அவுஸ்திரேலியாவிலிருந்து  நீண்ட காலமாக இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிகளைப்பெறும் அம்பாறை மாவட்ட  தமிழ் மாணவர்களின் ஒன்றுகூடலும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவும் அண்மையில்  பாண்டிருப்பு மகா வித்தியாலய மண்டபத்தில்,  கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பான ஆதரவற்ற மாணவர் கல்வி அபவிருத்தி நிறுவகத்தின் தலைவர்,    முன்னாள்  அதிபர்  திரு. ந. கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேராசிரியர் சி. மௌனகுரு, எழுத்தாளர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன், விரிவுரையாளர் திரு. அற்புதன், பாண்டிருப்பு மகா வித்தியாலய அதிபர் திரு. வில்வராஜா ஆகியோரும், உதவிபெறும் மாணவர்களும்  அவர்களின் தாய்மாரும் கலந்துகொண்டனர். கல்வி நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதி,  நிதியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பயன்பாடும் பற்றி உரையாற்றினார்.

எத்தகைய  நெருக்கடிகள் வந்தாலும் கல்வி மீதான  தமது ஈடுபாட்டினை  ஆர்வத்துடன்  காண்பிக்கும் மாணவர்கள் தமது வாழ்நாளில் சாதனைகளை நிச்சயம் நிகழ்த்துவார்கள் என்பதற்கு பல உதாரணங்களை பேராசிரியர் மௌனகுரு தமது உரையில் சுட்டிக்காண்பித்தார். 

மாணவர்களின் உரையும் இடம்பெற்றது. மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் வழங்கப்பட்டதுடன்   மதியவிருந்துபசாரமும் இடம்பெற்றது.

l

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.