எனது  பாடலுக்குச் செயற்கை நுண்ணறிவான (AI)  Suno இசையமைத்துத் தந்தது. கேட்டுப்பாருங்கள்:

1. நான் பிரபஞ்சத்துக்  குழந்தை  - வ.ந.கிரிதரன்

நான் பிரபஞ்சத்துக்  குழந்தை
நான் பிரபஞ்சமெங்கும் அலைவேன்.
நான் பிரபஞ்சமெங்கும் திரிவேன்.
நான் பிரபஞ்சத்துக் குழந்தை.

நட்சத்திரங்கள் கண்டு மகிழ்வேன்.
நர்த்தனமிடுவேன். நகைப்பேன்.

நிலாக் கண்டு மகிழ்வேன்.
நிலவொளியில் குளிப்பேன்.
கும்மாளம்
அடிப்பேன்.

காலவெளிக் குழந்தை நான்.
காலவெளியின் பகுதி நான்.
காலவெளியாய்க்
களிப்பேன். மிகவும்
களிப்பேன்.