அதற்கண்மையில்  சிறியதொரு முகப்புடன் கூடிய வைரவர் சிலையொன்றுமிருந்தது. அதில் 'இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மன்னர் வழி காத்துப் பூஜித்த நல்லை தேரடிப் பதியுரை பண்டார மாளிகை வாசல் ஶ்ரீ பைரவர் ஆலய ஆதிமூலம் உள்ளே' என்னும் வசனங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. நான் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியதற்கான் காலகட்டம் 1979-1981. பின்னர் அத்தகவல்களின் அடிப்படையில் தொடராகத் தாயகம் (கனடா) சஞ்சிகையில் எழுதினேன். அத்தொடரே பின்னர் ஸ்நேகா (தமிழகம்) & மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளியானது.

ஆய்வாய்வுக் கட்டுரைகளை முதலில் ஈழநாடு வாரமலரில் எழுதினேன். பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகக் கட்டடக்கலைச் சரித்திரப் பாடத்துக்காகவும் ஆய்வுக்கட்டுரையாகச் சமர்ப்பித்தேன். நான் எழுதியபோது அப்போது எனக்குக் கிடைத்த நில அளவைத்திணைக்கள வரைபடங்களையும் பாவித்திருந்தேன். அண்மையில் கூகுள் மூலம் அப்பகுதியைத் தேடியபோது அப்பகுதியே முழுமையாக மாற்றமடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக யாழ் பருத்தித்துறை வீதி நல்லூர் ஆலயத்துக்கருகாக வந்து , முத்திரைச் சந்தை நோக்கித் திரும்பும் பகுதியில் தென்னந்தோப்பொன்றிருந்தது (சங்கிலியன் வீதிக்கும், யாழ் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் மேற்குத்திசையில்) , பருத்தித்துறை வீதியை நோக்கிய அவ்வளவுப் பகுதியில்  பண்டாரமாளிகை என்றொரு  தூணுமிருந்தது.

அதற்கண்மையில்  சிறியதொரு முகப்புடன் கூடிய வைரவர் சிலையொன்றுமிருந்தது. அதில் 'இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மன்னர் வழி காத்துப் பூஜித்த நல்லை தேரடிப் பதியுரை பண்டார மாளிகை வாசல் ஶ்ரீ பைரவர் ஆலய ஆதிமூலம் உள்ளே' என்னும் வசனங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.  அதை விபரிக்கும் புகைப்படமிது. என் பெட்டிக்கமராவால் அப்போது எடுக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படம். கூகுள் வரைபடம் மூலம் பார்த்ததில் இதற்கான அடையாளத்தையே காண முடியாத அளவுக்கு அப்பகுதியே மாறியிருப்பதை அவதானிக்க முடிந்தது. யாராவது அப்பகுதியில் இப்போதும் இச்சிலையுள்ளதா என்பதை அறிந்து கூற முடியுமா? பண்டாரமாளிகை தூணையும் நான் கூகுள் வரைபடங்களில் காணவில்லை.

குறிப்பாக யாழ் பருத்தித்துறை வீதி நல்லூர் ஆலயத்துக்கருகாக வந்து , முத்திரைச் சந்தை நோக்கித் திரும்பும் பகுதியில் தென்னந்தோப்பொன்றிருந்தது (சங்கிலியன் வீதிக்கும், யாழ் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் மேற்குத்திசையில்) , பருத்தித்துறை வீதியை நோக்கிய அவ்வளவுப் பகுதியில்  பண்டாரமாளிகை என்றொரு  தூணுமிருந்தது.

எனது நல்லூர்ப்பிரதேச சிறு முகப்புடன் கூடிய வைரவர் சிலை பற்றிய மேற்படி பதிவுக்கு நண்பர் கணேஸ்வரன் வீரகத்தி (Ganeshwaran Veerakathy) அவர்கள் பின்வரும் தகவலை அனுப்பியிருந்தார்:

"முத்திரைச்சந்தைக்கு அருகாமையில் பருத்தித்துறை வீதி வளைவில் தாங்கள் குறிப்பிட்ட வைரவர் அமைந்திருந்த் இடத்தின் இன்றைய தோற்றம் இதுதான்.வைரவர் சிலையோ அல்லது கோயில் இருந்த அடையாளம் எதுவுமின்றி இடிபாடுள்ள இரு சிறு கட்டிடங்கள் காணப்படுகின்றன. இவ்விடத்திற்கு உள்ளே செல்ல முடியாதவாறு வீதிஓரமாக தகர வேலி அமைக்கப்பட்டுள்ளது.வேலிக்கு மேலால் எடுக்கப்பட்ட படம் இது.மேற்படி நிலைமை தொடர்பில் நான் கேள்விப்பட்டது  யாதெனில் மேற்ப்டி கோயிலைப் பராமரித்து வந்தவர் கோயிலுக்குரிய நிலத்தைத் தனக்குச் சொந்தமாக்க முயற்சிகள் எடுத்து வந்ததாகவும் இதை அறிந்த நல்லூர் கந்தசாமி கோயில் நிர்வாகம்  இவ்விடத்தில் இருந்தவைகளை அப்புறப்படுத்தி அவற்றை இந்த வளவினுள் இருக்கும் இன்னுமொரு வைரவர் கோயிலில் வைத்துள்ளதாகவும் அறியக்கிடக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட தென்னந்தோட்டம் இருந்த காணி நல்லூர் கோயிலுக்குரியது..இக் காணியின் ஒரு பகுதி நல்லூர் பிரதேச செயலகத்திற்கும் இன்னுமொரு பகுதி யாழ் மநகர சபைக்கும் வழங்கப்பட்டு விட்டது.இக் காணிடின் பெயரும் இளைய குமாரன் மாளிகை தான்.நான் கடந்த மூன்று மாதங்களாக முகநூலில் கருத்திடுவதைத் தவிர்த்து வருகிறேன்.அதனாலேதான் மெசெஞ்சரில் இப் பதிவு."

வைரவர் சிலையிருந்த பகுதியின் இன்றைய தோற்றம்.

இத்தகவலுடன் வைரவர் சிலையிருந்த பகுதியின் தற்போதைய நிலையினைப் பிரதிபலிக்கும் புகைப்படத்தினையும் அனுப்பியுள்ளார்.  இதற்கு முன்னரும் அப்பகுதிக்காணிப்பெயர்கள் பற்றிய எனது வேண்டுதல்களுக்கு அவர் உரிய தகவல்களை வழங்கியிருந்தார். அதனையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.