எனது படைப்புகள் பற்றி வெளியான ஆய்வுகள் பற்றி நானறிந்த தகவல்கள் இவை. தமிழகம் , இலங்கையில பட்டப்படிப்பு மாணவர்களால், பேராசிரியர்களால் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை பற்றிய விபரங்கள் கீழேயுள்ளன. இவர்கள் அனைவருமே என் படைப்புகளூடு என்னைக் கண்டடைந்தவர்கள். நான் நேரில் அறிந்தவர்கள் அல்லர். படைப்புகள் தம் வாசகர்களைக் கண்டடையும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை மிக்கவன் நான். அவ்விதமான படைப்புகளே நின்று பிடிக்கும் என்பதிலும் நம்பிக்கை மிக்கவன் நான்.
 
நம்மவர்களில் ஒரு குறைபாடு. நாடறிந்தவர்களாகத் தாம் கருதும் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் தம் படைப்புகளைப் பற்றி அல்லது ஏனையவரின் படைப்புகளைப் பற்றிக் கூறவேண்டும். அவ்விதம் கூறினாலே அவை தரமானவை என்றொரு கருத்தோட்டமும் கொண்டவர்களாக அவர்கள் இருப்பதையே இவ்விதமான உளவியற் போக்கு எடுத்துக்காட்டுகின்றது. இது தவறான நிலைப்பாடு. அண்மையில் நடந்த எனது நூல்கள் பற்றிய நிகழ்வில் கூட தலைமை வகித்த எழுத்தாளர் பா.அ.ஜயகரன் தனது உரையில் 'எனது புகலிட அனுபவக் கதைகள் முக்கியமானவை. அவை பற்றிப் பலரும் எழுதுவதில்லை. அவர்களுக்குத் தான் கூறுவது என் கதைகளைப்பற்றி எழுதுங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இக்கூற்றுக்கான காரணமும் மேற்படி உளவியற் போக்கே. உண்மையில் எனது படைப்புகள் பற்றி , குறிப்பாகப் புகலிடப் படைப்புகள் பற்றி நிறையவே ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஆனால் அவர் கருதும் 'இலக்கிய மேதை'களின் எழுத்துகளில் அவை பற்றிக் காணவில்லையென்பதால் ஏற்பட்ட ஜயகரனது ஆதங்கமே அது.

அவர் கருதும் 'இலக்கிய மேதைகள்' . 'இலக்கிய ஆய்வாளர்'களில் பலரின் நோக்கம் தம் புலமையை வெளிப்படுத்துவதுதான். தமக்குக் கீழே சீடர்களைச் சேர்த்து அவர்களின் நிழலில் தம்மைப் பலப்படுத்துவதுதான். அப்புலமையை வெளிப்படுத்த தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்களாக எழுத்தாளர்களை அவர்கள் பயன்படுத்துகின்றார்கள். உண்மையில் எழுத்தாளர்கள் இவை பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளக் கூடாது. எழுத்தை , வாசிப்பை மேலும் மேலும் அதிகரித்து, எழுதிக்கொண்டேயிருக்க வேண்டும். உங்கள் படைப்புகள் உண்மையிலேயே தரமாகவிருந்தால், வாசகர்களுக்கு இன்பத்தைத் தருவதாகவிருந்தால், ஏதோ ஒரு வகையில் பயன்படுபவையாகவிருந்தால் நிச்சயம் அவை சரியான வாசகர்களைச் சென்றடையும்.
 
1. The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora:A Reading of Selected Short Stories of V.N. Giridharan By Dr.Gnanaseelan Jeyaseelan.
 
2. Fractured Self: A Study of V.N. Giritharan’s Selected Short Stories. A dissertation submitted to the University of Madras in partial fulfilment of the requirements for the award of the degree of Master of Philosophy in English under choice based credit system By M. Durairaj
 
3. ‘Seeking The Invisible Humanness in an Alien Land’ A review of the diasporic issues as revealed through the selected Short stories of V.N. Giridharan By Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women -
 
4. Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan By Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women
 
5. முனைவர் வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' ஆய்வு நூலில் எனது படைப்புகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அக்கட்டுரை ஏழாந்திணை இலக்கிய மலரிலும் வெளிவந்துள்ளது.
 

6.. 'வ.ந. கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியப் பதிவுகள்' என்னும் தலைப்பில் 'ஆய்வியல் நிறைஞர்'(M.Phil) பட்டப்படிப்புக்காக க.அங்கம்மா என்னும் மாணவியால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை பற்றிய தகவல்கள் கீழே:
 
நெறியாளர் : முனைவர் வே.மணிகண்டன் | ஆய்வாளர் பெயர் : க. அங்கம்மா
இயல் ஒன்று : புலம்பெயர்ந்தோர் இலக்கியம்-ஓர் அறிமுகம்
இயல் இரண்டு : வ.ந. கிரிதரனின் படைப்புலகம்
இயல் மூன்று : வ.ந.கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கிய பதிவுகள்
இயல் நான்கு : வ.ந.கிரிதரனின் நாவல்களில் தாயக நினைவுகள்
இயல் ஐந்து : வ.ந.கிரிதரனின் நாவல்களில் அயலகப்பதிவுகள்
 

7. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (Manonmaniam Sundaranar University) தனது ஆங்கிலத்துறையில் , முனைவர் பட்டப்படிப்புக்கான படிக்க வேண்டிய புகலிடத் தமிழ் நாவல்களில் ஒன்றாக எனது குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்ப்பில் வெளியானது) பரிந்துரை செய்துள்ளது.
 
8. முனைவர் ஆர். சீனிவாசனை ஆசிரியராகக் கொண்டு இணையத்தில் வெளியாகும் 'புதிய பனுவல்' சர்வதேசச் சஞ்சிகையில் The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora: A Reading of Selected Short Stories of V.N. Giridharan என்னும் முனைவர் ஞானசீலன் ஜெயசீலனால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரை பிரசுரமாகியுள்ளது.
 
9. கலாநிதி சு.குணேஸ்வரன் எனது 'கட்டடக்கா(கூ) ட்டு முயல்கள்' பற்றி விரிவானதோர் உரையினை அண்மையில் இலக்கியவெளி நடத்திய இணையக் கருத்தரங்கில் ஆற்றியிருந்தார்.
 
10. 'The Dark Night of the Soul : A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan' by Dr.R.Dharani ('Scholarly International Multidisciplinary Print Journal' ஆய்விதழின் ஜனவரி-பெப்ருவரி 2017 இதழில் பிரசுரமாகிய ஆய்வுக்கட்டுரை)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.