பகுதி-i

சென்ற இதழில், தொடப்பட்ட, மூன்று விடயங்கள்:

1. ஒன்று, பக்மூத், எவ்வாறு ஓர் 150,000 உக்ரைனிய போர் வீரர்களுக்கு, ஓர் மரண பொறியாக செயற்பட்டது. (பக்மூத் வீழ்ச்சியின் போது 50,000 வீரர்கள் கொல்லப்பட்டும், மற்றும் 85,000 பேர் காயமுற்றதாகவும் ஒரு பதிவு கூறுகின்றது).
 
2. இத்தோல்வியை தொடர்ந்து எவ்வாறு ஸெலன்ஸ்கி  G-7 மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு ஓர் 375 மில்லியன் டாலர் பணமுடிச்சும்,  F-16 விமானங்களின் வழங்குகைக்கும் உறுதி செய்யப்பட்டார் என்பது குறித்தும்.

3. இப்பணமுடிப்பு பரிசளிப்புகள், “பக்மூத் வீழ்ந்து விட்டது - இருந்தும் அது இப்போது, எம் இதயத்தில் ஆழ வாழ்ந்திருக்கின்றது” என்ற அவரது ஆரம்ப அறிவிப்பை எப்படி அவர் அவசர, அவசரமாக மாற்றி – “இல்லை பக்மூத்தை இப்போதே சுற்றி வளைத்துள்ளோம் - இனி மீட்டெடுப்பதே எமது பிராயசித்தம் என புரண்டு பேச வைத்ததையும் பார்த்திருந்தோம்.

இச்சூழலில் F-16 விமானங்கள், போர்களத்தின் சாரம்சத்தை மாற்றக்கூடியதே என்றும், F-16 விமானங்களின் சிக்கல் நிறைந்த தொழிநுட்ப நடைமுறைமையானது, அமெரிக்காவின் ஓய்வு பெற்ற விமானிகள் அல்லது அந்நாட்டின் ஒப்பந்த அடிப்படையிலான விமானிகளை, F-16 விமானங்களை ஓட்ட வைக்கும் என்றும், இது ரஷியாவை அமெரிக்காவுடன் அல்லது நேட்டோவுடனான நேரடி மோதல்களுக்கு இழுத்துவிடும்  என்றும் ஆயஉபசழபயச கூறியிருந்தார்.

இருந்தும், இப்போது அவரே, இக்கூற்றை சற்றே மாற்றி F-16 இன் முக்கியத்துவம், இவ்விமானம் அணு ஆயுதங்களை காவி செல்ல கூடியது என்ற உண்மையிலேயே தங்கியுள்ளது என்பதனை கூறியுள்ளார்.  இதனுடன், இன்று வெளியாகி உள்ள, புட்டினின் இன்றைய கூற்றையும் தொடர்புபடுத்திக் கொண்டால், விடயங்களின் சிக்கல் தன்மை விடுவிக்கப்பட்டதாகிவிடும். புட்டினின் இன்றைய அறிவிப்பின்படி “ரஷியா அச்சுறுத்தப்பட்டாலே அணுஆயுத பிரயோகிப்பை மேற்கொண்டு விடும்” என, தனது பீட்டர்ஸ்பர்க் உரையின் போது தெளிவுபட கூறியிருந்தார் (17.06.2023).

இதுபோக, இதனை அறிந்தோ அறியாமலோ, தென்னாபிரிக்காவின் அதிபர், இன்னும் கிட்டத்தட்ட ஏழுக்கும் அதிகமான ஆப்ரிக்க நாடுகளின் அதிபர்களுடன் உக்ரைனின் தலைநகரில், சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில் அல்லது ஒரு யுத்த நிறுத்தத்தை எவ்வகையிலேனும் கொண்டுவரும் எண்ணத்துடன், இறங்கி இருந்தார். அதாவது, இடம்பெற இருக்ககூடிய, அணுஆயுத பிரயோகிப்பு குறித்து, உலக நாடுகள் அச்சமடைவதாகவே காணக்கிட்டுகின்றது.

சுருக்கமாக கூறினால், உக்ரைனிய போர், தெரிந்தோ தெரியாமலோ அணுவாயுத பிரயோகிப்பை நோக்கி பயணப்பட முற்படுகின்றது என்பதும், குறிப்பாக, அது G - 7 மாநாட்டை அடுத்து அமைதியை தேடாமல் பல மடங்கு அணுபிரயோகத்தை பிரயோகிக்கும் பாதையில் முன்னேறியுள்ளது என்பதும் குறிக்கத்தக்கது.

வேறு வார்த்தையில் கூறுவதானால், இங்கிலாந்தின் ரிசி சுனாக் பெருமிதத்துடன் வழங்கிய யுரேனிய குண்டுகளை அடுத்து, பைடன் வழங்குவதாய் கூறியிருக்கும் F-16 விமானங்களை அடுத்து, போலந்தின், தென்னாபிரிக்க பத்திரிக்கையாளர்களையும், மெய்பாதுகாவலர்களையும் தடுத்து வைக்கும் நடவடிக்கை ஈறாக (16.06.2023), ஏட்டிக்கு போட்டியாக, பதிலடிகளை உருவாக்கி ஒரு உயரிய மட்டத்தை அடைந்து, மொத்தத்தில் ஓர் அணு வெடிப்பாக பரிணமித்து ஓர் அணு வெடிப்புக்காளானை (Atomic Mushroom) உருவாக்க திடசங்கற்பம் பூண்டுவிட்டது போல தெரிகின்றது.

உலகை இந்நிலைக்கு கொண்டு வந்துள்ள மேற்கின் ஆயுத வியாபாரிகள், இந்நிலைமையினை கட்டுவிக்க கூடிய, தமக்கு தேவையான இரவு நேரத் தலைவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதும் தனித்து குறிக்கத்தக்கது.

இவ் இரவு நேரத் தலைவர்களின் அடிப்படை தகுதி யாதென்றால் தமக்கென ஓர் அரசியல் எதிர்காலத்தை இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை அல்லது எண்ணக்கூடிய சூழ்நிலையிலும் இல்லை என்பதும், தம்மை நியமித்த இவ்ஆயுத வியாபாரிகளின் நலன்களை முன்னெடுக்க மாத்திரமே உறுதி பூண்டுள்ளனர் என்பதே யதார்த்தமாகும்.

உதாரணமாக, அமெரிக்க தலைவரான பைடன் தனது தள்ளாடும் வயதில் தமது அரசியல் எதிர்காலத்தை பற்றி யோசிக்க முடியாத அளவில் அவர், விரும்பியோ விரும்பாமலோ ஒரு தொண்டுக் கிழமாகி இருக்கின்றார். (ராணுவ பட்டமளிப்பு விழாவில் இவர் முகம் குப்புற விழுந்ததை, இளம் ராணுவ வீரர்களுக்கு எப்படி பாய்ந்து காட்டினார் என்று சாதித்தாலும் கூட). மறுபுறத்தில், இங்கிலாந்தின் பிரதமர் ரிசி-சுனாக்கை எடுத்து கொண்டால் கூட, இவரும் திடீரென எங்கிருந்தோ முளைத்த ஒரு தலைவராகவே காணப்படுகின்றார்.

இந்திய வம்சாவளியினரான இவர், எவ்வழியில், தனக்கான ஓர் அரசியல் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க கூடும் என்பது ஒரு கேள்விக்குறியே. முன்னை நாள், இங்கிலாந்து பிரதமர் Boris Johnson, Liz Truss ஆகியோரை அடுத்து பிரதமர் பதவியை ஏற்றுள்ள ரிசி சுனாக் மக்களின் பிரதிநிதியாக உருவெடுத்த ஒரு தலைவராக கொள்வது சற்று சிரமமாகவே இருக்கும் - அண்மைக்கால இங்கிலாந்தின் நாளாந்த வாழ்க்கை நிலையை கணக்கில் எடுத்து பார்க்கும்போது). ஆனால், இந்த இரவு நேர தலைவர்களின் நியமனங்களை கோரும் ஆயுத வியாபாரிகளின் அவா, உக்ரைன்-ரஷிய யுத்தத்தை முடுக்கி விடுவதும், அதற்கூடு தமது ஆயுதங்களை எப்படி உலகம் முழுவதும் விற்று தீர்த்து, உக்ரைனுக்கு வாக்குறுதி அளிக்கப்படும் நிதியுதவிகளை, பங்கு போட்டு கொண்டு பணம் பண்ணிக் கொள்ளலாம் என்பதே ஆகும்.

சுருக்கமாய் கூறினால், மக்களை மற! நீதி நியாயப்பாடுகளை மற!! உனது நாளைய அரசியல் பற்றிய சிந்தனையை மற!!! எந்த சக்தியால் நீ பதவிக்கு வந்தாயோ, அந்த சக்தியின் நலனை நீ முன்னெடு - இதுவே இந்த இரவு நேர தலைவர்கள் போதிக்கும் தாரக மந்திரமாகின்றது.

ஆனால், இந்த தாரக மந்திரங்களையும் தலைவர்களையும் மிஞ்சி, உக்ரைன்-ரஷிய கள நிலவரங்கள் முன்னேறுவதாகவே உள்ளது.  இவ்வகையில், KAKHOUKA அணை உடைப்பும், உக்ரைனின் பதிலடியும் (Counter Attack) குறிப்பிடத்தக்கதாகின்றது.

அணை உடைப்பு:

IMF இன் கணக்கு பிரகாரம் 138 மில்லியன் டாலர் நேரடி நட்டத்தை உருவாக்கி உள்ள இவ் அணை உடைப்பின் மொத்த பாதிப்பு பல லட்சம் மக்களை தாக்கக்கூடிய ஒன்றேயாகும். கிரைமியாவின் நீர் வழங்கும் திட்டத்தை இது பாதிப்பது மாத்திரமல்லாமல் உலக தானிய ஏற்றுமதியையும் ஆழமாக பாதிக்ககூடிய ஒன்றாகவே இது இருக்கின்றது.

மேலும் ZAPORIZHZHIA அணு உலையும் இத்தாக்குதலால் பாதிக்கப்படக்கூடிய ஒன்றே என நிபுணர்கள் கருதுவர். ஆனால், இவ் அணையானது ரஷியாவால் உடைக்கப்பட்டது என்று உக்ரைனும், இல்லை உக்ரைனால் உடைக்கப்பட்டது என்று ரஷியாவும் ஒருவரை மாற்றி ஒருவர், மாறி, மாறி குற்றம் சாட்டும் சூழல்கள் இன்று காணக்கிட்டுகின்றது. இவற்றிடை மக்ரோகர் மற்றும் Scott Ritter போன்ற ராணுவ விமர்சகர்களும் இவ்வெடிப்பு தொடர்பில் இரு வேறு கருத்து நிலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இருவருமே அமெரிக்க ராணுவத்தின் முன்னை நாள் அதிகாரிகள் என்ற போதிலும் மெக்ரோகர் இவ் அணையின் உடைப்பானது, அணையில் இடம்பெற்ற ஒரு வெடிப்பின் நிமித்தம் எழுந்த ஒன்று என்றும் ஆரம்பத்தில் கூறியிருந்தாலும், Scott Ritter, அணையின் வெடிப்பாக எழுந்திட்ட மொத்த விளைவுகளையும் கொண்டு பார்க்குமிடத்து, ஒப்பீட்டளவில் இது உக்ரைனுக்கே அனேக நன்மைகளை கொண்டுவந்து சேர்த்துள்ளது என்ற அடிப்படையில், அணையின் உடைப்பானது உக்ரைனாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகின்றது.  இச்சூழ்நிலையில், உக்ரைன், தொடுத்திருப்பதாக கூறப்படும் (Counter Attack) பதிலடியும் எதிர்ப்பார்க்கப்பட்ட நன்மைகளை கொண்டு வந்து சேர்த்ததாய் இல்லை எனலாம்.

பதிலடி தாக்குதல் (Counter Attack):

அணை உடைப்புக்கு (06.06.2023) இரு தினங்களின் முன்னர் (04.06.2023) தொடுக்கப்பட்ட இத்தாக்குதலானது எதிர்ப்பார்க்கப்பட்டது போல மிக உக்கிரமானதாகவே இருந்தது.  கிட்டத்தட்ட ஐந்து இடங்களில், ஒரே சமயத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்தாக்குதலானது, புட்டினின் மிக அண்மித்த அறிவிப்பின்படி, உக்ரைனின் 186 தாங்கிகளையும் 400 கவச வாகனங்களையும் உக்ரைன் இழப்பதற்கு வழி வகுத்து விட்டது. (16.06.2023:புட்டின்).

இதில் முக்கியமானது ஜெர்மனி வழங்கிய Leopard தாங்கிகளும், அமெரிக்கா வழங்கிய பிரேட்லி (Bradley) தாக்குதல் கவச வாகனங்களும் அழிபட்டு, கைப்பற்றப்பட்டுள்ளது என்ற விடயமாகும். இந்த சூழ்நிலையிலேயே, அணை உடைப்பும் இடம்பெற்றதாகின்றது. அதாவது முதலில் குறிப்பிட்டப்படி பதிலடியை தொடங்கிய இரு தினங்களில் இவ் அணை உடைப்பு நடந்தேறி உள்ளது.

அணுவாயுதப் போர்:

இப்பதிலடி தாக்குதல், இவ் அணை உடைப்பு, அனைத்தும், ஒன்றையொன்று உக்கிரப்படுத்தி, தெரிந்தோ தெரியாமலோ, முன்னரே குறித்தவாறு ஓர் அணுசக்தி பிரயோகத்தை நோக்கி நகர்வது இன்றைய யதார்த்த நிலையாகின்றது.

ஆரம்பத்தில் ரிசி சுனாக்கின் ஆசிர்வாதத்தால், யுரேனிய தாங்கி குண்டுகளை ஓர் வரபிரசாதமாக ஏந்தி மகிழ்ந்திருந்த உக்ரைன், இக்குண்டுகளில் பெரும்பாலானவற்றை ரஷிய தாக்குதல்களினால் இழந்து ஒரு Atomic Mushroom உம் உற்பத்தி செய்து, பரிதவித்து நிற்கும் இன்றைய சூழலில், பைடன், இழந்துபோன, இந்த யுரேனிய  தாங்கி குண்டுகளை ஈடு செய்ய முன்வந்துள்ளார் எனும் செய்தி, உக்ரைனுக்கும் ஆயுத வியாபாரிகளுக்கும் உவப்பூட்ட கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. ஆனாலும், இவ் யுரேனிய தாங்கி குண்டுகளை உற்பத்தி செய்து கொள்வதிலும் சில சங்கடங்கள் வராமல் இல்லை. இதனாலோ என்னவோ, ரஷியாவின் யுரேனிய ஏற்றுமதியை, எந்த ஒரு மேற்கத்தைய நாடும் வெளிப்டையாக கண்டித்ததாகவும் இல்லை.  September-December  ஆகிய மூன்று மாதங்களுக்கிடையில் மாத்திரம், ரஷியா, 25தொன்கள் செறிவ10ட்டப்பட்ட யுரேனியத்தை சீனாவுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.

இதேபோன்று, மொத்தமாய், 2400 மெட்ரிக் தொன் யரேனியத்தை, ரஷியா, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. முடிந்த வருடத்தில், 15.3தொன் யுரேனியத்தை, ரஷியா, பிரான்ஸ்ஸ}க்கு மாத்திரம், ஏற்றுமதி செய்திருந்தது.  மேலும் மிக அண்மித்த காலம் வரை தனது 14%  யுரேனியத்தை அமெரிக்கா, ரஷியாவில் இருந்தே இறக்குமதி செய்திருந்தது என்பதும் அதிசயமூட்டக்கூடிய ஒன்றாகவும் இருக்கின்றது. அதாவது, ஐரோப்பிய நாடுகள் மாத்திரம் அல்லாது, அமெரிக்காவே ரஷிய யுரேனியத்தில் தங்கியுள்ள விடயம் அம்பலப்பட்ட போது உலகம் சற்று திடுக்கிடவே செய்தது.

இவ் உண்மையானது, ஏன் ரஷியாவின் யுரேனிய வியாபாரம் அல்லது யுரேனிய ஏற்றுமதியானது பெரிய ஒரு பேசுபொருளாக ஒலிக்கப்பட்ட மேற்கின் ஏற்றுமதி தடைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதற்கான விடையை வழங்குவதாகவும் உள்ளது.  இதுபோக, இவ் உண்மைகள், ரஷியாவை மேற்கு ஏன் மண்டியிட செய்வதில், திடசங்கற்பம் பூண்டுள்ளது –ஏன் உக்ரைனை ஒரு பகடையாகப் பாவித்து உக்ரைன்-ரஷிய போரை இன்று மும்முரப்படுத்தி வருகின்றது என்பதற்கான விடையைத் தருவதாகவும் இருக்கின்றது.

சுருக்கமாக கூறினால், ஜெர்மனியின் Leopard தாங்கிகள், இங்கிலாந்தின் யுரேனிய குண்டுகள் மற்றும் Sand Storm ஏவுகணைகள் அல்லது அமெரிக்காவின் F-16 விமானங்கள், ஆர்டிலரிகள், பெட்றியாட் ஏவுகணைகள் போன்ற அதி நவீன ஆயுதங்கள் என்பன, கிட்டத்தட்ட மேற்கின் 30க்கும் அதிகமான நாடுகளால், உக்ரைனுக்கு, ஒன்று சேர்ந்து வழங்கப்பட்டு, உக்ரைனை ரஷியாவுக்கு எதிராக போரிட நிறுத்தியுள்ளன.  இச்சூழ்நிலைகள் ஏன் எழுந்தது என்பதற்கான விடைகளையும் இவ் யதார்த்தம் கோருவதாகவே உள்ளது.

மறுபுறத்தில், ரஷியாவின் இவ் இடைவிடாத தாக்குதல்களினால், உக்ரைன் இன்று நிலைகுலைவுகளுக்கு உள்ளாகி, எரிந்த ஒரு சுடுகாடாக மாறியுள்ள இன்றைய நிலைமையில், மேற்படி கேள்விகள் வழமையைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கின்றது. அதாவது, நாடுகள் ஏன் இப்படி, இவ்வாறெல்லாம் நடக்க முற்படுகின்றன அல்லது எதிர்வினையாற்ற முற்படுகின்றன என்ற கேள்வி, எமது விடுதலை போர் உருவாக்கிய கேள்விகளை போல் தோன்றாமலும் விடுவதில்லை.

கேள்விகளும் பின்னணியும்:

அமெரிக்காவின் உள்ளக நடப்பு நிலையும், 31.4 ட்ரில்லியன் கடன் சுமையும், பல் ஆதிக்க முனைகளை கொண்ட இன்றைய உலகில், இன்று முன்னிலை நோக்கி நகர்வதாக உள்ளது. வேறு வார்த்தையில் கூறினால், டாலர் தனது கோலோச்சிய காலத்தை முடித்தக் கொண்டு, யுவான்-ரூபிள் போன்ற நாணயங்களுக்கு ஒதுங்கி வழிவிடக்கூடிய, யதார்த்தம், இன்று உலகில் துவங்கப்பட்டுள்ளதாகவே உள்ளது.

சீனம், ஜப்பான் போன்ற ஏட்டிக்கு போட்டியான நாடுகள் கூட, அமெரிக்க டாலரை இன்று, கைக்கழுவி விட்டது மாத்திரமல்லாமல், தாம் இதுவரை பெற்று குவித்து வந்த அமெரிக்க இறை முறிகளையும், உலக சந்தையில் கரைத்துவிட்டு, தங்கத்தை தேடி அலையும் நாடுகளாகி விட்டன.

இச்சூழலில், ஒரு ரஷிய சந்தையும், ஒரு ரஷிய எண்ணையும், ஒரு ரஷிய நிலக்கரியும், ஒரு ரஷிய யுரேனியமும் கிட்டுமானால் தனது 31.4 ட்ரில்லியன் டாலர் கடனை அடைத்துவிடுவது மாத்திரமல்லாமல், உலக ஆதிக்கத்தில் தனது நிலையை, பன்மடங்காய் பெருக்கி மேலும் உறுதி செய்து கொள்ளலாம் என்ற நப்பாசையே கொள்கை வகுப்பாளர்களிடம் இன்று உறுதியாக்கப்பட்டுள்ளது.  எனவேத்தான், ரஷியாவுக்கு எதிராக ஒரு உக்ரைனானது கடந்த 15 வருட காலமாய், படிப்படியாக கவனமாக கட்டி வளர்க்கப்பட்டு வந்ததாயிற்று. ஆனால், ஒரு மின்ஸ்க் (MINSK-2014) ஒப்பந்தத்தில், அமெரிக்காவும், பிரான்ஸ்ஸ}ம், ஜெர்மனியும், உக்ரைனும் எவ்வாறு பங்கேற்று ஒரு நாடகத்தை நடத்தினவோ, அதே போன்று, அதே அளவில் ஒரு நாடக பாத்திரத்தை, தெரிந்தே ஏற்று நடித்தவராகவே புட்டின் காணப்படுகின்றார்.  ஏனெனில், ரஷியா, இன்று கொண்டுள்ள போர் தயாரிப்புகளை, நுணுகி பார்க்குமிடத்து அது இன்று அல்லது நேற்று என புதிதாய் முளைத்திருக்க கூடிய ஒன்று அல்ல என்பது தெட்ட தெளிவாகின்றது.

அண்மையில் ஒரு விமர்சகர் பின்வருமாறு கூறியிருந்தார்:

G - 7 நாடுகளின் மொத்த உற்பத்தியையும் (GDP) கணக்கில் எடுத்தால் அது ரஷியாவின் மொத்த உற்பத்தியை விட 24 மடங்கு அதிகமானது. இதேப்போன்று G - 7 நாடுகளின் மொத்த ராணுவ பட்ஜெட்டையும் செலவீனங்களையும் கணக்கில் எடுத்தால், அது ரஷியாவின் மொத்த ராணுவ செலவீனத்தை விட 28 மடங்கு அதிகமானது”.

இவ் அடிப்படையில், ரஷியாவை வெற்றி கொள்ளலாம் என்று கருதுவதில் பிழையேதும் இல்லை என்பதே அவரது வாதத்தின் சாரமாகின்றது.

மறுபுறத்தில், தனது நாட்டின் ஆயுத உற்பத்தி குறித்து கூறும் போது புட்டின் கூறியதும் இதனுடன் சேர்த்து கவனத்தில் கொள்ளத்தக்கதே:

“கடந்த 08 வருடத்தில் நாட்டின் ஆயுத உற்பத்தியானது 10 மடங்காய் அதிகரித்துள்ளது என்பது போக ஏவுகணைகள் உள்ளிட்ட, தமது முக்கிய ஆயுத தொழிற்சாலைகள் இன்று நாளொன்றுக்கு மூன்று சுழற்சியில் ஆயுதங்களை உற்பத்தி செய்வதாகவும் புட்டின் கூறியுள்ளார்” (12.06.2023).

ஆனால், போரை கட்டுவித்த, அடித்தட்டு சிந்தனைகளுக்கான, மேற்படி தர்க்கத்தைவிட, அதிகமான தர்க்கத்தை, அமெரிக்க ராணுவ புள்ளிவிபரங்கள் காட்டுவதாகவே உள்ளது.

உதாரணமாக, 2ம் உலகப்போரின் போது, தனது 12.2 மில்லியனுக்கும் அதிகமான போர் வீரர்களுக்கு, அன்று, அமெரிக்க 4 நட்சத்திரங்களை கொண்ட நான்கே நான்கு ஜெனரல்களைதாம் தமது தலைமையாக வைத்திருந்தது.  

ஆனால், இன்றோ ஆயுத வியாபாரிகளின் அடாவடித்தனங்களினால், கிட்டத்தட்ட அதே அளவிலான துருப்புகளுக்கு (1.4 மில்லியன்) 44 ஜெனரல்களை அமெரிக்கா நியமித்துள்ளது. கேள்வி, மேலதிகமாக உள்ள 40 ஜெனரல்களை யார் நியமித்தார்கள் என்பதேயாகும்.  வலைதளங்களில், இன்று பரவலாக பகிரப்பட்டுவரும் இதற்கான பதில், இது மேற்கு நாடுகளின் ஆயுத வியாபாரிகளால் என்பதேயாகும்.

பகுதி-ii

பணவீக்கம்-வாழ்க்கைசெலவு-எரிபொருளின்மை-வேலையில்லா பட்டாளங்கள்-காசடிப்பதில் அல்லது இறைமுறிகளை விற்று தீர்ப்பதில் அல்லது வட்டி வீதங்களை உயர்த்தி விடுவதில் மும்முரம் - இவை அனைத்தும், அமெரிக்காவின் நாளாந்த நடைமுறையாக, அதன் உள்நாட்டில் தலைவிரித்தாடும் போது, அதற்கு வெளியே, காணப்படும் உலக நிலவரத்தில், மாற்றங்கள் முற்றாக வேகமுடன் இடம்பெறுவதாகவே காணக்கிட்டுகின்றது.

உலகில் காணக்கிட்டும், இந்த பல்வேறு ஆதிக்க முனைகள், ஐக்கிய நாடுகள் சபையில், தங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப்ப சரியான ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு, ஐ.நா சபையில் ஒரு மாற்றத்தை கோரி வருவதும், டாலருக்கு பதிலாக தத்தமது நாணயங்களை அவை முன்னெடுக்க முயல்வதும், மேலும் “தடங்கலற்ற வர்த்தகம் அல்லது விநியோக பாதைகளுக்காய் (Supply Chain)” அவர்கள் புது கடல்தரை மார்க்கங்களை ‘புதிதாய்’ திறந்து விட முயற்சிப்பதும், பொருளாதார தடைகளை சாபக்கேடுகளாக எண்ணி அவற்றை புறந்தள்ள முனைய வேறு பல வழிகளை தேடுவதும், உலகின், இன்றைய, நாளாந்த நடப்புகளாகின்றன.

இச்சூழ்நிலையிலேயே, முக்கியமாக இன்று முனைப்பு பெற்று வரும் பல்முனை உலகத்தினிடையே-தத்தமது வல்லமைகளை மேலும் மேலும் உயர்த்தி கொள்வதில், நாடுகள், பெரிதளவு கரிசனைகளை காட்டி வருகின்றன.  

உதாரணமாக, சீனம் இன்று, தனித்து ஒரு விண்வெளி கூடத்தை, விண்வெளியில் நிர்மாணித்துவிட்டது என்ற விடயம், நேற்று வரை ஒரு பகல் கனவாகவே இருந்திருக்ககூடும் என்பது தெளிவானது. இதுபோலவே  BRICS அமைப்பில், புதிதாய் இன்று இணைய விருப்பம் தெரிவித்துள்ள நாடுகள், ஒரு தகவலின் பிரகாரம், கிட்டத்தட்ட 19-30 என்றும் கூறப்படுகின்றது.

இதுபோலவே, மத்திய-கிழக்கில் தோற்றம் பெறும் புதிய மாற்றங்கள் (அதாவது ஈரான்-சவுதி உறவு முறைகள் அல்லது சிரிய-அரபு நாடுகளின் உறவு முறைகள் என்பனவற்றில் காணக்கிட்டும் புதிய பரிமாணங்கள்)- இவற்றை எடுத்தாலும் சரி அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பில் தென்னாபிரிக்கா நடத்த முயலும் சட்ட சீராக்கல் அல்லது தென்னாபிரிக்காவின் தலைமையில் ஆப்ரிக்க நாடுகளை, உக்ரைன் சமாதான பேச்சுவார்த்தை திட்டத்தை நோக்கி இட்டு செல்லும் திட்டங்களை கவனத்தில் கொண்டாலும் சரி–உலகத்தின் முகமானது, இன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒரு உக்ரைன்-ரஷிய போரால், தீவிர மாற்றத்தை அடைந்துள்ளதாகவே காணப்படுகின்றது.  

இந்தியாவின் டோவால் இன்று இருகரம் நீட்டி வரவழைக்கப்படுவதும், அவர் உலகின் வரப்பிரசாதம் என புகழப்படுவதும், மோடி அடுத்து வரும் கிழமைகளில் (21-24) தமது அமெரிக்க விஜயத்தை ஆரம்பிக்க உள்ளதற்கும் கூட ஒரு ஏற்ற பின்னணியை, இவ் உக்ரைன்-ரஷிய போர் விவகாரமே தருகின்றது என்றால் இது மிகையானதும் அல்ல. (மோடியின் விஜயத்திற்கான ஓர் அழுத்தத்தை, இன்று சீனத்திற்கு தனது விஜயத்தை மேற்கொள்ளும் பிளிங்கன் ஏற்படுத்துவாரா என்பதும் கேள்விக்குறியே -17.06.2023).

உலகில் இன்று சடுதியாக இடம்பெற்றுவரும், இந்த நடைமுறைகளை கவனத்தில் கொண்டே ரஷியாவும் தனது தந்ரோபாய அணு ஏவுகனைகளை, பைலோ-ரஷியா நோக்கி நகர்த்த முடிவு செய்துள்ளதாய் படுகின்றது. (ஏற்கனவே அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை துருக்கி முதல் ஜேர்மனி, இத்தாலி வரையிலான ஆறு நாடுகளுக்கு நகர்த்தி உள்ளது என்பதும் நினைவுப்படுத்திக் கொள்ளத்தக்கதே).
இவ் அணு ஆயுதங்களின் பிரயோகிப்பு குறித்து, பைலோ-ரஷியா அதிபர் கருத்து தெரிவிக்கும் போது, இதன் பிரயோகிப்பு ஓர் சராசரி அணு பிரயோகிப்பை போல் இராது என்றாலும், இதன் தாக்கம் அமெரிக்காவின் ஹிரோசிமா, நாகசாக்கி ஏற்படுத்திய தாக்கங்களை விட, இரண்டு மூன்று மடங்கு அதிகளவிலேயே இருக்கும் என தெரிவித்திருந்தார். (ஹிரோசிமாவில் விழுந்த அணுகுண்டால் உடனடியாக 80,000 பேர் இறந்தொழிந்தனர் என்பதும் சற்று தாமதமாக 250,000 பேர் அழிந்தனர் என்பதும் குறிக்கத்தக்கது).

மறுபுறத்தில், உக்ரைன்-ரஷிய போர் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டிய தேவையை மேற்கு கொண்டுள்ளதென மெக்ரோகர் அபிப்பிராயப்படுவார். NEW YORK TIMESஇன் அண்மைக்கால அறிவிப்பின்படி, உக்ரைனானது உடனடியாக நேட்டோ அமைப்புக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்று அப்பத்திரிக்கை கோரிக்கை விடுத்துள்ளதை அவர் சுட்டி காட்டுகின்றார். அதாவது, இந்நாள்வரை உக்ரைனானது நேட்டோ அமைப்பிற்குள் உள்வாங்கப்பட குறிப்பிட்ட காலம் செல்லும் என்று கூறி வந்த ஒரு நடைமுறைக்கு, நேர் எதிராக இக்கோரிக்கை அமைந்துள்ளதை அவர் சுட்டி காட்டுவார். இதற்கான காரணம் உக்ரைன் இன்று களத்தில் பலமாக அடைந்து வரும் தோல்வியே காரணம் என அவர் குறிப்பார்.

அவரின் கருத்து பிரகாரம், உக்ரைன் இன்று அடைந்து வரும் இத்தோல்வி என்பது, மொத்தத்தில், மேற்கு அடைந்து வரும் தோல்வி என்பதாகும் என்பதே அவரது எண்ணப்பாடு ஆகின்றது.  
இதன் காரணத்தினாலேயே, உக்ரைனின் போரை அகலப்படுத்த வேண்டிய தேவையானது இன்று மேற்கிற்கு எழுவதாய் இருக்கின்றது–மேலும் இது ஒரு அணுசக்தி பிரயோகிப்புக்கு இட்டு செல்லும் வழிவகைகளை கொண்டுள்ளது எனவும் அவர் அபிப்பிராயப்படுவார்.

அதாவது, தோல்வி-போரை அகலப்படுத்தல்-அதற்கூடு தனது தோல்வியை மறைத்தல் அல்லது அதற்கூடு புதிய வெற்றிகளை நாட முயலுதல்-இவ் அகலப்படுத்துதலில் அணு பிரயோகிப்பை இறக்கி விடுதல்-இது நடைமுறையாகின்றது.

உலகமகா யுத்தங்கள்:

உலகின் சாபக்கேடுகளாக அமைந்த, உலக மகா யுத்தங்கள், யார் விரும்பியோ விரும்பாவிடிலோ இடம்பெற்றே தீருகின்றன.

தமது பூரண அதிகாரத்தில் நம்பிக்கை கொண்டோர், யதார்த்தங்களை மறந்து, கனவு நிலைபாற்பட்டு எங்கே நிறுத்துவது என தெரியாது தமது காலடியை தமது சொந்த பிரக்ஞையற்று, தாம் அறியாமல் எடுத்துவைப்பதிலேயே இச்சாபக்கேடு, வேர்பதிக்கின்றது.

பெரியோன் எனப்படுவோன், எங்கே நிறுத்துவது என்பதனை அறிந்தவனே என ஐன்ஸ்டைனும் கூறியுள்ளார் என மெக்ரோகர் சுட்டுவார்.

அவரது கூற்றுப்படி, இது ஹிட்லருக்கும் பொருந்தும் - நெப்போலியனுக்கும் பொருந்தும் - அன்றைய வல்லரசான இங்கிலாந்துக்கும் பொருந்தும் என்பார் அவர்.

வேறு வார்த்தையில் கூறுவதானால், சரித்திரத்தின் படிகளை, ஒரு தனிமனித வீழ்ச்சி அல்லது எழுச்சியில் புரிந்து கொள்வது ஒன்று அல்லது அதனை ஓர் சமூகவியல்-பொருளியல் காரணங்களுடன் தொடர்புபடுத்தி பார்ப்பது வேறொன்று ஆகின்றது.

இத்தகைய ஓர் பின்னணியிலேயே, மேற்படி அழிவுகளுக்கு இட்டு செல்லும் சிந்தனை ஓட்டங்கள் அல்லது எண்ணப்பாடுகள் எப்படி முளைவிடுகின்றன என்ற கேள்வி முன்னணிக்கு வருவதாக இருக்கின்றது.

உலகின் கோடீஸ்வர நாயகர்கள்:

உலகின் கோடீஸ்வரர்கள், (OLIGARCHS) வரன்முறையற்றவர்கள் என்ற கருத்து இன்று பரவலாக அடிபட தொடங்கியுள்ளது.  

இலுமினாட்டிகள் என்றும் பில்டர் பெர்கஸ் என்றும் அழைக்கப்படும் ஐந்துக்கும் மேற்பட்ட அமைப்புக்களை சேர்ந்தோராய் இவர்கள் இருக்கின்றார்கள் என் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். நாட்டின் எல்லைகள், மொழிகள், கலாசாரங்கள், அரசியல் என்பன இவர்களை எல்லைப்படுத்துவதில்லை. இப்படி எல்லைகள் இருப்பதையும் இவர்கள் கண்டுக்கொள்ள தயாரானவர்களாகவும் இல்லை என்பார்கள் ஆய்வாளர்கள்.  

அனைத்து நாடுகளிலும், தங்களை போல் தங்களை ஒத்தவர்கள் உண்டு என்பதும் இவர்களின் ஒன்று குவிப்பு என்பதே இவ்உலகை ஆளுதல் வேண்டும்-எல்லைகளை கடந்து என்ற இவர்களது அரசியலானது- சுவாரஸ்யமானது. (அதாவது, அமெரிக்க கோடீஸ்வரருக்கும், ரஷிய கோடீஸ்வரருக்கும் உக்ரைனிய கோடீஸ்வரருக்கும் வித்தியாசங்கள் இருக்க கூடாது என்பது இந்த ழுடுஐபுயுசுஊர்ளுகளின் உலக கண்ணோட்டமாகின்றது).

இதனையே-இவ் அரசியலையே மெக்ரோகர் போன்ற எண்ணற்ற வலதுசாரி ஆய்வாளர்கள் இன்று எதிர்ப்பதாகவும் படுகின்றது.

இவர்களின் கருத்துப்படி “சோரோ”வுக்கு ஒரு நாட்டின் எல்லைகள் தேவையில்லை–“டாலரே” எல்லைப்படுத்தும் காரணியாக இருக்க ஆசைப்படும் பண்பினர் இவர்கள். (GEORGE SOROS: ஹங்கேரியில் பிறந்து இன்று அமெரிக்காவில் வாழும் ஒரு கோடீஸ்வரர். கோடிக்கணக்கான டாலர்களை அமெரிக்க-உலக அரசியலுக்காக தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒருவர். முற்றுமுழுதான சுதந்திர அரசியல், ஜனநாயகம் என்பதெல்லாம் இவரது அடிநாதம்).

ஆனால் சோரோவுக்கு மறுதலையாக, அவ்வவ்நாட்டின் உள் விவகாரங்களில் அக்கறை செலுத்துபவர்களாக உள்ளனர்.

உதாரணமாக, ஜெர்மனியின் இன்றைய அவல நிலையினையும், பிரான்சின் மூக்குடைந்த கதையினையும்,  உக்ரைனின் சுடுகாட்டு நிலைமையினையும் இவர்கள் கருத்தில் கொள்வதாகவே தெரிகின்றது. ஆனால், OLIGARCHSகளின் நிலைமையோ வேறுவிதமானது. ரஷியாவின் எல்லைகள் எமது டாலருக்காக திறந்தாக்கப்படல் வேண்டும், எமது மூலதனம் எங்கெங்கே பாய முற்படுகின்றதோ அங்கே எந்தவொரு தங்குதடையும் இருத்தல் கூடாது. அதாவது, பிரிட்டி~; காலனியாதிக்கம், இலங்கையில் பாய்ந்து, இலங்கையின் மலையகத்தில் தேயிலை தோட்டங்களை உருவாக்குவதும், ஓர் இந்திய தொழிலாளி பட்டாளத்தை அங்கே இறக்குவதும், டாலருக்கு அடிவணங்கி மண்டியிடுவதும், இங்குள்ள தலைவர்களின் முன்னால் இருக்கக்கூடிய அதியுயர் கடமை என்பது இவர்களின் வாதம். இதற்கேற்ற தலைமைகளை கட்டுவிப்பதும் இவர்களின் அதியுயர் விருப்பமாகின்றது.

இருந்தும், இவர்களின் இந்த அரசியல் எனப்படுவது, இன்று, அமெரிக்க–ஐரோப்பிய நாடுகளை எங்கு கொண்டுப்போய் நிறுத்தியுள்ளது–அந்தந்த நாட்டின் உற்பத்திகளை இந்த அரசியல் பெருக்கி உள்ளதா– அல்லது இந் நாடுகளின் பண வீக்கத்தை இவ் அரசியல் கட்டுப்படுத்தி உள்ளதா–இங்கே மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனரா என்பது போன்ற கேள்விகளை மேற்குறித்த ஆய்வாளர்கள் கிளப்பி விடுவதாகவே படுகின்றது.

இச்சூழ்நிலையிலேயே, இவ் OLIGARCHSகள்  தத்தமது ராணுவத்தை மாத்திரமல்லாமல் அரசியல் தலைமைகளையும், காங்கிரசினையும்-இன்னும் சரியாக சொன்னால், அந்தந்த நாடுகளின் உயர் பீடங்களையும் தத்தமது கைய10ட்டலுக்கூடாக மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி தீர்த்துள்ளனர்-தமது ஆளுகைகளின் கீழ் கொணர்ந்து சேர்த்துள்ளனர்.

போதாதற்கு, உலக யதார்த்த நிலையில் இருந்து அடிப்படையில் பிரிபடும் இவர்கள் இன்று, “செயற்கை புலமையுடன்” ஒன்றித்து விடுவதாகவும் அபிப்பிராயங்கள் தெரிவிப்பதாய் இருக்கின்றன.

செயற்கைப் புலமை:

இது இன்று பரவலாக  பேசப்படும் ஒரு பொருளாகின்றது. இது ஏற்படுத்த போகும் பயங்கள் பொறுத்து பல்வேறு நாடுகளும் கருத்து பறிமாறுவதில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவே உள்ளது.  உதாரணமாக அண்மையில் நடந்தேறிய ரி~p சுனாக்-பைடன் கலந்துரையாடலில் இவ் அம்சம் தலையானதாக இருந்திருக்ககூடும் என்றால் அது மிகையாகாது.

இது போலவே, புட்டின்-ஓi இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலில் கூட செயற்கை புலமை என்பது முக்கிய விடயப்பொருளாக இருந்திருக்க வாய்ப்புண்டு என ஆய்வாளர்கள் கருதுவர்.
காரணம் இன்றைய உக்ரைன்-ரஷிய போரை கட்டுவிப்பதிலும், முன்னெடுப்பதிலும், செயற்கை புலமை எந்தளவில் செயற்பட்டுள்ளது அல்லது F-16 விமானங்களின் வழங்குகைக்கு பின்னால் செயற்கை புலமையின் செல்வாக்கு தொடர்புபட்டு உள்ளதா அல்லது எந்தளவு அணு ஆயுதங்களின் பிரயோகிப்பை நோக்கி இப்போர்க்களம் இட்டு செல்லப்படலாம் என்பதெல்லாம் இப்புலமையின் அணுசனையில், தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றதா என்பதெல்லாம் கேள்விகளாகின்றன.

அதாவது, செயற்கை புலமையானது தமது கட்டளைக்கு அடிபணிந்து மனுகுலத்துக்கு சேவைபுரிவதை விடுத்து, செயற்கை புலமையின் காலடியில் மனுகுலம் சேர்ந்த கதையாகி விடுமோ என்ற கேள்வி ஒருபுறம் அச்சுறுத்தவதாய் இருக்கையில் OLIGARCHSகளின் தேவைப்பாட்டை பூர்த்தி செய்ய இச்செயற்கை புலமையே மிகுந்த நம்பகதன்மை கொண்ட ஓர் இயங்கு சக்தியாக இருக்கின்றது என்பது குறித்த கேள்விகளும் இன்று எழுவதாகவே உள்ளது.

இவ் அடிப்படையிலேயே மோடியின் அல்லது டோவாலின் சந்திப்புக்கள் திசை நோக்கியதாக இருக்க கூடும் என்ற அபிப்பிராயங்களும் எழுவதாய் உள்ளது.

அண்மையில் ரணில் விக்கிரமசிங்க கூட இலங்கை மாணவர்களுக்கு செயற்கை புலமை என்பது அவர்களது ஆரம்ப கட்டங்களிலேயே கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். (Daily News: 01.05.2023).

அதாவது, பிரதேச அல்லது சர்வதேச நலனை, மேற்கு வல்லரசுகளின் முகங்கோணாமல், நடைமுறைப்படுத்த, ஒரு மையப்படுத்தப்பட்ட, செயற்கை புலமையின் அவசியத்தை அன்னார் உய்த்தறிந்திருக்க கூடும். அதாவது, சர்வதேச மூலதனத்தின் ஆணிவேரை ஆழ பற்றி பிடித்திருக்கும் அன்னாரின் இச்சிந்தனை இப்படியாக விரிவடைவதில், வியப்பில்லை எனலாம்.

இதனாலோ என்னவோ, அன்னார், ஆசியாவின் மிகப்பெரும் பிரதிநிதி எனவும் போற்றப்படுவது கவனத்தில் கொள்ளத்தக்கதே.

ஆனால், இதற்கெதிராகவே பெரும்பாலான உலக நாடுகளின் சிந்தனைகளும் இன்று களை கட்டுவதாக உள்ளது.

சுருக்கமாக சுறினால், உலகின் கொள்கை வகுப்பாளர்களின், சிந்தனையை, ஒரு செயற்கை புலமை கட்டுப்படுத்திவிடும் என்றால் மெக்ரோகர் போன்ற வலதுசாரி சிந்தனையாளர்கள் கூட, தங்களின் இடங்களை இழந்து போனவர்களாகவே காட்சி தருவர். இதனை கவனத்தில் கொள்ளும் ரஷிய-சீன-ஆப்பரிக்கா-இந்தியா அல்லது பிரேசில்; போன்ற நாடுகள் இப்புதிய யதார்த்தங்களுக்கு எவ்வாறு முகங்கொடுக்க கூடும் என்பது இன்றைய கேள்வியாகின்றது.

ஆனால், இவற்றை எல்லாம், தாறுமாறாய் புரிந்து வைத்து கொள்ளும் அபார ஆற்றல் எமது தமிழ் அரசியல்வாதிகளில் பெரும்பான்மையோருக்கு அநாயாசமாகவே வந்து சேர்வது ஆச்சர்யத்துக்குரிய ஒன்றாகவே இருக்கின்றது. இதன் காரணமாகவோ என்னவோ, இவர்கள், தோல்விக்கு மேலாக தோல்வியை அரசியலில் சந்தித்து வருவதும் பின்னர் சமாளித்து புன்னகை பூத்துக்கொள்வதும் எமது துரதிர்ஸ்டமாகின்றது.

உக்ரைனுக்கான தமிழர் இயக்கம் என்று ஆரம்பத்தில் கூறப்பட்ட சிந்தனையின் கீற்று இன்று, நேட்டோ பிளஸ் இல் இந்தியா ஒரு அங்கத்தினராக இணையும் என ஆருடம் கூறும் வரை சென்றுள்ளது. (தமிழ்வின்:சந்திரமதி:12.06.2023).   இந்நெடித்த கட்டுரை வெளிவந்ததன் மறுநாள், ஜெய்சங்கரின் அறிவிப்பான இந்தியா என்றுமே நேட்டோவில் பங்குனராக இராது என்ற அறிவிப்பும் வெளிவந்தது.

இம்முரண்களை, இற்றைநாள் வரை சந்திரமதியும் ஏற்றதாய் இல்லை. குறித்த ஊடகமும் ஏற்றதாய் இல்லை. இருந்தும், இன்னுமொரு நெடிய கட்டுரையில், தங்களை மறைத்துக் கொள்வது காலத்தின் விந்தையாகின்றது. (நேட்டோவை நிராகரித்த புதுடில்லியும் மோடியின் அமெரிக்க விஜயமும்-கட்டுரை).

சுருக்கமாக கூறினால், “மறைவாய் எமக்குள் பழங்கதை பேசி” என பாரதி என்றோ கூறி வைத்திருந்தாலும், இதுவே எமது என்றென்றைக்குமான அரசியலாகின்றது.

இருந்தும், ஓர் உக்ரைன்-ரஷிய போரில் சமாதானம் நோக்கி ஒரு தென்னாபிரிக்கா பங்கேற்க முன்னணியில் நிற்பது போல அமெரிக்காவின் நேட்டோவில் இணைவதற்கான அழைப்பை இந்தியா நிராகரித்து விடுவதும், இவற்றின் பின்னணியில் உக்ரைன்-ரஷிய போர் கொடி கட்டுவதும், இவ் அரசியல், இந்து சமுத்திரத்தை தீண்ட முனைவதும், இது எமது நாளைய அரசியலை தீர்மானிக்க போவதும் முக்கிய காரணிகளாகவே இருக்கின்றன-விரும்பியோ, விரும்பாமலோ.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.