பாரதியாரின் 'நிற்பதுவே,நடப்பதுவே' பாடலை செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்துப் பாட வைத்திருக்கின்றேன்.
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர்; வ.ந.கிரிதரன்
கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=oxFjQpf5aso
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம்
சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே
போனதனால் நானுமோர் கனவோ?-
இந்த ஞாலமும் பொய்தானோ?
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,
நீங்க ளெல்லாம் சொற்பனந் தானா?
பல தோற்ற மயக்கங்களோ?
கால மென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?அங்குக்
குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம்
தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச்
சொல்லொடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம்
விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோ ம்
காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக்
காட்சி நித்தியமாம்