'நடு' இணைய இதழின் ஆசிரியரும், எழுத்தாளர் வடகோவை வரதராஜன் மற்றும் முகநூல் நண்பர் தியோகு வளவன் ஆகியோரின் சகோதரரும் ,என் முகநூல் நண்பர்களில் ஒருவருமான எழுத்தாளர் கோமகன் (தியாகராஜா இராஜராஜன் - Thiagarajah Rajarajan) அவர்களின் மறைவுச் செய்தியினை வடகோவை வரதராஜன் அவர்களின் முகநூற் பதிவின் மூலம் அறிந்து துயருற்றேன்.

இவரது 'நடு' இலக்கியப் பங்களிப்பு புலம்பெயர் தமிழர்தம் இலக்கியப் பங்களிப்பில் முக்கியமானது. இவர் முக்கியமான சிறுகதையாசிரியர்களிலொருவர். இவரது 'முரண்' சிறுகதைத்தொகுப்பு அவ்வகையில் முக்கியமானது. அதற்கு நான் எழுதிய குறிப்பு ஒன்றும் 'நடு' 'பதிவுகள்' , இணைய இதழ்களில் வெளியானது. இவை தவிர 'நடு' வெளியீடுகளாக எழுத்தாளர்கள் பலரின் நூல்களை வெளியிட்டு வந்தார். எழுத்தாளர் அலெக்ஸ் பரந்தாமனின் 'ஒரு பிடி அரிசி' சிறுகதைத்தொகுப்பு வெளிவரக் காரணமாகவிருந்தார் என்பதும் நினைவு கூரத்தக்கது.
 
முகநூலில் எப்பொழுதும் வேடிக்கையாகச் 'சுறுக்க'ராக வலம் வந்து பதிவுகளையிடுவதன் மூலம் அனைவரையும் இன்பத்திலாழ்த்தி வந்தவர் இவ்விதம் இவ்வளவு விரைவில் நம்மையெல்லாம் துன்பத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்று விடுவாரென்று எண்ணியிருக்காத சூழலில் இவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியையும், துயரையும் ஒருங்கே தருகின்றது.

இவரது மறைவால் வாடி நிற்கும் சகோதரர்கள், குடும்பத்தவர்கள், நண்பர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் அனைவர்தம் துயரில் நானும் பங்கு கொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்.

நடு இணைய இதழ்: https://naduweb.com/
 
எழுத்தாளர் கோமகனின் 'முரண்' சிறுகதைத்தொகுப்பு பற்றிய விமர்சனக்குறிப்பு: 'முரண் முரண்களை உள்ளடக்கிய சிறந்ததொரு தொகுப்பு!  வாசிக்க
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.