இசை & குரல்: SUNO AI    ஓவியம்: கூகுள் AI

பாடலைக் கேட்க

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

பழம் பெருமை பேசுவதை நிறுத்தார்.
பழைய நூல்களை வாங்கவே மாட்டார்.
சமூகப் பிரிவுகள் வளர்த்தே வாழ்வார்.
சங்கத்  தமிழரென்றே பொங்கி எழுவார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

தமிழர் நூல்களை ஏறெடுத்தும் பாரார்.
தமிழர்  படைத்தார் குறுந்தொகை என்பார்.
தமிழர்  சிலம்பு என்பார், மணிமேகலை என்பார். 
தமிழர் இவரோ இவற்றை  வாங்கார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

நடிகை பின்னால் மயங்கிக் கிடப்பார்
நடிகர் பின்னால் மயங்கிக் கிடப்பார்.
உணர்ச்சி அரசியலில் மூழ்கிக் கிடப்பார்.
உணர்ச்சி மிகுந்து மோதிக்கொள்வார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

தமிழ் எழுத்தாளர் எழுத்தால் வாழ்ந்ததில்லை.
தமிழ்க் கலைஞருக்கோ ஆதரவு  இல்லை.
ஊடகப் புகழ் நாடியே  அலைந்து திரிவார்.
உணர்ச்சியில் மட்டுமே நிலை மறப்பார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

பழமையின்  சின்னங்களைப் பேணிட மாட்டார்.
பழம் பெருமை பேசுவதை மட்டும் நிறுத்த மாட்டார்.
சின்னங்கள் காணியில் இருந்து விட்டாலோ
சிதைப்பதிலேயே குறியாய் இருப்பார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

எத்தனை பிரிவுகள் எம்தமிழர் மத்தியில்.
அத்தனையும் சுயநலத்தின் அடிப்படையில், 
அத்தனையும் சுயபெருமையின் அடிப்படையில்,
அத்தனையும் ஒழிந்தாலன்றோ உயரும் இவர் வாழ்வு.

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

* வ.ந.கிரிதரன் பாடல்கள் என்னும் என் 'யு டியூப் சானலு'க்கான முகவரி - https://www.youtube.com/@girinav1   இச்சானலைச் 'சப்ஸ்கிரைப்' செய்து ஆதரவினை அளியுங்கள். மேலும் இது போன்ற காணொளிகளை உருவாக்க உங்கள் ஆதரவு மிகவும் அவசியம்.