இன்று நூலகம் தளத்தில் ஈழநாடு , சுதந்திரன், உதயன் போன்ற பத்திரிகைகளின் பழைய பிரதிகள் பலவற்றைப் பார்க்க முடிகின்றது. ஆனால் வீரகேசரி, சிந்தாமணி, தினபதி, தினகரன், ராதா, செய்தி, மித்திரன் போன்ற பத்திரிகைகளின் பிரதிகள் பலவற்றைக் காண முடிவதில்லை. இப்பத்திரிகைகளில் வெளியான ஆக்கங்களைத் தேடுவது சிரமமாகவுள்ளது. 

இந்நிறுவனங்கள் தமது பத்திரிகைகளின் பிரதிகளை இணையத்தில் ஆவணப்படுத்தலாம். அவற்றைப்ப் பார்க்கும் வசதியைக் கட்டணத்துக்காவது பார்க்கும் வசதியைச் செய்து தரலாம்.  இப்படிச் செய்தால் , இது தமிழ் பேசும் நல்லுலகுக்குப் பெரும் பணி செய்ததாக அமையும். அதே சமயம் இந்நிறுவனங்களும் அதன் மூலம் மேலதிக வருமானத்தைச் சம்பாதிக்க முடியும். 

எழுத்தாளர்களின் பலரின் படைப்புகள் இப்பத்திரிகைகளின் பழைய பிரதிகளில் மறைந்து கிடக்கின்றன. அவை கண்டறியப்பட்டு, வெளிப்பட வேண்டும்,  முறையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். அவற்றை எழுதிய எழுத்தாளர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறாக இதனைக் கருதலாம். இதை இந்நிறுவனங்களின் மெலதிகாரிகள் கவனத்திலெடுப்பார்களா?

[ஓவியம் - AI]