வ.ந.கிரிதரன் பாடல்:  நீல நிறத்தில் நெஞ்சம் இழப்பேன்!

இசை & குரல் - SUNO AI   ஓவியம் - Google AI

பாடலைக் கேட்க - https://youtu.be/TC1p_RwuQfM?si=4prp7eXoh0SSclA_

[வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.]

நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.

நீல நிறம், மெல்லிய நீல நிறம்
நெஞ்சுக்கு நெருக்கமானது. என் 
நெஞ்சுக்கு நெருக்கமானது.
அடி, கண்ணம்மா அந்த நிறம்
அடியே உனக்குக் கூடப் பிடித்த நிறம்தான்.
அடிக்கடி நீ கூறுவாய் 
அதுதான் உனக்கும் பிடித்த நிறமென்று.
இல்லையா கண்ணம்மா! நீயே கூறு!

நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.

விரிந்து கிடக்கும் நீல வானம்
பரந்து கிடக்கும் நீலம் தெறிக்கும் கடல்
கண்களுக்கு இன்பமூட்டும் காட்சிகள்.
என்னையே மறந்து கிடப்பேன் அப்போது.
இன்னமும் நினைவில் நிற்கிறது இனியவளே
மென் நீல ஆடையில் நீ நடந்து வந்ததெல்லாம்.
இன்னமும் உனக்கும் நினைவிலிருக்கிறதாடி.
சொன்னால் என் நெஞ்சும் நிறையுமடி.

நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.

விரிந்திருக்கும் நீல வானின் அமைதியில்  உன்
வதனத்தில் படந்திருக்கும் அழகினைக் காண்பேனடி.
பரந்திருக்கும் நீலக் கடலின் தெளிவில் உன்
இரக்கம் மிக்க தெளிந்த உள்ளம் தெரியுதடீ.
நீலம் படிந்து விரிந்திருக்கும் விண்ணில்
நிலவே ,உன் செறிந்த பரந்த அறிவை உணர்வேனடி.
நீல வான, நீலக்  கடல் தரும் குளிர்ச்சியை, 
கோலமயிலே உன் பார்வையில் உணர்வேனடீ.