அண்மையில் இந்தியர்கள் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த நிகழ்வாக 'கோல்டன் குளோப்' விருதினை RRR திரைப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' என்னும் பாடல் சுயமாக எழுதப்பட்ட சிறந்த பாடல் என்னும் பிரிவுக்காகப் பெற்ற நிகழ்வினைக் குறிப்பிடலாம். சிறந்த  பிற மொழித்திரைப்படப் பிரிவுக்காகவும்  'RRR' பரிந்துரை செய்யப்பட்டபோதும் அந்த விருதினை மெக்சிக்கோ நாட்டுப் படமொன்று பெற்றுக்கொண்டது. இயக்குநர் ராஜ் மெளலி நிச்சயம் பெருமைப்படத்தக்க விருது.

இந்திய சினிமா என்றால் 'பாலிவூட்'  என்ற நிலை மாறி தென்னிந்திய சினிமாவும் உலக அரங்கில் கவனம் பெற ஆரம்பித்திருப்பதன் தொடர்ச்சியாக இவ்விருதினைக் குறிப்பிடலாம். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானில் ஆரம்பித்து 'நாட்டு நாட்டு',வரை வந்திருக்கின்றது.  இது தென்னிந்தியாவின் திறமையின் வெளிப்பாடு.

இப்பாடலில் நடித்துள்ள நடிகர்கள் ராம் சரண் & ஜுனியர் என்டிஆர். சிறப்பாக ஆடி நடித்திருக்கின்றார்கள். இருவருமே வசீகரமான முக, உடல் வாகு மிக்கவர்கள்.

இப்பாடலின் மூல வடிவத்தையும் , தமிழ் வடிவத்தையும் இங்கு பகிர்கின்றேன். பார்த்து, கேட்டு மகிழுங்கள்.

தெலுங்கில் - மூல வடிவம் - https://www.youtube.com/watch?v=OsU0CGZoV8E
தமிழில் : நாட்டுக் கூத்து -  https://www.youtube.com/watch?v=PsRka-zMTqo