"இழந்த மண்ணும் புகுந்த மண்ணுமாய் வாழ்வின் இருத்தலையும் வலிகளையும் பிசைந்து தருகின்றன இச்சிறுகதைகள்." - எழுத்தாளர் திக்குவல்லை கமால் , அண்மையில் வெளியான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத்தொகுதி பற்றி.

எழுத்தாளர் திக்குவல்லைகமால் அவர்கள் தனது முகநூற் பக்கத்தில் அண்மையில் ஜீவநதி பதிப்பகத்தின் 194ஆவது வெளியீடாக வெளிவந்த எனது சிறுகதைத்தொகுப்பான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் ' பற்றி குறிப்பின்றினை எழுதியுள்ளார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அவரது ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி. 


திக்குவல்லை கமால் அவர்களின் முகநூற் குறிப்பு கீழே:

புது வரவு - கட்டடக் கா( கூ)ட்டு முயல்கள் - திக்குவல்லை கமால்-

* யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புகலிட எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் புதிய நூல்  கட்டடக் கா( கூ)ட்டு முயல்கள் '- இதில் இரண்டு குறுநாவல்களும் அடங்கும். இவர் ' பதிவுகள் ' இணைய இதழை நடாத்துவதோடு மின்னூல்கள் பலதையும் வெளியிட்டு வருகிறார்.ஆங்கிலத்திலும் எழுதவல்லவர்.
கனடாவில் வாழும் புகலிட தமிழ் அகதி ஒருவனின் அநுபவங்களே கதைகளாய் உருப் பெற்றுள்ளதாய் நூலாசிரியர் தெரிவிக்கிறார். சுண்டெலிகள், பொந்து பறவை...கலாநிதியும் வீதிமனிதனும், காங்ரீட் வனத்துக் குருவிகள், என்பன சில கதைத் தலைப்புக்கள். இழந்த மண்ணும் புகுந்த மண்ணுமாய் வாழ்வின் இருத்தலையும் வலிகளையும் பிசைந்து தருகின்றன இச்சிறுகதைகள்.

எளிமையான வாசிப்புக்குரிய சின்னச் சின்னக் கதைகள் ஒவ்வொன்றும் நாலைந்து பக்கங்களுக்கு மேல் போகவில்லை.சுள்ளென்று மனதைத் தொற்றி சிந்திக்க வைப்பதில் கதைகள் ஒன்றையொன்று விஞ்சவில்லை.ஆம்,இருபத்தைந்து கதைகள். 174 பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பு ஒரு ஜீவநதி வெளியீடு.

நன்றி: https://www.facebook.com/dickwellekamal.kamal/posts/4830198200325033

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.