- - சர்வதேச மகளிர் தினத்தையொட்டி (மார்ச் 8) திண்டுக்கல் காந்திக்ராம் பெண்கள் இன்ஸ்டியூட் மாணவிகளுக்கு 8.3.2021ல் ஆற்றிய சொற்பொழிவின் சாரலிலான விளக்கமான கட்டுரை. -


முன்னுரை:

'Women in leadership: Achieving an equal future in a covid-19 world' கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.' என்ற தலைப்பு எனது கட்டுரையின்; பொருளாக எடுக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் அகில உலக மாதர் தினவிழா பங்குனி எட்டாம் திகதி தொடங்குகிறது.இவ்வருட மாதர் தினவைபவங்கள்,'கோவிட் 19 உலகில் பெண்களின் தலைமைத்துவம்: சமத்துவ எதிர்காலத்தைச் சாதித்தல்.' இந்தக் கருத்துப் பொருள் சார்ந்த தலைப்பை ஐக்கிய நாடுகள்நாடுகள் அறிவித்திருக்கிறது. இன்று பொதுவாழ்வு,உத்தியோகத்துறைறை போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் பெண்களும், இனி,எதிர்வரும் காலத்தில் உலகின் பல பணிகளிலும் தங்களைப் பிணைத்துக் கொண்டு சாதனை படைக்கவிருக்கும்; இளம் பெண் தலைமுறையினரும், ஆண்களுக்குச் சமமானமுறையில் பல துறைகளிலு'சமத்துவம்' பெறபேண்டும் என்று.ஐ.நா.சபை அழுத்திச் சொல்கிறது. மிகவும் கொடுமையான கோவிட-19 கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள்,ஒட்டுமொத்த உலகின், பாதுகாப்பு,கல்வி,சுதந்திரம்,பொருளாதார வளர்ச்சி என்பன, சீருடன் வளர ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை இந்தக் கொடிய வைரசு எடுத்துக்காட்டியிருக்கிறது. உலகத்தில் பல்வித வேறுபாடுகளால் மக்கள் தங்களைத் தாங்களே பிரித்துக் கொண்டு, முரண்பட்டுக்கொண்டு பல பிரச்சினைகளையுண்டாக்கிப் பிரிந்து வாழும் அத்தனை மனிதர்களும்,இயற்கையின் பார்வையில் ஒன்றுதான் என்பதை இந்தக் கொடிய  கோவிட் 19 வைரஸ்,.சாதி.மத,இன,நிற பேதமின்றித் தாக்கியழித்துக் கொண்டிருப்பதிலிருந்த எங்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டுரையில்:

1.அகில உலக மாதர் தின வரலாறு,
2.கோவிட் கால கட்டத்திலும் மனித மேன்மைக்கும் உயர்வுக்கும் பாடுபடுவதாக உலக ஊடகங்களால் அங்கிகரிக்கப்பட்ட பெண் ஆளுமைகள்,
3. முக்கியமாக இந்திய நாட்டைச்சேர்ந்த அல்லது இந்திய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் சாதனையாளர்கள்ஒரு சிலரைப் பற்றிக் பற்றிக் குறிப்பிடுகிறேன்.
4.அத்துடன், இனறைய கால கட்டத்தில் தோற்று நோய் தடுப்பூசியான வக்ஸின் தயாரிப்பில் பெண்கள் சாதனை பற்றிய குறிப்புகள்.
5.கடைசியாக இன்றைய இளம் தலைமுறை தங்களையும் மேம்படுத்தி, தங்களைப் போன்ற ஒடுக்கப் பட்ட,அடக்கப் பட்ட,வசசதியற்ற பெண்களை மேம்படுத்த உதவுவது எதிர்காலம் முன்னேற மிகவும் அத்தியாவசியம் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன்.

இக்கட்டுரையில் அவ்வப்போது ஆங்கிலச் சொற்கள் வருகின்றன.அவை இன்றைய விஞ்ஞான வளர்ச்சியுடன் இணைந்தது என்றபடியால் அவற்றை அப்படியே எழுதியிருக்கிறேன். நேற்று,இக்கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது, அகில உலகிலும்,உலகைப் பயங்கரமாக உலுக்கிக் கொண்டிருக்கும் கோவிட்-19 என்ற தொற்று நோயால், 2.6 கோடி மக்கள்,கோவிட்-19 வைரசினால தாக்கத்தால் இறந்திருக்கிறார்கள்.117 கோடி மக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். 66.4 கோடி மக்கள் நோயிலிருந்து தப்பியிருக்கிறார்கள். ஓட்டுமொத்த உலகமும்,நோயால் மட்டுமன்றிப் பல துறைகளிலும் பாதிக்கப் பட்டிருக்கிறது. பொருளாதாரம் அதலபாதாளத்திறகுப் போய்க் கொண்டிருக்கிறது. வறுமையும்,இல்லாமையும் மனித இனத்தை வாட்டுகிறது.பெரும் பாலான மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதே ஒரு சவாலாக இருக்கிறது.இந்தக் கொடிய கோவிட்-19லிருந்து விடுபட பல்விதத் துறைகளிலும் பெண்களும் ஆண்களும் தற்போது இணைந்து இடைவிடாது பாடுபடுகிறார்கள். நான் வாழும் இங்கிலாந்தில் 124.000 மக்கள் இறந்திருக்கிறார்கள்

காலம் காலமாகப் பல விதத்திலும் ஒடுக்கப் பட்டு .அடக்கப்படு வாழ்ந்த கொண்டிருக்கும் பெண்கள், இந்தக் கொடிய கொவிட்-19 கால கட்டத்தில என்னவென்று,தங்களை எதிர் நோக்கும் சவால்களுக்கு முகம் கொடுத்துத் தங்கள் ஆளுமையையும்,சுயமையையும் நிலைநிறுத்தும் சமத்துவ வெற்றியை அடையவேண்டும் என்பதை இக்கட்டுரை ஆயவிருக்கிறது. பெண்களின், போராட்டங்களும், கல்வியின் மேன்மையும், வெற்றிகளும் பற்றிய சில சரித்திரக்குறிப்புக்கள் இக்கட்டுரையில்  பதிவிடப் பட்டிருக்கிறது,அத்துடன், இன்றைய நிகழ்காலகால கட்டத்தில், உலக மட்டத்தில் பரவலாகப் பெருமையாய்ப் பேசப்படும் பெண்களின் சாதிப்புக்கள் சிலவற்றையும் குறிப்பிடுகிறது.

அகில உலக மாதர் தின விழா பற்றிய சிறு சரித்திரக் குறிப்பு:

110;ம் ஆண்டு,அகில உலக மாதர்தினத்தைக் கொண்டாடப் பலதரப்பட்ட.பிரசங்கள்.ஊர்வலங்கள், நாடகங்கள், என்று பல நிகழ்வுகள் வழக்கம்போல் இன்று, மார்ச் எட்டாம் திகதியிலுpருந்து தொடங்குகின்றன .இந்த விழாவுக்கானஆரம்பம் பற்றிய சரித்திரத்தை மிகவும் சுருக்கமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். ஏனென்றால், கோவிட் போன்ற கொடிய தொற்று நோய்கள், சுனாமி போன்ற இயற்கை அனர்த்தம்,போர்சார்ந்த அல்லது புரட்சி சார்ந்த அரசியல் மாற்றங்கள்,என்பன வரும்போது அதில் முக்கியமாகப் பாதிக்கப் படுபவர்கள் குழந்தைகளும் பெண்களுமாவர்.ஆனாலும், அந்தச் சோதனையான காலகட்டத்தில் தனது குடும்பத்தினதும்;, தான் சார்ந்து வாழும் சமுதாயத்தினதும் நன்மாற்றங்களுக்காகப் போராடுவதிலும்; பெண்களின் பங்கும் கணிசமாகவிருந்திருக்கின்றன என்பதைப் பலசரித்திரங்கள் பதிவிட்டிருக்கின்றன.

19ம் நூற்றாண்டின் கடைசி கால கட்டத்திருந்து உலகில் பல அரசியல்,பொருளாதார, சமூகவியல் மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன.அந்த மாற்ங்களில் பெண்களின் பங்;கும் கணிசமாகவிருந்தன. மேற்குலக சரித்திரத்தில், அமெரிக்க சுதந்திரப் போர்,
19-5.1775தொடக்கம்- 3.9.1783,அவர்களை அடக்க நினைத்த பிரித்தானிய பேரருசுக்கெதிராக நடந்தது. பிரான்சிய அரசரின் கொடுமைகளுககெதிராக பொதுமக்களால்,தொடங்கிய புரட்சி,1789 தொடக்கம் 1799 வரை நடந்தது. உலகம் பல விதத்திலும் மாறியது. மக்கள் பல நாடுகளில் பல்வேறு காரணங்களால் குடியேறினார்கள். பொருளாதாரத்துறை பன்முக மாற்றங்களையுண்டாக்கியது. தொழிற்சாலைகள் உருவாகின.பெண்களின் உழைப்பு ஒர நாட்டின் பொரளாதார விருத்திக்கு அத்தியாவசியமான நிலையைக் கண்டது. 1850ம் ஆண்டுகளில்,ஐரோப்பிய, அமெரிக்க பொருளாதார விருத்தியில் அபரிமித மாற்றங்கள் உண்டாகத் தொடங்கின. அமெரிக்கத்,தொழிற்சாலைகள்pல்,தொழிலாளர்களுக்கான உரிமைகள் பற்றிய குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.இந்தத் தொழிற்சாலைகயில் பெரும்பாலான தொகையில் பெண்கள் பணிபுரிந்தார்கள். அத்துடன் கறுப்பு மக்களை அடிமையாக நடத்துவதற்கு எதிராகவும் பல குரல்கள்,பிரி;த்தானியாவிலும் அமெரிக்காவிலும் எழுந்தன.இதில் முக்கியமானவர்கள் மனித நேயமுள்ள பல பெண்களாகும்.

அக்கால கட்டத்தில்.கறுப்பு மக்களை அடிமையாக வைத்திருப்பதற்கு எதிரான சட்டம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம்லிங்கன் அவர்களால் முன்னெடுக்கப் பட்டது. அதை எதிர்த்த வெள்ளையினவாதம் நிறைந்த தென்பகுதி அமெரிக்கருக்கும்
மனித நேயம். சமத்துவ சமுதாயம் என்பதில் அக்கறை கொண்ட வடபகுதி அமெரிக்கருக்குமிடையிலான உள்நாட்டுப்போர் 12.4. 1861ல் ஆரம்பித்து 1885ல் முடிவுற்றது.அதைத் தொடர்ந்து.அமெரிக்கரின் சமகவியலில் பல மாற்றங்கள் நடந்தன.போரினால் நிலச் சொந்தக்காரர்களான கணவரையிழந்த பெண்கள், சொத்துள்ள பொருளாதாரநிலை,பொறுப்பான நிர்வாகத்தை ஏற்றக்கொண்டார்கள். இங்கிலாந்தில் அடிமைகளின் விடுதலையை முன்வைத்துப் பெண்களால் எடுக்கப் பட்ட சில செயற்பாடுகள்தான் 1780-1860ம் ஆண்டுகளில் பிரித்தானிய பெண்ணியவாத சிந்தனைக்கு வித்திட்டது என்கிறார்இ; ‘கிலாரா மிட்ஜெலி (1991.’ஜென்ட்டர் அன்ட் ஹிஸ்டோரி ‘பக்1).

ஐரோப்பிய நாடுகளிலும் அரசியல் குழப்பங்கள் தலையிட்டன. இரஸ்ய ஆரசக்கு எதிராக,மக்களை வதைக்கும் அரசியல்,சமுகநிலை காரணங்களை முன்வைத்து, 1917-1922 வரை புரட்சி நடந்து வெற்றி பெற்றது. மேற்குறிப் பிட்ட சரித்திர நிகழ்வுகள் பாரம்பரிய வாழ்க்கை முறையைப் பல நாடுகளில் பல விதத்தில் பல மட்டங்களில் மாற்றியமைத்தன. இவை அத்தனையும் பெண்களின் ஈடுபாட்டுடன் முன் எடுக்கப் பட்ட போராட்டங்கள் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.. ஏனென்றால் இந்தப் போராட்ட அனுபவங்கள்தான்,தங்களின் தனித்துவத்தை,விலிமையை, சுதந்திர சிந்தனைiயை விரிவுபடுத்தி, பெண்களின் வரலாற்றை மாற்றிய காரணிகளாக அமைந்தன என்று சொல்லப் படுகிறது.

மேற்கு நாடுகளில் தொடர்ந்த அரசியல் மாற்றங்கள், பிரித்தானிய காலனித்து நாடுகளிலும் பிரதி பலித்தன.பெண்களின் வாழ்க்கை மேம்பாடுகளுக்கு மனிதநேயமுள்ளவர்களும், முற்போக்கு சிந்தனையுமுள்ள ஆண்கள் பலர் குரல் கொடுத்தார்கள்.பிரித்தானிய காலனித்துவத்தில் 'வைரமுடி' எனப் போற்றப்பட்ட இந்தியாவில்,பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராகவிருந்த கொடுமையான பல பழமையான சட்டங்கள் மாற்றப்பட்டன. வில்லியம் கேரே,எல்பின்ஸ்டன் போன்ற ஆங்கிலேய அதிகாரிகள், உடன்கட்டை ஏறுவதின் கொடுமையை விளக்கி அறிக்கை சமர்ப்பித்திருந்தாலும்,அக்கால அரச நிர்வாகம் அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதால், ராஜாராம் மோகன்ராஜ் என்பவர் உடன் கட்டை ஏற்றுவதைத் தடைசெய்யக்கோரி பெரும் கிளர்ச்சி செய்தார்.இதன் எதிரொலியாக,1829ம் ஆண்டிலிருந்து உடன்கட்டை ஏற்றுவது சட்டவிரோதமானது. .1795-1804ம் ஆண்டுகால கட்டத்தில் குழந்தைகளைக் கொல்வது தடைசெய்யப் பட்டது.1856ம் ஆண்டு இந்திய விதவைப் பெண்கள் மறுமணச் சட்டம் பிறரப்பிக்கப் பட்டது.

பெண்களின் உயர்வுக்குக் கல்வி இன்றியமையாதது. உலகின் பல இடங்களில் கல்வி ஆரம்பமானது. அமெரிக்கவில்,நியுயோர்க் நகர ஜெனிவா மெடிகல் கல்லூரியில்,1849ல் பிரித்தானியாவில் பிறந்து அமெரிக்காவில குடிவாழ்ந்த, எலிசபெத் பளாக்வெல் என்ற பெண்மணி; டாக்டராகப் பட்டம் பெற்றார். அதே ஆண்டு,லண்டனில் பெண்களின் மேற்படிப்புக்காக பெட்போர்ட் கல்லூரி திறக்கப்பட்டது. இந்தியாவில் பெண்களுக்காக செக்கண்டரி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 1850ம் ஆண்டு தொடக்கம்,அமெரிக்கத் தொழிற்சாலைகளில், பெண்கள்,தங்கள் மேம்பாட்டுக்குப் போரடிய காலத்தில்,இந்தியாவிலும் 'பெண்களின்' தனித்துவம் சார்ந்த பல மாற்றங்கள் நடந்தன.1875ல் ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்த தயாநந்த சரஸ்வதி,வடமொழி வல்லுனர் பெண்களுக்கான பள்ளிகளை ஆரம்பித்தார். விவேகானந்தின் சிஸ்யையான நிவேதிதா தேவி 1898ல் இந்திய வந்து,பெண்கள் கல்வியை முன்னெடுத்தார். அதற்கு முதலே,1858ல் பிறந்து-1922ல் பிறந்தவரான அனந்தசாஸ்திரி என்ற பிராமணரானத் தந்தை தன் மனைவிக்கும் அவரின்ன மகள்; ராமாபாயக்கும்;; சமஸ்கிருதம் கற்றுக் கொடுத்தார்.

இந்தியாவில் பெண்ணிய இயக்கத்தில் முன்னணியிலிருந்தவர் மடம் ருஸ்தகாமா என்ற பெண்மணி என்ற பதிவும் இருக்கிறது.இவர், 1907ம் ஆண்டில,ஜேர்மன் நகர்,ஸ்ருட்கார்டில்; நடந்த சோசலிஸ்ட் சர்வதேச மகாநாட்டில் லெனின் என்ற பெரும் தலைவருடன் மேடையேறி,'இந்தியாவின் மூவர்ணக் கொடியை உயர்த்தித் தூக்கி 'வந்தேமாதரம்' என்ற தாரகத்தை வெளியுலகம் தெரியப் பண்ணியவர் என்று,'சமுதாய வளர்ச்சியும் பெண்களும்' என்ற தலைப்பில்,'மகளிர் இயக்கம்' என்ற புத்தகத்தில் திரு பாஸா என்பரால் 1976ல் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

1900ம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் பிரித்தானியாவில்,' பெண்களுக்கும் வாக்குரிமை' வேண்டும் என்ற குரல் திருமதி .மிலிசென்ட் பவுசெட்.திருமதி எமெலின் பாங்கேஸ்ட போன்றவர்களின் தலைமையில் உரக்கத் தொடங்கியது.வாக்குரிமைக்குப் பல பெண்கள் வீதியிலிறங்கிப் பல்விதப் போராட்டங்களை 1897லிருந்து ஆண்டு காலத்தில் செய்தார்கள். இந்தப் போராட்டங்கள் தொடர்ந்தபோது,அக்காலத்தில் பிரிட்டனில் வாழ்ந்த,இந்தியப் பெண்களான திருமதி .பி.எல.;றோய், திருமதி பக்வத் போலா நவுத்,போன்றவர்கள் 17.6.1911ம் ஆண்டு லண்டனில் நடந்த போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டதாக,பிரித்தானிய,பிறிஸ்டல் பல்கலைக்கழகப் பேராசிரியையான மி;த்ரா முக்கர்ஜி,என்பரால் 2017ல் பதிவிடப்பட்டிருக்கிறார். அமெரிக்காவில்,1902ம் ஆண்டில் திருமதி மேரி ஹரிஸ் ஜோன்ஸ்(1837-1930) என்பவர் தொழிலாளர்களைய ஒன்றிணைத்தவர்களில் முக்கியமானவர் என்று சொல்லப் படுகிறது.தொழிற்சங்கத்தையும் உண்டாக்கினார். அமெரிக்க தொழிற்சாலைகளில் தெரிழிலாளர்கள் விடயங்களில் பல மாற்றங்கள் தொடர்ந்தன. அமெரிக்காவில் உடைத்தொழிற்சாலைகளில் வேலைசெய்த பெண்களுக்கான போராட்டம் 28.2.1909ம் ஆண்டு,வீதிகளில் நடந்தது. இது' பெண்களின் தேசிய' நாள் என்று அவர்கள் அதைப் பிரகடனப் படுத்தினார்கள்.

அடுத்த வருடம்,1910ம் ஆண்டு 'சோசலிஸ்ட் இன்டநாஸனல்' அமைப்பு, கோபன்ஹேகன் என்ற நகரில் பெண்களின் வாக்குரிமை,மேம்பாட்டு உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்து அகில உலக மாதர் தின விழாவைக் கொண்டாடினார்கள்.
1911ல்,ஆஸ்திரிய, டென்மார்க்,ஜேர்மன்,சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் அகில உலகப் பெண்கள் தின விழாவை,மார்ச் 19ல் கொண்டாடினார்கள். ஒரு கோடிக்கும் மேலானவர்கள் கலந்துகொண்டார்கள்.இவர்களின் கோரிக்கைகள், பெண்களுக்கான வாக்குரிமை,தொழிலாளர்களின் உரிமைகள்,பெண்களுக்கான கல்வி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டவையாகவிருந்தன. அதைத் தொடர்ந்து,பல மகாநாடுகள்,பாரிஸ் (பிரான்ஸ் 1945);,புடாபெஸ்ட்(ஹங்கேரி 49), கோபன்ஹேகன்(டென்மார்க,53;), வியன்னா(ஆஸ்ட்ரியா,58),மொஸ்கோ (இரஸ்யா, 63)ஹெல்ஸிங்கி (பின்லாந்து 69) பேர்லின்(மேற்கு ஜேர்மனி 75) போன்ற, பல நாடுகளில் நடந்தன. கடைசியாக,1975ம் ஆண்டு பேர்லின் நகரில் நடந்த அகில உலக மாதர் தின விழாவுக்கு 140 நாடுகளிலிருந்து 2000 பிரதிநிதிகள் வந்திருந்தார்களஇந்தியாவிலிருந்து மட்டும் 145 பிரதிநிதிகள்,இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரான திருமதி புரபி முகர்ஜி தலையில் பங்கு பற்றினார்கள். மகாநாட்டுக்கு வந்திருந்த 140 நாட்டு; பிரதி நிதிகளாலும்.750 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இன, மத, நிற, அரசியல் வேறுபாடற்ற,பெண்களின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளுக்கு இந்த மகாநாடு அத்திவாரமிட்டது.

ஐக்கிய நாடுகள் சபை,1975ம் ஆண்டு, பங்குனி 8ம் திகதி,அகில உலக மாதர் தினம்; கொண்டாடும்'நாளாகப் பிரகடனப் படுத்திக் கொண்டாடியது.அன்று தொடக்கம் பங்குனி எட்டாம் திகதியில்,உலகெங்கும் தொடரும் பெண்களின் போராட்டங்கள்,வெற்றிகள்,
சவால்கள் பற்றிய நூற்றுக்; கணக்கான கூட்டங்கள், பல்லாயிரம் பெண்காளால் உலகெங்கும் முன்னெடுக்கப் படுகிறத.

இவ்வருட அகில உலக மாதர் தினம் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி:

2019ம் ஆண்டு,மார்கழி மாதம் சீனாவில் கண்டுபிடிக்கப் பட்ட கொடிய கோவிட்-19 வைரஸ்,ஒரு குறுகிய காலத்தற்குள் உலகத்தையே தன் பிடிக்கள் அழுத்திக் கொண்டிருக்கிறது.. இதை ஒழித்துக் கட்ட,இந்தக் கொடிய நோயிலிருந்து விடுபட உலகநாடுகளிலுள்ள 87 நாடுகளில் ஆய்வுகள் நடக்கினறன. இதில் 3.5 விதமே பெண்களுக்கக் கொடுக்கப் பட்டிருக்கிறது. இன்றைய கால கட்டத்தில 22 நாடுகளில் பெண்கள் ஆட்சி செய்கிறார்கள்.ஆனால் பாராளுமன்றங்களில்,;24.9 விகிதமான பெண்கள மட்டுமே மக்களின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால், பெண்களுக்கான சமத்துவ நிலையையடைய இன்னும் 130 வருடங்கள் எடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

கோவிட் கால கட்டத்தில் பெண்கள் பலர்,மக்களுக்கான பணிகளின் பன்முகத் துறைகளான, சகாதாரப்பணிகள், விஞ்ஞானிகள், வைத்தியர்கள் என்று பலவற்றில் ஈடுபடுகிறார்கள்.ஆனால் அவர்களின் ஊதியமோ,அதே வேலை செய்யும் ஆண்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தை விட 11 விகிதம் குறைவாகவேயுள்ளது. இப்படிப் பல விடயங்களை முன்னெடுத்து, ஐக்கிய நாடுகள் சபை ,இவ்வருட அகில உலக பெண்கள் தினமபெண்தலைமைத்துவத்தை முன்னிலப் படுத்துகிறது.எதிர்காலப் பெண்களின் சாதனைகளுக்குப் பெண்களின் தலைமைத்துவம் மிக முக்கியமான விடயமாகப் பிரகடனப்படுத்தியிருக்கிறது.

கோவிட்-19 கால கட்டத்திலும் பல பெண் ஆளுமைகள் பல துறைகளில் உலகத்தின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பியிருக்கிறார்கள். அவர்களில், ஜேர்மன் நாட்டுத் தலைவி, ஆங்கிலா மேர்கல், ஐரோப்பிய மத்தியவங்கித் தலைவியான,கிறிஸ்டின் லாகார்டஸ்,அமெரிக்க உதவி ஜனாதிபதி கமலா ஹரிஸ், ஐரொப்பிய ஒன்றியத் தலைவி யுறசில்லா வான் டென் லேயன், உலகப் பிரசித்தி பெற்ற தொழிலதிபர் பில் கேட்ஸ் அவர்களின் ஸ்தானத்தின் இணை அமைப்பாளர் மேரி பாரா,அமெரிக்க அரசின் எதிர்க்கட்சித் தலைவியாயிருந்த நான்சி பொலோசி.ஸ்பெயின் நாட்டின் பிரபல வங்கியைச் சேர்ந்த ஆனா பட்ரீசியா போத்,அமெரிக்காவின் பிரபல பைனானஸியல் நிறுவனத்தைச் சேர்ந்த அடிகேயில் ஜோன்ஸன்,அமெரிக்காவின் பிரபல ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கெயில் கோஸியாரா போர்ட்ரெக்ஸ் போன்ற பத்து பெண்கள்,தங்கள் பன்முகத் தலைமைத்துத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்கள்.

கடந்த வருடம் பிரித்தானிய பி.பி.சி. பெண்களை உற்சாகப் படுத்தும் விதத்தில் தனித்துவமும், ஆளுமையுடனும், கோவிட்கால கட்டமான 2020ல்,பல நாடுகளைச் சேர்ந்த பல துறைகளில் பணி புரிந்த 100 பெண்களை உலகுக்கு அறிமுகம் செய்தார்கள்.
அவர்களில் அதி பெரு திறமை வாயந்த இந்தியப் பெண்களும்,வேறு நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழிப் பெண்களும் அடங்குவர்.

1-மானசி ஜோஸி: இவர் ஒரு உலக பரா பாட்மின்டன் சம்பியன். வலது குறைந்தவர் என்றாலும் தனது திறமையால் இந்த உலகில் இவரது திறதை பிரகாசிக்கிறது.இவர் ஒரு என்ஜினியர்.இவரை,பெண்களை ஊக்குவிக்கும் எதிர்காலத் தலைவிகளில் ஒருத்தியாக, 'டைம்ஸ்' பத்திரிகை பதிவிட்டிருக்கிறது. உடல் வலிமை பாதிக்கப் பட்டவர்கள் தங்கள் திறமையால் முன்னுக்கு வர இவர் ஒரு கலங்கரை விளக்காகக் கணிக்கப் படுகிறார். இவர்,என்ன சொல்கிறார் என்றால், '2020ம் ஆண்டு பெண்களுக்கப் பல விதத்திலும் மிகவும் சோதனையான கால கட்டமாகும். கடைசிவரைக்கும் இந்தச் சோதனைகள் எங்களை வெற்றி கொள்ள நாங்கள் இடம் கொடுக்க முடியாது. விடாப்பிடியாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் திறமையைக்காட்ட முயலுங்கள். உங்கள் முன்னேற்றத்திற்காக.ஒவ்வொரு நாளும்,உங்கள் நேரத்தை உங்களுக்காக சிந்திக்கக்; கொஞ்சம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்' என்கிறார்.

2.- இசைவாணி: இவர் ஒரு கர்நாடக சந்கீதப் பாடகி.மிகவும் சாதாரண குடும்பத்தில்,சென்னையின் வடக்குப் பகுதியில் பிறந்தவர். ஆண்கள் கோலோச்சிய ஒரு துறையில் தனது திறமையால் முன்னேறி,தன்னைப்போல் இசையில் ஆர்வமுள்ள சாதாரண
பெண்களுக்கு ஊக்கமூட்டும் முன்னோடியாகிறார் என்ற பி.பி.சி எழுதியிருக்கிறது. இவரின் கூற்றுப்படி,'இந்த உலகம் 2020ம் ஆண்டில் மிகவும் மாறிவிட்டது. ஆனால் பெண்களின் வாழ்க்கைக்கான மாற்றம் ஒவ்வொரு நாளும் நடக்கிறது.பெண்கள இன்று,தங்களுக்கெதிரான முரண்பாடுகளுக்குச் சவால் கொடுக்க இடமிருக்கிறது.இது எதிர்காலத்தில் விடாப்பிடியாகத் தொடரவெண்டிய விடயம்' என்கிறார்.

3.- பி.பி.சி.குறிப்பிடும் அடுத்த இந்திய மாது,பில்கிஸ்: இவர் 82 வயதானவர்.,இஸ்லாமிய மக்களின் பிரஜா உரிமைப் போராட்டத்தில்,ஸாஹின்பாஹ் என்ற இடத்தில் அமைதியான போராட்டத்தைத் தொடர்ந்து மக்களின் மதிப்பைப் பெற்றவர் என்று
குறிப்பிடுகிறது. 'பெண்கள் தங்களுக்கான வாழ்க்கைப் போராட்டத்தில்,வீட்டுக்கு வெளியில் வந்து தங்களைப் போராட்டத்துடன் இணைத்துத் தங்கள் வலிமையைக் காட்டவேண்டும் என்பதை நிலை நிறுத்தியவர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

4.- றிதிமா பாண்டே: இவர்,சூழ்நிலை சுற்றாடலைப் பாதுகாப்பதில்; ஆர்வமுள்ள பெண்மணி.ஒன்பது வயதிலேயே,சுற்றாடல் சூழ்நிலை மாசுபடுதலை அரச நிர்வாகம் கவனிக்கவில்லை என்று மனு எழுதியவர்.2019ம் ஆண்டு,இவரைப்போல இன்னும்
பதினைந்துபேரைச் சேர்த்துக்கொண்டு, சுற்றாடல் சூழ்நிலையை மாசுபடுத்தும் 5 நாடுகளுக்கெதிராக, ஐக்கிய நாடுகள் சபைக்கு மனு அனுப்பியவர். இவர் தற்போது அகில உலக ரீதியில் பெரும் மகாநாடுகளில் கலந்து கொண்டு எதிர்கால சந்ததியினர்,
தங்களின் வாழ்வை நாசமாக்கும் மாசுபடும் சூழ்நிலைகள் பற்றிய விளக்கங்களைக் கொடுக்கிறார்.' எங்கள் எதிர்காலத்தை,மாசுபடும் சூழலிலிருந்தது பாதுகாக்க,இளம்தலைமுறை,ஒன்றாகச் சேர்ந்து,மிகவம் நெருக்கடியான இந்த நேரத்தில் போராடி, அதன்
வெற்றியை நிலைநாட்ட வேண்டும். ஓன்றைச் செய்து வெற்றிபெற வேண்டும் என்ற பெண்கள் உறுதியுடன் நினைத்தால் யாரும் அவர்களைத் தடுக்க முடியாது' என்கிறார்.

-கோவிட்-19 தொற்று பரவியதைத் தடுக்கத் தடுப்பூசியைத் தேடிய ஆய்வு செய்ததலில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்டவர்கள்,விஞ்ஞான ஆய்வுத் தம்பதிகளான. துருக்கிய நாட்டைப் பூர்வீகமாகக கொண்ட ஜேர்மன் டாக்டர்,உகுவர் ஸாஹின்
அவர்களும் அவரின் மனைவியாகிய உஸ்லம் ட்றெச்சி,அத்துடன் ஆஸ்ட்ரியன் ஒன்கோலோஜிஸ்ட் கிறிஸதோபர் ஹியுபர் என்பருமாகும்.இவர்கள் கோவிட்-19 வைரசுக்கெதிரான பையோ என் டெக்-பை~ர் வக்சினைக் கண்டுபித்தார்கள்இது கோவிட் 19க்கு
எதிராக 95 விகிதம் எதிர்ப்பு வேலையைச் செயயும் என்று சொல்லப் படுகிறது. இரு ஆண்களும் ஒரு பெண்ணும் சேர்ந்து செய்த ஆய்வு பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றுகிறது. பெண்களும் இணைந்த சமத்துவமான தலைமைத்துவத்தின் சாதனை
என்பதற்கு இந்த பிரமாண்டமான கண்டுபிடிப்பு ஒரு உதாரணம்.

லண்டன் கார்டியன் பத்திரிகையின் தகவலின்படி-ஓக்ஸ்போர்ட் வக்சின் ஆஸ்ட்ரானிக்கா என்ற தொற்று நோய்த் தடுப்பு வக்சினை உருவாக்கியவர் பேராசிரியர் ஸாரா கில்போர்ட் என்று ப.pபி.சி.23.11.2020ல் பதிவிட்டது. தனது மேற்படிப்பின் உதவியுடன அஸ்ட்ரா னிக்கா வக்ஸினை உருவாக்கிய இந்தப் பெண்மணி அவரின் தனித்துவத்தால் ஆளுமையான ஆண்காளாலாலும்,பொது மக்களாலும். உலகம் பரந்த விதத்தில் மதிக்கப் படுகிறார். இவர் மூன்று குழந்தைகளை ஒரே தரத்தில் பெற்றெடுத்தவர்.குழந்தைகளைக் கணவர் கவனித்துக்கொள்கிறார்.மிகவும் கவனமாகத் தன் ஆய்வில் ஈடுபடுபவர்.கடினமான உழைப்பாளி என்று பெயர் எடுத்தவர்.இவருடன் சேர்ந்து வேலை செய்தவரும் ஒரு பேராசிரிய பெண்மனியாகும் அவர் பெயர்.பேராசிரியர் தெரேசா லாம்மே எனபதாகும்.இவர்களுடன் பேராசிரியர் ஆட்ரியன் ஹில் அவர்களும் இணைந்து செயற்பட்டார்கள. கோவிட்19 வைரசின் நோய்பரப்பும் தன்மையை 70 விகிதம் அஸ்ட்ரா n~னிக்கா வக்ஸின். கோவிட் 19 வைரசை கிட்டத்தட்ட 62 விகிதம் செயலிழக்கப் பண்ணும் என்று சொல்லப் படுகிறது.இந்த வக்ஸின் தயாரிப்பின் பல்வேறு ஆய்வுகளில்; பல திறமைகள் உள்ள விஞ்ஞானிகள் பங்கு பற்றினார்கள்

இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட மஹேஸ் ராமசாமி. இவர் இலங்கையைப் புஸ்ரீர்வீகமாகக் கொண்டவர். துந்தை ஒரு தமிழன் மாய் சிங்களப் பெண்மணி.இவர் பன்மக விஞ்ஞான திறமையானவார்.ஆஸ்ட்ரோனிக்கா என்ற இந்த வக்சின் ஆய்வில் இவர் தலைமைத்துவம் வகித்தார்.வக்ஸனைப் பொது மக்களுக்கக் கொடுக்கமுதல்,நடத்தும் பரிசோதனையை முன்னின்று செய்தார். மஹேஸ் ராமசாமி அவர்கள்,உலகின் பிரசித்தமான பல்கலைக்கழகமான கேம்பிறிட்ஜில் பட்டம் பெற்றவர்.

விண்வெளி ஆராய்ச்சியும் பெண்களின் தலைமைத்துவ மகத்துவமும்:

- விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், சிவப்புக்கிரகம் என்றழைக்கப்படும் செவ்வாய்ககு; பேர்சிவரென்ஸ் றோவர் என்பதைத் தரை இறக்கும் பிரமாண்டமான செயற்பாட்டின் பின்னணியிலிருந்த ஏழு பெண் ஆளமைகளில்,சுவாதி மோகன்,வந்தனா வர்மா
என்ற இரு பெண்கள்; இந்தியநாட்டில் பிறந்தவர்கள்.அமெரிக்கா சென்று தங்கள் கல்வித் திறமையாலும், பாலின வேறுபாடற்ற, சமத்துவப் பண்பாட்டை முன்னேடுக்கும் உலகின் மிகவும் பிரமாண்டமான விண் வெளி ஆய்வு நிறவனமான நாசாவில்
மிகவும் உயர் நிலைகளில் இவர்கள் இருப்பது இந்தியர்கள் அத்தனைபேரும் பெருமைப்படும் விடயங்களாகும்.

1.-.கதரின் ;ஸ்ராக் மோகன்,-டிப்பியுட்டி றிசேர்ச் சயன்ஸ்ரிஸ்ட். செவ்வாய்க் கிரகத்தின் தரையமைப்பு. குனறுகள், கற்களாலான அமைப்புக்கள் பற்றிய ஆய்வில் இவர் திறமை வெளிப்படுத்தப்படுகிறது. செவ்வாய்க் கிரகத்தில் பேர்சிவரன்ஸ் றோவர்
இறங்குவதற்கான பல பன்முகத் தன்மையான ஆய்வுகளை மேற் கொண்டவர்.2012ம் ஆண்டிலிருந்து நாசாவின் சயன்டிஸ்ட்ஸ் குழுவில் அங்கத்தவாராகவிருக்கிறார்.

2-ஸ்வாதி மோகன், இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பெங்களுரில் பிறந்தவர் தாய் தந்தையருடன் தனது ஒரு வயதில் அமெரிக்கா சென்றவர்.நவிக்கேசன் அன்ட் கொன்றோலுக்குப் பொறுப்பாகவிருந்து, பெர்சிவரன்ஸ் றோவரைச் செவ்வாய்க் கிரகத்தில் இறக்கியவர். இந்த பிரமாண்டமான விண்வெளிச் செயற்பாட்டுக்கு முதன்மை, என்ஜினியரான பொறுப்பிலிருந்த ஆளுமையான பெண்மணி.இந்தப் புறொஜெக்ட்டுக்கான அத்தனை விடயங்களையும் கையாண்டவர்

3-மூகேகா ஸ்ரைக்கர்-இவர் பேசிவரன்ஸ் றோவர் ஒரு கிருமியுமற்ற பாதுகாப்பான முறையிலிருப்பதற்குக் காரணமாகவிருந்தவர். நாசா நிறுவனத்தின் சாதனைப் பரிசொன்றை 2012ல் பெற்றவர்.

4- ஹெதர் ஆன் போதம் என்வர்;.இவர் பேசிவரன்ஸ் ரோவரின் ஸிஸ்டம் என்ஜினியர்.ஒரு நாட்டியக்காரியாக ஒருகாலத்தில் வேலைசெய்தவர். வாழ்க்கையை இன்னொரு விதத்தில் போராடி வென்றெடுத்த தனது வெற்றிக்குப் பின்னணி  தத்துவமாக, மனதைரியத்தையும், உணர்வின் உறுதியையும் தான் முழுக்கவும் நம்புவதாகச் சொல்கிறார்.

5.டையானா ட்ருஜிலோ: இவர் கொலம்பியன் நாட்டைச் சேர்ந்தவர். ஏரோஸ்பேஸ் என்ஜினியராகப் பல மட்டங்களில் பணிபுரிந்திருக்கிறார்.றோபோர்டஸ்;களை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு செய்ததிலும் முக்கியமானவராக இருந்திருக்கிறார். கியுறியோசிட்டி என்ற ரோவரை விண்வெளிக்கு அனுப்பிய காலகட்டத்தில்,அதன் டெலிகொம் ஸிஸ்டத்திற்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார்.அத்துடன்,விண்வெளி ஆய்வுத்தொடரில் முதன் முறையாக ஸ்பானிஸ் மொழியைப் பயன்படுத்தியவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.இவர் தனது என்ஜினியரிங் மேற்படிப்பை புலோரிடாவில் தொடர்ந்தபோது அதற்கான பணம் சேகரிக்க மற்றவர்களின் வீட்டைத் துப்பரவு செய்யும் வேலை செய்து சேமித்ததாகச் சொல்கிறார். நாசா நிறுவனத்தில் 2008ல் சேர்ந்தார்.'எங்களது கனவுகள் என்ன வித்தில் மாற்றமெடுக்கப் போகிறது,செயற்படப்போகிறது என்று தெரியத் தொடங்கினாலும்,எங்கள் ஆரம்பக்கனவைச் செயலாக்குவதில் ஒரு சந்தேகமும் இருக்கக் கூடாது' என்கிறார்.

6-மிசேலா ரொமேய் கொலி~p:இவர் ஒரு மெக்கானிகல் என்ஜினியர்.றோவர் அசெம்பிளிங்,டெஸ்ட் லோன்ச் போன்றவற்றில் வேலை செய்தவர்.மிகவும் கடினமான,சூழ்நிலையில் சிவப்புக் கிரகத்தில்; இவரின் திறமையால் பத்திரமாக பெர்சிவரன்ஸ் இறங்கியது.அவரின் கூற்றுப்படி,'நாசா நிறுவனத்தில் ஆண் பெண் பேதம் கிடையாது. நான்தான் இங்கு வேலை செய்பவர்களில் இளையவள். இங்கு திறமைக்கு மதிப்பிருக்கிறது. சமத்துவமான உறவு எல்லேரையும் சந்தோசமாக இணைந்துவேலை செய்து பல சாதனைகளைச் செய்ய உதவுகிறது'.

7.-வந்தனா வர்மா: நாசா நிறுவனத்தில்'வன்தினி' என்று அன்பாக அழைக்கப்படுபவர்.இவர் 'றோபோர்ட். தயாரிப்பதில் முதன்மைத்துவம்கொண்டவர்.கியுறியோசிட்டி,பேர்சிவரன்ஸ் ரோவர்களைத் தயாரித்தவர்.அத்துடன் இவருடைய அதிதிறமை நாசாவின்  வேறு செயற்பாடுகளிலும் சேர்க்கப் பட்டிருக்கிறது.இந்தியாவில் ஹால்வார என்ற இடத்தில் பிறந்தவர். சாண்டிகா நகரில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் இளம்கலை பட்டப்படிப்பை முடித்தவர்.முதுகலைப் பட்டத்தை றோபோர்ட் தயாரிப்பில் கார்னேகி
மெலோன் பல்கலைக்கழகத்திலும்,அதே இடத்தில் தனது பி.எச்.டியையும் 2005ம் ஆண்டு றோபோர்ட்டிக் என்ஜினிரிங் படிப்பில் முடித்தவர்.நாசாவில் 2008ம் ஆண்டு சேர்ந்து பல திறமைகளைச் செய்கிறார்.அத்துடன் இவர் லைசென்ஸ் எடுத்த பைலட்டும்
ஆவார்.

இன்றைய தொற்று வைரஸ் போராட்ட காலத்தில் உலகின் ஒட்டு மொத்த மக்களுக்காகவும் ஆண்களுடன் சேர்ந்து சமத்துவமாக அயராது உழைக்கும் பல பெண்களைக் கண்டோம். ஆதேநேரம், தங்கள் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்துப் பல
பெண்கள் பல நாடுகளில் பணிபுரிகிறார்கள்.இவர்களின் தளராத பணியால், தலைமைத்துவத்தால் பல நல்ல மாற்றங்கள் நடக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்தலைகளையுடைய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் பாராதாரமாகவில்pல.அவை.ஜேர்மனி,டென்மார்க்,தைவான், நியுசிலண்ட்,ஜஸ்லாண்ட்.பின்லாந்த போன்றவையாகும். ' ஹங்கர் பறோஜெக்ட்' என்ற ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி,இன்று இந்த உலகில் 690 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டில் வாழ்கிறார்கள்.இதில் 60 விகிதமானவர்கள் பெண்கள். ஆனால், விவசாயம ;போன்ற துறைகளில் அவர்களுக்கு பெரிய இடம்  இருந்தால், அவர்களின் உழைப்பு 150 கோடி மக்களுக்க உதவும்.இவர்கள்,பதின்மூன்று(13) நாடுகளில்,பதின்மூன்றாயிரம்(13.000) அமைப்புகளுடன்,முன்னு10ற்றித் தொண்ணு10ராயிரம் ஊழியர்களுடன்,(395.000) பதினாறுகோடி (16 கோடி) மக்களுடன் வேலை  செய்கிறார்கள்.அந்த மக்களில் எட்டுக்கோடித் (8) தொகையினர் பெண்களாகும்.

ஐக்கிய நாடுகளின் வேண்டுகோளின்படி, எதிர்காலத்தில் பெண்களின் தலைமைததுவத்தில் அவர்களைச் சாதனையாளராக்குவதற்கு, பெற்றோர், கல்வி நிலையங்கள்.சமூக அமைப்புக்கள், பெண்ணிய ஆளுமைகள்,மனித நேயவாதிகள் முற்போக்கு  சிந்தனையாளர்கள் பெண்களுக்க ஊக்கம் கொடுக்கவேண்டும். பெண்களின் கல்வியில்; ஈடுபட்டிருக்கும் மாணவிகளுக்கு,அவர்கள் இந்தியப் பெண்களின் மேன்மைக்கும்,சாதனைக்கும் என்ன துறைகளில் பணிபுரியவேண்டும் என்று நான் விபரிக்கத் தேவையில்லை.

எனது அனுபவத்திலிருந்து, எதிர்காலப் பெண்களுக்கு நான் சொல்வதென்னவென்றால், பெண்ணியம் என்பது,ஒரு பெண் தன்னை அடக்கி வைத்திருக்கும் பல தரப்பட்ட தளைகளிலிருந்து விடுவித்துக்கொண்டு வெளியே வந்து பன்முகத் துறைகளில் தனது
சாதனையைப் படைப்பது மட்டுமல்ல,தன்னைப்போன்ற நிலையிலுள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும், ஒடுக்கப்பட்ட சமுகத்தின் மேம்பாட்டுக்கும் தன்னாலான பணிகளை மேற்கொள்ளுவதாகும்.

நான், அரைநூற்றாண்டுகளுக்கு முன்,கிழக்கு இலங்கையின் ஒரு தமிழ்க் கிராமத்துப்பெண். இந்த நாட்டுக்குக் காலடி எடுத்து வைத்தபோது. எனது ஆங்கில அறிவு சுமாரானது. இன்றுவரையும் ஆங்கிலத்தில் பெரிய புலமை ஒன்றும் கிடையாது. ஆனால்,
இருக்கிற அறிவை வைத்துககொண்டு,லண்டனில் பல மேற்படிப்புக்களைத் தொடர்ந்தேன். பற்பல நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்தின் வாயிலாக மக்களுக்கு எத்தனையோ செய்யலாம் என்பதற்கு இங்கிலாந்தின் பெண்ணியவாதிகள் எனக்கு
வழிகாட்டினார்கள்.

இலங்கையில் எங்கள் தமிழ் இனம் இனவாத சிங்கள அரசால் துயர்பட்டபோது அவர்களுக்காகக் குரல் கொடுக்க 1982ம் அண்டு லண்டனில்,எனது தலைமையில் தமிழ்ப் பெண்கள்அமைபபையுண்டாக்கிப் பல தமிழ் மக்களின் நன்மைக்களுக்கான பல
மாற்றங்களைச் செய்தோம். தமிழ் மக்கள் அகதிகளாக வந்தபோது எனது தலைமையில்,அகதிகள் ஸ்தாபனம், தமிழ் அகதிகள் வீடமைப்புத் திட்டம் என்பன உண்டாக்கப்பட்டன.பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் லண்டனுக்கு வந்தார்கள். 1985ம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து. ஐரோப்பயநாடுகளிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் இலங்கைத் தமிழரின் நிலைபற்றியும், ஒட்டு மொத்தமாகச் சர்வதேச ரீதியில் ஒடுக்கப்படும் பெண்கள் பற்றியும் சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் நிகழ்த்தியிருக்கிறேன்.பல மகாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.தமிழ்நாட்டில் பல கல்வி நிலையங்களில் தமிழ் பலதரப்பட்ட விடயங்களில் சொற்பொழிவுகளைச் செய்திருக்கிறேன. மனித உரிமை, பெண்ணிய சம்பந்தமான எனது ஆய்வுக் கட்டுரைகளை எனது இணையத்தளத்தில் பார்க்கலாம்.

பெண்களின் தலைமைத்துவத்திற்கும் சாதனைக்கும் எனது வாழ்க்கையில் இன்னும் சிலவற்றையும் சோர்த்துச் சொல்கிறேன். லண்டனில் வாழ்ந்து கொண்டு,தமிழில் இதுவரை பதினெட்டுப் புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.இந்தியாவிலும் இலங்கையிலும்
பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன். மேற்படிப்புத் துறையில்,மருத்வ மானுடவியல், திரைப் படத் துறை என்பவற்றில், லண்டனில் பட்டம் பெற்ற முதலாவது பெண்மணியென்ற இடத்தைப் பெற்றிருக்கிறேன். இன்று ஆங்கிலத்தில் சிறு கதைகளும் கவிதைகளும் எழுதிக் கொண்டிருக்கிறேன். பெண்ணியம் சார்ந்த மேற்படிப்பில் ஈடபட்டிருக்கும் நீங்கள்,இவ்வருட, அகில உலக மாதர்தின நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு அறிவுகளைத் திரட்டிக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களின்;பிரகாசமான எதிர்காலத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.