அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இப்பாடலின் வரிகளைச் சிறப்பாகப் பாடி சமூக ஊடகங்களில் அனைவரையும் மகிழ்ச்சியிலாழ்த்தினார். அவருக்காக அவர் இரசித்து, மகிழ்ந்து பாடிய இப்பாடலின் முழு வடிவத்தையும் வண்ணத்தில் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.அறுபதுகள், எழுபதுகளில் கண்ணன்,  அருணா இசைக்குழுப் பாடகர்கள் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகளில் பாடிய பாடல்களிலொன்று  இந்தப்பாடல். வேதாவின் இசையில், டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலில், ஜெய்சங்கர் & எல்.விஜயலட்சுமி நடிப்பில் அனைவரையும் கவர்ந்த இப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்தின்  'இரு வல்லவர்கள்'.

அக்காலகட்டம் அழகான ஜெய்சங்கர் 'ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்க'ராகக் கொடிகட்டிப்பறந்து கொண்டிருந்த காலம். இவரும் , விஜயலட்சுமியும் அதிக படங்களில் இணைந்து நடித்த காலகட்டம். - https://www.youtube.com/watch?v=BD8qYBBEf9o

சமூக வலைத்தளங்களில் இப்பாடலின் வரிகள் சிலவற்றைப் பாடிய முதியவர்!

எவ்வளவுதூரம் மனமொன்றி , இனிமையாக,இரசித்துப் பாடுகின்றார். இவ்வரிகளைக் கேட்டதும் இவர் குரலில் இப்பாடலை முழுமையாகக் கேட்டால் என்ன என்னும் எண்ணம் தோன்றியது. அது இப்பாடகரின் வெற்றி.

இலங்கையிலுள்ள தமிழ் இசைக்குழுக்கள் யாராவது இவரைப் பயன்படுத்தலாம். இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் நடைபெறும் சரிகம போன்ற இசை நிகழ்வுகளில் இவர் பங்குபற்றலாம். யு டியூப்பில் இவருக்கொரு 'சானல்' உருவாக்கலாம். இவற்றின் மூலம் இவருக்கு மேலதிகமாக வருமானமும் கிடைக்கலாம்.
 
பாடும்போது இவர் காட்டும் உடல்மொழியும், உற்சாகமும் மனத்தைக் கவர்கின்றன. வாழ்த்துகள்.