‘கோடானு கோடி உயிரினங்களில் ஒன்றாகவும், அரைகுறை ஆடைகளுடனும்,  பறட்டைத் தலையுடனும்,  காய்கனிகளைப் பொறுக்கிக் கொண்டும்,  எதிர்ப்பட்ட விலங்குகளை வேட்டையாடித் திரிந்து கொண்டும் இருந்த மனித இனம்,  படிப்படியாக மாறி,  இன்று உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்ற ஓர் மனித இனமாக உருவானது இப்படித்தான்’ என்பதுதான் சேப்பியன்ஸ். நம் இனத்தின் கதையை அழகாகவும்,  சுவாரசியமாகவும்ச் விறுவிறுப்பாகவும்,  செறிவாகவும்,  சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் நம்மை மலைக்க வைக்கின்றார் முனைவர் யுவால் நோவா ஹராரி. இதனைத் தமிழில் மொழிபெயர்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.

     ‘மனிதக் கலாச்சாரங்களின் பரிணாம வளர்ச்சிதான் வரலாறு என்று அழைக்கப்படுகின்றது’ என்று கூறும் ஆசிரியர் ‘அறிவுப்; புரட்சி’,  ‘வேளாண் புரட்சி’,‘அறிவியல் புரட்சி’ போன்ற மூன்று முக்கிய புரட்சிகள் மூலம் மனித வரலாற்றின் பாதையைச் செதுக்கியிருக்கிறார். அதாவது இம்மூன்று புரட்சிகளும் எவ்வாறு மனிதர்களையும் அவர்களுடைய சக உயிரினங்களையும் பாதித்துள்ளன என்பதை நுட்பமாக ஆராய்ந்து விளக்கியுள்ளார்.

     ஹோமோ சேப்பியன்ஸ் அறிவார்ந்த மனிதன் என்று எடுத்துக்கொண்டாலும் ஹோமோ என்பது பேரினத்தின் ஒரு விலங்கு. இந்தச் சாதாரண உண்மை, வரலாற்றில் பாதுகாக்கப்பட்ட ஒரு ரகசியமாக இருந்தது. தாங்கள் விலங்குகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தில் தங்களைப் பார்ப்பதில் ஹோமோ சேப்பியன்ஸ் நெடுங்காலமாகவே விரும்பி வந்திருந்தனர். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானதாக உள்ளது. நமக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ நாம் எல்லோருமே மனிதக்குரங்குகள் என்ற மிகப்பெரிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான். இப்போது வாழ்ந்துகொண்டிருக்கின்ற சிம்பன்சிதான் நமக்கு மிகவும் நெருக்கமானவை. 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,    ஒரே ஒரு பெண் மனிதக்குரங்கு இரண்டு மகள்களைப் பெற்றெடுத்திருக்கிறது.. அவற்றில் ஒன்று அனைத்துச் சிம்பன்சிகளின் மூதாதையாக ஆனது. மற்றொன்று வேறு யாருமல்ல,  நம்முடைய சொந்தப் பாட்டிதான்.

      நாம் இந்தப் பூமியில் உருவாகும்போது நம்மைப் போலவே இன்னும் சில மனித இனம் உருவாகி இருக்கிறது. சேப்பியன்ஸ்தான் மற்ற மனிதர்களின் அழிவுக்குக் காரணம் என்று கருதப்படுகின்றது. எப்போதெல்லாம் சேப்பியன்ஸ் ஒரு புதிய இடத்தில் குடியேறுகின்றனரோச் அப்போதெல்லாம் உள்ளுர்வாசிகளை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டனர். கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து அரேபிய தீபகற்பத்திற்குள் சேப்பியன்ஸ் ஊடுருவியபோது யுரேசியாவின் பெரும்பகுதியில் ஏற்கனவே பிற மனிதர்கள் குடியேறியிருந்தனர். அவர்களுக்கு நடந்தது என்ன என்று கேள்வி எழுப்புகின்றார். ஆபிரிக்காவிலிந்து வெளியேறியவர்கள் உலகம் நெடுகிலும் பரவியபோது,  பிற மனிதக் கூட்டங்களுடன் அவர்கள் புணர்ந்தனர். இன்றைய மக்கள் அந்த இனக்கலப்பின் விளைவாக உருவானவர்களே! மத்திய கிழக்கு நாடுகளையும் ஐரோப்பாவையும் அடைந்தபோது நியான்டர்தால் மனிதர்களை அவர்கள் எதிர்கொண்டனர். சேப்பியன்ஸைவிட நியான்;டர்தால் மனிதர்கள் அதிகச் சதைப்பற்றும்,  பெரிய மூளைகளைக் கொண்டவர்களாகவும்,  குளிர்ச் சூழலுக்குத் தங்களைப் பழக்கப்படுத்தியும்,  பல கருவிகளையும் நெருப்பையும் பயன் படுத்துபவர்களாகவும்,  சிறப்பான வேட்டையாடிகளாகவும்,  முக்கியமாக தங்கள் இனத்தைச்சேர்ந்த நலிந்தவர்களையும் நோயுற்றிருந்தவர்களையும் அக்கறையோடு கவனிப்பவர்களாகவும் இருந்திருக்கிறர்கள். அத்தகைய வலிமையும்ச் அறிவும் கொண்ட நியான்டர்தால் மனிதர்களைக்கூட சேப்பியன்ஸ்தான் அழித்தார்கள் என்ற விவாதம்  தொடர்ந்து தீவிரமடைந்துகொண்டே இருக்கிறது. இந்த ஹோமோ சேப்பியன்ஸின் வெற்றிக்குக் காரணம் என்னவென்னறால் அந்த இனத்தின் தனித்துவமான மொழியைக் கொண்டதுதான் என்கின்றனர்.

    விலங்குகளுக்கும் தனித்துவமான மொழி இருப்பதாக அதாவது கைகைகளை வைத்தோச் குரலை வைத்தோ தனித்துவமாக அவர்கள் பேசிக்கொள்ளலாம்  ஆனால் மனிதமொழி நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக இருந்ததால் சைகை மூலமாகவோ சத்தத்தின் மூலமாகவோ ஒரு வாக்கியத்தை உருவாக்க முடிந்தது. சேப்பியன்ஸ் கற்பனை மூலம் இந்த மொழியை வடிவமைக்க முடிந்தது. இல்லாத ஒரு விடயத்தைக்கூட அதாவது புதிதாக ஒரு விடயத்தை உருவாக்க முடிந்தது. கற்பனைச் சக்தி அதிகரித்ததின் மூலம் சேப்பியன்ஸால் புனைவுக் கதைகளை  உருவாக்க முடிந்தது. சிந்தனைத்திறன் அவர்களிடம் அதிகமாக இருந்தததால் கடவுளர்ச் மதம் என உருவாக்க முடிந்தது. சுய உந்துதல் நோக்கங்கள் குறித்த நூல்களைக்கூட அவர்களால் எழுத முடிந்தது. இப்படித்தான் ‘அறிவுப் புரட்சி’ உருவெடுத்ததாகக் கூறுப்படுகின்றது.

     சேப்பியன்ஸ் என்பது சமூக விலங்கு. அவர்கள் சமூகத்தோடு சேர்ந்து கூட்டமாக வாழ்வார்கள். அப்பொழுதுதான் அவர்களால் உயிர்வாழ முடியும். சேப்பியன்ஸின் இந்தத் தனித்துவமான மொழி வளர்ச்சி அடைவதற்கு அவர்களுக்கு வம்புப் பேச்சுத்தான் அதிகமாக உதவியதாம். தன்னைவிட மற்றவர்களைப் பற்றிப் பேசுவதுதான் அவர்களுடைய முக்கிய பங்காகச் செயற்பட்டது. அதுதான் இப்போதும் மற்றவர்களைப் பற்றித்தான் கூடுதலாகப் பேசி நேரத்தைக் கழிக்கிறோமோ என எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

       உணவுச் சங்கிலியில் உயர் ஸ்தானத்தில் இருப்பது இந்த மனிதன் தான். உருவத்தில் பார்க்கும்போது பெரிய பெரிய விலங்குகளைவிட மிகச் சிறியவன்போல்த்தான் காட்சியளிக்கின்றான். இருந்தும் அவன் தனது தனித்திறமையாலும்,   கற்பனையாலும் வேட்டையாடுவதற்கான ஆயுதங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தான். இதன் காரணமாக தூரத்தில் உள்ள பெரியபெரிய விலங்குகளை அவனால் வேட்டையாட முடிந்தது.

       அறிவுப் புரட்சியின் பின்னர் மிக முக்கியமாக நாலு காலில் நடந்த மனிதன் இரண்டு கால்களில் நடக்கத் தொடங்கியபோது பல துன்பங்களை அனுபவித்தான்;. நோராக நடக்கும்போது கழுத்துவலிச் முதுகுவலி போன்றன மிகவும் அவர்களைப் பாதித்தன. முக்கியமாகப் பெண்கள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளானாhர்கள். பிரசவ சமயத்தில் இரண்டு கால்களில் நடப்பது மிகவும் வேதனையைக் கொடுத்தது. குழந்தைகள் பிறப்புப் பாதை குறுகியதாகியது. பிரசவ நேரத்தில் மிகுந்த வலியை பெண்கள் அனுபவித்ததோடு பெண்களில் பலர் அவ்வேளைகளில் இறந்ததாகவும் இருந்திருக்கிறது. குறைப்பிரசவத்தில் பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய்மார்கள் ஆரோக்கியமாக இருந்திருக்கிறார்கள். அதனால் குறைப்பிரசவத்தை அதிகமாகப் பெண்கள் விரும்பியிருக்கிறார்கள். இயற்கையும் அதனைத்தான் தேர்ந்தெடுத்தது. இதனை வைத்துப் பார்க்கும்போது நாம் எல்லோருமே குறைப்பிரசவத்தில்தான் பிறந்திருக்கிறோம். விலங்குகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மனிதர்களின் பிறப்பின் பின்னர்; ஒரு வருடமோ இரண்டு வடங்களோ அவர்களை கண்காணிப்போடு பராமரிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் விலங்குகள் பிறந்தவுடன் தனாகவே இயங்க ஆரம்பித்துவிடுவதை அவதானிக்க முடிகின்றது.

      சுதந்திரமாக சுற்றித்திரிந்து வேட்டையாடிய மனிதன் விவசாயம் பயிர் செய்ய நினைக்கும்போது அதற்காக இடங்களைத் தெரிவு செய்து முடங்கி விட்டான். இதனால் மனிதன் ஓரிடத்தில் தங்கவேண்டிய சூழ்நிலையை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இப்படி விவசாயம் செய்யத்தொடங்கி ஓரிடத்தில் வாழும்போது இனப்பெருக்கம் அதிகமாகியது. அவர்களால் அதனைத் தடுக்க முடியவில்லை. இதனால் மேலும் விவசாயம் செய்யவேண்டும்ச் உழைக்கவேண்டும் என்ற தேவை ஏற்பட்டது. வாழ்க்கை மேலும் கடினமாகிக்கொண்டே போனது. அவர்கள் திரும்ப வேட்டையாடவேண்டும் என எண்ணினாலும் அவர்களிடையே இனப்பெருக்கம் அதிகமாகி வேட்டையாடுகின்ற உணவினால் அதனைச் சமாளிக்க முடியாத நிலை காணப்பட்டது. எனவே விவசாயம் தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டி இருந்தது. இதன் காரணமாக காடுகள் அழிக்கப்பட்டது. அதேவேளை விலங்குகளும் அழிக்கப்பட்டு விவசாயத்திற்கான இடங்களைக் கண்டுபிடித்தனர். அதிகமான கிராமங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்த இடம் எனக்குச் சொந்தம் என்று கொண்டாடும் நிகழ்வுகளும் ஆரம்பித்தன. இப்படிப் பல புரட்சிகளின் தொடர்ச்சியில் ‘வேளான் புரட்சி’ ஆரம்பித்தன.

      அதிகமாக விவசாயம் செய்ய ஆரம்பித்த பின்னர் அதனைச் சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் மனிதனுக்கு உருவாகியது. அந்த வேளைகளில் அது பற்றிய எண்ணிக்கை தெரிய வேண்டும் அல்லவா? அவ்வேளைகளில்தான் அவன் கணித முறைகளையும்,  எழுத்து வடிவங்களையும் ஆரம்பித்தான். தற்போதைய 1, 2,3 போன்ற எண் வடிவங்கள் இன்றி தமக்கென குறியீடுகள் மூலம் எண்களை எழுதிவைக்கவும்ச் வடிவங்கள் மூலம் எழுத்துக்களை எழுதவும் பழகிக்கொண்டான். பின்னர் இவற்றை நினைவில் வைத்திருக்கவும் நியைவே எழுத வேண்டிய தேவை ஏற்படும்போது களிமண் பலகைகளில் அவற்றை எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் களிமண் பலகை புறத்தாக்கங்களினால் அழிந்துபோகும் அபாயம் அதிகமாகவே இருந்தன. நீண்ட காலத்திற்கு பாதுகாக்கப்படவேண்டிய சொத்துப் பத்துக்களையெல்லாம் அத்தகைய களிமண் பலகையினால் எழுதி வைத்திருந்ததற்கான சான்றுகளை அவதானிக்க முடிந்தது. அழிந்துபோகும் வாய்ப்புகள் அவற்றிற்கும் அதிகமாக இருந்தமையினால் மனிதனின் சிந்தனை பாதுகாப்பாக எழுதி வைப்பதற்காக கணனி போன்ற புதுப்புது வடிவங்களைத் தேடினான்.

        இதன் பின்னர் பணம் என்ற ஒரு விடயம் ஆரம்பித்தது. அதற்கு முன்னர் பொருட்களை அதற்குரிய பெறுமதியான பொருள்களையே மாற்றிக் கொடுத்தும் வந்திருந்தார்கள். இப்போது இருக்கும் காசு,  நோட் போன்றவற்றிற்கான பெறுமதியை நாங்களே வழங்கியுள்ளோம்.

        வரலாற்றிலேயே இழைக்கப்பட்ட மிகப் பெரிய கொடுமையான குற்றம் என்ன என்று பார்த்தால் வேளாண்மையின்போது விலங்குகளை கொடுமையாக நடத்தப்பட்ட  விதம்தான். இந்த நூலை வாசிக்கும்போது அந்தக் கொடுமைகளை மனிதர்கள் செய்திருக்கிறார்களே என்று அறிந்தபோது மிகுந்த வேதனையை அளித்தது. நாம் சாப்பிடவேணும் உயிர் வாழ வேணும் என்பதற்காக இன்றும் புதிய கருவிகளைப் பொருத்தி அவற்றின் மூலம் விலங்குகளை இன்றும் கொடுமைப் படுத்திக் கொண்டேதான் இருக்கின்றோம்.

       மனிதனுடைய வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் அல்லது  மிகப் பெரிய வளர்ச்சி என்பது அறிவியல் புரட்சிதான். சாவு என்பது மனித இனத்தில் அதிகமாகவே இருந்தது. எல்லா விதமான கர்வத்தையும் சுக்கு நூறாக மாற்றுவது இந்த மரணம்தான். அதனோடு நாம் போராட முடியாது. இது ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால் அறிவியல் புரட்சி ஏற்பட்டதின் பின்னர் மனிதனின் நோயைக் குணப்படுத்துவதற்கும் சரிச் நமக்கு ஒரு ஆபத்து வராமல் தடுப்பதற்கும் சரி நிறைய விடயங்களை மனிதன் கண்டுபிடிக்க ஆரம்பித்தான். இதன்மூலம் இறப்பு வீதம் குறைய ஆரம்பித்தது. முக்கியமாக பிரசவம் மூலமாக ஏற்பட்ட இறப்பு வீதம் குறைய ஆரம்பித்தது. மருத்துவத்தால் ஏற்பட்ட இத்தகைய மனிதனின் கண்டுபிடிப்புகள் மூலம் நிறையவே நன்மையே கிடைத்தது என்று கூறவேண்டும். உதாரணமாக ஒரு மனிதனுக்கு கையோ காலோ ஒரு விபத்தில் இழந்து போனால் அதனை நிவர்த்தி செய்வதற்கு இயந்திர உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நவீன யுகத்தில் ஒரு முழு மனிதனையே இயந்திரம் போன்று இயங்கும் மனிதனாக (சுழடிழவ) வடிவமைத்திருப்பது மனிதனின் மிகப் பெரும் சாதனைதான். இவை யாவும் மனிதனின் மிகப் பெரிய வளர்ச்சி என்றே கூறவேண்டும். எதிர்காலத்திலும் மனிதன் இன்னும் புதுப்புது விடயங்களைக் கண்டுபிடித்துக் கொண்டேயிருப்பான் என்பதில் எந்த வித ஐயமுமில்லை. சாதாரண விலங்குகளோடு விலங்காக இருந்த மனிதன் இந்த உலகத்தையே ஆட்சி செய்கின்ற அளவுக்கு வளர்ந்திருப்பது ஒரு பெரிய அறிவியல் புரட்சிதான்.

       அதிஷ்ட லாபச் சீட்டில் வெற்றி பெறுதல்ச் ஒரு புதிய வீட்டை வாங்குதல்ச் ஒரு பதவி உயர்வைப் பெறுதல்ச் அன்பான ஒரு வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடித்தல் போன்ற எதுவும் யாரையும் மகிழ்ச்சிப்படுத்துவது இல்லை. ஒரே ஒரு விஷயம் மட்டுமே மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அவர்களுடைய உடல்களில் ஏற்படுகின்ற இன்ப உணர்வுகள்தான் அது. ரத்தவோட்டத்தின் ஊடாகப் பயணித்துக் கொண்டிருக்கிற பல்வேறு ஹோமோன்களும்ச் அவர்களுடைய மூளையின் பல்வேறு பகுதிகளுக்கிடையே பளிச்சிடுகின்ற எண்ணற்ற மின் சமிக்ஞைகளும்தான் அவர்களில் எதிர்வினையாற்றிக்; கொண்டிருக்கிறது.

         இறுதியாக ‘ஒரு கடவுளாக மாறிய ஒரு விலங்கு’ என்ற தகவலோடு இந்நூலை நிறைவு செய்திருக்கிறார் யுவால் நோவா ஹாராரி. மனிதர்களுக்கு இவ்வளவு மிகத் தனித்திறமையான சக்தி இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்; சூழலைப்பற்றி அறிந்திருக்காமலே இருக்கிறோம். சுற்றுச் சூழலைப் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் என்ற கருத்து மேலோங்கியிருப்பதை அவதானிக்க முடிந்தது.
முன்பு ஒருபோதும் இல்லாத அளவிற்கு இப்போது மனிதர்கள் அதிக அளவில் பொறுப்பற்று இருப்பது மிக மோசமான விஷயமாகும். நாம் எம்மைப்பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம்,  ஆனால் சுற்றியுள்ள விடயங்கள் பற்றி சூழலைப்பற்றி நாம் கண்டுகொள்ளாமலே இருக்கிறோம். நாம் இன்னும் மனநிறைவு அடையாமலே இருக்கிறோம். நம்மை நாமே கடவுளாக ஆக்கிக் கொண்ட நாம் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத நிலையில் இருக்கிறோம்.

       ‘தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்திராத,  மனநிறைவற்றச் பொறுப்பற்ற கடவுளரைவிட அதிக ஆபத்தானது வேறெதுவும் இருக்க முடியுமா?’ என்ற கேள்வியோடுதான் இந்நூலை ஆசிரியர் நிறைவு செய்கின்றார்.

     ‘பிரபஞ்சம் தோன்றி இன்று வரைக்கும் தற்போதைய நிகழ்வுகளும் படிப்படியாக மிகவும் சுவையாக மனித வரலாற்றை பல்வேறு ஆதாரங்களுடன் சோர்வேயின்றி இப்படி ஆர்வத்துடன் படிக்க முடியுமா?’ என்று என்னை இந்த நூலை வாசிக்கும்போது சிந்திக்க வைத்தது. முக்கியமாக இந்நூலை தமிழில் மொழிபெயர்த்த நாகலட்சுமி சண்முகம் அவர்கள் அசத்தலாகவே ஆர்வத்துடன் சுவை குன்றாமல் பதிவு செய்திருக்கின்றார். நாம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்ச் அவசியமான விடயங்கள் பொதிந்திருக்கும் இந்த ‘சேப்பியன்ஸ்’ என்ற  நூலை நாம் அனைவரும்; நிட்சயம் படிக்கவேண்டிய சிறந்த நூல் என்று கூற விரும்புகின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.