சிரித்திரனின் அண்மைய இதழ்களைப் பார்த்தேன். 'டொராண்டோ'வில் முருகன் புத்தகசாலையில் சிரித்திரன் சஞ்சிகையை நீங்கள் வாங்கலாம். சிரித்திரன் சஞ்சிகையின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் ஆசிரியர் சுந்தர். (சிவஞானசுந்தரம்). அவர் சிறந்த கேலிச்சித்திரக்காரராக இருந்தது முக்கிய காரணம். தன் திறமையை முழுமையாக அவரால் அச்சஞ்சிகைக்கு வழங்க முடிந்தது. கேலிச்சித்திரங்களே சிரித்திரன் சஞ்சிகையின் இதயமென்று கூறலாம்.அதற்குப்பின்தான் ஏனைய அம்சங்கள் எல்லாம். ஏனென்றால் சிரித்திரனின் பிரதான நோக்கமே அனைவரையும் சிரித்திருக்கச் செய்வதுதான்.

புதிதாக வெளிவரத்தொடங்கியுள்ள சிரித்திரன் சஞ்சிகையின் இதழ்களைப் பார்த்தபோது திருப்தியே ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம் சிரித்திரனுக்கு நல்லதோர் ஓவியர் கிடைத்துள்ளார். ஓவியர் பிருந்தாயினி பிரபாகரனின் கைவண்ணத்தை இதழ்கள் எங்கும் காண முடிகின்றது. அதே போல் ஆசிரியர் குழுவிலும் நகைச்சுவை ததும்ப எழுதும் ஆற்றலுள்ளவர்கள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. அது சிரித்திரன் சஞ்சிகையின் வெற்றிக்கு நிச்சயம் உதவும்.

தேவைக்கேற்ப வண்ண ஓவியங்களை உள்ளடக்கிய பக்கங்கள் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. சிரி கதையொன்றை எழுதியவரின் பெயரை ஓரிடத்தில் காணவில்லை. எழுத்தாளர்களுக்கு உரிய கெளரவம் கொடுக்கப்பட வேண்டும். ஆக்கங்களில் அவர்களின் பெயர்கள் முக்கியத்துவத்துடன் பிரசுரிக்கப்படுதல் அவசியம். சஞ்சிகை முன்சிரிப்பு, பின் சிரிப்பு, புலம்பெயர் சிரிப்பு எனப் பலவகைச்சிரிப்புகளை உள்ளடக்கிய கேலிச்சித்திரப் பக்கங்களை உள்ளடக்கியுள்ளது பாராட்டப்பட வேண்டிய முக்கிய அம்சம்.

சிரித்திரனில் சிறுவர்களுக்கும் இரு பக்கங்கள் ஒதுக்குங்கள். அவற்றை அழகான கதை, கவிதை, துணுக்கு, ஓவியம் கொண்டு நிறையுங்கள். நிச்சயம் வரவேற்பிருக்கும். வாழ்த்துகள். மேன்மேலும் சிரித்திரன் தொடர்ந்து வெற்றிநடை போட்டிட வாழ்த்துகள்.

சிரித்திரனுடன் தொடர்பு கொள்ள:

தொலைபேசி: +94 21 315 1140
வாட்ஸ் அப் : +94 75 741 7332
மின்னஞ்சல்:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.       
இணையத் தளம்: http://www.siriththiran.com      

 

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.