கோவை சொல் முகம் சந்திப்பு 6/7/25 கோவை விஷ்ணுபுரம் பதிப்பகம் சிற்றரங்கில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் பற்றிய நான்கு அமர்வுகள், நாவல்கள் பற்றிய நான்கு அமர்வுகள், நடைபெற்றன.சிறப்பான ஆய்வுகள். விகரம், பூபதி, சுஷில்குமார், சுதா சீனிவாசன்,நவீன், அருணா, , உமா பாலாஜி, நரேன் ஆகியோர் உரையாற்றினர். நுணுக்கமான இளைஞர்களின் பார்வைகள் . பெண்களின் பார்வையில் மீட்சி தேடும் விடுதலை என்று அமைந்தது.
சொல்முகம் கருத்தரங்கில் பலரும் பேச்சில் அசோகமித்திரன் பற்றியும் சுஜாதா பற்றியும் குறிப்பிட்டார்கள். பலரும் என்னுடைய ஒவ்வொரு ராஜகுமாரிகளுககுள்ளும் சிறுகதை பற்றி குறிப்பிட்டார்கள். அந்த கதை வெளிவந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன அண்ணன் மீரா அவர்கள் அன்னம் இதழில் வெளியிட்டார் . அந்த கதை வந்த போது ஜெயமோன் அவர்கள் சுமார் 40 நண்பர்களுக்கு கடிதங்கள் மூலமாக அந்தக் கதையை சிபாரி செய்து எழுதி இருப்பதை பலமுறை அவர் குறிப்பிட்டு இருக்கிறார் அதை அவரே மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார் கதா இதழில் வெளிவந்தது
பிறகு என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர் வெளிவந்த போது அதைப் பற்றி விரிவான ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையில் சுப்ரபாரதி மணியனுக்கான வடிவம் நாவல் தான் என்று ஜானகிராமனை போன்றவரை குறிப்பிட்டு எழுதி இருந்தார். அப்போது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் என் இலக்கிய பயணத்தில் 29 நாவல்கள் எழுதிய பிறகு அவருடைய கணிப்பு ஆரம்பத்திலேயே சரியாக இருக்கிறது இருந்திருக்கிறது என்பதை கண்டு கொண்டேன் என்பதை பற்றியும் குறிப்பிட்டேன். சிறப்பாக அமைந்தது.நன்றி சொல் முகம் குழுமம் நண்பர்களே!
நரன் அவர்கள் சிலுவை நாவலைப் பற்றி விரிவாக பேசினார் மிகவும் சிறந்த உரையாக இருந்தது அவருடைய படைப்புகளைs சொல்வனம் போன்ற இதழ்களில் படித்திருக்கிறேன்
300 ஆண்டுகால கோவை பகுதி சரித்திரத்தில் சோமனூர் கருமத்தம்பட்டி மேட்டுப்பாளையம் திருப்பூர் உட்பட பகுதிகளில் மாந்தர்கள் இடம்பெற்று இருப்பதும் ஒரு கிறிஸ்துவ விதவைப் பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்த நாவலில் அவள் விதவை என்பதை நாலு தலைமுறைகளுக்குப் பின்னாலும் சிலர் குறிப்பிட்ட பேசி கொச்சைப்படுத்துவதையும் அந்தப் பெண்ணின் வாழ்க்கை தொடர்ந்து இயேசுவின் மேல் கொண்ட அக்கறையால் இயேசுவின் மேற்கொண்ட அக்கறையால் முழுமையடைந்திருப்பதையும் ஆனால் அவருடைய மகன்களில் ஒருவர் பொதுவுடமைக் சார்ந்த அக்கறையில் வாழ்க்கையக்கொள்வதும் உலகமயமாக்கலின் தாக்கத்தால் இன்றைக்கு ஜிஎஸ்டி தாக்கம் வரைக்கும் குறிப்பிட்ட கதாபாத்திரங்களும் கொங்கு மண்டலத்தின் பொருளாதார வீழ்ச்சியும் பனியன் சார்ந்த தொழில்
அமைப்புகளும் இன்னும் அந்த நெசவுக்குடும்பங்கள் பாதாளத்தில் இருந்து மீள முடியாமல் இருக்கிற துயரமும், தனியார் மயமாக்கப்பட்ட சூழலில் துயருறும் புதிய தலைமுறை பற்றியும் இந்த நாவலில் பல்வேறு படிமங்களாக வந்திருப்பதும் பல்வேறு தொன்மக்கதைகள் இந்த நாவலில் இடம்பெற்றதும் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று குறிப்பிட்டார் ..அட்டையில் உள்ள ரெம்ப ரண்ட் ஓவியம் வெளிப்படுத்தும் உணர்வுகளை பற்றி விரிவாகச் சொன்னார். அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வணக்கம். மிகவும் நன்றி. நெகிழ்வான தருணங்கள்.. நுணுக்கமான அலசல்.. படைப்பாளி பெருமை கொள்ள நல்ல சந்தர்ப்பம் .. நன்றி.. கோவை சொல் முகம் நண்பர்களே. 6/7/25 எனக்கு மகிழ்ச்சி தந்த நாள். ..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
;