புதியதொரு இணையத்தளம் சிங்கள மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பெயர்  விமர்சி.காம். விமர்சி என்பது தமிழ் , சிங்கள மொழிகளில் ஒரே அர்த்தம் தரும் சொல். விமர்சிப்பது என்பது பொருள். இது பற்றி அதன் இணையத்தளத்தில் மும்மொழிகளிலும் விபரிக்கப்பட்டுள்ளது. அதன் தமிழ் விபரிப்பு வருமாறு:

'“விமர்சி” கல்வி மற்றும் ஆய்வு தொடர்பான அறிவினை பகிர்ந்துகொள்வதனை நோக்காகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற கல்வியியல் இணையத்தளமாகும். இங்கு வெளியிடப்படும் கட்டுரைகளின் பொறுப்பு, கருத்து, கருத்தியல் மற்றும் அப் புலமைச் சொத்தின் உரிமைகள் என்பன குறித்த கட்டுரையின் எழுத்தாளர், ஆய்வாளர், அல்லது நேர்காணப்படுபவருக்கு உரித்துடையதாகும். புகைப்படங்கள் அந்தந்த புகைப்படக் கலைஞர்கள், அல்லது இணையத்தளங்களின் பதிப்புரிமை பெற்றவையாகும்."

இதன் இணையத் தளத்தில் எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு பற்றிய ஆய்வு நூல் பற்றியும், எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்தவின் சிங்கள மொழிபெயர்ப்பு பற்றியும் கட்டுரையொன்றும் வெளியாகியுள்ளது.  அவ்வாய்விலிருந்து சில பகுதிகளும் வெளியாகியுள்ளன.

இத்தளத்தில் தமிழ் ஆய்வாளர்களின் படைப்புகள் பற்றிய ஆக்கங்களுக்கென 'மஞ்சரி' என்னுமொரு பகுதியுமுள்ளது. இத்தளத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய  தமிழ் ஆய்வுகள் பற்றியும், ஆய்வாளர்கள் பற்றியும் உங்கள் ஆலோசனைகளை, பரிந்துரைகளை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

இவ்விணையத்தள முகவரி - https://www.vimarshee.com

இதன் முகநூல் மற்றும் 'ட்விட்டர் பக்கங்களுக்கான இணையத்தள முகவரிகள் வருமாறு:

Facebook   https://www.facebook.com/profile.php?id=100087408810830

Twitter  https://twitter.com/vimarshee?t=fsoceL2vzerO3LOdhlsnTQ&s=09

எழுத்தாளர் காத்யான அமரசிங்க, எஸ்.எஸ்.சரத் ஆனந்த போன்றவர்கள் உழைப்பில் உருவாகியுள்ள இத்தளம் மேலும் வளர்ச்சியடைய,  இலங்கையின் பல்வேறு இனங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வை மேலும் வளர்த்திட  வாழ்த்துகின்றோம்.