ச்சியில் பெரிய வித்தியாசமிருக்காது.

போரில் பாதிக்கப் பட்ட தாய் தகப்பனின் பழைய வாழ்க்கையில் அவர்கள் போரினால் பாதிக்கப் பட்ட கதைகள் பல தாக்கங்களையுண்டாக்கியிருக்கலாம். ஆனால் அந்த விடயங்கள் பெரும்பாலும் ஒரு ஆக்கபூர்வமான அறிவு சார்ந்த தூண்டுதலைத் தரும் என்பதற்கு, கடந்த இரண்டாம உலக யுத்தத்தின் பின வாழ்ந்த பலரின் கதைகள் உதாரணங்களாகவிருக்கினறன. ஜேர்மனி.ஜப்பான், இங்கிலாந்து.இரஷ்யா போன்ற நாடுகள்.பல பயங்கரமான அழிவுகளைக் கண்டன. ஹிட்லரின் தலைமையில் இருந்த ஜேர்மனியின் கொடுமை, ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் தொடக்கம்,பிரான்ஸ் இரஷ்யா போன்ற பல நாடுகளை அழித்ததுமல்லாமல் கிட்டத்தட்ட 6 கோடி யூத மக்களை அநியாயமாகக் கொலை செய்தது.

அதற்குப் பதிலடி கொடுக்கு பிரித்தானியா, அமெரிக்க,இரஷ்யப் படைகள் ஜேர்மனியைத் துவம்சம் செய்தழித்தன. பிரித்தானயா அமெரிக்காவுடன் ஜப்பான் போர் தொடுத்ததால் அமெரிக்கா ஜப்பானில் மிகக் கொடிய அணுகுண்டைப் போட்டு 9.8.1945ல் ஹிரோஷிமா, நாகசாக்கி போன்ற நகர்களையழித்துப் பல்லாயிரம் மக்களைக் கொலை செய்தது. ஜேர்மனியிலிரந்து ஓடிவந்த,யூத மக்களுக்கு.அமெரிக்காவும்,பிரித்தானியாவும் தஞ்சம் கொடுத்தது.அவர்களின் பரம்பரை இன்று பல துறைகளில் அறிஞர்களாகவிருக்கிறார்கள். பிரித்தானியாவும், யூதமக்களின் ஆதிநிலமாகிய இஸ்ரேலை அவர்களுக்கு மீட்டுக் கொடுத்தன.புதிய .இஸ்ரேல்,14.5.1948ம் ஆண்டு யூதர்களின் நாடாகப் பிரகடனப் படுத்தப் பட்டது.அக்கால கட்டத்தில்,பல நாடுகளிலுமிருந்து அங்கு சென்ற யூதக் குழந்தைகள் இஸ்ரேலின் ஹீப்ரு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கவில்லை.ஆனால் இன்று அவர்கள், உலகம் மெச்சும் வகையில் பாரிய உயர்வளர்ச்சி; நிலையை அடைந்திருக்கிறார்கள். தாய் தகப்பன் எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வமுள்ளவர்களாக இருந்தால்,குழந்தைகளும் அதைப் பின் பற்றுவார்கள்.எழுத்தும் வாசிப்பும் தேடல்களுக்க உந்துதல் கொடுக்கம்.புதிய உலகத்தைக் காட்டும்.

இந்தச் சரித்திரங்களை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால், வளரும் குழந்தைகள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்நாட்டு மொழியை இலகுவில் புரிந்துகொள்ளப் பழகி விடுவார்கள். மொழிக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை எந்த விஞ்ஞானியுhலும் புரிய வைக்க முடியாது என்பதற்குப் 1977ம் ஆண்டிலிருந்து பெருவாரியாகப் புலம் பெயர்ந்த தமிழர்களை முன்னுதாரணம் காட்டலாம். ஆங்கிலம் படித்தாலும் தமிழில் உள்ள இணைப்பால் அவர்கள் எங்கு சென்றாலும் தங்கள் தனித்தவத்தை நிலை நிறுத்தினார்கள். 1983ம் ஆண்டுகளுக்குப் பின் புலம் பெயர்ந்து படிப்பு ,உத்தியோக,அகதி நிலை காரணமாக வந்த தமிழ் இளம் தலைமுறையினர் பெரும்பாலோனோர் தமிழ் மொழியை முக்கிய மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகவும் கற்றவர்கள். புலம் பெயர்ந்த நாட்டில் விரைவில் தங்களின் அடையாளத்தைத் தமிழர்களாக நிலை நிறுத்தப் பல பத்திரிகைகளை ஆரம்பித்து, அவர்களுடன் வந்த மிக இளவயது வாலிபர்களை மொழியுடன் இணைய வழி வகுத்தார்கள். அகதிகளாக வந்தவர்களின் மனநலமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளும் ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் உழைக்கும் உழைப்பால் மட்டும் நிறைவு பெறவில்லை. தன் திறமையை. வல்லமையை, ஆளுமையைக் காட்டுவதற்கு மற்றவர்களுடன் தனது மொழியில் பல விடயங்களைக் கலந்துரையாடலும் செய்யும்போதுதான் ஒரு மனிதனின், தனித்துவமான அடையாளம் வெளிப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளிலுமிருந்து மட்டும் கிட்டத்தட்ட 40க்குறையாத சிறு தமிழ் இலக்கியப் பத்திரிகைகள். 1980ம் ஆண்டுகளின் கடைசிக் கால கட்டத்தில் வந்தன. பல தரப் பட்ட இலக்கிய மகாநாடுகள் பல நாடுகளிலும் இடம் பெற்றன. தமிழரின் இலக்கிய, கலை, மொழி என்பன புதுமுகம் கண்டது. எழுத்தும் வாசிப்பும் புதிய பரிமாணத்தக்க மனித சிந்தனையைக் கொண்டு சொல்கிறது.

இன்று, உலகம் பரந்து வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழ் இளம் தலைமுறை தமிழில் பேசுகிறார்கள். பெற்றோர் உற்றோருடன் தமிழில் பேசிப் பழகுகிறார்கள்.மொழி என்பது, பேச்சு மூலமாகவோ, கலை நிகழ்ச்சிகள் மூலமாகவோ மட்டும் வளருவதில்லை. நிலைத்து நிற்பதுமில்லை. எழுத்துப் பாவனையில் இல்லாத மொழி அழிந்து விடும். இந்து மதத்தின் தெய்வ மொழி என்று சொல்லும் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவில்லை. வாய் மொழியாக வளர்ந்த மொழியது. இன்று அழியும் நிலையில் இருக்கின்றது.லத்தின் மொழியும் கத்தோலிக்க சமயத்தடன் இணைந்தது.லத்தின் மொழி இன்ற தேய்ந்துகொண்டு வருகிறது.

தமிழ் அப்படியானது இல்லை. பார்ப்பனர்களால் தமிழ் மொழி,'நீச மொழி' என்று ஒதுக்கப் பட்ட மொழி,ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனத்தின் தலைமைச் செயலகம் சென்னையிலிருந்தது. அவர்களுடன் இணைந்து வேலை செய்த பிராமணர்கள் ஆங்கிலேயர்களுக்குத் தேவையான உத்தியோகங்களிலுமிருந்தார்கள். பிராமணர்கள்' ந சூத்ர மதிமம் தத்யா' என்ற சுலோகத்தை இறுக்கமாகக் கடைபிடித்தார்கள். அதாவது,'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே' என்ற கட்டுப்பாட்டால் பல்லாயிரக் கணக்கான இந்தியத் தமிழ் மக்கள் எழுதப் படிக்கத் தெரியாமலிருந்தார்கள்.

தமிழ் மக்கள்,வாய்மொழி வளர்ச்சியைக் கொண்டிருந்தபடியால்,தேவாரங்கள் கோயில்களிற் பாடினார்கள், ஆனால் தமிழ் எழுத்துசார்ந்த விடயங்கள் ஒர குறிப்பிட்ட காலத்தில் பரவலாக வளரவில்லை. 20ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் அச்சகம் போடப் பட்டது. ஆங்கில உத்தியோகத்திற்காக மதம் மாறுவதும் பைபிள் படிப்பதும் அத்தியாவசியமாக இருந்ததால் ஆறுமுக நாவலர் பைபிளை மொழி பெயர்த்தார். அதன் பின் பல,அரும் பெரும் தமிழ் பழம் நூல்கள் அச்சேறின.தமிழ் மக்கள் அவர்களின் பாரம்பரியத்தின் பெருமையை அந்தப் பதிவுகள்மூலம் கண்டு மகிழ்ந்தார்கள். ஒரு குறிப்பிட்டவர்களுக்க மட்டுமே ஏடுகள் மூலம் கிடைத்த அறிவும் தெளிவும் பரந்துபட்ட அச்சுப் பதிவுகளால் பிரமாண்டமான மாற்றத்தைக் கொண்டு வந்தது. ஆனால் ஆறுமுகநாவலரும் யாழ்ப்பாணத்திலிருந்து ஒடுக்கப் பட்ட தமிழ்மக்களுக்குக் கல்வி கொடுப்பதை விரும்பவில்லை. 1948ம்; ஆண்டுக்கப்பின் இலங்கை முழுதும்,அத்தனை மக்களக்கும் கல்வி வசதி வந்தபின் இலங்கையில் அத்தனை மக்களும் கல்வியில் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள்.

புலம் பெயாந்த தமிழின் எதிர்கால வளர்ச்சி தமிழ் மொழியை எத்தனைபோர் எழுத வாசிக்க முயல்கிறார்கள் என்பதையொட்டியிருக்கும். புலம் பெயாந்த தமிழரின், மொழித் தொடர்புக்கு, வளர்ச்சிக்குத் தமிழ் எழுத்தும், வாசிப்பம் இருக்குமிடத்தில். மனித உறவுகள் மலரும.; தமிழர்கள் ஒன்றுசெருமிடங்களில்,மேசையிற் கிடக்கும் பத்திரிகைச் செய்தி பலரின் கவனத்தைக் கவரும். அதைச் சுற்றிச் சமபாஷணைகள் தொடரும். எழுத்தும் வாசிப்பும் மனிதர்களை இணைக்கிறது. கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல்கள் தாய்மொழியிற் தொடர பத்திரிகைகள் அவசியம். இல்லாவிட்டால், தமிழ் மொழி ஒரு குறிப்பிட்ட குழுவினருடன் தொடர்புகொள்ளும் ஒரு குறுகிய பாதைக்குள்; மறைந்து விடும்.

எனவே மனிதர்கள் தங்களுக்குத் தேவையான விதத்தில் மட்டுமே மொழியை வளர்க்கிறார்கள் என்பதை அழுத்தச் சொல்லவே மேற்கண்ட செய்திகளைப் பதிவிடுகிறேன்.அந்த,எழுத்து வாசிப்புகளின் ஈடுபாடிருந்தால் தனது தனித்துவ மகிழ்வுடன்,; மற்றவர்களின் அறிவுசார்ந்த தெளிவான பாதையைக் காட்டுவதாலான,சமுதாயப் பணியாலான திருப்தி மிக மிக மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். தமிழ் மொழிக் கல்வியுடனிணைந்த இளம் தலைமுறை அவர்களின் மொழி வளர்ச்சியை முதற்கண்ணாகக் கொண்டு சில முயற்சிகளை முன்னெடுப்பது நல்லது. அந்த முயற்சிகள் அவர்களின் அறிவு, மன, சமுக, மொழி வளர்ச்சியின் மேன்மையைக் காட்டும். இதுவரை, அவர்களுக்குத் தங்கள் தாய் மொழிவழியாக அவர்கள் தொடரும் பல பணிகள், எவ்வளவு தூரம் அவர்களின், அறிவு. மன, சமூக, ஆன்மீக வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள்.

உலகம் பரந்த விதத்தில், தமிழர்கள்;.வாழும் நாடுகளின் அரசியலில் இளம் தமிழ் தலைமுறையினர் முக்கிய பதவிகளுக்குப் போயிருக்கிறார்கள்.அந்தப் பதவிகளிலிருந்துகொண்டு தமிழரின் சீர்சிறப்பை மேலும் முன்னெடுக்க எழுத்துத் தமிழ் முக்கியம்.இன்று, பலவேறு துறைகளில் கால்பதிக்க அவர்களின் தாய் தகப்பனின் தமிழ்மொழியுணர்வு,பாரம்பரிய தமிழ் சரித்திரம் பற்றிய அறிவு, கலையார்வம் என்பன, அவர்களின் இளவயதில் அவர்களுக்கு உந்துதலாக இருந்திருக்கிறது. அதை அவர்கள் இன்னும் தொடர்ந்து அடுத்த பரம்பரைக்குக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டால் அவர்களின் வாழ்க்கையில் பலவிதமான நிறைவுணர்ச்சி வரும். அது அவர்களின் தனித்துவத்தின் பல்வேறு வளர்ச்சியின் பிரதிபலிப்பாகத் தெரியும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.