கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகள்: 

1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன்
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். 
3.  கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. கணையாழி டிசம்பர் 2000: 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. கணையாழி மே 2012: ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்- 
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7.  கணையாழி செப்டம்பர் 2017:  கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயிஓன் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -
9. கணையாழி மார்ச் 2020: விநாயக முருகனின் 'ராஜிவ்காந்தி சாலை'
10. கணையாழி ஏப்ரில் 2020: 'பிரமிளின் "காலவெளி": கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
11. கணையாழி மே 2020: 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற் காதல் பற்றி..'
12. கணையாழி ஜனவரி 2022: பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!

* கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு நூலில் எனது ' அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்' &  'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் ' ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.


பல்வேறு இலக்கியச் சிறப்பிதழ்கள், தொகுப்பு நூல்கள், மலர்கள் ஆகியவற்றில் வெளியான என் , வ.ந.கிரிதரனின்,  படைப்புகள் இவை.  இவை முழுமையான  பட்டியல் அல்ல. ஒரு சில விடுபட்டிருக்கலாம். 

1.  'அறிவுத்தாகமெடுத்தலையும் வெங்கட் சாமநாதனும், அவரது  கலை மற்றும் தத்துவயியற் பார்வைகளும்' - வ.ந.கிரிதரன் - கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அரை நூற்றாண்டு எழுத்தியக்கப்பணியினைக் கெளரவிக்கும் முகமாக சந்தியா பதிப்பகம் (தமிழ்நாடு)  'வெங்கட் சாமிநாதன் வாதங்களும், விவாதங்களும்'  தொகுப்பு நூல்.   தொகுப்பாசிரிர்கள்: எழுத்தாளர்கள் பா.அகிலன்,. திலீப்குமார் & சத்தியமூர்த்தி. 

2. இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்!  - வ.ந.கிரிதரன் -  'வடக்கு வாசல்' (புது தில்லி)  'இலக்கிய மலர் 2008' வ் ஆசிரியர் எழுத்தாளர் பென்னேஸ்வரன்.

3.  'கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!'  - வ.ந.கிரிதரன் - தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலர், ஆழி பப்ளிஷர்ஸ்; ஆசிரியர் - 'ஆழி' செந்தில்நாதன்.

4. இரு கட்டுரைகள்: . 'அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் '  & 'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும்' - வ.ந.கிரிதரன் -  கணையாழி தொகுப்பு (1995 -2000)

5. சிறுகதை- சொந்தக்காரன் - வ.ந.கிரிதரன் - கணையாழி கனடாச் சிறப்பிதழ்

6..    'புலம்பெயர்தலும், புலம்பெயர் இலக்கியமும், தமிழரும்' - வ.ந.கிரிதரன் - கூர் ஆண்டிதழ் (2012) ஆசிரியர் - தேவகாந்தன். ( இக்கட்டுரை தமிழகத்தில் தாமரை டிசம்பர் 2012 இதழிலும் வெளியாகியுள்ளது. பின்னர் கீற்று இணைய இதழிலும் மீள்பிரசுரமாகியுள்ளது.)

7. சிறுகதை ; சாவித்திரி  ஶ்ரீலங்கன் அகதியின் குழந்தை - வ.ந.கிரிதரன் - ஞானம் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ் 

8.   கவிதை " குதிரைத் திருடர்களே!" - வ.ந.கிரிதரன்  சமகால இருமொழிக்கவிதைத்தொகுப்பு -  a 'Fleeting Infinity (VOL 1) (கணநேர எல்லையின்மை) அநாமிகா அல்ஃபபெட்ஸ் (Anaaamikaa alphabets) பதிப்பக வெளியீடு.  வெளிவந்துள்ளது. தொகுப்பாளர் - எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் (ரிஷி)

9. அறிவியற் சிறுகதை -  'நான் அவனில்லை' - அமரர் சுஜாதா அறக்கட்டளையும், ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடாத்திய (உலக ரீதியிலான) அறிவியற் சிறுகதைப் போட்டியில் வட அமெரிக்காவுக்கான ரூபா 5000 பரிசினைப் பெற்ற சிறுகதை.  ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட  'சுஜாதா நினைவுப் புனைவு 2009'  அறிவியற் சிறுகதைத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.

10. கவிதை - நவீன விக்கிரமாதித்தனின் காலம் - வ.ந.கிரிதரன் -  'புவி எங்கும் தமிழ்க் கவிதை'  (2019)வ் சாகித்திய அகாதெமி (சென்னை). தொகுப்பாசிரியர் -  எழுத்தாளர் மாலன் 

11. நாவலர் பண்ணை நினைவுகள் - வ.ந.கிரிதரன் - அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்: சொ.டேவிட் ஐயா' தொகுப்பு, வெளியீடு - சமூகம் , இயல் பதிப்பகம் (Art of Socio Publication), இலண்டன்.

12. கவிதை - கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!  - வ.ந.கிரிதரன் - (கொரோனா ஊரடங்குச் சூழல் அனுபவங்களைப் பதிவு செய்யும் 103 தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு டிஸ்கவரி புக் பலஸ் வெளியீடாக LOCKDOWN LYRICKS  என்னும் தலைப்பில் வெளியானது. அத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதை.)

13.   'திறனாய்வாளர் ஈழக்கவியின் 'பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும், மொழியியலும்'  நூல் பற்றிய சிந்தனைகள்! ' - வ.ந.கிரிதரன் - ஜீவநதி ஏ.எச்.எம். நவாஸ் (ஈழக்கவி ) சிறப்பிதழ்.

14.  எழுத்தாளர் முருகபூபதியின் 'பாட்டி சொன்ன கதைகள்' - ஜீவநதி  எழுத்தாளர் முருகபூபதி சிறப்பிதழ்.

15. எழுத்தாளர் தாமரைச்செல்வியின் தாகம் நாவல் மற்றும் அவர் பற்றிய சிந்தனைகள் - வ.ந.கிரிதரன் - ஜீவநதி தாமரைச்செல்விச் சிறப்பிதழ்

16. சிறுகதை - ஒரு மா(நா)ட்டுப் பிரச்னை - வ.ந.கிரிதரன் - பனியும், பனையும் (புலம்பெயர் தமிழ்ச்சிறுகதைகளின் தொகுப்பு) - மித்ரபதிப்பகம். தொகுப்பாசிரியர்கள்- எஸ்..பொ & இந்திரா பார்த்தசாரதி

17.  கவிதை - 'எழுக அதிமானுடா!' - வ.ந.கிரிதரன் - இக்கவிதையும் , இதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் (ஆங்கில மொழிபெயர்ப்பு - முனைவர் ஆர்.தாரணி)  , ஆஸ்திரியாவைத்  தளமாகக்கொண்டு வெளியாகும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்கான 'சொற்களும், உலகங்களும்' (Words & Worlds)  என்னும் இணைய இதழின் 'குளிர்காலம் 2024'  சிறப்பிதழில் வெளியாகியுள்ளது.  'சொற்களும், உலகங்களும்' (Words & Worlds) என்னும் காலாண்டு , இருமொழி (ஜேர்மன் / ஆங்கிலம்) இணைய இதழ் ஆஸ்திரியாவின் இலக்கிய, கலாச்சார அமைப்பின் ஆதரவுடன் வெளியாகின்றது.  புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் தம் படைப்புகள் மூலம் தொடர்பு கொள்வதற்கும், குடியேறிய நாடுகளில் வாழும் எழுத்தாளர்கள், வாசகர்கள் ஆகியோருக்குத் தம் படைப்புகளை அறிமுகப்படுத்துவதற்குமான தளமாக இவ்விணைய இதழ் விளங்குகின்றது.

18.  1. கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம் வ.ந.கிரிதரன் - (A Walk Through Corona - Wrapped Night  - ஆங்கில மொழிபெயர்ப்பு -முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் (Dr.K.S.Subramanian ). 2. கவிதை: தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை - வ.ந.கிரிதரன் -  (Liberated Bird of The Secluded Empire- ஆங்கில மொழிபெயர்ப்பு - முனைவர் ஆர்.தாரணி (Dr.R.Dharani)) -  Words & Worlds, Spring 2021

20. என் எழுத்தார்வத்தை ஊக்குவித்தவர் ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கம்!  - வ.ந.கிரிதரன் -  மூத்த ஊடகவியலாளர் 'ஈழநாடு' எஸ்.கே. காசிலிங்கம் அவர்களின் அமுத விழாவினையொட்டி வெளியான மலரில் (2025)  வெளியான கட்டுரை.

21. புகலிடத்தமிழ் நாவல் முயற்சிகள் - வ.ந.கிரிதரன் - மகுடம் கனடாச் சிறப்பிதழ்  (ஏப்ரல் - டிசம்பர் 2016)

22. சிறுகதை - வீட்டைக்  கட்டிப்பார் - வ.ந.கிரிதரன் - ஜீவநதி கனடாச் சிற்ப்பிதழ்

23. கவிதை: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? - வ.ந.கிரிதரன் - (எழுத்தாளர் யோ.புரட்சி - இலங்கை - தொகுத்த 1000 தமிழ்க் கவிதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதை.)

24. சிறுகதை: அவன் 'ஐசிஎம்'மில் வேலை செய்கின்றான்! - வ.ந.கிரிதரன் - (- எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகக் கொண்டு , ஆண்டுதோறும் வெளியாகும் இலக்கிய இதழான கூர் 2012' கலை இலக்கிய மலரில் வெளியான சிறுகதை.)

25. அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பங்களிப்பு பற்றிய குறிப்புகள் - வ.ந.கிரிதரன் - ஞானம் சஞ்சிகை (ஏப்ரல் 2018) வெளியிட்ட 'எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60' சிறப்பு மலரில் இடம் பெற்ற கட்டுரை)26.  அ.ந.கந்தசாமியின் மனக்கண் - வ.ந.கிரிதரன் - தொகுப்பிதழாக வெளியான ழகரம் 5 (ஆனி 2016) இதழில் வெளியான கட்டுரை.

26.  அ.ந.கந்தசாமியின் மனக்கண் - வ.ந.கிரிதரன் - தொகுப்பிதழாக வெளியான ழகரம் 5 (ஆனி 2016) இதழில் வெளியான கட்டுரை.

27.  'ஜான் மார்டெலி'ன் (Yann Martel) 'பை'யின் வாழ்வு (Life Of Pi)! - வ.ந.கிரிதரன் - கனடாத் தமிழ் எழுத்தாளர் இணைய மலர் 'சங்கப்பொழில்' (2015)

28.  கவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம் - வ.ந.கிரிதரன் - ஓவியா பதிப்பக' உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் 'மகாகவி' சஞ்சிகையின் 'திசம்பர்' 2017 பன்னாட்டிதற் சிறப்பிதழில் வெளியான கவிதை.

29. * யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கம் ஆண்டு தோறும் நடாத்தும் கலையரசி கலைவிழாவை முன்னிட்டு , வெளியிடும் கலையரசி சிறப்பு மலரிலும் எனது கட்டுரைகள், சிறுகதை, கவிதை ஆகியன வெளியாகியுள்ளன.

30. எழுத்தாளர் அ.இரவியின் 'கொற்றவை பற்றிக் கூறினேன்' - வ.ந.கிரிதரன் - ஜீவநதி எழுத்தாளர் அ.இரவி சிறப்பிதழ். 



இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.