'சக்கரவர்த்தித் திருமகள்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் இனியதொரு பாடல். இசை: ஜி.ராமநாதன். பாடியவர்கள்: லீலா & எஸ்.வரலக்சுமி. நடிப்பு: அஞ்சலிதேவி & எஸ்.வரலக்சுமி. அக்கால நடிகைகளில் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் அஞ்சலிதேவியும் ஒருவர். இவரது உணர்ச்சி ததும்பும் நடிப்பும், நடனமும், உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்களும், இதழோரத்து வசீகரச்சிரிப்பும் என்னைக் கவர்ந்தவை. இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும் கூட.

இப்பாடலில் அஞ்சலிதேவி தன் இதயம் கவர்ந்தவனைப்பற்றி தோழிக்குச் சொல்லாலே விளக்கத் தெரியலே என்று கூறியே அதே சொல்லாலே விளக்குவார். பாடலில் இடம் பெறும் கேள்வி பதில் பகுதியும் இன்பத்தைத் தருவது. சுவையானதொரு பாடல்.

எஸ்.வரலக்சுமியின் மிகவும் இளமைத் தோற்றத்தை இப்பாடலில் காணலாம். திரையில் எம்ஜிஆரை ஒருதலையாகக் காதலிக்கும் பாத்திரத்தில் வரும் இவர் எழுபதுகளில் எம்ஜிஆரின் அம்மாவாக 'இந்தப் பச்சைக்கிளிக்கு' பாடலைப் பாடி நடித்திருப்பார். இப்படத்தில் இவருக்கு வில்லி வேடம். சிறந்த பாடகி. 'வீரபாண்டிய கட்டப்பொம்மன்' திரைப்படத்தில் கட்டப்பொம்மனின் மனைவியாக வருவார். இவர் தமிழ்த்திரையில் தனது இரண்டாம் ஆட்டத்தைப் 'பணமா பாசமா' திரைப்படத்தில் கொடிய மாமியாராக ஆரம்பித்தார். அப்படத்தில் அவரது நடிப்பை மறக்க முடியாது. இவ்விதமான பன்முக ஆளுமை மிக்க நடிகைகளை இக்காலத்திரையுலகில் காண்பதரிது.

https://www.youtube.com/watch?v=DXb-SDkckSU