இலக்கியவெளி சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெற்ற 'புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைத்தொகுப்புகள் சில' என்னும் தலைப்பில் இடம் பெற்ற நிகழ்வில் முனைவர் சு..குணேஸ்வரன அவர்கள் அண்மையில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளியான எனது சிறுகதைத்தொகுதியான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' பற்றி ஆற்றிய உரைக்கான காணொளியிது.
முனைவர் சு.குணேஸ்வரன் புலம்பெயர் மற்றும் புகலிடத்தமிழ்ப்படைப்புகள் பற்றி ஆய்வுக்கட்டுரைகள் பல எழுதியவர். அத்துறையில் ஆய்விலீடுபட்டு முனைவர் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு சிறந்த கவிஞரும் கூட.
 
நிகழ்வினை நடத்திய இலக்கிய வெளி சஞ்சிகைக்கும், அதன் ஆசிரியரும், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவருமான எழுத்தாளர் அகிலுக்கும், சிறப்பானதோர் உரையினை வழங்கிய முனைவர் சு. குணேஸ்வரன் அவர்களுக்கும் நன்றி.
 
உரையினைக் கேட்க: https://youtu.be/8sX58cBU8aw