தமிழ்நாடு தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையில் , சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கை வாயிலாக வழங்கப்படும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச்சேர்ந்த இலக்கியப்படைப்பாளிகளுக்கான கரிகாற்சோழன் விருதுகள் வழங்கும் விழா கடந்த 05 ஆம் திகதி நடைபெற்றது.

இம்முறை இந்த விருதுகள் இலங்கையரான , தற்போது அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் – விலங்கு மருத்துவர் நொயல் நடேசன் எழுதிய பண்ணையில் ஒரு மிருகம் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை எழுத்தாளர் சிவஆரூரன் எழுதியுள்ள ஆதுரசாலை என்ற நாவலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சான்றிதழும் தங்கப்பதக்கமும் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர்.

நொயல் நடேசன், சிறுகதை, நாவல், பயண இலக்கியம் மற்றும் விலங்கு மருத்துவம் தொடர்பான அபுனைவு படைப்புகள் பலவும் எழுதியிருப்பவர். இவரது சில நூல்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. சிவ. ஆரூரன் சில வருடங்கள் இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டு, பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர். சிறையிலிருந்தவாறே இலக்கியப்பிரதிகள் எழுதியிருக்கும் சிவஆரூரனின் ஆதுரசாலை நாவலுக்கு இலங்கையில் தேசிய சாகித்திய விருதும் கிடைத்திருக்கிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.