- இசை & குரல்: AI | ஓவியம்: AI -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=raMe1JIJ41g

ஒட்டகங்கள் நாங்கள். பாலையில் பயணிக்கும்
ஒட்டகங்கள் நாங்கள்.

நாளை என்ற பயணம் நாடி
வசந்தத்தை நாடித்  தொடரும் பயணம்
எங்கள் பயணம்.  எங்கள் பயணம்.

துன்பப் புயற் காற்றுகள் வீசும்.
தேகங்கள் சீர் குலைந்து விடுவதில்லை.
உறுதி குலைந்து போவதும் இல்லை.

ஒட்டகங்கள் நாங்கள். பாலையில் பயணிக்கும்
ஒட்டகங்கள் நாங்கள்.

கானல் நீர் கண்டு கண்கள்
கலங்கி விட்ட போதும் கண்
பாவையின் ஒளி பூத்து விடுவதில்லை.

நம்பிக்கைக் கோல் பற்றித்  தொடர்வோம்.
எண்ண ஒட்டகங்கள் மேல் பயணிப்போம்.
வசந்தம் நாடிப் பயணம் தொடரும்.