2015இல் பேராசிரியர் John Mearsheimer நிகழ்த்திய 'உக்ரைன் ஏன் மேற்குலகத்தின் தவறு? ' என்னும் தலைப்பிலான உரையிது. எவ்வளவு தீர்க்கதரிசனம் மிக்க உரை என்பதை இன்றுள்ள ருஷ்யா-உக்ரைன் பிரச்சினை எடுத்துக் காட்டுகின்றது., யானை பார்த்த குருடர்களாகக் கருத்துகளை எடுத்துரைக்கும் பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்களுக்கிடையில் உண்மையாக யானையை முழுமையாகக் கண்டு கொண்ட மனிதராகப் பேராசிரியரைக் காண்கின்றேன். ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய உரையிது.
 
இன்று உக்ரைனில் ஏற்பட்டுள்ள  நிலைக்கு முழுமுதற்  காரணம் மேற்குலகத்தின் குறிப்பாக அமெரிக்காவின் உக்ரைன் மீதான அணுகுமுறைதான். இவ்வுரையில் அமெரிக்காவின் இவ்விதமான அணுகுமுறை எதனைக் கொண்டு வரும் என்று எச்சரித்தாரோ அது இன்று நடைபெறுவதைக் கண் முன்னால் காண முடிகின்றது. இவ்வுரையில் பேராசிரியர் சுட்டிக்காட்டும் இன்னுமொரு விடயமும் என் கருத்தைக் கவர்ந்தது. அது: மேற்குலகம் எவ்வளவுதான் பொருளாதாரத்தடைகளை விதித்தாலும் ரஷ்யர்கள் அவற்றைப் பொருட்படுத்தமாட்டார்கள். ஏனென்றால் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையான அவர்களது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டுள்ளது. பாதுகாப்பா அல்லது பொருளாதாரமா என்று பார்க்கையில் பாதுகாப்பே பிரதானமாகவிருக்கும். உண்மையான கூற்று. அதனால்தான்  இன்று பெரும்பாலானா ருஷ்யர்கள் விளாடிமீர் பூடினின் பின்னால் அணி திரண்டு நிற்கின்றார்கள்.