பி.பி.சி யின் தொலைக்காட்சியில் ஜோர்ஜ் அழகையா என்ற ஆங்கிலச் செய்தியாளர் தோன்றும்போது அவர் இலங்கையர் என்ற ஆர்வத்தோடும் பெருமையோடும் அவருடைய செய்திகளை அக்கறையோடு நான் பார்ப்பதுண்டு. இலங்கைத் தமிழர் ஒருவர் பி.பி.சியின் தொலைக்காட்சியில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றுவது என்பது மிக மிக அபூர்வமான நிகழ்வாகும்.

இலங்கையில் 1958 ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டம் அமுலுக்கு வந்தபோது இந்த நாடு தமிழர்களுக்குப் பாதுகாப்பானதல்ல என்று கருதி ஜோர்ஜ் அழகையாவின் தந்தை பொறியியலாளராக கானாவில் தொழில் தேடிச் சென்றார். ஆறு வயதில் தனது ஆரம்பக் கல்வியை கானாவிலே பயின்ற ஜோர்ஜ் அழகையா போட்ஸ்மவுத்திலுள்ள சென்.ஜோன்ஸ் கல்லூரியில் தனது இரண்டாம் நிலைக் கல்வியைத் தொடர்கிறார். அங்கு கூடைப்பந்தாட்டக் குழுவின் தலைவராகவும், பாடசாலைச் சஞ்சிகையின் பத்திராதிபராகவும், இல்ல மாணவர் தலைவராகவும் அவர் சிறப்புப் பெற்றிருந்தாலும் உயர் தரத்தில் போதுமான தகுதியைப் பெற்றிருக்கவில்லை. ‘உனது பெற்றோர்கள் உன்னை இங்கே அனுப்பி வைத்திருப்பது நீ கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காகவே’ என்று தனது கல்வி குறித்துச் சுட்டிக் காட்டிய பிறதர் டேமியன் அவர்களை தான் மறப்பதற்கு இல்லை என்கிறார் அழகையா. அக்கல்லூரியில் தனக்கு ஆங்கில ஆசிரியராக இருந்த டேவிட் செப்மான் (னுயஎனை ஊhயிஅயn) சிபார்சு செய்ததையடுத்தே அவர்; டேர்ஹார்ம் (னுரசாயஅ) பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கிறார். பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றபின் ‘ளுழரவா’ என்ற தீவிர அரசியல் கருத்துக்களைக் கொண்ட ஆங்கிலப் பத்திரிகையில் தென்னாபிரிக்கப் பத்திரிகையாளராக அவர் ஏழு ஆண்டு காலம் பணியாற்றியிருக்கிறார்.

பத்திரிகைத் தொழில் என்பதில் பட்டதாரிகள் என்பவர்கள் வெறும் அருந்தலாகவே நுழைந்திருந்த காலத்தில் தனது பத்திரிகையின் அறிவிற்கு முக்கிய நெறியாளர்களாகத் திகழ்ந்த ஜோன் பற்றஷன் (துழாn Pயவவநசளழn)இ டேவிட் ஃபரேட் (னுயஎனை குயசசநன) ஆகிய இருவரையும் ஜோர்ஜ  அழகையா நினைவு கூருகின்றார். பத்திரிகைத் துறையின் நெளிவு சுழிவுகளை அவர்கள் தனக்கு எடுத்துக் கூறிய திறனை அழகையா வியந்து போற்றுகின்றார். அதற்குப் பின் பி.பி.சியின் உலகச் சேவையில் பணியாற்றிய காலத்தில் தென்னாபிரிக்கா மீதான தனது பார்வையை எப்போதுமே கூர்மைப்படுத்தி வந்திருக்கிறார். ஜோர்ஜ் அழகையா சிறந்த ஆங்கில செய்தி அறிவிப்பாளர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரும்இ மனித அபிமானியும் என்பதை அவரது ‘யு pயளளயபந வழ யுகசiஉய’ என்ற ஆங்கில நூல் மிக அழகாக வெளிப்படுத்துகிறது. ஜோர்ஜ் அழகையாவின் இந்த நூல் குறித்த விமர்சனத்தை விமர்சகர் திரு.மு. நித்தியானந்தன் தீபம் தொலைக்காட்சியில் 5 வாரங்களாகத் தொடர்ந்து மேற்கொண்டு இந்த நூலைத் தமிழ் நேயர்களுக்கு மிக மிகப் பரிச்சயமான ஒரு நூலாக ஆக்கியிருந்தார். ஜோர்ஜ் அழகையா அறிவிப்பாளராக மாத்திரமே அறிந்திருந்த எங்களுக்கு இந்த விமர்சனம் அவரை முக்கிய எழுத்தாளராக எங்களுக்கு அறிமுகப்படுத்தியது.

ஜோர்ஜ் அழகையா மூன்று கண்டங்களுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கின்றார். இலங்கையின் மட்டக்களப்பைப் பூர்வீகமாகக் கொண்ட ஜோர்ஜ் அழகையா ஐந்து வயதில் தனது தந்தையாரின் உத்தியோகத்தை அடுத்து கானாவிற்குப் புலம் பெயர்ந்திருக்கிறார். அங்கிருந்து இங்கிலாந்தின் ஹம்ப்சயரின் சென். ஜோன்ஸ் கல்லூரியில் பயின்று டேர்ஹார்ம் பல்கலைக்கழகத்தில் அரசியலைப் பிரதான பாடமாகப் பயின்று பட்டதாரி ஆனார். பின்னர் ளுழரவா என்ற மூன்றாம் உலக சஞ்சிகையில் ஏழு ஆண்டு காலமாக பணியாற்றியபின் 1989ம் ஆண்டு பி.பி.சி யில் அறிவிப்பாளராக இணைந்தார். றுவண்டாவில் இடம்பெற்ற இனப் படுகொலைகள். தென் ஈராக்கில் அரபுக்களின் நிலை. ஆப்கானிஸ்தான், லைபீரியா. சியாரா லியோன், சோமாலியா ஆகிய நாடுகளின் உள்நாட்டு யுத்தங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆளுமையோடு கூடிய பதிவுகளை அவர் மேற்கொண்டார்.

நெல்சன் மண்டேலா, டெஸ்மன்ட் ருற்று, ஐ.நா. செயலாளர் கோபி அனான் ஆகிய ஆபிரிக்க பெருந்தலைவர்களுடன் பேட்டிகளை மேற்கொண்ட தனித்துவம் கொண்டவர் அவர்;. பிறப்பால் ஆசியக் கண்டத்தையும், .வளர்ப்பால் ஆபிரிக்கக் கண்டத்தையும், இன்று வாழும் தேசத்தால் ஐரோப்பாவையும் வரித்துக் கொண்டிருக்கும் ஜோர்ஜ் அழகையா மூன்று கண்டங்களின்; சொந்தக்காரராகத் திகழ்கின்றார். குர்திஷ் இன மக்களின் உரிமை மீறலுக்கான சிறந்த ஆவணத்தை ஜோர்ஜ் அழகையா மேற்கொண்டிருக்கிறார். சர்வதேசரீதியாக மிகச் சிறந்த செய்தித் தொகுப்பாளராக சர்வதேச ஊடகங்களால் பல்வேறு விருதுகளை ஜோர்ஜ் அழகையா பெற்றிருக்கிறார். யு pயளளயபந வழ யுகசiஉய என்ற நூலில் ஆபிரிக்கக் கண்டத்தின் துயர் நிறைந்த அவலங்களை அவர் எவ்வாறு விபரிக்கிறார் என்பதை விமர்சகர் மு. நித்தியானந்தனின் தொலைக்காட்சி விமர்சனங்கள் நெஞ்சை நெகிழ வைக்கும் முறையில் எடுத்துக்காட்டியிருந்தன. இந்த நூலை எழுதும்போது ஜோர்ஜ் அழகையா “நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்றும் இன்றைய ஆபிரிக்காவைப் பற்றி நீங்கள் எந்த அளவு தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டும் என்கிறேன்” என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்;. தன்னை ஒரு ஆபிரிக்கக் குழந்தையாக கருதுகின்ற ஜோர்ஜ் அழகைiயாவின் பரந்துபட்ட மனிதாபிமான உணர்வை இந்த நூலில் நாம் சந்திக்கிறோம். ஆபிரிக்கக் கண்டம் என்பது காட்டுமிராண்டிப் பழங்குடிகளின் கண்டமென்றும்இ பேராசை கொண்ட ஈவிரக்கமற்ற அரசியல் தலைவர்களின் தேசமென்றும் சித்தரிக்கப்படுவதை நான் நிராகரிக்கின்றேன் என்று ஜோர்ஜ் அழகையா கூறுகின்றார். சோமாலியாவில் உள்நாட்டு யுத்தம், அந்த நாட்டின் கடுமையான பஞ்சம், ருவாண்டாவின் கொடூரமான இனப்படுகொலைகள், லைபீரியா சியாரா லியோன் ஆகிய நாடுகளின் உள்நாட்டு யுத்தங்கள், சயரேயின் மோபுட்டுஇ சீக்கோவின் வீழ்ச்சி, மொசாம்பிக்கின் பாரதூரமான வெள்ள அனர்த்தங்கள் ஆகியவைபற்றி மனிதாபிமானத்தோடு கூடிய விவரங்கள் யாவும் நெஞ்சை உறையப் பண்ணும் விதத்தில் ஜோர்ஜ் அழகையா இந்த நூலில் சித்திரிக்கின்றார்.

ருவண்டாவின் அகதி முகாம்களில் இடம்பெற்ற கொடூரங்களையும் ஒவ்வொரு நாளும் கொலராவாலும்இ பட்டினியாலும் மூவாயிரம் குர்டிஷ் அகதிகள் இறந்து கொண்டிருப்பதையும் 1994 ஆம் ஆண்டு ஜோர்ஜ் அழகையா பி.பி.சியில் எடுத்துக் காட்டிய போது உலகம் அதிர்;ந்தது. ருவண்டாவில் சர்வதேசரீதியான நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு ஜோர்ஜ் அழகையாவின் இந்த அறிக்கைகள் அடிப்படையாக அமைந்தன. சோமாலியாவின் கோரமான நிலைமைகளையும் பின்னர் இலங்கையில் சுனாமி அனர்த்தத்தின்போதும் ஜோர்ஜ் அழகையா அங்குள்ள நிலைமைகளை சித்திரிக்கும் விதத்தை யாரும் மறப்பதற்கில்லை.

ஜோர்ஜ் அழகையாவின் நூல் பற்றிய அறிமுகத்தின் பின்னர் அவர்; மீதான அபிமானமும்இ மரியாதையும் என்னில் ஆழமாகவே வேரூன்றி இருந்தன. இந்த நிலையில் ஹரோ தமிழ் பாடசாலையின் 21 ஆவது ஆண்டின்; தமிழ் விழாவில் பிரதம அதிதியாக ஜோர்ஜ் அழகையா கலந்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தி என் நெஞ்சில் தேனாக இனித்தது. 2008 ஆம் ஆண்டு யூலை மாதம் 13 ஆம் திகதி ஹரோ தமிழ்பாடசாலையின் பிரதம அதிதியாக அவர் வருகை தந்திருந்து லண்டன் வாட்டர்ஸ்மீற் மண்டபத்தில் நுழைந்தபோது, மண்டபத்தில் நிறைந்திருந்த மக்கள் எழுந்து நின்று கரகோசம் செய்து அவரை வரவேற்ற காட்சி இன்றும் என் மனதில் நிழலாடுகின்றது. தனது மனைவி பிரான்சிஸ் ரொபதன்; மருமகள் மற்றும் குடும்பத்தாருடன் வருகை தந்த ஜோர்ஜ் அழகையாவிற்கு தமிழ் மக்கள் வழங்கிய அழகிய பாராட்டாக அது அமைந்தது. இந்த விழாவில் ஜோர்ஜ் அழகையாவிற்கு மு. நித்தியானந்தன் ஆற்றிய தொலைக்காட்சி விமர்சனங்கள் அடங்கிய ஒளிப்பேழையையும்இ முக்கிய சில ஈழத்து அரசியல் நூல்களையும் திரு எஸ்.பி.ஜோகரட்னம் வழங்கியபோது தீபம் தொலைக்காட்சி என்ற தொலைக்காட்சி லண்டனில் இயங்குவது தனக்குத் தெரியாதென்று ஜோர்ஜ் அழகையா கூறியிருந்தார். இந்த விழாவில் ஜோர்ஜ் அழகையா ஆற்றிய சிறப்புரை மிகுந்த பொருள் பொதிந்ததாக அமைந்திருந்தது. தன்னால் தமிழில் பேச முடியவில்லை என்பதற்காக கவலை தெரிவித்த ஜோர்ஜ் அழகையாஇ எள்ளு ஆனாலும் ஏழாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும் என்ற பழமொழியை தனது பாட்டனார் கூறியதை நினைவு படுத்தினார்.

தனது காலத்தில் தான் ஆங்கில வாழ்க்கைக்கு துரிதமாகச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது என்று கூறிய ஜோர்ஜ் அழகையா இன்றுள்ள ஈழத் தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்;ந்துகொண்டு தங்களின் மொழிகளையும் அதன் வேரினையும் தேடும் நாட்டமும் கொண்ட தமிழர்களாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். நாங்கள் ஒரு தனித்த சமூகம் என்ற உணர்வு அவர்கள் மத்தியில் நன்கு வேரூன்றி வருகிறது. நமது சொந்த தனித்துவத்தைப் பேணும் அதே வேளை பிரிட்டிஷ் சமூகத்தினரிடம் தாம் எத்தகைய பங்களிப்பை வழங்கவேண்டுமென்பது நம்முன்னுள்ள சவாலாகும் என்றும் அவர் கூறினார். இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நீண்ட யுத்தத்தை நோக்கும்போது இந்த யுத்தம் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருப்பது சாத்தியமில்லையென்றும்இ இத்தகைய யுத்தங்களில் யாரும் வென்றதாக வரலாறு இல்லை என்றும்இ இந்த யுத்தம் எவ்வளவு துரிதமாக முடிவுக்குக் கொண்டுவரப்படுகின்றதோ அது மிகச் சிறப்பானதென அவர் தெரிவித்தார். அதற்கு முடிந்தவற்றைச் செய்வோமென்றும் அவர் தெரிவித்தார்.

தனது தென்னாபிரிக்க அனுபவங்களை ஆதாரமாகக்கொண்டு ஜோர்ஜ் அழகையா இந்த ஆண்டு வெளியிட்ட ‘வுhந டீரசniபெ டுயனெ’ என்ற நாவல் இவரை சிறந்த நாவலாசிரியாராக முன்னிறுத்தியிருக்கிறது. நிறவாத ஆட்சியின் பின்னர் தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட அரசியல் சீரழிவினை, நிலக்கொள்கையினை, சூழல் நாசமாவதை, ஊழல் அரசியலில் தலைவிரித்தாடிய தென்னாபிரிக்க அரசியல்வாதிகளை இந்த நாவலில் படம் பிடித்துக் காட்டுகிறார். தான் இங்கிலாந்தில் பயின்ற காலத்தில் பிரித்தானிய மரபினையும், பிரித்தானிய நடைமுறைகளையும் செவ்வனே பேணவேண்டியவனாக வளர்ந்த நிலைமையை அவர் பல இடங்களில் குறிப்பிடுகின்றார். இன்று இங்கிலாந்தில் இத்தகைய நிர்ப்பந்தங்கள் எதுவும் இல்லை என்றும் தத்தமது சூழலிலேயே தத்தமது கலாச்சாரத்தைப் பேணி வளருகின்ற வாய்ப்பு இப்போது உருவாகியிருக்கிறது என்று அவர் கூறுகின்றார். எனினும் பல்கலாச்சாரத் தன்மை என்பது இங்கிலாந்தின் ஒன்றிணைப்புக்குப் பதிலாக பேதங்களையே அதிகம் ஏற்படுத்தியுள்ளது என்று அழகையா விசனம் தெரிவிக்கின்றார். பி.பி.சியின் புகழ் மிக்க செய்தியாளர்களில் ஒருவராகத் திகழும் ஜோhஜ் அழகையா அவர்கள் அரசியலைவிட வாணிபமும் பொருளாதாரமுமே முக்கியமானவை என்ற தொனிப்பொருளிலும், சூழலியல் குறித்தும் உயர்ந்த மாநாடுகளில் பங்கேற்றுப் பேசியிருக்கிறார். வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் விவசாயிகளுக்கு அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு நியாயமான விலை கொடுக்கப்படவேண்டும், இடைத்தரகர்கள் அந்த உற்பத்தியில் தலையீடு செய்வதை நிறுத்தவேண்டும் என்ற உயர்ந்த அடிப்படையில் இயங்கும் ‘குயசைவசயனந’ என்ற அமைப்பின் போஷகராக அழகையா பணியாற்றியமை குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். எனினும் பி.பி.சியின் செய்தி ஸ்தாபனத்தின் பணியில் ஈடுபடும் ஒருவர் ஒரு குறிக்கப்பட்ட உணவு வகையின் மீதுள்ள அமைப்பிற்கு ஆதரவாகச் செயற்படுவது என்பது பி.பி.சி கடைப்பிடிக்கும் நடுநிலைமைத் தன்மைக்கு ஊறு விளைவிக்கும் என்ற அடிப்படையில் ‘குயசைவசயனந’ அமைப்பின் அணியிலிருந்து அவர் விலக நேர்ந்தமை துரதிஷ்டவசமாகும்.

தனது பெயரையும் புகழையும் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்திய ஜோர்ஜ் அழகையா குடல்புற்றுநோய்க்கு ஆளாகியமை கண்டு மக்கள் வேதனையுற்றனர். ஐம்பது வயதானதும் ஸ்கொட்லாந்தில் குடல்புற்றுநோய் பற்றிய பரிசோதனைகள் நடப்பதுண்டு. இங்கிலாந்தில் அறுபது வயதி;ற்குப் பின்னரே இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அறுபது வயதிற்குப் பின்னர் தனக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டபோது அது முற்றிய நிலைக்கு வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஸ்கொட்லாந்தில் இருந்திருந்தால் தனது இந்த நோய் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு முற்றாகவே குணப்படுத்தியிருக்க முடியும் என்று ஜோர்ஜ் அழகையா கூறும்போது எமது நெஞ்சமும் உறைந்து போகிறது. ஈழத்துப் பெருமகன் ஒருவன் லண்டன் ஆங்கில ஊடக வானில் தனி நட்சத்திரமாகச் சுடர்விட்டுத் திகழ்ந்தமை இலங்கையரான எமக்கெல்லாம்; பெருமை தரும் ஒன்றாகும். இந்த நோயிலிருந்து அவர் சுகம் பெறவேண்டுமென்று இந்த நேரத்தில் பிரார்த்திப்போம். ஆனால் ஆவர் இன்று எம்மிடம் இல்லை என்னும்போது நெஞசம் கனக்கிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.