நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று
சரணம் எய்தினேன்.' - பாரதியார் -

கே.ஜே.ஜேசுதாஸ் , சசிரேகா & மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி கூட்டணியில் உருவான மகாகவி பாரதியாரின் இப்பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார்கள் அமலாவும் . ரகுமானும். பின்னணிக்காட்சி, அமலாவின் நடனம் எல்லால் நன்கு சிறப்பாக ஒளிப்பதிவாக்கப்பட்டுள்ளன.

https://www.youtube.com/watch?v=PF_g8n2OUvA

பாரதியாரின் பாடல் முழுமையாக:

நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று
சரணம் எய்தினேன்
நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று
சரணம் எய்தினேன்

பொன்னையே நிகர்த்த மேனி,
மின்னையே நிகர்த்த சாயல்
பொன்னையே நிகர்த்த மேனி,
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா
பின்னையே நித்ய கன்னியே..
மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசநீ
மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசநீ
கண்பாயோ
வந்து சேராயோ கண்ணம்மா
யாவுமே சுக முனிபோல
ஈசனாம் எனக்கும் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா,
கண்ணம்மா கண்ணம்மா
நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம்
எய்தினேன்.