'ஒளிவிளக்கு' எம்ஜிஆரின் நூறாவது திரைப்படம். ஜெமினி ஸ்டுடியோ தயாரிப்பாக வெளிவந்த திரைப்படம் யாழ் ராஜா திரையரங்கில் முதல் வெளியீட்டிலும், மீள் வெளியீட்டிலும் நூறு நாட்களைக் கடந்து பெரு வெற்றியீட்டிய திரைப்படம்.

இந்தக் காணொளி மிகவும் தெளிவாகவுள்ளது. பார்ப்பதற்குக் கண்களுக்குக் குளிர்ச்சி தருகின்றது. மீள்பகிர்ந்தலுக்கு அதுவொரு காரணம். பாடலைக் கேட்டதும் காலக்குருவி சிறகடித்து என் பால்ய பருவத்துக்கே சென்று விட்டது.

படம் வெளியான காலகட்டத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்திருந்த காலகட்டம். பாடல் ஆட்சியைப் புகழ்ந்து பேசுகிறது.
நரிக்குறவன் , குறத்தியாக வாத்தியாரும், ஜெயலலிதாவும் சிறப்பாக ஆடிப்பாடுகின்றனர். கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்பார்களே அது இவ்விருவருக்கும் நன்கு பொருந்துகின்றது. ஜெயலலிதா சிறந்த நர்த்தகி. நடிகை. வாத்தியாரும் நன்கு ஆடக்கூடியவர். அதனால் பாடல் துடிப்பும், சுறுசுறுப்பும் மிகுந்து பார்ப்பவருக்கு மகிழ்ச்சியைத்தருகின்றது.

பாடகர்கள் டி.எம்.எஸ் & பி.சுசீலா இருவருமே பாடலின், இசை, கருத்துக்கமைய சிறப்பாக, துடிப்புடன் பாடியிருக்கின்றார்கள். மெல்லிசை மன்னரின் இசை தூள் பறக்கிறது.

கவிஞர் வாலி கவிஞருக்குரிய உரிமையில் 'ஊதாரிப் பிள்ளைகளைப் பெற்க மாட்டோம்'என்று பாடலின் இசைக்கேற்ப பெற்க என்னும் புதுச்சொல்லொன்றைப் பாவித்துள்ளார். ?

https://www.youtube.com/watch?v=nrgbpAKNNsY